Monday, 29 August 2016

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்
* வீடும் செல்வமும் தந்தையின் பரிசு, புத்தியுள்ள மனைவி கடவுளின் பரிசு.
* ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
* தெரிந்தது குறைவாக இருந்தாலும் அதை நீ நேசித்தால் உன்னை உயர்த்தும் அதுவாக.
* தெரிந்ததை விட தெரியாததில் ஈர்ப்பு சக்தி அதிகம் நீ அறியாமலேயே அதன் வலையில் விழுவாய்.
* தெரியாததை நம்புவதில் எந்த நன்மையும் இல்லை. தெரிந்த பின் நம்பிக்கையே வேண்டாம்.
* கோபம், பொறாமை, பொறுமையின்மை தன்னறிவற்ற மனிதன் தகுதியற்ற வெளிப்பாடு.
* தெளிந்தால் தெளிவு வரும், தெளிந்தபின் மகிழ்ச்சி வரும், மகிழ்ச்சியே நேசிக்கும் மனநிலை.
* பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம், அலட்சியம் செய்தால் எதிரியை விட உயர்ந்தவர்களாவோம்.
* பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைகளில் உங்களுக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு .
* பலவீனம், பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள்

Best regards,

Sunday, 28 August 2016

கல்வி உதவி தேவை....!!!

கல்வி உதவி தேவை....!!!
வணக்கம் சகோதர சகோதரிகளே.....
தயவு செய்து படிக்கவும்...!!!
கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு வரும் ஒரு பெண்ணின் கல்வியை மீட்க கோரி உதவி கேட்டு நிற்கின்றோம்.
இவள் பெயர் "தெபொரல்" தற்போது வேலூர் மாவட்டம், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கல்லூரியில் B.Com (CA) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கூலி தொழில் செய்து வரும் தந்தையால் வரும் வருமானம் வீட்டு வாடகை , குடும்ப செலவு , மேலும் மற்றும் தம்பி சாமுவேல் அடிப்படை கல்வியை பூர்த்தி செய்யவே சரியாக உள்ளது.
தெபோரல் ஒருவரின் உதவியால் தான் தன் மேற்படிப்பை தொடர்ந்தார். முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் அவரின் உதவியுடன் கட்டப்பட்டது ஆனால் அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறைவனடி சேர்ந்தார்.
தற்போது அவரின் இழப்பு தெபோரல் படிப்பை பாதித்துள்ளது.
இரண்டாம் ஆண்டு தந்தையின் கல்விதுறையில் மன்னிப்பு கடிதம், மன்றாடி கேட்டதாலும் மேலும் மாணவியின் நல்ல சதவீத மதிப்பெண்களை கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதியளித்தது.
இப்போது மூன்றாம் ஆண்டு கட்டணம் செலுத்தினால் தான் தேர்வு எழுத முடியும் முழு தொகையும் செலுத்தினால் தான் சான்று பெற முடியும் என்ற கட்டாயத்தில் நிற்கின்றனர்.
இரண்டு வருட கல்வி கட்டணம் நிலுவையில் உள்ளது மொத்த தொகை -/60000 ரூபாய்
நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாயும் தெபோரல் - கு உதவியாக இருக்கும்.
உங்களின் உதவி ஒரு பரம்பரையை வாழ வைக்கும்.
ஒரு குடுத்தின் சூழ்நிலையை மாற்ற உதவும்.
வாழ்வளிக்க ஆதரவு தாருங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அழிந்து வரும் கல்வியை உயிர்பிழைக்க செய்யும்.
இத்தகவல் முற்றிலும் உண்மை ஆதாரத்திற்காக கல்லூரியில் பெற்ற அனைத்து ஆதாரங்களின் சான்றுகள் இணைத்துள்ளேம்.
மேலும் பாதுகாப்பு அடிப்படையில் மாணவியின் புகைபடம் தவிர்கப்பட்டது.
வீட்டு முகவரி:-
D.Stanley, 4/37,Indira Nagar, New Street, Velam-632501
கல்லூரி முகவரி:-
ASM Women's College , Arcot - Arani Main Road , Villapakkam- 632521
வங்கி கணக்கு விவரங்கள்:-
Indian bank
name; D.Stanley A/c number :782997058 IFSC Code: DIB00A018
branch: Ammoor
மேலும் விவரங்களுக்கு:-
கல்லூரி நிர்வாகம்:- 9894280109
தந்தை:- ஸ்டான்லி - 9626091593
கூடுதல் தகவல்களுக்கு:-
இமயம் ஃபவுண்டேஷன்
7373337738/ 9500852632
தயவு செய்து அனைவரும் ஒன்று சேர்ந்து கை கொடுப்போம் மாணவியின் படிப்பை தொடர செய்வோம்.
வாழ்க வளமுடன்...!!!

