Tuesday, 28 July 2020

சென்னையில் 10000௹ல் இருந்த வாடகை வீடு தற்போது ௹4000க்கு குறைந்துவிட்டது.

சென்னையில் 10000௹ல் இருந்த வாடகை வீடு தற்போது ௹4000க்கு குறைந்துவிட்டது.

OMR ல் விழுந்த இடி !!

கொரானா பாதிப்பில் சென்னை OMR IT COMPANYயும் மற்றும் அதை நம்பியுள்ள தொழில்களும்:

ஐடி துறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் நிறைய பிசினசுக்கு ஆப்பு வச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

இந்த ஐடி துறையை நம்பிதான் சென்னை ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வணிக வளாகங்கள்ன்னு கடந்த 20 வருஷத்துல எக்கச்சக்கமா வளர்ந்துச்சு.

பலரது வியாபாரம் பெருகிச்சு. ஏராளமான அடுக்குமாடிக்குடியிருப்புகள் உருவாச்சு.  பல முன்னணி வர்த்த நிறுவனங்கள் குறிப்பாக ஆட்டோ மொபைல் இன்ட்டஸ்ட்ரி, ஹோட்டல்கள், பிராண்டட் ரெடிமேட்ஷோரூம்ஸ், மொபைல் ஷோரூம்ஸ், சர்வீஸ் சென்டர்ஸ்  எல்லாம் இவங்களை நம்பி கடைகளை விரிச்சாங்க. 

இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம்ல செலவினங்கள் கணிசமா குறைஞ்சு போச்சு. கீ போஸ்ட்ல இருக்கறவங்க மத்தவங்களை மானிட்டர் பண்ண ஆயிரம் சதுர அடி அளவுல கட்டிடம் இருந்தா போதும். அதுவும் அந்த ஏரியாலதா இருக்கனும்கிறதும் இல்லே.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல ஐடி நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வாடகை மிச்சம். கரன்ட் பில் மிச்சம். தண்ணீர், பேன்ட்ரி, ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி இன்ன பிற செலவினங்கள்ன்னு எதுவும் இருக்காது. அதனால பல முன்னணி நிறுவனங்கள்  சின்ன கட்டிடங்களுக்கு தங்களது அலுவலகத்தை  மாற்ற முயற்சிக்கின்றன.

ஓம்எம்ஆர் ல இருக்கற ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் இதனால  காலியாகற சூழல் வரலாம். கமர்சியலுக்காக கட்டியிருக்கற கட்டிடங்களோட டிசைனை இனி டொமஸ்டிக் பர்ப்பசுக்கு மாத்தவும் முடியாது. மாத்த முயற்சி பண்ணா ஏகப்பட்ட சிக்கல்கள்.

இந்த பில்டிங்குகளை கோடிக்கணக்கில் செலவு பண்ணி (வங்கிகள்ல கடன் வாங்கி கட்டிய கட்டிடங்கள் தான் ஏராளம்) கட்டி வாடகைக்கு விட்டு அதுல கிடைச்ச வருமானத்துல இஎம்ஐ கட்டிட்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்திகிட்டு இருந்தவங்க நிலை இப்போ ரொம்ப பரிதாபம். ஐடி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒண்ணா காலிபண்ணிட்டா அந்த ஏரியாலே இதைச் சார்ந்த மத்த வியாபாரங்களும் படுத்துடும்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் நிர்வாகத்திற்கு செலவினங்கள் மிகமிகக்குறைவு என்பதை அறிந்து கொண்ட ஐடி நிறுவனங்கள் இனி மிகப்பெரிய கட்டிடங்களில் இயங்க வாய்ப்பிருக்கப்போவது இல்லே. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் செஞ்சுகிட்டேவர்றாங்க. இந்த நிறுவனங்களையே நம்பி கான்ட்ராக்ட் பேசிஸ்ல ஓடிகிட்டு இருந்த ‍டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், கேண்ட்டீன்  தொழில் எல்லாம் மோசமான சூழலை சந்திக்க நேரிடலாம்.

கமர்சியல் கட்டிடங்களை ஒண்ணும் பண்ணவும் முடியாது. ஐடி துறைக்கு அடுத்தபடியாக அந்த விஸ்தாரமான சதுர அடி கொண்ட பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு வேறு எந்த துறையும் வர்றதுக்கு வாய்ப்பில்லே. அப்போ அந்த கட்டிடங்களோட நிலைமை?

இந்த ஏரியாவில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு லோன் கொடுத்த வங்கிகள் இனி தவணையை வசூலிக்க ரொம்ப சிரமப்படனும். வாடகையே இல்லாத கட்டிடத்துக்கு கமர்சியல் டாக்ஸ் இலட்சக்கணக்குல எப்படி கட்றது? இந்த கட்டிடங்களை ஏலத்துக்கு விட்டாலும் எடுக்க யாரும் முன்வரப்போறது இல்லே.

கொரோனா வந்தாலும் வந்துச்சு. இன்னைக்கு பல தொழில்களை தன்னுடைய கோரக்கரங்களால் நசுக்கி போட்டுடுச்சு. பலருக்கு வாழக்கையில் சிக்கனத்தை கத்துக்கொடுத்து இருந்தாலும் இலட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை சிதைச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

சென்னைக்கு பெருமை சேர்த்த ஓஎம்ஆர் சாலையானது இந்த கொரோனா முடிந்து சந்திக்கப்போகும் சவால்கள் ஏராளம். மீண்டு வருவதற்கான வழிமுறைகளை பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு செய்யவேண்டும்.

இந்த கட்டிடங்கள் கட்டியவர்களாகட்டும்,  ஐடி துறையையே நம்பி அங்கே தொழில் நடத்திக்கொண்டிருந்த பலரது வாழ்வாதாரம் ஆகட்டும், கொரோனா தாக்கம் முடிந்த பிறகு என்ன ஆகப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த ஓஎம்ஆர் ரோடுல ஏராளமான ஹாஸ்டல்கள், ஐடி துறையில் வேலை செய்யற பெண்களுக்கும் ஆண்களுக்கும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அதில் சின்ன சின்ன அறைகளா தடுத்து அவங்களை தங்க வைச்சு உணவு சமைச்சுப்போட்டு நல்லகாசு பார்த்தாங்க.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல எல்லாருமே அந்த ஹாஸ்ட்டல்களை காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்க. அது மட்டுமில்லே, இந்த துறையில் இருந்த ஒரு நாலைஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து அங்க இருக்கற அபார்ட்மென்ட்டுகளை வாடகை ‍எடுத்து தங்கிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ல நிறைய பேருகாலி பண்ணிட்டு போய்ட்டாங்க. இதனால அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைய காலியாகிகிட்டே இருக்கு. வேலை பறிபோனவங்க கொடுத்த  மூனு மாசம் அட்வான்சை கழிச்சுட்டு அவங்கவங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டாங்க.

SRS Travels மட்டும் இந்த ஐடி நிறுவனங்களை நம்பி சுமார் 1000 பேருந்துகளை கான்ட்ராக்ட் பேசிஸ்ல இயக்கிகிட்டு இருந்துச்சு. இப்போ அந்த டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் இந்த லாக்டவுன்ல தொழில் நடத்தமுடியாம சிக்கித் தவிக்குது.

