Wednesday, 11 December 2019

ஆணும் பெண்ணும்

ஒவ்வொரு ஆணும்  பெண்ணும் எவ்வளவு உயர் பதவி , பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
                                                       ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.

1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.

அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்

2.  காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.
நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.
உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்

3.  அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே  இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும்   என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.

4. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.

5.  கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம்.  அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

 மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.

வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.

ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால்  என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.

நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்  கவலைப் படாதீர்கள்.

ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்.

இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள்.
பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

█▇▆▅▄▃▂▂▃▄▅▆▇█🤢😡🤢😡🤢😡🤢😡 █▇▆▅▄▃▂▂▃▄▅▆▇█Best regards,

Tuesday, 10 December 2019

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே,  “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:

' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள். 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது.  " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?

"  முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க "Best regards,

Friday, 6 December 2019

நிதானம்

நிதானம்

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,

அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார்,

"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.
உணவை, நீரை அருகில் வையுங்கள்
ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்.

பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.
அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,
நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்," என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே
தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்கு பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம்
நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .Best regards,

Thursday, 5 December 2019

அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள் தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?

அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?

மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்?

தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி
மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?

குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள் 

இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர்
வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்

இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை.

வழக்கமான  கியர்  வண்டியில் இடது கால் க்ளட்ச்சில்  எப்போதும் கால் இருக்க வேண்டும்.
ஆனால் ஆட்டோமேட்டிக்கில்  ப்ரேக் ஆக்சிலேட்டர்  இரண்டும் வலது காலால்  இயக்கினால்  போதும்.

மேலும் விலையுயர்ந்த  கார்களில் "cruise" மோட்  என்று இருக்கும்.
நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன்  அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ்  போட்டு விடலாம்.

இப்போது வலது  காலுக்கும்  வேலை இருக்காது.

சரி விசயத்துக்கு வருவோம்.
இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான்  ஸ்டாப்பாக  வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை  அடைந்துள்ளார்.

கூடவே நன்றாக டைட்டாக  இருக்கும் படியான சாக்குத்துணியால்  ஆன பேண்ட்டை  அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும்  ஜீன்ஸ் பேண்ட்  உருவாக்கப்படும்  டெனிம்  வகை துணி - சாக்குத்துணி தானே.

நமது சீதோஸ்ன  நிலைக்கு சற்றும் பொருந்தாது  என்றாலும் நாம் ஃபேசனுக்காக  ரோசத்தை  விடும் கூட்டமன்றோ?

இந்த ஜீன்ஸ்னால  தான் உங்க விந்தணு குறையுதுடா ..குழந்தை பாக்கியம்  இல்லாம  சந்ததி  தலைக்காம..சந்தி சிரிச்சுபோகுதுடா.. பேராண்டிகளா..வேணாம்டா பேராண்டிகளா.. என்று டிவியில்  வரும் சேலம் தாத்தா  போன்று கூறினாலும் யூத்துகள்  விடவதாக  இல்லை. 

சரி... இந்த டைட் டெனிம்  பேண்ட்  போட்டுக்கொண்டு  எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு
இடது கனுக்காலில்  நன்றாக வலி  இருந்துள்ளது. 

முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத  சட்டமன்றோ.?
தம்பியும்  அந்த வலியை  புறக்கணித்து  இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார்.

அங்கும் குத்த  வைத்தபடியே  பணி செய்யும் வொய்ட்  காலர் வேலை தான்.

வலி அதிகமாகியிருக்கிறது.
இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது
தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு  வந்திருக்கிறது.
இதை Black outs என்கிறோம்.

கூடவே மூச்சிரைப்பும்  படபடப்பும்
பிறகு மூர்ச்சை  நிலைக்கு சென்று விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு  செல்ல

ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள்.
உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
அங்கே நாடித்துடிப்பு  மிக குறைவாக இருக்கவே

இதயத்துடிப்பையும்  சுவாசத்தையும்  மீட்கும்  நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation ஐ செய்து 
உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து  இரண்டுக்கும்  கால்கட்டு  போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்..
நானும் வாரக்கடைசில  சென்னைல  இருந்து வண்டிய கெளப்பி  நான்ஸ்டாப்பா  மதுரைக்கு கார் ஓட்டிட்டு  போய்ட்ருக்கேன் என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதுறுவதும்   அவர்கள் இதயத்துடிப்பு  லபக்கு  டபுக்கு  என்று இங்கு வரை கேட்கிறது.

சொல்கிறேன் ..

ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்..இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு  விதி இருக்கு.

சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர்  பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை  வலியே  இருந்தாலும் பரவாயில்லை  எழுந்து நடந்தே ஆகணும்  என்று வற்புறுத்துவது  எதனால்?

காரணம் இருக்கிறது.
நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ  வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மொதுவாகும்  மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தில் சுழற்சியும்  குறையும்.

இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும்.

இதனால் நமது கால்களில் உள்ள ஆளத்தில்  இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரும். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடும்.

இந்த ரத்தக்கட்டி  நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva  எனும் பெரிய சிறைதனில் நுழைந்து
இதயத்தில் உள்ள வலப்பக்க  மேல்புற  அறையான Right atrium  அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு  பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின்  ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம்.

இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம்.

இதய ரத்த நாளங்களை  அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction.

ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு  ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி  புது வொயஃப்  கிட்ட சீன் போடலாம்னு பாத்தா...அதுலயும்  இப்டி பயம்புடுத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா

என்ன செய்வது?
நம் உடலின் இயற்கை அப்படி.
நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள். 

நாம் நடப்பதை நிறுத்தினால்  மரணம் வரப்போகிறது என்று அர்த்தம். 

நமது கால்களின் கணுக்கால் பகுதியில்  Soleus எனும் பிரத்யேகமான தசை  உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம்.

இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை  ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க 

ஒரு விநாடிக்கு  9.8 மீட்டர் என்ற அளவில்  இழுக்கும் பவர்ஃபுல்  புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை  பம்ப்  செய்கிறது.
இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய்  போன்று வேலை செய்கிறது.

ஒரு பக்கமாக ரத்தத்தை  மேலே ஏற்றிவிட்டு
கீழே ரத்தம் இறங்காமல்  பார்த்துகொள்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ்  தசை கூட
நீரிழிவு
உடல் பருமன்
முதுமை போன்றவைகளால்  வலுகுறைகிறது. 

கால்களுக்கு செல்ல வேண்டிய  ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான  பெல்ட்/ டைட்டான  சாக்குத்துணி  பேண்ட்  அணிந்து தடுத்தால்
என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய  வேண்டியதில்லை.

இந்த கட்டுரையின் கடைசி கட்டம்

டேக் ஹோம் அட்வைசஸ்

1. வீக்கெண்ட்  ட்ரிப்  நிச்சயம் தேவை.
லாங்க்  ட்ரைவும்  ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக  பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை.
நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர  டீக்கடைகள்  இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும்  ஒரு சாயா  அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக  செல்வது தான் நல்லது . நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில்  ஏறுவது சிறந்தது.

2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும்  டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை  அல்ல.
பருத்தி  துணிகள் சிறந்தவை.
அளவுக்கு பொருந்தாத  டைட்  ஜீன்ஸ்கள்  வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும்  லூசாக  வாய்ப்பு உண்டு 😃

3.  முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள்
பேருந்துகளில்  நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது.
இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம்  அல்லது கால்களை  தையல்  மிசின் அமுக்குவது  போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும்.

4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர  வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது  நடந்து விட்டு வண்டியில்  ஏற வேண்டும்.  என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு  நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.

5. விமானங்களில்  நெடுந்தொலைவு  பயணப்படும்  மக்கள்  வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம்  இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும்  பரவாயில்லை. ஃப்ளைட்டில்  டாய்லெட்  எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது  எழுந்து நடங்கள். 
ஏர்  ஹோஸ்டஸ்  அம்மணிகள்  என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள்  என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள். 

6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு  ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம்  போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்.
பயணத்தின்  போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே.

7. வீட்டில் நடக்கவே  இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால்  முட்டிப்பகுதியில்  காலை  அவ்வப்போது  மடக்கி நீட்டும்  பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல்  மிசினை அமுக்குவது  போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.

8. எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும்  பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும் 

எழுந்து நடக்கும் வரை தான் 
நாம் வாழ்கிறோம்

நடை நின்று  விட்டால்
ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்
அல்லது
அது நம்மை நெருங்கி விட்டது
என்று அர்த்தம்

பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கைBest regards,

Wednesday, 4 December 2019

பொற்றோர்களின் கவனத்திற்கு

பொற்றோர்களின் கவனத்திற்கு;                   ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..
சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.
இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...
இறுதியாக..
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..
தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.
கதறினர்.....
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,
மகன் அமைதியாகச் சொன்னான். அவர்கள் காரணமில்லை,...
நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.
வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....
அடித்து மிரட்டி.. போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... தூக்கு மேடை வரை வந்திருக்கிறது
எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..
ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.
இதை பெற்றோர் உணரவேண்டும்.
சிந்திக்க வைத்த பதிவு...
*பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.Best regards,

Tuesday, 3 December 2019

சிந்திப்போம் : செயல்படுவோம் :

சிந்திப்போம் :

         செயல்படுவோம் :

✍பகலில் எரியும் தீபம் பயனற்றது,
✍வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍ பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍ ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍ சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

⌚ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

👍ஜோக்கை எல்லாம் பகிர்வு பண்ணுற நாம் இந்த மாதிரி தகவல்களை கண்டும் காணாமல்  விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்...                          அன்புடன்.💠☘🌹🙏🏵
Best regards,

Monday, 2 December 2019

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - Uber,OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
App என்னும் ஆப்பு.!!

உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !

விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!

சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!

விழித்தெழுந்து விடை கொடு..!

செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல்ல வலை பின்னுவோம்..!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருங்காலத்தை உணர்த்தும் / எச்சரிக்கும் / அறிவுறுத்தும் அருமையான பதிவு.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வர்.
💐💐💐💐💐💐💐💐💐💐

என்றும் அன்புடன் ...Best regards,

Sunday, 1 December 2019

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியத்திற்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

((தமிழாக்கம்.))

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியத்திற்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த காரணத்தை பகிர்ந்து மற்றும் ஆதரவு தாருங்கள்....(இது உங்கள் கடமையும் கூட.)

தற்பொழுது தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்கள் ஆகிய ஆசிரியா்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்தியாவின் அன்பும் மரியாதைக்குரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.

மூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.

2018 முன்னேற்றம் சட்டம் (2018 Improvement Act).

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.
(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)

இதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு  நாடாளமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).

இது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம் கைகொர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.

மத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக
தங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து  எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த  விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

எம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்
அவர்களின் சிகிச்சைகளுக்கும் ஆரோக்கிய கோளாறூகளுக்கு எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரன குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி மசோதா போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து
எற்றி கொண்டே வருகிறாா்கள்)

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவுப் உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும்  கடந்தகால அல்லது தற்கால கிரிமீனல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொறுந்துமாறு அமைக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.

இலவச இரயில் மற்றும் விமானப் போன்ற டிக்கட் சலூகைகளை உடனே நிறுத்த வேண்டும்.

சாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தொளில் சுமக்க வேண்டும்?

*ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இருபது பேருக்கு ஸேர் செய்தால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.இந்த பிரச்சினையை எழுப்ப சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், ஸேர்  செய்யுங்க.Best regards,

Saturday, 30 November 2019

டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?

டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?

FastTag என்றால் என்ன? அதனை எங்கே, எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான பதில் இதோ...


 
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

இது நாம் அனைவரும் அறிந்தது தான். சமயங்களில் வாகன நெருக்கடி காரணமாக சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவசரமான சூழ்நிலைகளில் இப்படி காத்திருப்பது பலருக்கு அவஸ்தையான ஒன்று தான்.

Fast tag
ஆனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் 'Fast Tag' 'ஃபாஸ்ட் டேக்' என்ற ஒரு தனி லைன் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் நிற்காமல் நேராகச் சென்று விடும். அப்படிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது தவறு. அவை ’ஃபாஸ்ட் டேக்’ முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டி விட்டுச் செல்கின்றன.

இப்படி அவை செல்வதன் மூலம் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே வாகன நெருக்கடியும் அங்கு ஏற்படாது.

இந்த வசதியைத் தான், வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ’ஃபாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் இதனை உறுதி செய்துள்ளார்.
ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன?
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டுவது தான் Fast Tag. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு சோதனை முறையில் சில சுங்கச்சாவடிகளில் ஒரு அல்லது இரண்டு சுங்க வரிசைகளில் ஃபாஸ்ட் டேக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.

முதலில் இது பரிசோதனை முறையில் சில டோல் பிளாசாக்களில் மட்டும் நடைமுறைக்கு வந்தது. அங்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் இம்முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு மாதிரி ஃபாஸ்ட் டேக் என்பதும் ஒரு மின்னணு அட்டை தான். இதில் வாகன ஓட்டிகள் முன்னதாகவே ஒரு தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். சுங்கச்சாவடிகளை சம்பந்தப்பட்ட வாகனம் கடக்கும் போது, அந்த ஃபாஸ்ட் டேக் அட்டையில் இருந்து தேவையான பணத்தை சுங்கச்சாவடி எடுத்துக் கொள்ளும்.

நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.டோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்ட்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்ட் டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

ஃபாஸ்ட்டேக் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள 5 நுழைவு வாயில்களில் நான்கு தடங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றொரு வாயிலை ஃபாஸ்ட் டேக் வசதியில்லாத வாகனங்கள் பயன்படுத்தலாம். அங்கு சுங்கச்சாவடி ஊழியர் அமர்ந்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பார்.
ஃபாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஃபாஸ்ட் டேக் கார்டை பெறுவது எப்படி?
ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம்.

தேவையான ஆவணங்கள்

1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.

2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும்.

4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.

ஃபாஸ்ட் டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கையில் சில்லறையாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.

2. சுங்கச்சாவடிகளில் வாகனத்தை வரிசையில் நிறுத்தத் தேவையில்லை.

3. ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியும்.

4. சுங்கச்சாவடிகளை கடந்த பின்பு கழிக்கப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பப்படுவதால், பேலன்ஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

5. ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.