Best regards,

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…….
வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.
அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.
புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும்.
அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.
பேசிக்கொண்டே நடப்பது,
பேச்சின் மூலம் அன்பை,
நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும்.
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும்.
இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.
உன் அழகு உருவத்தில் இல்லை,
மனதில்தான் இருக்கிறது,
உனது பேச்சுதான் உனக்கு அழகு,
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்
Best regards,

Tuesday, 23 August 2016

காமம்

காமம் இயற்கை உணர்வு என்பதை மறுத்து சமூக அறங்களுக்குள் சேர்க்கப்பட்ட போதே அது வக்கிரமாக மாற தொடங்கிவிட்டது.
எதிர்பாலினருடன் பேசுவதையே மாபெரும் கிளர்ச்சியாக நினைக்கும் ஒரு தலைமுறையே உணர்வு சிக்கலில் நிற்கிறது. இதில் ஒரு படி மேலே போய் பெண்ணிடம் எதையும் பேசுபவன் ஆண்மைமிக்கவனாக, பிற ஆண்கள் பொறாமைபடுவார்கள் என எண்ண தொடங்கியதும், எண்ணியதும் அதை பெருமையாக பீற்ற தொடங்கியதும் அந்த தலைமுறையில் தான். பெண் என்பவள் எப்படியும் அடையும் பொருளாக உருமாற தொடங்கியதும் அங்கே தான்.
சர்வ சாதாரணமாக ஆண் பெண் பழகி இன்னும் சொல்லபோனால் கிணற்றடியில், ஆற்றில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஆணும், ஒரு பாவாடையை கட்டி கொண்டு பெண்ணும் ஆளுக்கொரு பக்கம் குளித்த போது இல்லாத வக்கிரம் இன்று பாத்ரூமில் குளிக்கும்போது தலைவிரித்தாடுகிறது.
மிக சாதாரண விஷயத்தை சினிமா ஆபாசமாக்கியது ஒருபுறமென்றால் மறுபுறம் ஆபாசமான பல விஷயங்களை ஹீரோயிசமாக்கியது.
பெண்ணுடன் , பேசுவதே சாதனையாக கருதும் மனதை ஆண்களும், ஆண்கள் பேசினாலே அது காதல் என்றும் (பெண் காமம் என்று கூட நினைக்கமாட்டாள், காரணம் காமம் தவறு அதை பெண் பேச கூடாது) பெண் அர்த்தப்படுத்தி கொள்ளுமாறு ஒரு சமூக கட்டமைப்புக்குள் அத்தனை உணர்வையும் மூச்சு திணற வைத்து கொண்டிருந்தோம். திடீரென சமூக வலைத்தளம் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவை மூச்சு முட்டிக்கிடந்த உணர்வுக்கு வடிகால் அமைக்க பாலியலுக்கான வடிகாலாக ஆண் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த சிக்கல்களில் சிக்கி சின்னா பின்னமாவது தான் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் எதிலோ தொடங்கி எதிலோ சிக்கி கொள்ளும் இருபாலரும் தான். அதிலும் உணர்வு சிக்கலில் சிக்கி கொள்வது அதிகமாக பெண்களே. எப்போதும் ஆண்கள் தெளிவாக இருக்கிறார்கள் காமம் தான் தன் தேடல் என்று ஆனால் பெண்களால் காதல் தாண்டிய காமம் குற்றமாகவே பார்க்கப்படுவதால் அதிக மனச்சிக்கலுக்குள் வீழ்கிறார்கள்.
ஆண் மோசமானவன் என்பது அல்ல என் வாதம். சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்ளும் பெண்களை பற்றிய பதிவு.

