Saturday, 4 July 2020

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟

ஆறுதலே கூற முடியாத சில
கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு_மருந்தாக இருக்கும் 🌟
~~~ 🐝🐝 ~~~~
அருமையான வாக்கியங்கள்....
உங்களுடன் பகிர்கிறேன் அன்புடன்...🐝🐝

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை...

🐝 பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

🐝 இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்..ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

🐝 நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

🐝 நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

🐝 நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

🐝 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மன அமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்து விடப்போவதில்லை...

🐝 அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

🐝 சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ..15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

🐝 கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

🐝 வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

🐝 வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

🐝 மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்..அவன் தான் உலகின்
பெரிய பணக்காரன் ஆவான் ...

🐝 எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

🐝 இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

🐝 பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

🐝 தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

🐝 #சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனைசீரழிக்கும் துரோகியைவிட ...
முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் ! 

🐝 அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை..பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

🐝 உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண்ணோ, ஆணோ கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

🐝 அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

🐝 பேரின்பம் வேண்டாம்..சிறு சிறு
சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க...

🐝 நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

🐝 வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

🐝 புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

🐝 அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.உணர்ச்சி உள்ள மனிதனையும்
அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

🐝 வாழ்வோடு போராடிச்சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
Best regards,

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.

1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வண்டுமுருகன்

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு.

" சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....
இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

படித்ததில் சிரித்தது

Best regards,

Sunday, 21 June 2020

இன்று சூரிய கிரகணம்..!! 🌗

 இன்று சூரிய கிரகணம்..!! 🌗


🌞வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21) நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

⭕சூரிய கிரகணம் நிகழும் நேரம் :

🌞சூரிய கிரகணம் தமிழ்நாட்டில்,

🌞காலை 10.22 மணிக்கு தொடங்குகிறது.

🌞மதியம் 11.59 மணிக்கு உச்சத்தை அடைகிறது.

🌞பிற்பகல் 01.41 மணிக்கு முடிவடைகிறது.

⭕எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்?

🌞ரோகிணி

🌞மிருகசீரிஷம்

🌞திருவாதிரை

🌞அஸ்தம்

🌞சித்திரை

🌞சுவாதி

🌞திருவோணம்

🌞அவிட்டம்

🌞சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

⭕சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

🌞வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது.

🌞தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் பார்ப்பது பாதுகாப்பானது.

🌞சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும்போது நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

⭕சூரிய கிரகணம் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

🌞கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

🌞உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭕சூரிய கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்?

🌞கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

🌞சிவ பூஜை செய்பவர்களும் கிரகணத்தின்போது பூஜை செய்வது நல்லது.

🌞சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

⭕என்ன செய்யக்கூடாது?

🌞கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது.

🌞அசைவம் சாப்பிடக்கூடாது.

🌞கிரகணத்தின் போது பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

🌞ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

🌞கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

🌞கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். பெண் இந்த சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

🌞புனிதமான செயல்களை செய்யக்கூடாது.

⭕கர்ப்பிணி பெண்களுக்கு :

🌞கர்ப்பிணி பெண்கள் கிரகண காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

🌞நகம் வெட்டக்கூடாது.

🌞கர்ப்பிணி பெண்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடாது.

🌞கிரகணத்தின்போது உறங்கக்கூடாது.

🌞மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர்வீச்சுக்கள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

⭕சூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

🌞வீட்டை சுத்தம் செய்வது அவசியம்.

🌞மேலும், பூஜையறையை சுத்தம் செய்து, சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

🌞கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாக்கும் என்பதால் புதியதாக உணவை சமைத்து சாப்பிடவும்.

🌞கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு, பிறகு உணவு சாப்பிடலாம்.