எத்தனை டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களது கார்களை இந்த துறைகளில் கான்ட்ராக்ட் பேசிஸ்ல வாடகை விட்டு தங்களது வாழ்வை நடத்திக்கொண்டிருந்தன. அத்தனையும் தற்போது முடங்கிப்போய்டுச்சு.

விடியகாலை 4 to 6
350 முட்டை போன்டா சேல்ஸ் ஆகிடும் ஒரு முன்னணி IT பார்க் முன்னாடி இருக்கிற கடையில்...10 இந்தி காரர்கள் 6தமிழர்கள் வேலை செய்து வந்தனர்.
தண்ணீர்
காய்கறிகள்
முட்டை
மளிகை
இதெர்கெல்லாம் சப்ளை செஞ்சவங்க ...
மொத்தத்தில் ஒரு நாளைக்கு 50000 வரவு செலவு செய்தவர் மனம் நொந்து பேசுகிறார்
இப்போ இந்தி காரங்களும் இல்லை
தமிழர்களும் இல்லை
அவரும் அவர் மனைவி மட்டுமே...
என்ன ஆறுதல் சொல்ரது??

ஓலா உபர் வளர்ந்ததெல்லாம் முழுக்க முழுக்க ஐடி துறையாலதான். இனி அவங்க வாழ்வாதாரம் மோசமாகக்கூடும். வாகனங்களை லோன் போட்டு வாங்கி இந்த நிறுவனங்கள்ல அட்டாச் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க வாங்கின கடனுக்கு இஎம்ஐ கட்டமுடியாம தவிக்கறாங்க. அவங்களோட வாழ்வாதாரமும் போய்டுச்சு.படித்ததும் மனம் வலித்தது..திகைத்தது..இதனை நம்பி வாழ்ந்தோரின் எதிர்காலம்...????

 (நன்றி: திரு. அண்ணாமலை)
Best regards,

Monday, 20 July 2020

சிந்தி..

சிந்தி..

ஊர் முழுவதும் ஒரு அறிவிப்பு !
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்..

இதைக் கண்டு பலர் வியந்தனர்.. இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது..

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா..?

அவ்விடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000.. அப்படி ஏதாவதா? என்று..

400 ரூபாய் மட்டுமே என்றான்..

வரிசையில் ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..

அங்கே ஒருவன் நாற்காலிகளை விற்றுக் கொண்டு இருந்தான்..

"வாங்க சார்...வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்.. சீக்கிரத்துல உடையாது சார்..
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்.."
என்று கூவினான்..


நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது..

நல்லா யோசிக்கணும்..?

சாத்தியமான்னு பார்க்கணும்..?

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது..

ஆசையே துன்பத்திற்கு காரணம்

Best regards,

“கடைசி இலை’ (Last leaf ) என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு

“கடைசி இலை’ (Last leaf ) என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.

நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!

இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.

அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விடும்.!!!Best regards,

காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை.. பதிவு

காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை.. பதிவு

முன் எச்சரிக்கை செய்தி

வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக

பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்

குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

 1. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.

 2. விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.

 3. விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.

 4. உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.

 5.  அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.

 6. தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.

 7.  நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 8. உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்

 9.  வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.

 10.  குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.

 11.  வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்
.
 12.  நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.

 13.  எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்
.
 14.  மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்
.
 15.  பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.

 16.  வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 17. அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்
.
 18. நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்
.
 19.  உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.

 20  குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை விட்டு அழைத்துச் செல்லலாம்.

 21. உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.

 இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப் பட வேண்டும்.

Best regards,

முகமூடியின் பக்க விளைவுகள்

முகமூடியின் பக்க விளைவுகள்
 ----------------------------------------
 மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.  நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால், கவனம் செலுத்துங்கள்…

 1 = இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.

 2 = மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.

 3 = நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.

 4 = மரணத்திற்கு வழிவகுக்கும்.

  ஆலோசனை
 --------------
 A = நீங்கள் தனியாக இருக்கும்போது அதை அணிய வேண்டாம்.  முகமூடி அணிந்த ஏ.சி.யுடன் காரில் நிறைய பேரை நான் இன்னும் பார்க்கிறேன்.  அறியாமை அல்லது கல்வியறிவின்மை?

 B = இதை வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.

 C = நெரிசலான இடத்தில் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.

D = அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம்.

 E = எப்போதும் இரண்டு முகமூடிகளை வைத்திருங்கள் ஒவ்வொரு 4-5 மணி நேரத்திலும் மாற்றுங்கள்.

F = முகமூடிகளை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்

 பத்திரமாக இருக்கவும் !!

  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம்.  இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வழங்குங்கள்…

  உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகிறேன்.

Best regards,

பயத்தின் உச்சத்தில் சீனா...

பயத்தின் உச்சத்தில் சீனா...

வரலாறு காணாத மழை.

இதன் காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது.

நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதில்...

அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன.

அணையில் இருந்து வெளியேற்றும் உட்சபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது.

உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்பட்டுள்ளது,

உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த சென்னையின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரியது இந்த அணை.

இந்த அணை இப்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக என்நேரமும் உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது.

ஒரு வேளை இந்த அணை உடைந்தால்....

4  முதல் 50 கோடி பேர் ஜலசமாதி ஆவார்கள் என்பது மட்டும் உறுதி.

[19/07, 00:53] செல்வன் ரானா கார்த்திக் FB:

வூஹான் மாகாணத்தை விட்டு அணைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தது சீனா.

எந்நேரம் வேண்டுமானாலும் The Gorges Dam உடையலாம் என்பதால்.

முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றுகிறது சீனா.

குறைந்த பட்சம் 5 கோடி இறப்பார்கள் என்பாதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு அறிவுறுத்தல்.

'இந்த அணையை கட்டாதே' என அன்று உலகமே கெஞ்சியது.

இன்று...

அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான்.

[19/07, 03:11] செல்வன் ரானா கார்த்திக் FB:

நொடிக்கு 36000 Cubic Meter நீரை திறந்து விட்டும். அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை.

எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால்.

அணையை காப்பாற்றுவது சந்தேகமே.

கடைசி 1 மணி நேரத்தில் . 163Mtr இருந்து 23.Cmr. உயர்ந்து 163.23.Mtr ஆக உள்ளது.

அடுத்த 24. மணி நேரத்தில் Three Gorges அணை தனது முழுக்கொள்ளலவான 175.MTR அதாவது 600அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும்.

பிறகு...

பாரம் தாங்கமல் அணை உடையலாம்.

தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும்.

ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்து விட்டது.

ஆதலால் உலகின் மிகப்பெரிய அணை உடைவது உறுதியானது.

- ரானா பிரதாப் சிங்

'இயற்கை' என்ற இறைவனை மனிதன் விஞ்சினால்...

இறைவன் தான் இறுதி தீர்ப்பு வழங்குவார்🙏🏻

எது நடந்தாலும் அது இறைசெயல் தான்...