Best regards,

Thursday, 11 August 2016

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்
உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். இங்கே ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள்.
அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள். ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும். ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா? மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள். ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.
ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை. எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும். இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும். நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.
‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள். ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது. ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும். ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும். ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.
உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது. ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம். அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும். உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்.

Best regards,

Wednesday, 10 August 2016

அடர்த்தியான கண் இமைகள் பெற மஸ்காரா பயன்படுத்துங்கள்:

அடர்த்தியான கண் இமைகள் பெற மஸ்காரா பயன்படுத்துங்கள்:

வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழிமுறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.
செயற்கை இமை ரோமங்கள்:
கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்:
கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.
எண்ணெய்கள்:
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும்.

Best regards,

Tuesday, 9 August 2016

விந்து உடனே வருகிறதா ..? வீண் கவலை வேண்டாம்..!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.
5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.
மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய திரி இது.
முதலில் உங்கள் பிரச்சினைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுய இன்பம் செய்துகொள்பவரா நீங்கள்..?
2. உடல்பயிற்கிகள் செய்யாதவரா நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல்பயிற்சியை செய்யாதவரா நீங்கள்..?
3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?
4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?
மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.
1. விந்து முந்தி வெளிய்யெறுதல்
2. விறைப்பின்மை
3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.
மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பி பி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.
* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
* சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
* புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.
* ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.
* ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.
* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.
* முறையற்ற திருட்டுத்தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும் போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.
* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக்குறித்து அஞ்சாமல் அமைதியான சூழலில் ஈடுபடுதல் நல்லது.

Best regards,

Monday, 8 August 2016

VERY VERY URGENT AND IMPORTANT MESSAGE!

 DENGUE FEVER

Best regards,

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.
👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.
👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.

