Showing posts with label ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார். Show all posts
Showing posts with label ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார். Show all posts

Monday, 25 March 2013

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?
******************************
****
ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார்... அன்று.. அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே!!!
தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள்.

அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்)

இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்”

இராசிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு சென்றார் என்பதும் அப்போது சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இராசிவ் காந்தியை அடித்தான் என்பதும் அதற்கு சிங்கள அரசு இன்றுவரை எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை என்பதும் அந்த சிங்கள இராணுவவீரன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்; என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக தாங்கள் சொல்லும் மேற்குறிப்பிட்ட வசனத்தை சிங்களனுக்கு எதிராக பேசாதது ஏன்?

“கொல்வதுதான் தவறு, கொல்ல முயற்சிப்பது தவறு அல்ல” என்று சத்தியமூர்த்திபவன் காங்கிரசு காரிய கமிட்டியில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

குறிப்பு :************* அன்றைய தினம் ராஜீவ் காந்தி பெற்று கொண்ட இலங்கை ராணுவ மரியாதையில் எந்த சிங்களவ படை வீரனிடமும் துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. ஒரு வேலை இருந்திருந்தால் சிங்களவன் அடித்திருக்க மாட்டான் கொன்று இருப்பான்.

இவ்வளவு பெற்றும் ராஜீவ் காந்தி சிங்களவனுக்கே துணை நின்றார் என்பது உலகறிந்த அவலம்...