போற்றி! போற்றி! இறைவா போற்றி!🙏🏻

Best regards,

குளியலறையில் மயக்கம்

குளியலறையில் மயக்கம்

நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் விழுந்த பிறகு  பக்கவாதம் மற்றும் மயக்கம் போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம்.

 பெரும்பாலும் குளியலறை தவிர  வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்லை?

  ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற கலந்துரையாடல் வகுப்பில் பங்கேற்ற சகோதரர் ஒருவர் கூறும்போது,

பயனுள்ள இந்த நிகழ்ச்சியில் என்னுடன் ​​தேசிய விளையாட்டு கவுன்சிலின் பேராசிரியரும்  பங்கேற்றார்கள்,

 அவர் குளிக்கும் போது முதலில்  தலைமுடியைக் கழுவ வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

 நாம் குளிக்கும்போது முதலில் உடலின் மற்ற பாகங்களை கழுவ வேண்டும்.

 ஏனென்றால், தலை ஈரமாகவும் குளிராகவும் இருக்கும்போது, ​​தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி பாயும்.

அச்சமயத்தில்  இரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இது வழக்கமாக குளியலறையில் மட்டுமே 🛁 நடப்பதால்,  நமக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கும் இதுபோன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.

நாம் முதலில் குளிக்கும்போது எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்பதை வரிசை படியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

💡1.  ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது.

💡2. பாதத்திற்கு மேல் உள்ள  முழங்கால் பகுதி. 

 💡 3.  தொடைகள்.

 💡 4.  அடிவயிறு.

  💡5.  தோள்பட்டை.

  ⏱️ 6.  5-10 விநாடிகள் நீர் ஊற்றாமல் சிறு இடைவேளை.

💨 இச்சமயத்தில் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம், பின்னர் வழக்கம் போல் தலைக்கு நீரூற்றி குளிக்கவும்.

  ✅ ஞானம்:

முதலில் நேரடியாக  தலைக்கு நீர் ஊற்றுவது என்பது  சூடான நீரில் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸில் ,  குளிர்ந்த நீரை  நிரப்பினால்.  என்ன நடக்கும்?

கண்ணாடியில்  வெடிப்பு ஏற்பட்டு உடையும் நிலை வரும் ⚡ !!!

  🚿 இதேபோன்ற நிகழ்வு நம் உடலில் ஏற்பட்டால் ... எது உடையும்?

🚨பொதுவாக  நமது உடல் வெப்பநிலை  சூடாகவும், தண்ணீர்  குளிராகவும் இருக்கிறது, எனவே முதலில் நாம் உடலில் அல்லது தலையில் நேரடியாக நீர் ஊற்றும்போது, இரத்த நாளங்கள் சிதைவதால் காற்று சிக்கிக் கொள்ளும் அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

  🚿 இதனால்தான் மக்கள் திடீரென குளியலறையில் விழுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

❌ தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

 🛀🏻 இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது.

🚑 அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

 அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் என்ற முக்கியமான பகுதியினை முறையுடன் செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இப்பதிவு உதவட்டும்.

🚰 குளிர்ந்த நீரில் குளிப்போம்

🍚 சூடான

 நீரை குடிப்போம்

♻️ நோயற்ற பெரு வாழ்வு வாழ்வோம்


படியுங்கள்..
பழகுங்கள்...
பயனடையுங்கள்....


💚💜💚 அத்துடன் நீங்கள் விரும்புபவர்களுக்கு தயவுசெய்து

பகிர்ந்து கொள்ளுங்கள் ..

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟Best regards,

பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மை படிப்புகள்

 பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மை படிப்புகள்

இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 202$0_21ஆம் கல்வி ஆண்டு இளமஅ–்றிவியல் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கத் தேவையான வழிமுறைகள் .

படிப்புகள் :
1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)
2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)
3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)
4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)
5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Semi culture)
6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)
7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)
8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)
9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)
10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)
11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)
12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)

யார் விண்ணப்பிக்கலாம்?
இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2020 அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

<www.tnau.ac.in> / admission.html. என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்குக் கல்லூரிகள் உள்ளன?

கோயம்புத்தூர் வளாகம்:
1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

மதுரை வளாகம்:
1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

திருச்சி வளாகம்:
1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர்,--- திருச்சி.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

கிள்ளிக்குளம் வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

பெரியகுளம் வளாகம்:
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.

மேட்டுப்பாளையம் வளாகம்:
வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.

ஈச்சங்கோட்டை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

குடுமியான்மலை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.

வாழவச்சனூர் வளாகம்:
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.

மொத்த இடங்கள்:
B.Sc. Agriculture - 600
B.Sc. Horticulture - 125
B.Sc. Forestry - 45
B.Sc. Food & Nutrition - 45
B.Tech. (Agri. Engg) - 70
B.Sc. (Sericulture) - 30
B.Tech. (Horticulture) - 30
B.Tech. (Food Process Engineering) - 55
B.Tech. (Energy & Environment Engg.) - 55
B.Tech. (Bio Technology) - 55
B.Tech. (Bio Informatics) - 35
B.Sc. (Agri Business Management) - 45
B.Tech. (Agri Information Tech) - 30

வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :
கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஹோசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.

எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?
XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Aggregate Mark = Sum of [(Marks got in each subject / Maximum marks of that subject) ? 50]

ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்,
1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)
2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்
3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்
4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பத்திற்கு​--- குறைந்ததகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்  அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு

* மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் http://ww.tnauonline.com என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யலாம் - பல்கலைக்கழகம் அறிவிப்பு

Best regards,

Monday, 13 July 2020

மதுரையும் சினிமாவும்!

மதுரையும் சினிமாவும்!

பொழுது போக்கிடமற்ற மதுரைவாசிகளுக்கு இன்றளவும் துணை நிற்பவை தியேட்டர்களே. கவலைகள் தொலைக்கிற மந்திரம் தெரிந்த இக்கனவு அரங்கத்தை தமிழகத்தில் அதிகம் கொண்ட நகரெனும் பெருமை மதுரைக்கு உண்டு. நகரின் ஒவ்வொரு தியேட்டருக்குள்ளும் ஒரு வரலாறு வாழ்கிறது. அந்த வரலாற்றின் திசையில் ஒரு பயணம்...

இம்பீரியல்:
மதுரைக்கு மின்சாரம் அறிமுகமாகும் முன்பே, ஜெனரேட்டர் மூலம் சோத்துக்கடை தெருவில் இருந்த இம்பீரியல் தியேட்டரில் மவுனப்படங்கள் ஓடின. எழுபதுகளிலும் இத்தியேட்டர் இயங்கியது. இதே இடத்தில் சொக்கலிங்கம்பிள்ளை அன்ட் சன்ஸ் கட்டிட மாடியில் திரை ஒன்று அமைத்து அங்கு ஊமைப்படம் திரையிடப்பட்டது. 80களில் இம்பீரியல் தியேட்டர் இடிக்கப்பட்டு, வணிகக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டது.