Best regards,

Friday, 22 July 2016

கபாலி

கபாலி..
சில திரைபடங்களை சின்ன வயதில் பார்த்திருப்போம். 
பன்னிரெண்டு வயது, அப்போது அம்மா, அப்பா, மாமா அத்தை போன்றோர்களின் பெரிய அளவிலான சினிமா பேச்சில் குதூகலித்து சினிமா பார்க்க ஆவல் கொண்டு அவர்களோடு படம் பார்க்கச் சென்றிருப்போம்.
பொதுவாக அந்த காலகட்டத்தில் எல்லா படமும் பிடிக்கும். நல்லா நடித்தார்கள் என்பதைவிட, இந்தந்த ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும். ஹீரோ அழகா இருக்கார். ஹீரோயின் அழகா இருக்காங்க. நகைச்சுவை சூப்பர் என்கிற பார்வை மட்டுமே இருக்கும்.
கொஞ்சம் வயதானவுடன் (18வயது), பிடித்த ஹீரோ ஹீரொயின் நடித்தால் பார்க்கலாம், அதுவும் ஹீரோவிற்காக பார்ப்பது.. கமல், சரத்பாபு, விஷ்ணுவர்த்தன், கார்த்திக் என அழகான ஹீரோக்கள் நடித்தால் பார்த்தே ஆகவேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் சினிமா பைத்தியம் என்கிற பட்டமும் எனக்குக் கிடைத்ததுண்டு.
பிறகு திருமணம் ஆனவுடன் கதை, வசனம், டைரக்டர் என்கிற தேடல் எட்டிப்பார்க்கத் துவங்கியது. விசு, பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றோர்களின் படமாகத் தேடிப்பிடித்து பார்த்து மகிழ்ந்த காலகட்டம் அது. படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, குடும்பம் இருக்கும் அங்கே நிகழ்கின்ற பிரச்சனைகள் நம் குடும்ப பிரச்சனைகளோடு ஒத்துப்போகும் அதனால் அது படுசூப்பர் படமாகப் பார்க்கப்பட்டது. அங்கே கதையில் எல்லாமும் கலந்து இருக்கும். சண்டை, காதல், நகைச்சுவை என.. படமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டம் மோலோங்கிய காலகட்டம் அது.
பிறகு திரைப்படங்களின் பாணி மாறி வேறொரு பாதைக்குச் சென்றது, அது இன்றுவரை அப்படியே தொடர்கிறது. பிடிக்கும் ஆனால் ஏன் பிடிக்கும் என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு படத்தின் திரைக்கதை அங்கொன்னும் இங்கொன்னுமாக பிய்த்துப்போட்டிருப்பார்கள். பிடிக்கும் ஆனால் கதை ஞாபத்திலேயே இருக்காது. அதைவிட கொடுமை ஒரு படத்தில் நடிக்கின்ற நடிகர்கள் அதோடு காணாமல் போவது. அவர்களும் அவர்களின் பெயரும் நினைவில் கூட நிற்பது இல்லை.
இரண்டு நாட்களுக்குமுன் தொலைக்காட்சியில் கே.பாலச்சந்தரின் `அவள் ஒரு தொடர்கதைஎன்கிற திரைப்படம் காண்பிக்கப்பட்டது பலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் பார்க்கநேர்ந்தது.
பன்னிரெண்டு வயதில் அப்படம் வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சில் குதூகலித்து பார்க்கச்சென்று, கமல் வருகிற காட்சிகளை மட்டும் ரசித்து (ரொம்ப அழகாக இருப்பார் அப்படத்தில்), எதோ குடும்ப படம், கதையினைப் புரிந்தும் புரியாமலும் பார்த்துவிட்டு வந்தேன்.
பிறகு பதினெட்டு வயதில் மீண்டும் இரண்டு மூன்று முறை வீடியோவில் பார்த்து ரசித்தேன். தைரியமான பெண் நடிகை சுஜாதா பளிச்சென்று தென்பட்டார். கதைப்போக்கு அழகாக இருந்தது. தெய்வம் தந்த வீடு, பாடல் மனதில் பதிந்தது. அருமையான படம் என தோழிகளுடன் அக்கதையின் கருவை பரிமாறிக்கொண்டேன்.
எத்தனையோ ஆண்டுகள் கழித்து மீண்டும் அத்திரைப்படத்தை எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் புதிதாகப் பார்ப்பதைப்போல் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக குறை ஒன்றும் சொல்வதற்கில்லாமல் கட்டமைத்திருப்பார் கே.பாலச்சந்தர். ஏற்கனவே நான் வைத்திருந்த அனைத்து கருத்துக்களும் காணாமல் போனது இத்திரைப்படத்தினைப் புதிதாகப் பார்க்கின்றபோது.
சுஜாதாவின் அம்மாவாக ஒருவர் நடித்திருப்பார் பாருங்க. அற்புதமான நவரசத்திலகம் அவர். இயற்கையான நடிப்பு. நடிப்பு போலவே இல்லை, அவ்வளவு யதார்த்தம். அவர் தோன்றுகிற காட்சிகளில் நான் அவரைத்தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை. படபடப்பு, பதற்றம், பயம், அன்பு, ஏமாற்றம், மகிழ்ச்சி, கோபம், தாழ்வுமனப்பான்மை என எல்லா நிலையிலும் அப்படித்தான் ஜொலித்திருப்பார்.