🌞ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🌞கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.Best regards,

Thursday, 18 June 2020

இந்திய நாட்டின் ராணுவப் பணி

சகோதர .... சகோதரிகளே....                 நீங்கள் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல.... உலகின் வலிமையான ராணுவங்களான....அமெரிக்கா சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும், ......போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை... சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் அதிகம்....கரணம் தப்பினால் மரணம்...என்ற நிலையில்...உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் ..... அதற்கான பயிற்சியையும் கொண்ட.... திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். ... ஐ.நா.சபையே....பல போர்களில் இந்திய  ராணுவத்தின் உதவியை நாட... முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது....இந்திய ராணுவம்... தெரிந்துகொள்ளுங்கள்....                                          ... அந்நிய சக்திகளின்  காசுக்காக.... பதவி வெறிக்காக.... இங்குள்ள அரசியல்வாதிகள்....பிரிவினைவாதிகள், கம்யூனிச நக்கல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும்..... தீவிர விஷமமான பிரச்சாரத்தால்.....மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில்....அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்....நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்கு(Hi Altitude) போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்,.....இந்த பகுதிகள் நீங்கள் நினைப்பது போல்  ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, சிம்லா போல் அல்ல. ....  இரண்டு நிமிடம் படியுங்கள்.

அங்குள்ள தட்பவெட்பநிலை மைனஸ் 40 (Minus 40 degree) வரை சென்றுவிடும்..... அங்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரமுடியாது.... அதுபோல் அங்கிருந்து நினைத்த நேரத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கெல்லாம் வரமுடியாது.....    பனி பிரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள்  அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை அந்த தட்பவெட்பத்திற்கு பழகுவார்கள் (acclimatization), ......அங்கே ஏற்படும் உடலுபாதைகளை எப்படி சமாளிப்பது, வீரர்கள் தங்களது உடல்நிலையை எப்படி பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்,..... பின்பு மருத்துவ தகுதி பெற்றபின் மிக உயரிய பனிப்பிரதேசங்களுக்கு அனுப்புவார்கள். .....  அங்கே அவர்கள் 90 நாட்கள் மட்டுமே பணிபுரிவார்கள்....,  நாம் அங்கே சென்றுவிட்டால்  என்னவெல்லாம் நடக்கும் ?.....  சூரிய வெளிச்சம் 10மணிக்குமேல் வரும்.... 3 மணிக்கு இருட்டிவிடும். ..... நமக்கு வேண்டிய அணைத்து சத்தான விலையுர்ந்த உணவுப்பொருட்கள்  இருக்கும் ....ஆனால் சாப்பிட முடியாது...., குளிரில் பசியெடுக்காது,... மதியம் மட்டும் வேண்டா வெறுப்பாக உயிர்வாழ்வதற்காக சாப்பிடுவார்கள்......  மிக உயரம் என்பதால் காற்றின் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும்,.... மூச்சு திணறல் ஏற்படும் ...... தினமும் டெண்டை சுற்றி குழி தோண்டி நிலக்கரியை போட்டு எரிப்பார்கள்..... இருந்தும் குளிர் அடங்காது......  