ரீசார்ஜ் செய்யும் முறை

ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்வது சுலபம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொகைக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் என பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். சுங்கச்சாவடிகளிலும் நேரடியாக ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

பேலன்ஸ் செக்

ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி வெப்சைட் மூலம் தங்களது கார்டில் உள்ள பேலன்ஸை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இனி Fast Tag-ன் அவசியம் இருக்காது எனும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட கார்டை பிளாக் செய்யவும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டாலும், அந்த கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு வாங்கிக் கொள்ளலாம். அப்போது பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Last date for fixing Fasttag extended upto 15th December 2019
Best regards,

Wednesday, 27 November 2019

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத  கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்புBest regards,

Monday, 25 November 2019

கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை

கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை

சென்னை: இன்ஜினியரிங் படிப்பில், கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும், உதவித்தொகை வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் அனுமதியுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது.

அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள்; அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கல்லுாரிகளில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், 50 சதவீத இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகள், 35 சதவீத இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புகின்றன.

கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அதாவது, கவுன்சிலிங் வழியே சேர்ந்தவர்களிடம் மட்டும், அரசு நிர்ணயித்த அளவின்படியே, கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.கவுன்சிலிங்கில்சேர்ந்த மாணவர்களிடம், எந்த கல்லுாரியும் நன்கொடை வசூலிக்க முடியாது;அவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, தேர்வை எழுத விடாமல் தடுக்க முடியாது. அதேபோல, கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்குத்தான், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, 2018 - 19ல் அறிவிக்கப் பட்டது.


இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா, அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய அறிவிப்பு:
தமிழக அரசின் கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியும். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைவாக உள்ளனர்.

எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அதேநேரம், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியாது. எனவே, அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.Best regards,

Sunday, 24 November 2019

For 10th, 11th & 12th Students, Teachers and Parents also....

Government G.O.ORDER ( EDUCATION)
For 10th, 11th & 12th
Students, Teachers and Parents also....

1. இனிவரும்  தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஒன்றில் மட்டுமே
தேர்வு எழுத வேண்டும்.இரண்டிலும் கலந்து எழுதக்கூடாது.

2. இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில் தயார் படுத்த வேண்டும் என்று கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

3. மேலும் இந்த ஆண்டிலிருந்து BLUE PRINT முறை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

4. இனிமேல் BLUE PRINT முறைப்படி பாடம் நடத்தாமல் புத்தகத்தில் உள்ள அனைத்தையும்
 நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. இனிமேல் தேர்வுகளில் வினாக்கள் 20% புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும்.

6. மேலும் Competitive Examல் கேட்பதை போல வினாக்கள் REASONING, UNDERSTANDING முறையில் கேட்கப்படும்.

7. மேலும் CREATIVE மற்றும் HIGHER ORDER THINKING என்னும் முறைப்படி வினாக்கள் கேட்கப்படும்.

8. வினாத்தாள் BLUE PRINT முறையில் இல்லாமல் மாணவர்கள் பாடத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டு எழுதும் வகையில் Creative & Higher Order Thinking என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

9. எனவே ஆசிரியர்கள் இனிமேல் இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில்( Creative & Higher Order Thinking) தேர்வுக்கு தயார் படுத்துமாறும் அதற்கேற்ப ஆசிரியர்களை பாடம் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10. இம்முறையை மாணவர்களை இப்பொழுதிலிருந்தே (Term Test& Revision Test& Model Test) பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில் பின்பற்றச் செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.Best regards,

Saturday, 23 November 2019

வீட்ல சும்மா தான இருக்க"

வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..

இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.

இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

"அம்மா பசிக்குது மா..

எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா மா", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூளமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பண்ணி இருக்கு.

பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை, போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன், நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?

வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமும் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள்.

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

இது தான் மனைவி  ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ மனைவி ஒரு வரம் ! !
Best regards,

Friday, 22 November 2019

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை!

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை!

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை.

என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணிகளை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.

மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது கூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்து கொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறது.

அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லை

மனதில்தான்  மகிழ்ச்சி இருக்கிறதுBest regards,

Monday, 18 November 2019

அந்த கால ஒழுக்க பாடம்

அந்த கால ஒழுக்க பாடம்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்
இதை நம் குழந்தைகளுக்கு
சொல்லி கொடுக்கலாமேBest regards,

Sunday, 17 November 2019

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை

🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ

🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்

🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

இதை
பகிர்ந்தால் நம் மண் மீண்டும் செழிக்கும்.Best regards,

Saturday, 16 November 2019

கணவன் மனைவி இருவரும் ...

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.Best regards,

Friday, 15 November 2019

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
************
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)Best regards,

Thursday, 14 November 2019

படித்ததில் எனது மனதை தொட்டது

படித்ததில் எனது மனதை தொட்டது


✍ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.

✍அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.

✍ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

✍அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.

  ✍ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.

✍அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்!

✍நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.

✍உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.

✍உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி

✍மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி

✍நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

✍ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'

✍கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'

✍அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும்.