சி(ட்)டி சினிமா:
மதுரை தெற்குமாசிவீதியில் 1921ல் கல் கட்டிடமாக திறக்கப்பட்டது. அதற்கும் முன்பு இங்கு 'மவுனப் படங்கள்' ஓடின. 770 நாட்களுக்கும் மேல் ஓடி கிட்டத்தட்ட 3 தீபாவளிகளைக் கடந்த தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படம் இங்குதான் திரையிடப்பட்டது. அமெரிக்காவின் ஆர்சி புரஜக்டர், ஜெர்மன் நாட்டு பவர் புரஜ க்டர் சினிமா கருவிகள் இங்கிருந்தன. சிதைந்த கட்டிடமாக சிடி சினிமா நிற்கிறது. மதுரை கீழவெளிவீதியில் குடோனாக இன்று மாறி நிற்கும் 1936ல் கட்டிய 'சிந்தாமணி' தியேட்டரை, இந்த சிடி சினிமா தியேட்டரில் திரையிட்ட 'சிந்தாமணி' திரைப்பட வசூலை வைத்தே கட்டினர் என்பது வரலாறு.

சந்திரா டாக்கீஸ்:
மதுரை மேலமாசி - வடக்குமாசி சந்திப்பில் 80களிலும் செயல்பட்ட 'சாந்தி' திரையரங்கின் பூர்விகப் பெயர் ‘சந்திரா டாக்கீஸ்'. மாதக்கணக்கில் இங்கு கம்பெனிகள் நாடகங்கள் நடத்தின. மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாக்கள், அண்ணா, நெடுஞ்செழியன், கண்ணதாசன் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டங்களும் நடந்தன. இன்று சந்திரா டாக்கீஸ் கார்கள் நிறுத்துமிடமாகி விட்டது.

தினமணி:
மதுரை கீழவாசலில் இருந்து தெப்பக்குளம் செல்லும் பாதையில் மணல்மேடு என்ற தியேட்டர் தோன்றியது. அந்த தியேட்டர்தான் பிற்காலத்தில் தினமணி பெயர் மாற்றம் பெற்று அண்மையில் இடிக்கப்பட்டு குடியிருப்பு கட்டுமானத்திற்கென காலியிடமாக இருக்கிறது.

தங்கம் தியேட்டர்:
ஆசியாவின் மிகப்பெரிய ’தங்கம் திரையரங்கம்’ இடிக்கப்பட்டு விட்டது. 53 ஆயிரத்து 850 சதுர அடி பரப்புடையது. 1952ல் சிவாஜியின் முதல்படம் ’பராசக்தி’ முதலில் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. அரைகுறை கட்டிட மண்தரையில் அமர்ந்து, சுற்றிலும் திரை மூடியே அக். 17ல் தீபாவளி தினத்தில் பராசக்தி பார்த்தனர். மொத்தம் 112 நாட்கள் ’பராசக்தி’ ஹவுஸ்புல்லாக ஓடியது. அரங்கின் 2 ஆயிரத்த 875 இருக்கைகளில் எங்கிருந்தும் மறைக்காமல் திரையில் படம் பார்க்கலாம். இத்தியேட்டரின் 25ம் ஆண்டில் ஜெய்சங்கரின் ’துணிவே துணை’ படம் திரையிட்டபோது ஒரே டிக்கெட்டில் மேலும் இரு படங்கள் காண்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜாஸ், ஓமன், எக்சார்சிஸ்ட், இந்தியில் யாதோன் கி பாராத் இங்கு ரிலீசானது. புருஸ்லீயின் ’ரிட்டன் ஆப் த டிராகன்’ ஒரு நாளைக்கு 7 காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் பெயர் ’தங்கம்’ என்பதைக் காட்ட கூடுதல் விலை டிக்கெட்டை ’கோல்டன் பாயில்’ பேப்பரில் வழங்கினர். கடைசியாக தங்கம் கண்ட நூறு நாள் படம் ’தூறல் நின்னு போச்சு’. 1995ல் நாகார்ஜுனா நடித்த ’ஈஸ்வர்’ டப்பிங் படத்துடன் தன் சினிமா வாழ்க்கையை இத்தியேட்டர் முடித்துக் கொண்டது.

தேவி:
மதுரை ஆறு முச்சந்திப் பகுதியில் கீரைத்தோட்டங்களுக்கு இடையே 1944ல் தேவி தியேட்டர் கட்டப்பட்டது. பல புராண படங்கள் ஒடின. இளையராஜாவின் ’அன்ன க்கிளி’ படத்திற்காக ஒரு மாதம் இத்தியேட்டரின் கீழ்பகுதி இருக்கைகள் ’பெண்களுக்கு மட்டும்’ என ஒதுக்கி வைக்கப்பட்டன. தியேட்டர் கட்டியபோது மேற்கூரை தகரத்தில் பொருத்தும் ’வாஷர்’ கிடைக்காமல், அன்று புழக்கத்தில் இருந்த ’ஓட்டை காலணா’ காசுகளை வாஷர்களாக பயன்படுத்தினர். ஆங்கிலேய அதிகாரி தியேட்டருக்கு அபராதம் விதித்து, ’காலணாக்களை’ பறிமுதல் செய்தார். நடிகர் பார்த்திபனின் ’ஹவுஸ்புல்’ படத்தில் ’பாரத் தியேட்டர்’ பெயரில் இந்த தேவி தியேட்டர் படம் முழுக்க நடித்தது. ‘ஹவுஸ்புல்’ படமும் இங்கு ரிலீசானது. 2002 வரை தேவி தியேட்டரில் படங்கள் ஓடின. ரஜினி நடித்த ’பாட்ஷா’ படம்தான் கடைசி. 50 சென்ட் இடப் பரப்புள்ள இத்தியேட்டர் இடிக்கப்பட்டு 19 குடியிருப்புகளாகி விட்டன.

தீபா, ரூபா:
தேவி நாடகசபா அமைந்த இடம் பிறகு ஜெயராஜ் மோட்டார் நிறுவனமாக மாறி, பிறகு தீபா, ரூபா தியேட்டர் உருவானது. இது குடோனாகி விட்டது.

மதுரை தைக்கால் தெருவில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி நடத்திய இடத்தில் அமைந்ததே ஜோதி சினிமா தியேட்டர்.

மதுரையில் ரீகல் டாக்கீஸ், பரமேஸ்வரி தியேட்டர் என்ற இரு அரங்குகளில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. இத்தியேட்டர்களில் அப்போது ஆங்கிலப் படம் 90 நிமிடங்கள்தான் திரையிடப்படும். எனவே லாரல் ஹார்டி, சார்லி சாப்ளின் போன்றோர் நடித்த காமெடி படங்களும், கார்ட்டூன் படங்களும் சேர்த்துத் திரையிடப்பட்டன. ரீகல் டாக்கீஸ் தங்கரீகலாக மாறி தமிழ் புதிய படங்களும் வெளியாகிறது. பரமேஸ்வரி சமீபத்தில் இடிக்கப்பட்டு விட்டது.
இது தவிர,

மதுரையில் நடனா காம்ப்ளக்ஸ், கிருஷ்ணாபுரம் காலனி விஜயலட்சுமி, அரசரடி வெள்ளைக்கண்ணு, வில்லாபுரம் கதிர்வேல்... என பல தியேட்டர்கள் உடைக்கப்பட்டு விட்டன, சிம்மக்கல் சிவம் தியேட்டர் வங்கியாக, வில்லாபுரம் பத்மா தியேட்டர் விற்பனைக் கடையாக, ஆனையூர் வெங்கடாஜலபதி, மீனாட்சி கோயில் அருகாமை நியூசினிமா, சம்மட்டிபுரம் மிட்லேண்ட்,
சிலைமான் எஸ்எஸ் தியேட்டர்கள் பாழடைந்தும், சின்ன சொக்கிகுளம் ஜெயராஜ் நட்சத்திர விடுதியாக, மதுரை அனுப்பானடி இந்துமதி, காளவாசல் ராம் விக்டோரியா குடோனாக, விளாங்குடி பாண்டியன், செல்லூர் போத்திராஜா, டிஆர்ஓ காலனி லட்சுமி.. என மதுரையில் குடியிருப்புகளாக மாறிப்போன தியேட்டர்கள் பட்டியல் நீள்கிறது.