தீயெரியும் இடத்தில வாளிகளில்  பனியை போட்டு தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்....... அதை பாட்டில்களில் நிறைத்து முன்பகுதியில் இரண்டு பாட்டில்,.... பின் பகுதியில் இரண்டு பாட்டில் கட்டிக்கொண்டு படுக்கவேண்டும்...... இதன் சூடு பத்து நிமிடம் கூட இருக்காது.... அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று சுடுதண்ணீரை  பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும்.... இது தான்  இரவுமுழுவதும் டைம்  பாஸ். .... சவப்பெட்டிபோல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில்  தூங்கவேண்டும்..... பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும்,.... கலர் பிளைண்ட்னஸ் வந்துவிடும்..... 11 மணிக்குமேல் வெயில் அடிக்கிறது என்று வெயிலில் நின்றால்  உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும்..... மதியம் ஒரு மணிக்குமேல் சுழல் காற்று வீசும்.... அது உடலில் படும்பொழுது உயிர்போய்விடும் வேதனை, ....சிலசமயம் இந்த சுழல்காற்று பனிச்சரிவை ஏற்படுத்திவிடும்..... பனிச்சரிவு மணிக்கு 80 கிமீ வேகத்தில் நகரும் தப்பிப்பது என்பது இயலாத காரியம்..... அங்கே பணிபுரியும்போது ....ஏதாவது உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் சண்டிகருக்கோ அல்லது டெல்லிக்கோ அவர்களை அழைத்துவரமுடியாது..... வெப்பநிலை மாறும்போது ஸ்ட்ரோக் வந்து இறந்துவிடுவார்கள்..... ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். .... சில பள்ளமான இடங்களில் பனிக்கு கீழ் தண்ணீர் இருக்கும்..... கால்தவறி அதனுள் விழுந்துவிட்டால் உயிர் பிழைப்பது மிக கடினம். ....அதிகப்படியான பனி என்பதால் உடல் கருத்துவிடும். .... 90 நாட்கள் பனிமுடிந்த பின் மலை அடிவாரத்திற்கு சென்று 30 நாட்கள் கீழ இருக்கும் தட்பவெட்பத்திற்கு உடலை பழக்கவேண்டும்(de acclimatization) .....பின்பு விடுமுறை கிடைக்கும்.  ....ஏழு மாதங்களுக்கு வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும் விடுமுறைக்கு வரமுடியாது.....  இங்க பணிபுரிந்து விட்டு வந்த பிறகு பலவித உடல் உபாதைகள் ஏற்படும், ....சிலருக்கு நினைவு தப்பிவிடும். ....ஒரு ராணுவவீரன் நாட்டை காக்க இவ்வளவு தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது.....  இங்கே உட்கார்ந்துகொண்டு பேசுவது மிகவும் சுலபம்...., அங்கிருக்கும் சூழலை அனுபவித்தவர்களுக்கு தெரியும் ....அதன் வேதனை என்னவென்று, ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின்.... உடல் பழையநிலைக்கு வர பல வருடங்கள் பிடிக்கும்......

உங்கள் விழிப்புணர்விற்காக இந்த பதிவு 🙏🙏.....முடிந்தளவு நாட்டிலுள்ள .... தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் .... பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சென்று சேரும்வரையில் பகிருங்கள்... சகோதரி.... சகோதரர்களே....
ஜெய்ஹிந்த்

₹RIPPALANIBest regards,

Tuesday, 16 June 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் மறைவை ஒட்டி, பலரும் என்னிடம் கேட்ட கேள்விகள் -

தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் மறைவை ஒட்டி,  பலரும் என்னிடம் கேட்ட கேள்விகள்  -

"அவரை காப்பாற்றி இருக்க ஏதாவது வழி இருந்ததா? "

"எவ்வளவு பணம் செலவு செய்தாலும் கொரோனாவிடம்  இருந்து உயிரை காப்பாற்ற முடியாதா??"

"அலோபதி மருத்துவம் (Modern medicine) மீது நம்பிக்கை வைக்கலாமா?"

"வென்டிலேட்டரில் போடப்பட்டால் காப்பாற்றவே முடியாதா?"

அந்த கேள்விகளுக்கான எனது பதில்-

கீழே உள்ள படத்தில் நீங்கள் காண்பது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 20
வயது பெண்ணின்  நுரையீரல்.... பொதுவாக நுரையிரல் பஞ்சு போன்ற மென்மையும் ,ரோஜாப்பூ இதழ்  நிறத்திலும் இருக்கும்...

ஆனால் இந்த 20 வயது பெண்ணின் நுரையீரல் கல் போன்று இறுகி காணப்படுகிறது... அதனால்,வழக்கமாக நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் செல்ல வழியில்லாமல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விரைவில் இறந்து விடுகிறார்கள்...