✍ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…

✍அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள்
வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.

✍மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

✍ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

✍ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார்.

✍பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...

✍Mrs. Sumathi
‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore

✍அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.

✍அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

✍திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.

✍ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''
.
.
.
.
✍உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.

✍உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!

✍இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்!

✍உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.🙏Best regards,

Wednesday, 13 November 2019

"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?

"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?

(படித்ததில் பிடித்த பதிவு)

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான்.

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"Best regards,

Tuesday, 12 November 2019

அன்பு பரவட்டும்

அன்பு பரவட்டும் ❤

💓ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

💓பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

💓இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

💓உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார்,

💓உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

💓இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

💓ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.

💓உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,

💓ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.

💓நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

💓தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,
அந்த பாட்டியிடம்,

💓அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

💓உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு,
அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,கொடுத்து சாப்பிட வைக்கிறான்.

💓இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்,

💓நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,

💓இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தானேங்க
ஜீவன் இன்னும் இருக்கு.....🙏அன்பை விதையுங்கள்...அதையே அறுவடை செய்வீர்கள்..Best regards,

Sunday, 10 November 2019

மனதை கலங்க வைத்த பதிவு

மனதை கலங்க வைத்த பதிவு🙏
👵என்னங்க...!! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,
இல்ல உங்க அம்மா இருக்கணும்....!!
யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".....!!

👵என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி...!!
நீ ஏன் டென்சனாகுறே....!!

👵எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!!
சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க.....!!

👵மறுநாள் காலை.....!!
அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!!
" எங்கேடா மகேஷ்.....??? "
👵" உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!!
அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!!
உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!!
அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......!

👵மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!!
உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!!
உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!!
எல்லா கஷ்டமும் தீர்ந்து,
இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!!
என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! "

👵உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!!
உயிரை வாங்காமல் கிளம்பு...
"என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல,
கலங்கி போய் நின்றாள் மரகதம்....!

👵இரண்டு மாதங்கள் உருண்டோடின...!!
மகேசும் லதாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்...!!
எதிரே வந்த லாரி மோதியதில்,
இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்...!!
லதாவிற்கு பலத்த அடிபட்டு 'கிருஷ்ணா மருத்துவமனையில்', அனுமதிக்கப்பட்டாள்....!

👵டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... "
Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்.....!

👵உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...!!
ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள்,
அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு.....!!
அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை.....!!

👵அய்யோ....!! டாக்டர் லதாவுக்கு,
கண் பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா....? "

👵ஒரு வழியிருக்கு.....!!
இறந்தவங்க யாரோட கண்ணையாவது,
அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு.....!!
நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம்....!!
நீங்களும் உங்க சைடுல ட்ரை பண்ணுங்க.....!!
என்று சொல்லி நடந்த டாக்டரை ,
கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது.....!

👵தாய் மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர...

👵'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற ,
பேரனை பார்க்கணும்,
பேசனும்னு ,
உயிர வாங்குது...!!
சே....!!சனியன்....!!
கை கழுவி விட்டாலும்,
நம்மள விடாது போல'...

👵என்று முணு முணுத்துக் கொண்டே ,
மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்.....!

👵ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து.....!!
மகேஷ் யூ ஆர் சோ லக்கி...!!
உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி...!!
இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்.....!
நீங்க நர்ஸ் கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க....!!

👵ரொம்ப நன்றி டாக்டர்.....!!
ரொம்ப நன்றி "
டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்....!

👵மூன்று மணிநேரம் கழித்து,
ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்....!!

👵டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "....!!
ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்.....!!
இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்......!!
அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும்...!!
அதுக்கப்புறம் நீங்க போய் அவங்களை பாருங்க.....!!

👵லதா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்.....!!
"லதா உனக்கு ஒண்ணுமில்ல..!!
நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க....!!

👵ம்ம்ம்....!!
நாம அத்தையை தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ,
இப்படி நடந்துடுச்சி.....!!
திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க....!!
நம்ம கூடவே வச்சுக்கலாம்....!!
நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது ,
அவங்க முகமாத்தான் இருக்கணும்...!

👵சரி லதா...!
காலையிலே அம்மா போன் பண்ணங்க.....!!
சன்டே நான் அவங்களை பார்க்க போகும் போதே,
பேரக்குழந்தையை பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க....!!
அதுக்குதான் போன் பண்ணி தொல்லை கொடுக்கறாங்கனு,
நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்....!!

👵இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி,
கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் லதா....!!

👵மகேஷ் ஹோம்க்கு போன் பண்ணி,
" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன்....!!
அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......!!!

👵என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே.....!!
படிச்சவங்க தானே நீங்க...!
காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி.....!!
கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க.....!!
உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு,
சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க.....!!
அவங்க மரணத்தோட போராடி உயிரை விட்டாங்க.....!!
அவங்க கடைசி ஆசையை கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ......!!