அடுத்து ஜெயகணேஷ், முன்பெல்லாம் படம் பார்க்கிறபோது அவர் படத்தில் ஒரு பாத்திரமாக இருந்தது எனக்கு நினைவே இல்லை. இப்போது அப்படத்தின் கதாநாயகனே அவர்தான். கதை நகர்வதற்கு அவர்தான் மூலம். குடும்பத்தைப் பாதுகாக்காமல் எல்லா சுமைகளையும் தங்கையின் தலையில் போட்டுவிட்டு வெட்டிக்கதைகளைப் பேசித்திரிவார். அருமையான வெட்டிப் பாத்திரம். இதுபோன்று வெட்டியாக சுற்றித்திரிகிற பாத்திரத்தை இவ்வளவு அழகாக வேறு எந்த டைரக்டரும் சொல்லி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதாவது யாருக்கும் உதவாத பேச்சுகளை தேவையில்லாமல் காக்கா பிடிப்பதற்காகப் பேசி பொழுதைக் கழிப்பார். ஒரு கட்டத்தில், தங்கையின் அலட்சியப்போக்கினை சக்கித்துக்கொள்ளமுடியாத நிலையில், எரிச்சலின் உச்சத்தில் தங்கையையே அசிங்கமாகப் பேசிவிடுவார். உணர்ச்சிப்பூர்வமான வசனநடை அங்கே. படம் முழுக்க வசனங்கள் மனதில் பதிகிறது. உள் அர்த்தம், உள்குத்து என விளாசியிருப்பார் இயக்குநர். அப்போதும் திருந்தாத ஜெயகணேஷ், சுஜாதா, `எங்களை வைத்து விபாரம் செய்.’, பணம் வரும், என்று கடைசி ஆயுதமாக வார்த்தைகளைக் கொட்டியபின்புதான் அவர் திருந்துவார். அதுவரையில் அவர் செய்கிற அட்டகாசம், மண்டைக்கு மணி.
விதவைக்கு மணமுடிக்க முடிவெடுக்கின்ற கட்டத்திலும், சுஜாதாவைத்தவிர மற்ற அனைவரும் பதற்றநிலையிலேயே இருப்பதை மிக அழகாகக் காட்டியிருப்பார் கே.பி.
எதுக்குடி வெள்ளைப்புடவை கட்டிக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கிற, நான் அப்பவே சொன்னேன், இந்த வெள்ளைப்புடவை எல்லாம் வேண்டாம்ன்னு, நீதான், வெள்ளைப்புடவை உணர்ச்சிகளை அடக்கும் என்றாய், அடங்கியா இருக்கு.!? கேட்பார். யோசிக்கவைக்கிற கேள்விகள் அங்கே.
வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக்கொண்டு, அழுகிற குழந்தையையும் பொருட்படுத்தாமல், இரவு லீலையில் ஈடுபட்டிருக்கின்ற அண்ணி அண்ணனை காறித்துப்புகிற வசனம்.. அங்கேயும் கே.பி நிலைக்கின்றார்.
குடும்பத்தலைவர் அப்பா வருவார், அவரும் ஒரு அழகிய கருத்தினை பகிர்ந்துவிட்டுச்செல்வார். குடும்பசுமையைச் சுமக்க எவ்வளவு தைரியம் வேணும் தெரியுமா..! என்பார். அருமை.
தொடர் ஏமாற்றத்தில், நான் வெளியே பேசுவதை மட்டும்தான் பெரிய விஷயமாகப் பார்க்கிறார்களேயொழிய, யாருமே என் மனதைப் புரிந்துகொள்ளவில்லையே என்று நாயகி மனம்விட்டு அழுகிற காட்சி, நமக்கும் கண்கலங்குகிறது. பாவம் பெண்கள்.
படாபாட் அம்மாவை அந்நியாயமாகச் சாகடித்தது, காலத்தின் கட்டாயம். இப்போதென்றால், இக்காட்சியும் கதாபாத்திரமும் தேவையில்லாத ஒன்று. ஜெயகாந்தனின் புத்தகத்திற்கு நல்ல விளம்பரம், இந்தப் பாத்திரத்தின் மூலமாக.
படாபாட் ஜெயலட்சுமியின் மூலமாகச் சொல்லிச்சென்ற கருத்து, காலம் கடந்தும் வாழும் என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். இன்றைய காலகட்டத்திற்கும் பெண்களின் வாழும் சூழலுக்கும், சமூகவலைத்தலங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அக்கப்போருக்கும் மிகப்பொருந்தி வருகிறது.
விஜயக்குமாரின் காதலை நிதர்சனத்தோடு ஒப்பிட்டு இணைத்துவிட்டார் இயக்குநர். அதுதான் நிஜமும் கூட. சினிமாதான் காதலைப் புனிதப்படுத்தும். நிஜவாழ்வில் அது கொஞ்சம் கஷ்டமே. அன்றே அதை தைரியாமாகப் பொய்யாக்கிக் காட்டிவிட்ட கே.பி சாருக்கு கோடி சபாஷ்..
கமலின் கல்யாணம்தான் திரைப்படத்தில் இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது எனக்கு. அப்பாவி விகடகவிக்கு அந்தப்பெண்ணா.!? என்று, கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்க்கிறது. இங்கு மட்டுதான் சினிமாத்தனம் தெரிந்தது. மற்றபடி படம் அருமையான குடும்பச்சித்திரம்.
இனி இதுபோன்றதொரு திரைப்படம் வருமா.!?
கபாலிக்கு இவ்வளவு விளம்பரமா.!