நாடகக் கொட்டகைகளாக பிறந்து, டூரிங்குகளாக வளர்ந்து, நவீன மால்களாக எஞ்சி நிற்கும் தியேட்டர்களுக்கு மத்தியில், கடந்த கால சினிமா ரசிகனை செதுக்கி வளர்த்த சினிமா தியேட்டர்கள் தங்கள் முகவரி தொலைத்து முடங்கிக் கிடக்கின்றன. ஆனாலும் கூட, மதுரை ரசிகர்களின் சினிமா மோகம் விரிந்தே கிடக்கிறது.
அன்றைய சினிமா!

அன்றைக்கு மதுரையில் திரும்பும் திசையெங்கும் தியேட்டர்களே தெரிந்தன. தினசரி 3, சனி ஞாயிறு 4, விழா மற்றும் பண்டிகை காலங்களில் 5 காட்சிகள் ஓடின. ஏகாதசி, எதிர்சேவை நேரங்களில் நடுநிசிக் காட்சிகளும், 1970களின் கடைசியில் 11 மணி காட்சியையும் அனுமதித்து ஆண்டு முழுக்க ஒரு திருவிழாக் குதூகலம் மதுரை வீதிகள் முழுக்க நிரம்பி வழிந்தன.

ஆன்மிகத் தலத்திற்கு புது மனைவியை அழைத்துச் செல்கிற மரியாதை, நல்ல தமிழ்படம் காட்ட சினிமா தியேட்டருக்கு கூட்டிச் செல்லும் கணவருக்குத் தரப்பட்டது. அன்றைக்கு சினிமாக்கள் அத்தனை புனிதம் பெற்றன. டிக்கெட் தீர்ந்ததால், அதே கவுண்டரில் காத்திருந்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று படம் பார்த்து மகிழ்ந்த மதுரை மனிதர்கள் அதிகமிருந்தனர். மதுரைவாசிகள் மட்டுமல்லாது, தென்மாவட்டமே சித்திரைத் திருவிழா கூட்டமாக அன்றாடம் பஸ்கள், ரயில்கள் ஏறி மதுரை தியேட்டர்களுக்கு வந்து திரும்புவது வாடிக்கையானது.

தமிழ் கடந்து செம்மீன் உள்ளிட்ட மலையாளம், ஷோலே, ஏக் துஜே கேலியே உள்ளிட்ட ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கும் மவுசு அதிகரித்து மதுரை தியேட்டர்கள் கூட்டத்தில் குலுங்கின.

ஆடம்பரமான சினிமா!
மதுரை சினிமா ரசிகர்களை சிலரைச் சந்தித்துப் பேசிய போது, ‘‘மதுரை மக்களுக்கு ரசிப்புத் திறன் அதிகம். ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்றாலும், அனைவர் படத்தையுமே பார்ப்பான். கலை, கமர்சியல் பாகுபாடு தெரியாது. ’இது பார்க்கத்தகுந்த படம்’ என்ற மதிப்பீடு மட்டுமே கொண்டவன். படத்தை கோடம்பாக்கம் தந்தாலும், வெற்றி தருவது மதுரைதான். பிரம்மாண்ட சினிமாக்களை தொழில்நுட்பம் கொண்ட தியேட்டரில்தான் பார்த்து ரசிக்கலாம். ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்காக இருந்த சினிமா இன்றைக்கு, ஆடம்பர விஷயமாகி விட்டது. 10 ரூபாய்க்குள் பார்த்த சினிமாவை, தியேட்டரில் இன்று ரசிப்பதற்கு சில நூறு ரூபாய்கள் வேண்டும்.
தொழில்நுட்பம், கவர்ச்சி அலங்காரங்களால் அடித்தட்டு மக்களான ’ரிப்பீட்டட் ஆடியன்’சை சினிமா இழந்து கொண்டிருக்கிறது. இந்த ’சி’ சென்டர்காரர்களை சினிமா தியேட்டருக்கு இழுத்து வர கட்டணம் குறைத்தால், பழைய வெள்ளி விழாக்களை இன்றும் பார்க்க முடியும்,” என்கிறார்கள்.

Best regards,

ஆடு வாங்குறீங்களா? 10% பணம் செலுத்தினால் போதும்!- 90% மானியம் அள்ளித்தரும் அரசு!

🐏 ஆடு வாங்குறீங்களா?   10% பணம் செலுத்தினால் போதும்!- 90% மானியம் அள்ளித்தரும் அரசு! 🐏



🐐செம்மறி, வெள்ளாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் 90 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுகிறது.

🐐இதற்கான அறிவிப்புகளை மாவட்ட கால்நடை துறை வெளியிட்டுவருகிறது.
செம்மறி, வெள்ளாடு -அபிவிருத்தி திட்டம்
தமிழகத்தில் செம்மறியாட்டின் தொகையில் 7.36 விழுக்காடும் வெள்ளாடு தொகையில் 6.02 விழுக்காடும் உள்ளது.

🐐தற்போது ஆட்டிறைச்சி தேவை அதிகரித்து வருவதால், செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்பை அதிகரிக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.

🐐வறட்சி, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மாநில திட்டக்குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளன. இதன்மூலம் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை வளர்ப்பு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

🐐ஆடு வாங்க 10% பணம் போதும்!
மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும், பயனாளி 10 சதவீதமும் என்ற நிதி ஆதார முறைமையில் இந்த திட்டமானது 21 மாவட்டங்களில் 83 தொகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயன் பெறும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

🐐யார் பயன்பெறலாம்?

🐐நிலமற்ற விவசாயிகள்
சிறு-குறு விவசாயிகள்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள்
விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
மாற்றுத் திறனாளிகள்
ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகளுக்கு 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள், 5 முதல் 6 மாத வயதுடைய 1 ஆட்டு கிடாய் வழங்கப்படும்.

🐐கால்நடை
பயனாளிகளுக்கான விதிமுறைகள்
ஆடுகளுக்கு 3 வருடத்திற்கு காப்பீடு செய்யப்படும்.
கிடாய் ஆடுகளை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கும், பெட்டை ஆடுகளை 3 வருடங்களுக்கும் விற்கக்கூடாது என பயனாளிகளிடம் இருந்து உறுதிமொழி ஒப்பந்தம் பெறப்படும்.