 கொரோனா  தொற்று ஏற்பட்ட  பின்னர் வென்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) பொருத்தப்பட்டாலும் , நுரையீரலின் தன்மை  கல் போன்று இறுகி காணப்படுவதால் பயன்தராது !

அப்படியானால் இந்த நபர்களை காப்பாற்றவே முடியாதா என்கிற உங்களின் கேள்வி நியாயமானது தான்...

நிச்சயம் காப்பாற்றமுடியும்,

அதற்கு சில  அளவுகோல்கள் உண்டு ..

உதாரணமாக பாதிக்கப்பட்ட நபரின்
வயது,
அவருக்கு உள்ள மற்ற நோயின் தன்மை,
கடந்த காலத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள்,
#புகைப்பழக்கம்,
மது அருந்தும் பழக்கம்,
சிறுநீரக +கல்லீரல் செயல்பாடுகள் ,
எலும்பு தேய்மானம்
போன்றவற்றைப் பொறுத்து அவரை காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகமாகும்...

இவை அனைத்தும் ஒத்து வந்தாலும் கூட,செயற்கை சுவாசம் (VENTILATOR)  மட்டுமே போதாது...

ECMO(எக்மோ) என்று சொல்லப்படுகின்ற, EXTRACORPOREAL MEMBRANE OXYGENATOR என்ற கருவி மிக மிக அவசியம்... இந்தக் கருவி தான் நுரையீரல் செய்கின்ற அதிக தொழில்நுட்ப வேலையை செம்மையாக செய்யும்... மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இறுதியாக பொருத்தப்பட்டதும் இதே கருவிதான்... இந்தக் கருவியின் ஒருநாள் உபயோக கட்டணம் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல்...
(தமிழ்நாடு  அரசு மருத்துவமனைகளில் மூன்று ECMO கருவிகள் உள்ளன)

ECMO கருவியும் ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்... நுரையீரலை சரி செய்வதற்கான வாய்ப்பை/நேர அவகாசத்தை அது  வழங்கும்... பத்து நாள் முதல் 40 நாளைக்குள்  நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினைகளை முழுமையாக சரி செய்துவிட்டால், ECMO மூலம் ஒருவரை காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உண்டு... அதற்குமேல் வாய்ப்புகள் மிக மிக குறைவு ( எனது அனுபவத்தில்)

மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் Rela அவர்களை தொடர்புகொண்டு இதைப்பற்றி கூறினேன் (திரு அன்பழகன் அனுமதிக்கப்பட்ட ரெலா மருத்துவமனையின் இயக்குனர்)
அவரும் இந்தக் கருத்தை ஆமோதித்தார்.. திரு அன்பழகன் அவர்களுக்கு ECMO கருவி பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்றிருப்பதாகவும் கூறினார்...

நான் மேலே குறிப்பிட்ட அளவு கோல்களின் படி, திரு அன்பழகன் அவர்களின் வயது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டது, நாள்பட்ட பிற மருத்துவ நோய்கள், சில  பழக்கவழக்கங்கள்  போன்றவை அவருக்கு ஏதுவாக இல்லை... அதனால் அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது...

கீழே நீங்கள் காணும் நுரையீரலுக்கு சொந்தமான அந்த 20 வயது பெண்ணிற்கு, இன்றுதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது (Double  #LungTransplant -June 11,2020).
அமெரிக்காவை சேர்ந்த அந்த நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. தற்போது அந்தப் பெண் நலமுடன்  ICU வில் உள்ளார்..

எனவே நவீன மருத்துவத்தால் ஒரு உயிரை  எப்பேற்பட்டாலும் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,, ஆனால் அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..

புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அந்த பழக்கவழக்கங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்...
உடல் பருமன், அதிகமான குறட்டை, சர்க்கரை நோய் போன்றவைகளும்  பின்னடைவை ஏற்படுத்தும்...
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.... இதுபோன்ற காலங்களில்,வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்... வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்... மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்...

