Friday, 30 March 2012

99 வயதிலும் தொய்வில்லாத உழைப்பு : நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்!


Inline image 1
வட்டக்கல்லை தோளில் தூக்கிய பின்னரே திருமணம் என்ற நிலையில் இருந்த, சமூகத்தில் இன்று, சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் சோர்ந்து போகும் இளைய தலைமுறை உருவாகி விட்டது.
இந்த சூழலில், வீட்டில் அனைத்து வேலைகளையும் தானே முன்வந்து செய்யும் பாட்டிக்கு, 99 வயது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், அது தான் நிஜம். அம்பத்தூர், திருவேங்கடபுரத்தில் உள்ள சாவித்ரி அம்மாள் தான் அந்த வயதான தேவதை. பேரனுக்கும் பேரன் பார்த்து விட்ட இந்த பாட்டி தான் அவரது வீட்டின் தூண்.
ஈடுபாடு மிகுந்த தினசரிகள்:இந்த தள்ளாத வயதிலும், சாவித்ரி அம்மாள் பாட்டி வாழ்வின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர், ஒரு மணி நேரம் ஜெபம் செய்கிறார். பின், 7 மணியிலிருந்து 8 மணி வரை, தன்னுடைய துணிகளை தானே துவைத்து காயப்போடுகிறார். 9 மணி முதல் 10 மணி வரை, சமையலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார். காய் நறுக்குவது, வெங்காயம் வெட்டுவது என அனைத்தையும் பொறுமையுடன் செய்கிறார்.
வீட்டிற்கான தினசரி உணவை அவரே முடிவு செய்கிறார். 10 மணிக்கு முழுச் சாப்பாடு சாப்பிட்டவுடன், தினசரி புறட்டுவது, அதன் பிறகு சிறிது உறக்கம் என, அவருடைய தினசரி வாழ்வு நேர்கோடாக செல்கிறது.மதிய நேரங்களில் ஆன்மிக வாசிப்பில் ஈடுபடும் சாவித்ரி அம்மாள், பின், கடவுள் குறித்து பாடல்கள் எழுதுகிறார். அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே தேர்வு எழுதச் செல்கின்றனர்.
அப்பகுதியில் புதுமணத் தம்பதிகள், இவரிடம் ஆசி பெற்ற பின்னரே, அவர்களது வீட்டிற்குச் செல்கின்றனர். அனைவரிடமும் ஆன்மிகம் குறித்து போதிக்கிறார். கேட்கும் திறன் இழந்துள்ளதால், கையோடு வைத்திருக்கும் சிலேட்டில், பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.
சத்தான உணவே காரணம்:இயற்கை உணவு முறைகள் தான், அவருடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்கின்றனர், அவருடைய வாரிசுகள். கடந்த, 50 ஆண்டுகளாக காலையில் முழுச் சாப்பாடும், மதியத்திலும் இரவிலும், வெறும் பாலை மட்டுமே அருந்தி வருகிறார். 50 வரையில், தான் பயன்படுத்திய சுத்தமான நிலத்தடி நீரும், சத்தான காய்கறிகளும் தான் தன்னை இந்த வயதிலும் திடமாக செயல்பட உதவியதாக, தன்னுடைய வாரிசுகளிடம் தெரிவித்திருக்கிறார். உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால், வெட்கம் பரவிய சிரிப்பு அவர் முகத்தில் படிகிறது.

Thursday, 29 March 2012

அதிகம் ஆசைப்பட்டால்....

ஒரு ஊரில் ஒரு கிழவரும், கிழவியும் இருந்தனர்... கிழவர் எது செய்தாலும், கிழவிக்கு பிடிக்காது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றார் கிழவர். அங்கே காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்தது ஒரு குருவி.

பரிதாபப்பட்டு அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ஒரு கூண்டு வாங்கி, அதனுள் வைத்தார் கிழவர். இதை கண்ட கிழவிக்கு கோபம்... "இந்த நொண்டி குருவியை, இங்கு எதற்குக் கொண்டு வந்தாய்?' என்று ஆத்திரப்பட்டு, அந்த குருவியை கூண்டிலிருந்து எடுத்து வீசி எறிந்தாள்.

பறந்து சென்ற குருவி, பழையபடி ஆற்றங்கரை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. மறுநாள், ஆற்றங்கரைக்குப் போனார் கிழவர்... அப்போது, "பெரியவரே... நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. அதோ பாரும்... அங்கே மூன்று பானைகள் மூடி போட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு பானையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பாரும்...' என்றது குருவி.

கிழவரும், மூன்று பானைகளில் ஒன்றுடன் வீட்டுக்குப் போய் திறந்து பார்த்தார்... ஒரே ஆச்சரியம்... பானை நிறைய தங்க காசுகள் இருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டார். "இனி செலவுக்கு கஷ்டமில்லை...' என்று எண்ணினார்.

அப்போது அங்கே வந்தாள் கிழவி... "ஏது, இந்த பானை நிறைய தங்க காசு?' என்று கேட்டாள். கிழவரும், தான் ஆற்றங்கரை
பக்கம் போனதையும், அந்த நொண்டிக் குருவி, இந்த பானையை காண்பித்ததையும் விவரமாகச் சொன்னார்.