🐐தேர்வு செய்யப்படும் பயனாளிகள் துறைசார்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலோ அல்லது ஆடு வளர்ப்போரிடமோ தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

🐐தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்படும்.

🐐விண்ணப்பிப்பது எப்படி?

🐐இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம்.

🐐தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்கள்
திட்ட செயல்பாட்டிற்கென ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, கடலாடி மற்றும் போகலூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த திட்டத்திற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🐐இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

🐐கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தாந்தோனி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Best regards,

கிராமசபைக் கூட்டம் - கேள்வி பதில்கள் ⭕⭕

கிராமசபைக் கூட்டம் - கேள்வி பதில்கள் ⭕⭕



1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?

ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5. கிராம சபையின் தலைவர் யார்?

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர்.
தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.
இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.
3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
[அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]

7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம்.
பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம்.
ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.
அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.

10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?

இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.
இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.

11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?

முடியாது.
கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.
அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.
முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.
கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்

15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்

16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?

தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

 இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.
அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?

சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.

18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்

19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?

மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது

மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது

மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்

பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்

கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது

20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா?

அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?
அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.

21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?

கலந்துகொள்ளலாம்.
ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.
மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.
எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்
உள்ளாட்சி அமைப்புகள்:

அடிப்படை கேள்விகள்
1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?

1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது.
அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை கொண்டு இருந்தன.
எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.

2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து

3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன

4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்

5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?
இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது.

சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.ஆகும்

Best regards,

Sunday, 12 July 2020

சுய ஒழுக்கம் (Self Discipline).

சுய ஒழுக்கம் (Self Discipline).

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
"இன்னும் கல்யாணம் ஆகலயா?"
"குழந்தைகள் இல்லையா?"
"இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?"
"ஏன் இன்னும் Car வாங்கவில்லை?"
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை  இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார்  உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க  Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment  இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். "விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து  பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்.
Best regards,

Friday, 10 July 2020

#சோறு_சாதம்

 #படித்ததில்_உரைத்தது

#சோறு_சாதம்

#பார்ப்பதற்கு மிக எளிய சொல் போல் தோன்றும் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். சோறு என்றால் தாழ்வு போலவும் சாதம் என்றால் உயர்வு போலவும் ஒரு கற்பிதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்யாண வீடுகளில் தன்மையான குரலில் பரிமாறுபவரிடம் "கொஞ்சம் சாதம் போடுங்க" என்று நாகரீகமான மனிதனாக காட்டிக் கொள்கிறோம். சோறு என்ன அப்படி ஒரு அவச்சொல்லா?

நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். திரைப்படங்களில், பத்திரிகைகளின் நகைச்சுவைகளில் எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? அது ஏன்?. திட்டமிட்டு சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது. சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறது.

#சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் பயணித்து வருகிறது. "பெருஞ்சோற்று உதியன்" என்ற அடைமொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். "வயிற்றுக்கு சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்று பாரதி வரை சோறு என்றே குறிப்பிடப்படுகிறது.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சோறு என்று வருகிற இடங்களில் சாதம் என்பது இடம்பெயரப்பட்டு வருகிறது. ஆனால் இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு என குறிப்பிடப்படுகிறது. "சோத்துக்கு வழியில்லாத நாயி" என்று திரைப்படங்களில் பேசப்படுவதை பார்க்கிறோம். "சாதத்துக்கு வழியில்லாத நாயி" என்று எழுதப்படுகிறதா? காரணம்? அதன் பின்னால் உள்ள அரசியல். "கல்யாண சமையல் சாதம்" என்று புகழ்ந்து பாடல் வரும்.. "எச்ச சோறு" என்று இகழ்ந்து வசனம் வரும்.. இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளலாம்.

சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் - பழம் போன்றவற்றுக்கு பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொதுஇடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்த சொல்லின் சரிபாதி சாதம் என்பது ஏதோ ஒரு நன்னாளில் பெயர்சூட்டுவிழா கண்டுள்ளது.

உணவு விடுதிகளில் புளியஞ்சோறு, எலுமிச்சைச் சோறு, தக்காளிச் சோறு என்பது இடமாறி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று பட்டியல் நீள்கிறது. குழந்தைகளுக்கு பருப்புச் சோறு ஊட்டப்பட்டது போய் பருப்பு சாதம் கொடுப்பது உயர்வாக மாறி நிற்கிறது.

இதுவெறும் வடமொழிச் சொல் - தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கான பதிவல்ல. தமிழ்ச் சொற்கள் தாழ்வான ஒன்றாக நம் மனத்திலே பதிய வைத்து நம்மையை அச்சொல்லை சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு மாற்றுவதற்கு பின்னுள்ள அரசியலை விவரிக்கும் பதிவே. தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படி தாய்மொழிக்காக சிந்திக்க செய்வான்?.

#சோர்வை நீக்குவது சோறு, #சோம்பலை போக்குவது சோறு, #சோகத்தை ஆற்றுவது சோறு... #கீழ்மையை - ஏற்றத்தாழ்வை புகுத்துவது சாதம்..

#சாதம் என்பதற்கு பதிலாக
#சோறு என்பதையே  பயன்படுத்துவோம்

#நல்லசோறு
#பாரிவேள்

Best regards,

நல்ல கருத்துக்கள்

நல்ல கருத்துக்கள்...✍

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்து கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்

தவறாமல் படியுங்கள்....
GOLDEN AGE COMING SOON?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!, 

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் !

என சேவை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.
2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கண் ந வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு. 

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது... 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். எதிர்காலம்  நம் கையில் இல்லை.  கடந்த காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?

வாழ்க வளமுடன்..

🌹🌹🌹🌹🌹🌹Best regards,

கொரோனா: அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்

கொரோனா:
அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்

ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932.  இறந்துபோனோர் 134,862.

கொரோனாவை பார்த்து நாம் அச்சங்கொள்வதற்கு அமெரிக்க மரணங்கள்தான் மிகப்பெரும் காரணமாகும். பிரேசில், ஸ்பெயின்,இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவையும் நம்மை அச்சப்படுத்திய நாடுகளாகும்.

நாமெல்லாம் ஆச்சர்யமாய் பார்க்கும் இந்த நாடுகளெல்லாம்  வளர்ந்த நாடுகளென தம்மைச் சொல்லிக்கொள்ளும் நாடுகளாகும். ஆய்வுக்கூட மருத்துவ ஆய்வுகளை நம்பியுள்ள மருத்துவ வசதிகளும் மிக அதிகமுள்ள நாடுகளாகும். ஆனால், இந்த உலகையே மரண பயத்துக்குள் தள்ளிய நாடுகளும் இவைதான்.
என்னே முரண் பார்த்தீர்களா!

மருத்துவம் வளர்ந்த  இந்த நாடுகளில் கொரோனாவால் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்னவாக இருக்கும்?
உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம்.

1957ல் H2N2 பரவியபோது 116,000 பேரும், 1968ல் H3N2 பரவியபோது 100,000 பேரும், 1918ல் H1N1 என்றொரு வைரஸ் பரவியபோது அமெரிக்காவில் 675,000 பேர் இறந்துள்ளனர்.