அடுத்து வரப்போகின்ற இரண்டு வாரங்கள் தான் தமிழகத்தில் ,  கொரோனா  உக்கிர தாண்டவம் ஆடப்போகிறது.. எனவே நம்மையும் நம் சுற்றத்தாரையும் கவனமாக பார்த்துக் கொள்வோம்...

நுரையீரல் நலனைப் பேணுவோம் !


-மருத்துவர் பால. கலைக்கோவன்,
நுரையீரல் சிறப்பு மருத்துவர்- கடலூர்.

Best regards,

Monday, 15 June 2020

மனிதம் பற்றிய உளவியல் தகவல்

மனிதம் பற்றிய உளவியல் தகவல்

1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்.

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

16. ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

18. ஒருவர் அதிகமாக  Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.👆👆👆☹️☹️☹️

Best regards,

Saturday, 13 June 2020

காப்பீட்டுத்தொகை அறிந்ததும் அறியாததும் ....

காப்பீட்டுத்தொகை அறிந்ததும் அறியாததும் ....
கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு.செல்வராஜ் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .

*இதில் நமது NHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


தலைமை காவலர் திரு.செல்வராஜ்
 அவர்கள்,
கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.

*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் NHIS ஏற்கவேண்டும்.

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)

01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.

*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.
அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ளஅறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..
NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

*********

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx

(NHIS Insurance Complaint number- 7373073730)

பொதுநலன் கருதி ...
இதைப்படிக்கும் நல்லெண்ணம் கொண்டவர்கள் நாலு பேருக்காவது பிறருக்குப் பயன்படும் வகையில் நம்மால் இயன்ற நல்ல தகவலை ஏதாவது ஒருவருக்கு உதவும் என்ற நம்பிக்கையில்  அனுப்பவும்.
🙏🙏🙏🙏🙏Best regards,

N 95 மாஸ்க் , இல்ல சர்ஜிகல் மாஸ்க் - இது ரெண்டு தவிர வேற எதாலயும் கொரோனா வைரஸ்ஸ தடுக்க முடியாது..

N 95 மாஸ்க் , இல்ல சர்ஜிகல் மாஸ்க் - இது ரெண்டு தவிர வேற எதாலயும் கொரோனா வைரஸ்ஸ தடுக்க முடியாது..

பாவாட துணிலயும் , பனியன் துணியிலயும் , போர்வை துணிலயும் மாஸ்க் போட்டுகிட்டு கொரோனாவ -  வாடா வாடா வந்து பாருடான்னு சண்டைக்கு கூப்டுகிட்டு இருக்கோம்.. சாதாரண வைரஸ்ஸ விட மூன்றில் ஒரு பங்கு சிறியது கொரோனா .. துணியில் இருக்கும் துளைகள் கொரோனாக்கு பொருட்டே இல்லை ..உடனே பரவி விடும்...  N95 மாஸ் எல்லாராலும் வாங்க முடியாது ..தரமானது ஆரம்ப விலையே 300 ஐ தாண்டும்..ஆனால் சர்ஜிகள் மாஸ்க் ஒன்று 5 ரூபாதான்..ஒன்ஸ் யூஸ்
.தினமும் ஒன்ன யூஸ் பண்ணிட்டு டிஸ்போஸ் பண்ணிடலாம்.. மற்ற துணி மாஸ்க்குகள் எந்த விதத்திலயும் நம்மைக் காப்பாற்றாது..தூசி மட்டுமே உள்ளே போகாமல் தடுக்கும்..வைரஸ் - பாக்டீரியாவைத் தடுக்காது...

நாம யாருமே கொரோனாக்காக மாஸ்க் போடல.. போலீஸ்ஸுக்கு பயந்துதான். போடரோம்..அதுவும் 10 ரூபாய்க்கு துணி மாஸ்க் வாங்கி , ஒரு மாசத்துக்கு தொவைச்சு யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம்..இது ஆபத்தானது.. உண்மையச் சொன்னா மாஸ்க்குக்கு எல்லாம் கட்டுப்படர  ஜீவன் இல்ல கொரோனா ..

