Showing posts with label நான்.... Show all posts
Showing posts with label நான்.... Show all posts

Sunday, 16 September 2018

நான்...

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான் தான் உதவி  செய்தேன்,

நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன அவ்வளவுதான்.

நான் பெரியவன்,

நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளுகிறோம்

நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  நம்மால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  நம்மால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருப்போம்.

 உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது

நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க  வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.

நமக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.

நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....



Best regards,