2.4 இலட்சம் பேர் வரை அமெரிக்காவில் கொரோனாவால் இறந்துபோகலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஏப்ரல் 1 அன்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இன்புளுயன்சா எனும் காய்ச்சல் அமெரிக்காவில் வருடந்தோறும் அக்டோபரில் துவங்கி, பிப்ரவரியில் குறையத் தொடங்கும். அதற்குப் பலியானோர் எண்ணிக்கை 2018-19 சீசனில் 34,200 என்கிறது அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம்.  cdc.gov/flu எனும் அரசு இணையதளத்திற்குள் சென்றால் அத்தனை விபரங்களையும் பார்க்கலாம்.


அந்தத்தளம் கூறும் தகவல்கள்.


2018-19ல்   35.5 மில்லியன் மக்களுக்கு காய்ச்சல் வந்ததாம், அதில் 16.5 பேர் சிகிச்சை எடுத்தார்களாம், 490,000 பேர் மருத்துவமனையில் சேர்ந்ததில் 34,200 பேர் இறந்துபோனார்கள்.
பருவக் காய்ச்சல் என்பது  மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கும் தீவிரமான ஒரு நோயாகும். பல நூறு ஆயிரங்களில் மக்களை  மருத்துவமனையில் சேர்க்கும் இந்நோய் பல பத்தாயிரம் பேரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் கொல்கிறது.

எத்தனை பேருக்குக் காய்ச்சல் வருகிறது, அதில் எத்தனை பேர் இறந்துபோகிறார்கள் என்ற சரியான தகவலும் அமெரிக்காவில் கிடையாதாம். அதை ஒரு கேள்வியாய் எழுப்பி, அவர்களே பல பதிலும் அளித்துள்ளனர்.

இறப்பு ஒவ்வோராண்டும் பன்னிரெண்டாயிரம் முதல் 61 ஆயிரம் வரையும் மாறுபடும் என்றும் பாதிப்பு குறித்து ஒரு படம் மூலம் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்கள்.


ஆக, காய்ச்சலென்பது அந்த நாட்டில் வருடந்தோறும் பல்லாயிரம் மக்களைக் கொல்லும் நோயென்று நமக்குத் தெளிவாய்ப் புரிகிறது.

அதாவது, அமெரிக்கர்களின் உடல்நிலை எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கிறதென்று உண்மைகள் சொல்கின்றன.
அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடு, மருத்துவ வசதியெல்லாம் அங்கே அதிகமென்றுதான் நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அரசின் நோய்த் தடுப்பு மைய இணையத்தில் சென்று தகவல்களைப் பார்த்தால் நோய்களின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதென்று சொல்கிறது புள்ளிவிபரங்கள். 


அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அடுத்துப் பேசுவோம்.


அமெரிக்க மக்களில் ஒவ்வொரு ஆண்டும் 859,000 பேருக்கும் மேலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோயால் மரணமடைகிறார்கள் என்கிறது அதே இணையதளத்தில் உள்ள chronicdisease எனும் உட்பிரிவு.
அதாவது, அமெரிக்க மரணத்தில் மூன்றில் ஒருவர் இப்படி இறந்துபோகிறாராம். வருடந்தோறும் 199 பில்லியன் டாலர் செலவை இழுக்கும் இந்நோய் 131 பில்லியன் டாலர் உற்பத்தியையும் வேலைவாய்ப்புத்துறையில் ஏற்படுத்திவிடுகிறதாம்.

இதுதான் அமெரிக்காவின் பொருளாதாரப் பார்வையாகும். ஒவ்வொரு நோயாலும் எவ்வளவு வருமானமென்றும், எவ்வளவு செலவென்றும், அந்த நோயால் உற்பத்தி இழப்பு எவ்வளவென்றும் கணக்கிடுகிறார்கள்,

அதனால்தானோ என்னவோ, “WE CANNOT LET THE CURE BE WORSE THAN THE PROBLEM ITSELF,” அதாவது, கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை விடவும், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளால் நாடு மோசமாகிவிட அனுமதியோம் என்று துவக்கத்திலேயே சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர்.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேலானவர்களில், பத்தில் ஆறு பேருக்கு குரோனிக் டிசீஸ் எனச் சொல்லப்படும் நீடித்த நோய்கள் இருப்பதாகச் சொல்லும் அந்தத் தளம், பத்தில் நான்கு பேருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நீடித்த நோய்கள் இருக்கிறது என்கிறது.

அதாவது, பத்தில் ஆறென்றால், நூறில் அறுபது சதமென்று அர்த்தம். ஆக, பாதிக்கும் மேற்பட்டோர் நீண்டகால நோயர்கள். வாழ்நாள் மருந்து, மாத்திரையென சிகிச்சையில் உள்ளவர்கள்.  நாற்பது சதமானோர் இரண்டு மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட நோயர்கள்.





ஒவ்வொரு வருடமும் 1.6 மில்லியன் மக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறதாம். அதில் ஆறு இலட்சம் பேர் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும்

இறந்துபோகிறார்களாம். அமெரிக்க மரணங்களில் புற்றுநோய்க்கு இரண்டாவது இடமாம்.

34.2 மில்லியன் மக்களுக்கு நீரழிவும், 88 மில்லியன் மக்களுக்கு நீரழிவுக்கு முந்தைய நோய் இருப்பதாகவும் சொல்லும் அந்தப் புள்ளிவிபரம், நீரழிவால் பல நோய்கள் உருவாகி திடீர் மரணங்களும் அதிகரிக்குமென்கிறது.


ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதம் 54.4 மில்லியன் மக்களைப் பாதிக்கிறதாம். அதாவது, 18 வயதுக்கு மேலான நான்கில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறாராம். இவர்களால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் உள்ளனராம். இவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாய் இருக்குமென்பதை நாமறிவோம்.

அடுத்ததாய், அல்சமைர் எனப்படும் டிமென்ஷியா நோய், 5.7 மில்லியன் அமெரிக்கர்களை ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கிறது. 2040க்குள் இந்நோயால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் 500 பில்லியன் டாலர் வரை சென்றுவிடுமாம்.

18 வயதுக்கு மேலானவர்களில் 3 மில்லியன் பேரையும், குழந்தைகளில் 470,000 பேரையும் பீடிக்கும் மற்றொரு நோய் எபிலிப்சி எனப்படும் கால் கை வலிப்பு நோயாகும். அடுத்ததாய், கேவிட்டிஸ் எனப்படும் பல்நோய்கள். ஐந்தில் ஒரு குழந்தையையும், நான்கில் ஒரு வயது வந்தோரையும் தாக்குகிறதாம்.

16 மில்லியன் அமெரிக்கர்கள் சிகரெட் சம்பந்தப்பட்ட எதேனும் ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார்களாம். பொதுவாக அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணத்துக்கு இந்நோய் முக்கியக் காரணம் என்கிறது அமெரிக்க நோய்த் தடுப்பு மையம். கொரோனா உயிர்ப்பலிக்கு இதைவிடவும் பெரிய காரணம் வேண்டுமா?

