Friday, 2 September 2011

"ஒருமுறை காதல்" 3





நண்பர்களே நான் இனி இந்தப் பக்கத்தை பயன்படுத்த போவதில்லை. யாரும் காரணம் கேட்க வேண்டாம். மறக்க நினைக்கிற போதெல்லாம் ஞாபகத்தில் வந்து தொலைத்து மறுபடியும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிற என் காதலியின் ஞாபகத்தை போல இந்தப்பக்கமும் ஞாபகத்தில் வந்தால்...நான் பார்க்கிற பொழுது இந்தப்பக்கம் முழுவதும் உங்கள் கவிதைகளால் நிறைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் ஆசையை நிறைவேற்றுவீர்களா..?
Continue….




Thursday, 1 September 2011

செவ்வாய் கிரகத்தில் தோட்டம் அமைக்க விஞ்ஞானிகள் திட்டம்


அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர் நாசா விண்வெளி உணவு சோதனைக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

"ஒருமுறை காதல்" - 2











1  உன்னுடனான என் காதல்
  
இறக்க ஆரம்பித்து விட்டது...
  
நீ ரகசியம் அறியாதவள்...
  
என் காதலை கொல்பவள்...
  
கொலைகாரியை நான்
  
காதலிப்பதாக இல்லை...
  
இருந்தும் உன்னை
  
மறக்க மறுக்கிற இந்த மனதை நான்     என்ன சொல்ல....?             continue.....