👵அப்புறம் ஒரு விசயம்,
எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா ,
அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்.....!!
உங்களுக்கு போன் பண்ணினோம் நீங்க எடுக்கலை....!!
அதனால நாங்களா முடிவு பண்ணி,
'கண்ணை தானமா' கொடுத்துட்டோம்.....!!!
உங்க அம்மா உயிரோட இருக்கும் போது,
உங்களை பார்க்க ஆசைப்பட்டாங்க.....!!
அவங்க கண் 'கிருஷ்ணா ஆஸ்பிட்டல்ல'....,
ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க....!!
ஒரு வாரம் கழிச்சி ,
"அவங்க கண்ணையாவது "
போய் பாருங்க......!!
அவங்க ,
"ஆத்மா நிம்மதியாகும்" ......!!

👵போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு,
அம்மாஆ.......என்று அழுதபடியே ஓடி,
மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன்.....
அதிர்ந்தான்.....!!

👵அவள் மனைவி லதாவிற்கு கண்தானம் கொடுத்தவர்
என்னும் அறிக்கையில்,, "மரகதம் என்றிருந்தது" ....!!!

👵உயிர் போவதற்கு முன் தன் மகனையும், பாசமான பேரனையும் பார்க்க துடித்த,
அந்த தாயின் ஆசை,
உள்ளார்ந்த பாசம்,
இறைவனின் இதயத்தையும் இளகச் செய்ததோ....??

👵இறந்து போன அந்த பாசத் தாய் மரகதம்,
இனி தன் ஆசை தீர மகிழ்வோடு தன் பேரனையும், மகனையும் பார்ப்பாள்....!!

👵லதாவின் கண்கள் மூலம்"
இறந்த பின்பும் நம்மை வாழ வைப்பது ,
நம் அன்னை மட்டுமே....!!!

👵உதிரத்தை பாலாக கொடுத்தவள் தாய்...!!
நாம் நலமாக வாழ, நமக்காக வாழ்நாள் முழுவதும் தவிக்கும் ,
ஒரே தெய்வம்...."..தாய்"
அவளை ஒருபோதும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்...!!🙏"இரும்பு இதயங்கள் இளகட்டும்" ..😢Best regards,

Saturday, 9 November 2019

தமிழ்நாடு உருவான இந்த நாளில் தமிழ்நாடு என்கிற நமது மாநிலம் உருவான வரலாற்றை அறிந்து கொள்வோம்.

தமிழ்நாடு உருவான இந்த நாளில்  தமிழ்நாடு என்கிற நமது மாநிலம் உருவான வரலாற்றை அறிந்து கொள்வோம்.

தமிழ்நாட்டை மீட்ட அந்த 10 பேர்...!

1956 நவம்பர் மாதம் 1

தமிழ்நாடு உருவான நாள்!
தொல்லுயிர் எச்சங்களும், மண்டை ஓடுகளும் தமிழ்நாட்டின் - தமிழர்களின் தொன்மையைச் சொல்வதற்கு இருந்தாலும் இந்த நிலப்பரப்பு தனித்த மாநிலமாக அமையவும், உருப்பெறவும் தங்களது வாழ்க்கையை ஒப்படைத்த உத்தம சீலர்கள் ஏராளம்.

அடுத்தவர் நிலத்தை அபகரித்து உண்டு கொடுத்துக்கொண்டு இருக்கும் மனிதர்களை மட்டுமே இப்போது பார்த்து வரும் மக்களுக்கு, இனப்பற்றால், மொழிப்பற்றால் தாய்த் தமிழகத்தின் எல்லைப் பரப்பைக் காத்த பத்துப் பேரும் வாழத் தெரியாதவர்களாகக்  கூட நமக்கு தெரியலாம். ஆனால், அவர்கள்தான் நம்மை வாழ வைத்தவர்கள்.

அவர்கள் இவர்கள்...

1.#ம.பொ. சிவஞானம்

'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் அலறியபோது 'சென்னை நமதே' என்று சீறியவர் ம.பொ.சிவஞானம். 'தலை தந்தாவது தலைநகர் காப்பேன்' என்று மீசை முறுக்கினார். திருத்தணி மலையையே முழுங்கப் பார்த்தார்கள். திருப்பதியே நமக்குத்தான் சொந்தம் என்றவர் இவர். 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து'
என்பது தொல்காப்பியம். பாட்டை ஆதாரமாகக் காட்டி வாதாடினார் புலவர். 'மாலவன் குன்றத்தை விட்டாலும் விடுவேன்; வேலவன் குன்றத்தை விடமாட்டேன்' என்று தமிழ்ச் சண்டை போட்டார். வடதமிழகத்தை தெருத் தெருவாய் அளந்து தீப்பொறி கிளப்பினார்.

இத்தனை காரியங்களையும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே செய்தார். விடுவார்களா காங்கிரஸ்காரர்கள்? விரட்டப்பட்டார்

ம.பொ.சி. ஆனால் படைத்தார் புதிய தமிழகம்!