நம்ம ஊருல அதிகம் பரவல..அதால போலீஸ்க்கு கணக்கு காட்ட வேனும்னா இந்த துணி மாஸ்க்குகள் பயண்படலாம்..ஒரு வேளை பரவிருச்சுனா - துணி மாஸ்க்குகள் உயயோகிக்காதீர்.. ரீ யூஸ் பண்லாம்கிரத தவிர வேற யூஸ் இல்ல..

ராம்ராஜ்ல இருந்து - பூமர் கம்பெனி வரைக்கும்.- இன்னிக்கு டிவில மாஸ்க் விளம்பரம் போடராங்க..இவங்க தயாரிச்ச மாஸ்க் பாதுகாப்பானதுன்னு எங்க அப்ரூவல் வாங்கிருப்பாங்க ? இண்டியன் மெடிக்கல் சர்டிபிகேட் இருக்கா ? எதுவும் இல்ல.. டிசைனா - ரிச்சா தெரியும்..அவ்வளவுதான்.. மக்கள் அறியாமையும் பதட்டத்தையும் பயண்படுத்தி சீசன் பிஸ்ணஸ் அவ்ளோதான்..

இது நா சொல்லல..உலக சுகாதார அமைப்பு விட்ட அறிக்கை.. வெளிய தெரியாம வச்சுக்கிரதுல மீடியாவும் முக்கிய பங்கு வகிக்குது.. கொரானா எங்கயும் இல்ல..நம்மள சுத்தி நெருங்கிகிட்டு இருக்கு.. தினம் 10 ந்னு சொன்னப்ப பயந்த நாமதான் இப்ப தினம் 1000 + ந்னு சொன்னாலும் ஜஸ்ட் ஒரு நியூஸ்ஸா கடந்து போரோம்..எங்க போய் முடிம்னு தெர்ல..

அரசு இயந்தரத்துக்கு மக்கள் சாவு ஒரு கணக்குதான்.. அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும் ? பரிதாபப்பட மட்டுந்தா முடியும்.. நாம இல்லன்னா நம்ம குடும்பம் இல்லன்னு இருக்கிர நிலமைல கவனமா இருந்துக்கு வேண்டியது யாரு ?

கொரொனாவும் - ஆக்ஸிடெண்டும் ஒன்னுதான்..நாம என்னதான் கவனமா டிரைவிங் பண்ணாலும் ஆப்போஸிட்ல வர்ரவன் அடிச்சு தூக்கிருவான்.. அதுதான் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு..

சொல்லவே கஸ்டமா இருக்கு.. அமெரிக்கா சீனா இத்தாலிய மிஞ்சும் பாதிப்புகள் இந்த மாதத்தில் இருந்து துவங்கபட வாய்ப்பிருக்கு...
வறுமைக்கும், கடனுக்கும், வாடகைக்கும் பயந்து தொழில் பண்ணியே ஆகனும்கிர நிலைமைல இருக்கிர நமக்கு காசு மட்டுந்தா கண்ணுக்கு தெரிது.. கூடவேதான் சாவும் வருதுங்கிரது புரிஞ்சுக்க வேண்டிய உண்மை..