வரிசைப்படி அடுத்து ஒரு நோய் சொல்கிறார்கள். அது என்ன தெரியுமா?

உடல் உழைப்பே இல்லாத காரணத்தால் வரும் நோய்கள் என்றும், இருதய அடைப்பு, இரண்டாம் வகை நீரழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல்பருமன் நோய்கள் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

அடுத்து முக்கியமானது, அளவிற்கு அதிகமான மது அருந்துவதால், வருடத்திற்கு 88,000 பேர் இறந்துபோகிறார்கள் எனும் தகவல். குறிப்பாக, வேலை செய்யும் இளம்பருவத்தில் ஏற்படும் பத்து மரணங்களில் ஒரு மரணம் ஆல்கஹால் மரணமாம். ஆம். கொரோனா மரணத்திற்கும் இதுதான் முக்கியக் காரணமாகும்.


இதுதான் நமக்கு நன்றாய்த் தெரிந்த அமெரிக்கா எனும் நாட்டில் உள்ள நமக்குத் தெரியாத நோய் நிலைமைகள் ஆகும்.
கொரோனா மரணங்கள் ஏன் அமெரிக்காவில் அதிகரித்தது என்பதை இப்போது நினைத்துப்பாருங்கள்.
ஒரு நாடு வளர்ந்த  நாடு என்று எதை வைத்து முடிவெடுக்கிறோம்? சென்னை வளர்ந்த நகரமா? தொழிற்சாலைகள் அதிகமாகிவிட்டால் அந்நகரமோ அல்லது அந்நாடோ வளர்ந்த நாடாகிவிடமுடியுமா?
அமெரிக்காவின் அனுபவங்களோடு பொருத்திப் பாருங்கள். நமக்கான எச்சரிக்கைகள் கிடைத்துவிடும்.


அமெரிக்காவில் கொரோனா காலத்தில்தான், 50 சதமான மக்கள் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். ஒரு செய்தி கூறுகிறது. ஆம். இந்தியர்களின் நோயெதிர்ப்பு சக்தி இன்றளவும் ஓரவிற்கேனும் பாதுகாப்பாய் இருக்கிறதென்றால் அதற்கான காரணமாய் ஐந்தினைக் குறிப்பிடலாம்.

1.    சமைத்துச் சாப்பிடும் உணவு முறை மற்றும் இயற்கையான சில உணவுகள். ஆக, இந்தியாவில் அதிகரிக்கும் பேக்கேஜூடு, ஹைஜீனிக் உணவுகளை தவிர்க்கவேண்டும்.
2.    அன்றாடம் சிறிது தூரமேனும் நடந்து செல்லும் வாழ்க்கைமுறை மற்றும் உடல் உழைப்பு.
3.    மது, சிகரெட் பயன்பாடு அதிகரித்தாலும், பயன்பாட்டின் அளவு அபாய எல்லையைத் தாண்டாமல் இருப்பது மற்றும் இரவு நேர கேளிக்கைகளில் மொத்த நாடும் இன்னும் மூழ்காமல் இருப்பது.
4.    எதற்கெடுத்தாலும் மருந்து, மருந்து என்று ஓடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பினும், மரபு மருத்துவங்களை நம்புவோர் எண்ணிக்கையும், சமையல் பொருட்களை வைத்தே நோயைக் குணமாக்குவோரும் கணிசமாய் இருப்பது.
5.    மூச்சுத் திணரும் சுற்றுச் சூழல் பாதிப்புகளுக்கு முழுமையாய் ஆட்படாமல் இருக்கும் கிராம மற்றும் சிறு நகர வாழ்க்கை முறை.

இந்த ஐந்தும் மிக முக்கியக் காரணங்கள் ஆகும். எனவே, இந்த ஐந்தினையும் இனியேனும் புரிந்து காப்பாற்ற வேண்டியுள்ளது.


உடலில் தொந்தரவுகள் ஏற்படும்போது உங்கள் உடலே அதைக் குணப்படுத்தும். நாம் அதை உணர்ந்தால் போதும். பசி, தாகம், தூக்கம், ஓய்வென உடல் சொல்வதைக் கவனித்து அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். பசியில்லாதபோது சாப்பாடு வேண்டாமென உடல் சொல்வதாய் புரிந்து ஒத்துழையுங்கள்.

இயல்பாக நமது  உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை இப்படியாக மட்டும்தான் இயற்கையாய் பாதுகாக்க இயலும். அதை மருந்து, மாத்திரையால் நிச்சயம் உருவாக்கிவிட முடியாது என்பதே அமெரிக்க தகவல்கள் உணர்த்தும் உண்மையாகும்.

ஆம். அமெரிக்காவில் உள்ள நோய்களை மீண்டும் வாசியுங்கள். கொரோனா பாதிப்பின் காரணம் புரியும். வருடம்தோறும் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு தடுப்பூசியும் போட்டுக்கொள்கிறார்கள். வாஷ்பேஷின், கிருமி, ஹைஜீனிக் எனக் கண்டுபிடித்த மேலைநாடுகளைப்போல் நாம் கைகழுவி விடவும் முடியாது.

ஆயினும், சாதாரண சளியைக்கூட இயற்கையாய் குணப்படும் திறனை ஒரு உடல் கொண்டிருக்காவிட்டால், கொரோனா கிருமி

வரும்போது அந்த உடல் திணறத்தானே செய்யும்?
ஆம். இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
ஆக, ஒரு சாதாரண நோய்க்குக் கூட மருந்து, மாத்திரை என்று மட்டுமே நம்பியிருப்போர் தன் உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வது குறித்து எப்போது சிந்திப்பர்?

இப்போதாவது சிந்தியுங்கள்..
கொரோனா பயத்திலிருந்து வெளிவாருங்கள்…
Courtesy: www.cdc.gov

Best regards,

Saturday, 4 July 2020

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟

ஆறுதலே கூற முடியாத சில
கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟
~~~ 🐝🐝 ~~~~
அருமையான வாக்கியங்கள்....
உங்களுடன் பகிர்கிறேன் அன்புடன்...🐝🐝

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை...

🐝 பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

🐝 இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்..ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

🐝 நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

🐝 நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

🐝 நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

🐝 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மன அமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்து விடப்போவதில்லை...

🐝 அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

🐝 சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ..15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

🐝 கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

🐝 வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

🐝 வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

🐝 மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்..அவன் தான் உலகின்
பெரிய பணக்காரன் ஆவான் ...

🐝 எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

🐝 இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

🐝 பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

🐝 தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

🐝 #சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனைசீரழிக்கும் துரோகியைவிட ...
முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் ! 

🐝 அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை..பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

🐝 உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண்ணோ, ஆணோ கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

🐝 அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

🐝 பேரின்பம் வேண்டாம்..சிறு சிறு
சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க...

🐝 நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

🐝 வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

🐝 புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

🐝 அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.உணர்ச்சி உள்ள மனிதனையும்
அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

🐝 வாழ்வோடு போராடிச்சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
Best regards,

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.

1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண்டுமுருகன்

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு.

" சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....
இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

படித்ததில் சிரித்தது

Best regards,