2.#விருதுநகர் சங்கரலிங்கம்

1956 ஜூலை 27-ம் நாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த விருதுநகர் சங்கரலிங்கம், அக்டோபர் 13-ம் நாள் இறந்து போனார். 79 நாட்கள் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் உடலுக்கு உணவு எடுக்காமல் உணர்வை மட்டுமே எடுத்துக்கொண்டு படுத்துக் கிடந்தார் சங்கரலிங்கம். மொழிவாரி மாகாணம் அமைத்தல் வேண்டும், சென்னைக்குத் தமிழ்நாடு எனப் பெயரிடுதல் வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்,  என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வைத்த சங்கரலிங்கமும், காங்கிரஸ்காரர்தான். அன்றைய காங்கிரஸ் அவரைக் கிண்டல் செய்தது. உண்ணாவிரதம் இருந்த அவருக்கு முன்னாள் எச்சில் இலையையும் அல்வாவையும் தூக்கிப் போட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். ''திருந்தாவிட்டால் இந்த ஆட்சி ஒழிந்தே தீரும்" என்று கடிதம் எழுதிவிட்டு இறந்தார். அவருக்கு இறுதிக்காலத்தில் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தன்னை வந்து சந்தித்த பேரறிஞர் அண்ணாவிடம், ''நீங்களாவது என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டு உயிர் துறந்தார் சங்கரலிங்கம்.

3. #தோழர்_ ஜீவானந்தம்

கட்சிக் கொள்கைப்படி பார்த்தால் அவர் சர்வதேசியம்தான் பேசியிருக்க வேண்டும். ஆனால் ஜீவா, தமிழ்த்தேசிய சொற்களையே பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் அது இனவாதம். அதுபற்றி ஜீவா கவலைப்படவில்லை. தமிழ்நாடு பெயர் சூட்டுவது தி.மு.க-வின் கோரிக்கையே என்று காங்கிரஸ் தயங்கியபோது,
''தமிழ் அனைத்துக் கட்சிக்கும் பொது" என்றவர் ஜீவா. ''மொழிவாரியாக ராஜ்யங்கள் பிரிக்கப்படும்போது இந்திய தேசம் சுக்குநூறாக உடைந்து விடாது, காங்கிரஸ் கட்சியும் கூட சுக்குநூறாக உடையாது" என்றார். தேவிகுளம் - பீர்மேடு பகுதி தமிழகத்துடன்தான் சேர்க்கப்பட வேண்டும் என்று துடித்தார் ஜீவா. ''இது மலையாளி, தெலுங்கு மக்களுக்கு எதிரான பகைமைப் போராட்டமல்ல, நம்முடைய போராட்டம்'' என்ற ஜீவா, ''ஐக்கிய தமிழகத்துக்காக போராடுவது தமிழ் மக்களின் தாய்க் கடமையாகும்" என்றும் சொன்னார்.
ஐக்கிய தமிழகம், தமிழ் மக்கள் என்ற சொற்கள் மீது இன்றும் சில கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒவ்வாமை நோய் இருக்கிறது. ஜீவா 1956-ல் பேசினார். பேசியதால் பெற்றோம்.

4. #பொட்டி_ஶ்ரீராமுலு

தமிழ்நாடு அமைய மறைமுகமாக உதவிய தெலுங்கர் பொட்டி ஶ்ரீராமுலு. அவர் அன்று தனி ஆந்திரம் கேட்டிருக்காவிட்டால் 'தமிழ்நாடு' அமைந்திருக்காது. சென்னை மயிலாப்பூர் லஸ் முனை அருகில் இன்றும் பொட்டி ஶ்ரீராமுலு அரங்கம் உள்ளது.
1952 அக்டோபரில் உண்ணாவிரதம் தொடங்கிய அவர் 58 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 15-ம் நாள் இறந்து போனார். சென்னையும் சேர்ந்த ஆந்திரம் கேட்டார் பொட்டி. சென்னையைக் கேட்காவிட்டால், ஆந்திரா அமைய தமிழரசு கழகம் ஆதரவு தரும் என்றார் ம.பொ.சி. ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் அமைய ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வைத்த கோரிக்கையை ம.பொ.சி. நிராகரித்தார். தகராறுக்கு இடமில்லாத வகையில் ஆந்திரா அமையும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். இப்படி ஆந்திரா பிரிக்கப்பட்டது தமிழ்நாடு அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

5,6. #பி.எஸ்.மணியும்_ #நேசமணியும்

குமரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளாக விளங்கும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை அகஸ்தீஸ்வரம் மற்றும் செங்கோட்டையின் நகர்ப்பகுதி ஆகியவை திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்திலிருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கு தெற்கெல்லை போராட்டம் என்று பெயர். இதில் முக்கியப் பங்கெடுத்தவர்கள் பி.எஸ். மணியும், நேசமணியும்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்கள் இவர்கள். 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'விடுதலை நாள் ஆர்ப்பாட்டம்' என்ற பெயரால் நடந்த போராட்டத்தில் மார்த்தாண்டம் ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 11 தமிழர்கள் உயிரிழந்தனர். காவல்துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்து மக்கள் போராடினார்கள். அதன் விளைவாகவே பல பகுதிகள் தமிழகத்துக்கு கிடைத்தன.