😞Best regards,

மாவட்ட வாரியாக இலவசமாக ஹோமியோபதி covid19 நோயெதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கும் மருத்துவர்கள் பட்டியல்

மாவட்ட வாரியாக இலவசமாக ஹோமியோபதி covid19 நோயெதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கும் மருத்துவர்கள் பட்டியல்

(தமிழ்நாடு முழுவதும்,)

( சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம்/ வசதி வாய்ப்புகள் உள்ள பெரிய மனிதர்கள் இம் மருத்துவ சேவைகளை அனைத்து மக்களுக்கும்  எடுத்துச் செல்ல உதவலாம் வரவேற்கிறோம்)

LIST OF Places and doctors in TAMILNADU – Giving  immune boosting homeopathy medicines
FOR COVID-19
(Free of cost/ As social services)

CHENNAI

1. Dr. S. Shenbaga, Saidapet, chennai, ph: 9841140920

2. Dr. Mathi, Allcure homoeopathy clinic, Velachery, Chennai 9500468800

3. Dr.Priyanka BHMS, Prithvi homeo clinic, Thandhai Periyar Nagar, Taramani, Chennai 600113. Ph: 9894513099

4. Dr. Malini T Sri Eswaran Homoeo Clinic Madipakkam, Chennai-91 Ph no: 9094999919 9941370595

5. Dr. Nirmal, Niveena Homeo Clinic, No 304B, Konnur High Road, Inside 24 hr hospital, Near Noor Hotel, Ayanavaram, Chennai, 9842788997

6. Dr.Ilaiyarani, Arul Homoeo Clinic, Urapakkam 9443787375

7. Dr. S. Gowri, BHMS, SM Homoeo clinic, Sai gardens, dhandeeshwaram 10th cross street, velachery, Chennai. 8056080745

COIMBATORE

8. Dr. tamaraicelvan Vanilla Homeopathic Medical Land Coimbatore. 9443060609

9. Dr.parthiban Coimbatore 9442070643

10.Dr.P.Hemalatha,B.H.M.S, Deepam Homoeopathy clinic, karumathampatti, coimbatore. 9865420605

11. Dr. Bibin T Varghese, s.v.Homoeopathy Clinic, 1, Sathy main road, Near water tank, Ramakrishnapuram, Ganapathy, Coimbatore. Pin 641006. Tamilnadu. Phone: 9894696306

12. Dr.P.Kalyana sundaram Dr.P.K.Siva sankar S.R.K. Homoeo clinic Sheela devi complex Rajendra main road Karimedu ccb school opp Contact:9487602782 9952136616

13. Dr Ramanan homoeopath. Aswini homoeo clinic kavundampalayam Coimbatore 9843064149

DINDIGUL

14. Dr.P.Kathiravan, NPC clinic, Madurai main road, near KVB Bank, Nilakottai, Dindugal CELL 9994212101

KALLAKURICHI

15. Drsanthoshkumar Homeopathy consultant 2 / 133b, bazaar street Post by Rishivandiyam Kallakurichi district 606205 Cell: -9843132680

MADURAI

16.*Government homeopathy medical college hospital Tirumangalam- 625706 Madurai

17. Dr.U.S.U. kalpana, Sarada homeopathy clinic, Tirumangalam, Madurai, 9842845846

18.  Veltai Homeo Clinic, 8/19 Kakkan Street, Senai Nagar Madurai - 20. 9080718567

19.Dr.Sivakumaran, Genuine homoeopathy clinical Research center, Madurai -625006, 9842477482

20. Dharshini homoeo clinic ..2 / 764 mahatma veethi ..marudhupandiar street .gomathi puram 6 th main road, MADURAI. 9487417732

21. Taj homeopathic clinic Munichalai Madurai 9842028727

22. Dr.Bharathi@sana B.H.M.S Cure Homeopathy Clinicic 155B, Vakkil new street Opp Harish Bakery Simakkal Madurai-1 Ph no: 7010634425

23. Sivabalan gayathri homoeo clinic 15, Kannaya complex, Bose street, sellur, madurai-2 8754734982

24. Dr.B.Aarthi Sugan, JAS homoeo clinic, H-97, tnhbcolony,tamilnagar anaiyur, madurai-17. 6380386329

25. Nalvazhi homeopathy clinic 380,Bharathiyar road jaihindpuram Madurai-11 Ph: 7010634425

26. Dr R. Sindhu B.H.M.S Sri meenakshi homoeo clinic 5 /2, Moulana saheeb Street, annanagar madurai - 20, phone no :9488463342

27. Dr.Karthika Suresh Karthika Homoeopathy clinic Pandian Tower Manthai Amman kovil Street Near SBI Bank Narayanapuram Madurai - 625014 Mobile : 9894376286

28. Mahathma Homoeo Research Center, Dr. Dhananalam, 62/21 Soniyar Kovil Street, Narimedu, Madurai, Ph:0452252600

NAGAPATTINAM

29. Dr. Rajarettinam. B.H.M.S., Homeopathy doctor. 5, Poorna Towers, State Bank opposite, Neela South Street, Nagapattinam. 7200976779

NAMAKKAL

30. Dr.R.ELAKKIYARAM B.H.M.S 177(1)SRI MAARUTHI NAGAR, SULTHANPET, PARAMATHY VELUR, NAMAKKAL Dt. Pin: 638182. Mobile:6383661267

PALANI