Best regards,

Friday, 1 July 2016

A C கார் பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள்

A C கார் பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் :
A C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது...
காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A C ஐ இயக்கவேண்டும்.
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம்
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.
அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும். இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம்.
இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும்.
எனவே இதை மறக்காமல் பின்பற்றுங்கள். நண்பர்கள் அனைவருக்கும் பரிமாறிக்கொள்ளுங்கள்..
Best regards,

Thursday, 30 June 2016

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !

போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள்...)
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல் குழந்தைகளை கூட்டி வரும் பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....

எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்
தமிழ்நாடு காவல்துறை.... plz share
Best regards,

Wednesday, 29 June 2016

கஞ்சி_தொடர்பான_பழ_மொழிகள்_சில‬

‪#‎கஞ்சி_தொடர்பான_பழ_மொழிகள்_சில‬
1. ஆறிலும் நோன்பு கஞ்சி நூறிலும் நோன்பு கஞ்சி
2. ஐந்து வயதில் பள்ளிக் கஞ்சி குடிக்கப் பழகாதவன் ஐம்பதில் குடிப்பானா ??
3. கஞ்சிட்ட பள்ளியாரை உள்ளவும் நினை
4. கஞ்சி உதவுவது போல கந்தூரி சோறு புரியாணியும் உதவாது
5. நோன்பு திறக்கும் பிள்ளை கஞ்சி குடிக்கும்
6. அளவுக்கு மிஞ்சினால் கஞ்சும் நஞ்சே
7. பள்ளி கஞ்சிதான் குடிக்க போறவனுக்கு மொக்க கஞ்சென்ன, சப்பக் கஞ்சென்ன
8. ஆசை 365 நாள் , கஞ்சி கிடைப்பது வெறும் 30 நாள்
9. ஒரு கோப்பை கஞ்சென்றாலும் ஒரு நாளைக்கு பிடிக்கும்
10. குடிக்காதவனுக்கு தெரியுமா கும்புக்கந்துர கஞ்சி டேஸ்ட்டு
11. குண்டு சட்டில குதிரை ஓடுவது போலதான் கஞ்சி கோப்பைக்குள்ள இறைச்சி கெடக்கிறது
12. ஓசி கஞ்சி குடிக்கிற நாய்க்கு இறைச்சிக் கஞ்சென்ன, உப்பில்லா கஞ்சென்ன
13. நடுக்கடலுக்க போனாலும் நோன்பு திறக்கிறவனுக்கு கஞ்சிட எண்ணம்தான்
14. கஞ்சின் அருமை நோன்பு திறந்ததும் புரியும்
15. நிறை கஞ்சிவயிறு தளம்பாது
16. கஞ்சிக்கிம் முந்து கடா சோறு பிரியாணி கொடுக்கும் சஹருக்கும் முந்து
17. பார்பதெல்லாம் இறைச்சிக் கஞ்சென்று நினைத்து விடாதே
18. காய்ச்சிறவன் காய்ச்சினா நல்ல கஞ்சி குடிக்கலாம்
19. கஞ்சின் ருசி மணத்தில் புரியும்
20. குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு கஞ்சி கத பேச்சு நோன்போட போச்சு!!!
‪#‎கஞ்சி_பேசும்_பொருள்‬ 
Best regards,

Tuesday, 28 June 2016

5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
*
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*
தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
*
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.
உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
*
1. Axis bank-------------------- 09225892258
2. Andra bank------------------ 09223011300
3. Allahabad bank-------------09224150150
4. Bank of baroda-------------09223011311
5. Bhartiya Mahila bank----- 09212438888
6. Dhanlaxmi bank----------- 08067747700
7. IDBI bank-------------------- 09212993399
8. Kotak Mahindra bank--- 18002740110
9. Syndicate bank------------ 09664552255
10. Punjab national bank---18001802222
11. ICICI bank----------------- 02230256767
12. HDFC bank-------------- 18002703333
13. Bank of india------------- 02233598548
14. Canara bank------------- 09289292892
15. Central bank of india-- 09222250000
16. Karnataka bank-------- 18004251445
17. Indian bank-------------- 09289592895
18. union bank of india---- 09223009292
19. UCO bank---------------- 09278792787
20. Vijaya bank--------------- 18002665555
21. Yes bank------------------ 09840909000.
22. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800 23. Corporation bank------- 092-688-92688. 24. South Indian Bank----- 092 23 008488
Best regards,

விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்....

