Wednesday, 8 June 2016

பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
THqlHMuRdafjdafhகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள் பிறந்த மாதத்திற்கும், அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.
அதிலும் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, 14 வருடங்களாக கொலம்பியா மருத்துவ மையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் பட்டிலைக் கொண்டு ஆராயப்பட்டது. ஒரே மாதத்தில் பிறந்தவர்களின் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக தெரிய வந்தது.
இங்கு அப்படி நிக்கோலஸ் டடோனிட்டி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த வகையான நோயால் கஷ்டப்படுவார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலானது 1.7 மில்லியன் நோயாளிகளின் பிறந்த மாதம் மற்றும் நோய்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான விரைவான மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து, அதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கண்டுபிடித்துள்ளார்.
மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்
இந்த மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவராகவும், அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.
செப்டம்பர்
செம்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு (ADHD) என்னும் நடத்தைக் கோளாறால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறா
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளார்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
Best regards,

Tuesday, 7 June 2016

நாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...

நாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...
நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!! மகள் ஒருவள் தான் புதியதாக வாங்கிய I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Card-ம் கூட வங்கி போட்டுள்ளார்..!!
தந்தை: இந்த போன் எங்ளோ மா..??
மகள்: Rs-40,000 அப்பா..!!
தந்தை: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டு என்ன விலை..??
மகள்: Rs-4,000 தான் அப்பா..!!
தந்தை: என்னது நாலாயிரமா..??
மகள்: ஆமாம் அப்பா 40,000க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??
தந்தை: ஏம்மா 40,000க்கு போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??
மகள்: என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!
அப்பா: அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?
நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற.. இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..? அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..?? யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??
இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!! என்று கூறினார் அப்பா..!!!
பெண்ணாக பிறந்த அனைவருக்குமே இந்த தந்தையின் அறிவுரை ஒரு பாடமாக இருக்கும் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம்...
Best regards,

Monday, 18 April 2016

பானகம்

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.
இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள்.
வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.
நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

Best regards,