Wednesday, 4 July 2012
Tuesday, 3 July 2012
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா?
நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரம். அது தவிர
ரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை
உள்ளன. ரத்தினம் என்பது அலுமினியமும், ஆக்சிஜனும் அதிகம்
சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில்
வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17ம் நூற்றாண்டில்
ரத்தினக்கற்கள் ராஜ ஆபரணமாக இருந்தன.
அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன்
மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராக கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில்
அதிகம் கிடைக்கிறது. 18ம் நூற்றாண்டில்
போர்த்திக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின்
கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கேரட்.
உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள்
புஷ்பராகம் அணிகிறார்கள். கடலில்
கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு
நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்கமுழுக்க
கால்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால்
விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில்
உள்ளன.
முத்துக்களை போலவே பவளத்திற்கும் கடல்
தான் வீடு. வெதுவெதுப்பான
நீர் பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல்வாழ்
உயிரினம்,
கரையான் கூடு போன்று கட்டும் புற்றே
பவளப்பாறைகள் ஆகும். ரத்தம் போல்
ஜொலிக்கும் பவளம் தான் ஒரிஜினல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால்
பவளப்பாறைகள் அழிய தொடங்கியபிறகு, பவளத்தின் விலை
உச்சத்தை தொட்டுள்ளது.
மாணிக்கம்,
ரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து
வெட்டி எடுக்கப்படும் ஒரு
வகை கல்தான். காதலின் அடையளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு
மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும்
லாவா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால், அதுதான்
வைடூரியம். வைரம், மாணிக்கம்
வரிசையில் வைடூரியத்திற்கு 3வது இடம். பச்சை
நிறத்தில் பளபளப்பது மரகதம்.
சிறிய கல் கூட பல லட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை
போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது. பாகிஸ்தானில்
உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது. நவரத்தினங்களில்
மிகவும் விலை குறைந்தது, கோமேதகம். பசுவின்
கோமிய நிறத்தில் இது
இருப்பதால், அந்தப் பெயர் வந்தது.
நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில்
போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம்
இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது.
Labels:
நவரத்தினங்கள்
Monday, 2 July 2012
நித்தியானந்தா!
நீதிமன்றம்...
விசித்திரம் நிறைந்த பல
வழக்குகளை
சந்தித்திருக்கிறது..
புதுமையான
பல
வழக்குகளை
சந்தித்து இருக்கிறது..
ஆனால், இந்த வழக்கு ஒன்றும்
விசித்திரமானதல்ல... வழக்காட
வந்திருக்கும் நானும் ஒன்றும்
புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக
ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில்
நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப்
பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன்
இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான்
இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன்
என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
ஏன்??? மக்களை
ஏமாற்றவேண்டும்
என்பதற்காகவா? இல்லை..
மக்களிடம்
காணப்படும்
மூடநம்பிக்கை வளரவேண்டும்
என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
ஏன்..?? காற்றுவரவேண்டும
ென்பதற்காகவா? இல்லை..
அந்த
நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும்
என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப்
பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்???
எனக்கு கால்
வலி என்பதனாலேயா?....இல்லை
அவள்
நான் ஒரிஜினல் சாமியார்
என்று என்மீது வைத்திருக்கும்
அபரிமிதமான
நம்பிக்கையை நீக்குவதற்காக....
உனக்கேன் இவ்வளவு அக்கறை??,
உலகத்தில் யாருக்கும் இல்லாத
அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக
நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,
எனது சுயநலதிலே பொது நலமும்
கலந்து இருக்குறது,என்ன
ை குற்றவாளி என்கிறீர்களே, என்
வாழ்கை பாதையை சற்று திரும்பி
பார்த்தீர்களானா
ல் நான் வாங்கிய அடிகள் எத்தனை,
மிதிகள் எத்தனை, உதைகள்
எத்தனை என்று கணக்கு பார்க்க
இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப்
போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம்
படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக
இருந்ததில்லை ஆனால்
ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை,
என்னை அடித்து துவைப்பதற்கு முன்
தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன்
நான், பிறக்க
ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின்
தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன
விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம்
பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம்
என்றது...
என் பெயரோ நித்தியானந்தா,
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத
ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால்
சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்,
ஏதாவது ஒரு மட்டமான படத்தில்
சாமியாராக நடித்திருக்கலாம்,
கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல்
என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த
பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப்
போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய
மடத்தை சுக்குநூறாக உடைத்தான்....
ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என்
ஜல்சா வீடியோவை யூ டியூப்பில்
போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
Labels:
சாமியார்
Subscribe to:
Posts (Atom)