2 நிமிஷம் இதப் படிச்சுப் பாருங்க
Pls pls pls..
.
தேவை இல்லாதத எல்லாம்
fb,whatsapp ல ஷேர் பண்றோம். ஆனா இதப் பத்தி நாம ஏன் பேசுறதில்ல
.
‪#‎கத்தி‬ படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது
.
# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?
.
# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...
.
‪#‎சமீபத்துல‬ டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.
.
‪#‎ஒவ்வொரு‬ 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.
.
‪#‎சராசரியா‬ வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க
.
# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க
.
1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203
.
‪#‎இப்படியே‬ போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?
.
‪#‎சாப்பாட்டுக்கு‬ எங்க போவாங்க?
.
‪#‎இதப்‬ படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..
.
# நிறைய ஷேர் ஆச்சுன்னா வாட்சப்பில் இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.
.
‪#‎குறைஞ்சது‬ 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.
.
‪#‎நாம‬ இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்
.
‪#‎விவசாய‬ இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?
.
‪#‎கொஞ்சம்‬ வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.
.
‪#‎நாமல்லாம்‬ இவ்வளவு நாள் வாட்சப், பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?
.
‪#‎இத‬ ஷேர் பண்ணினா நல்லது
.
‪#‎இது‬ விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது
.
#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
.
‪#‎Pls‬ share it...
🌾
🌾
🌾
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....
.
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....
.
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....
.
.சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....
.
விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....
.
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....
.
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....
.
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....
.
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
.
iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
.
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
.
விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்....

Best regards,

Sunday, 26 June 2016

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?
-அர்த்தமுள்ள இந்து மதம் - கவிஞர் கன்ணதாசன் !

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’

என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை

வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும்,

யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,

அழகில் லட்சுமியைப் போலவும்,

மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,

அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,

மஞ்சத்தில் கணிகையைப் போலவும்

நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.

(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்.

`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப்பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.

`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்

முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

`தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.

“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி

முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்

அவசரத்தில் கல்யாணம்

என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)

குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,

ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

“விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்

ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே

வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்

தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்

கூறா மற் சந்நியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்

போல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே

- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்

பின்வந்(து)

உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்

தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு

ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

Best regards,

Thursday, 23 June 2016

நண்பர்களே உஷார்! !!!!

நண்பர்களே உஷார்! !!!!
தூங்கும் போது போனில் ‪#‎சார்ஜ்‬ போட்டு ‪#‎ஏர்போனில்‬பாட்டுக்கேட்டு தூங்குபவர்களா நீங்கள் இழப்பது உங்கள் உயிராக இருக்கும் போனில் மின்சாரம் பூர்த்தி ஆன பின் அதிகபடியான மின்சாரத்தை காதில் மாட்டியிருக்கும் ஏர்போனின் சிறிய மின்காந்தத்தால் உடலில் பாய்ச்சுகிறது.
இதனால் நரம்புமண்டலத்திலிருந்து வரும் சிறிய நரம்புகளின் இரத்தம் உறைந்து முளையின் ஞாபகசக்தியை அதாவது மலட்டுதன்மை ஏற்ப்படுத்துகின்றது இதனால் சுயநினைவை இழந்துவிடுகிறோம் பின்னர் மத்திய நரம்புமண்டலத்தின் இரத்தத்தை உறையவைக்கிறது அப்போது சில நரம்புகள் வெடிக்கின்றது இதனால் இதயத்திலிருந்து கழுத்திற்க்கு மேலே செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு உயிர் இழப்பு ஏற்ப்படுகிறது.
கண்டிப்பாக நண்பர்களுக்கு பகிருங்கள்
Best regards,

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?
ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்று கவனியுங்கள்.
மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
பெண் என்பவள் பலவீனமானவள்,
அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை.
அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.
தேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்).
இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம்.
நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்
பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம்.
காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை?
இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.
நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும். அது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.
Best regards,