7. #பூபேஷ்_குப்தா

தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த வாதப்பிரதிவாதங்கள் - ஆகியவை ஏராளமாக உண்டு. இப்படி  தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை செய்ய வேண்டியது மத்திய அரசு. டெல்லியில் இந்தக் குரலை எதிரொலித்தவர் பூபேஷ் குப்தா. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர். 'வரலாறு, மொழி, கலாசார அடிப்படைப்படி, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து சென்னை மாகாண மக்களிடம் மிக ஆழமாக உள்ளது' என்று அவர் தீர்மானம் கொண்டு வந்தார். 'இப்படி ஒரு தீர்மானத்தை சென்னை மாகாண அரசாங்கம்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்' என்று பூபேஷ் குப்தா சொன்னார். பேரறிஞர் அண்ணா அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் இத்தீர்மானத்தை ஆதரித்து விரிவாகப் பேசினார். 'மக்கள் எங்களைத்தான் வெற்றி பெற வைத்துள்ளார்கள்' என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசினார். பூபேஷ் குப்தாவின் தீர்மானம் இறுதியில் தோற்கடிக்கப்பட்டது.

8. #ஏ_கோவிந்தசாமி

மொழிவாரி மாகாணங்கள் அமைவதற்கான சட்டம் 1952-ல், சென்னை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்கவில்லை. 1957 தேர்தலில்தான் தி.மு.க முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. 1952 தேர்தலில் தங்களது கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கு பிரசாரம் செய்தது தி.மு.க! அந்த அடிப்படையில் சட்டமன்றத்துக்குள் சென்றவர் ஏ.கோவிந்தசாமி. இவர் திராவிட இயக்க சிந்தனைகளை சட்டமன்றத்தில் விதைத்துப் பேசினார். அன்று திராவிட நாடு கேட்டுக்கொண்டு இருந்தது திராவிடர்கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த அடிப்படையில் ஏ.கோவிந்தசாமி பேசினார். ''மொழிவாரியாக நாம் பிரிந்து இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்" என்று கோரினார் அவர்.

ஆந்திரா பிரிந்தபோது அவர்களுக்கு பிரிவு உபசார விழா சென்னை சட்டமன்றத்தில் நடந்தது. 'பிரிகிறீர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. வருத்தம் இல்லாமல் நீங்கள் பிரிந்து போங்கள்" என்றார். ஏ.கோவிந்தசாமி. 1952 - 57 காலகட்டத்தில் மொழிவாரி மாகாணத்துக்காக சென்னை சட்டமன்றத்தில் ஒலித்த முக்கிய குரல் ஏ.கோவிந்தசாமியுடையது.

9. #சி_சுப்பிரமணியம்

மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், 'தமிழ்நாடு' என்ற பெயரைக் கேட்டாலே எட்டிக் காயாகக் கசந்த காங்கிரஸ் கட்சிதான் 'தமிழ்நாடு அரசு' என்ற சொல்லை முதன்முதலில் வழிமொழிந்தாக வேண்டிய நெருக்கடிக்கும் ஆளானது. 1961 பிப்ரவரி 24-ம் நாள் பிரஜா சோசலிஸ்ட் உறுப்பினர் பி.எஸ். சின்னதுரை, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு மறுநாள் தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் அமைச்சர் சி.சுப்பிரமணியம். 'தமிழ்நாட்டு அரசின் வரவு செலவினை சமர்ப்பிக்கிறேன்' என்றார். இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்துக்குத் தயாராக இல்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழ்நாடு என்றும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் காங்கிரஸ் பயன்படுத்த சி.சுப்பிரமணியம் காரணமாக அமைந்தார்.

10. #அண்ணா

பேரறிஞர் அண்ணா சொன்னார் 'தமிழ்நாடு' என்று, உறுப்பினர்கள் அனைவரும் 'வாழ்க' என்றார்கள். ஒருமுறை அல்ல... மூன்று முறை ஒலித்தது இந்தக் குரல், தமிழ்நாடு சட்டமன்றத்தில். 'தமிழ்நாடு என்று சொன்னால் இந்தியாவில் யாருக்கும் தெரியாது. உலகத்துக்கு தெரியாது' என்று எந்தக் காங்கிரஸ்காரர்கள் விளக்கம் அளித்தார்களோ அதே சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அண்ணா. எந்த சங்கரலிங்கனாருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண அண்ணாவாக இருந்து சத்தியம் செய்து கொடுத்தாரோ - முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதனைத் தனது வெற்றியாக அவர் எப்போதும் சொல்லிக் கொள்ளவில்லை.

 ''இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்" என்றார் அண்ணா.l
Best regards,