அதைக் கேட்ட கிழவி, "ஓ... அந்த நொண்டிக் குருவியா! சரி... நானும் போய் அந்த குருவியைப் பார்த்துவிட்டு, இதைவிட பெரிய பானையை கொண்டு வருகிறேன் பார்...' என்று சொல்லி, ஆற்றங்கரைக்குப் போனாள்.

அங்கே அந்த குருவி இருந்ததைப் பார்த்தாள். கிழவியை பார்த்து, "எங்கே இந்தப் பக்கம் வந்தாய்?' என்று கேட்டது குருவி. "சும்மா தான் உன்னை பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன். உன்னை அனாவசியமாக நான் வீசியெறிந்து விட்டேன். என்னை மன்னித்து விடு. என் புருஷனுக்கு ஒரு பானையை காண்பித்தது போல், எனக்கும் ஒரு பானையை காண்பிக்க வேண்டும்...' என்று வேண்டினாள் கிழவி.

குருவியும், "கவலைப்படாதே... அதோ இருக்கும் மூன்று பானைகளில், ஒன்றை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பார்...' என்றது. கிழவியும், மூன்று பானைகளில் பெரிதாக இருந்த ஒரு பானையுடன், அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் பானையை திறந்தாள். அவ்வளவுதான்... பானையிலிருந்து தேளும், நட்டுவாக்கலியும் குதித்து ஓடியது கண்டு, ஓவென்று அலறி ஓடினாள்.

அதிக ஆசைப்படக் கூடாது; பொறாமை கொண்டு எதையும் செய்யக்கூடாது. தனக்கு எது கிடைக்குமோ அதைத்தான் அடைய வேண்டும். "அவனுக்குக் கிடைத்ததே... அதே போல் எனக்கும் கிடைக்க வேண்டும்...' என்று நினைக்கக் கூடாது.

எண்ணம் போல்தான் எதுவும் கிடைக்கும்; வீண் ஆசை கூடாது.
Wednesday, 28 March 2012

பெரியவாவின் சத்தியமான வார்த்தைகள் !* அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.
* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையான ஸ்தாணு பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.
* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.
* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.
* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.
* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.
* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.
* எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.
MAHA THAPASVI

ஒருமுறை பெரியவா மகாராஷ்ட்ராவில் உள்ள பண்டரிபுரத்துக்கு விஜயம் செய்தார்கள். அந்த ஊரில் பீமா என்ற நதி உண்டு. அவர் சென்றிருந்த காலத்திற்கு பத்து வருஷங்கள்  முன்பு அந்த நதி கரை புரண்டு நீரோடு ஓடியது என்றும் தற்போது வறண்டு மணல் காடாக உள்ளதை அறிந்தார். ஊர் மக்கள் அந்த நீரற்ற நதியில் 300 அடிக்கும் மேலாக ஆழமான அனேக கிணறுகளை தோண்டி அதில் கிடைக்கும் நீரில் தான் ஜீவித்து வந்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீருக்காக நீளமான கயிறுகளை கட்டி கிணற்றில் இறக்கி ஒரு குடம் நிரம்புவதற்கு கிட்ட தட்ட அரை மணியாவது ஆகும். என்ன வறட்சி பாருங்கள்.?
ஆற்றின் மறு கரையில் ஒரு பாழடைந்த மண்டபம். அது தான் பெரியவாளின் தங்குமிடம்.
இதை எல்லாம் பார்த்துகொண்டு பெரியவாளால் சும்மா இருக்க முடியுமா. அன்று சாயந்திரமே ஜபம் தொடங்கினார். ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. கொட்டோ கொட்டு என்று "ஜோ " மழை பூமிக்கு இறங்கியது. ஆற்றில் வெள்ளம்!!! பெரியவாளுக்கு கரையேற ஒரு ஓடம் தேவை பட்டது. இந்த அதிசயத்தை கண்ணால் கண்ட பக்த கோடிகள் பெரியவாளின் பாதத்தில் விழுந்து வணங்கினர். பெரியவாளோ அமைதியாக " நான் யார் இதையெல்லாம் செய்ய, உங்கள் ஊரில் உள்ள அந்த பண்டரிநாதன் அல்லவோ மழையை கொண்டு வந்தவன். அவனுக்கு நன்றி தெரிவித்து வணங்குங்கள் " என்றார்

Tuesday, 27 March 2012

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..


பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் !!

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.
அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ஏழு தலைமுறைகள்'. அதில் இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."
ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."
பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.
எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.
போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.
பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.
அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.
உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.
பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.
பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."
ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘
தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்....


MAHA PERIYAVA MAHATHMIYAM

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம்ஒருநாள்  மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"
பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து.  ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு  யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"
பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி.
 
"வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"
ஆமா........."

"
எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"
உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"
அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய  பெண்ணும் வந்திருந்தாள்.

"
இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........."
கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

"
செஞ்சுடறேன்  செஞ்சுடறேன்" பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்பெரியவா அவரைப்  பார்த்து ரெண்டு  விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"
சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"
இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு".  பெரியவாளுக்கு எப்டி தெரியும்?
ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது.

"
ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!
என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு  ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.
பெற்றோர், வளர்த்தோர்  ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்