31. Dr. Dinesh Sivaram Homoeo Clinic 178 Lakshmipuram, PALANI.
9786126755

32. Dr.Vimaladevi, BHMS., Annai homoeo clinic, Neikkarapatti, palani_624615. mobile_9952349245, 9894848479

POLLACHI

33. Dr. Prabunayagam bhms Vinayaga homeo clinic Pollachi. 9865785810

SALEM

34. M.Thiyagaraj Thiyagu clinic Steel plant Salem 9790209939

SANKARAN KOVIL

35. Dr.subbulakshmi Sankaran kovil 9597412105

SIVAKASI

36. Dr. Sureka Eswari BHMS, Sri Yogiram Homoeo clinic, 967, Sri Yogiram Bhavan, National colony, ( opp. to Gupta printers back gate), Sivakasi -626189. Ph no : 8148215857

THANJAVUR

37. Dr.Revathy, shop no-208, Near SBI ATM, Jubilee towers, Ramanathan roundana, Trichy road, Thanjavur-7. 9442413543

38. Dr.K.M.Anu, Jai Homoeo clinic. Shop no -7, Arokya Nagar, E. B. Colony, Nanjikottai road,. (near Indian Bank) Thanjavur-613006. Mob_9791758164

THENI

39. Dr r Ramesh, Lakshmi hospital 35/15 cumbum road moondranthal periyakulam theni dt 9790661895

40. Dr.A.Abdul pazith BHMS,M.A.N.Homoeo clinic,47 sungam Street near big masjid, cumbum.Theni dt, 9894476001

41. Dr Sathiswaran, Sree vinayaka homoeopathic clinic, Near hotel theni international
Theni 9944242451

TIRUCHIRAPALLI

42. Dr.karthiyaini Trichy 9944946621

TIRUPUR

43. Dr.karthick babu .b Sri Homoeo clinic, 12 krr lay out1 stt, mangalam road tirupur -641604 9843449966

PONDICHERRY

44. Dr Dhana Lakshmi, Hemanth Homeo-Dental Clinic, No.1, Airport Road, Tagore Nagar, Lawspet, Pondicherry 605008 Mobile 9842680841

ULUNDURPET

45. Dr. Arul Ulundurpet 7204600465

                                                                    Government hospitals

46. Homoeopathy wing , All government head quarters hospitals

மக்கள் பணியில்

தூய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
மதுரை 625006

.Best regards,

அலட்சியம் வேண்டாம் மதுரை மக்களே கொரோனாவிடம் கவனமாக இருங்கள் தலைநகர் நிலை வந்தால் தூங்காநகர் தாங்காது

அலட்சியம் வேண்டாம் மதுரை மக்களே கொரோனாவிடம் கவனமாக இருங்கள் தலைநகர் நிலை வந்தால் தூங்காநகர் தாங்காது

இன்று மட்டும் 31 பாசிட்டிவ்!😭

மதுரை :
கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கும் சூழலில், மக்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவது சென்னை நிலைமையை மதுரைக்கு கொண்டுவரும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.


மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் இறுதியில் கண்டறியப்பட்டது. அன்று முதல் தவறாது பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டபாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும் 5 முதல் 20 பேர் வரை பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கின்றனர்.

பெரும்பாலானோர் சென்னையில் இருந்து திரும்பியவர்களாக இருக்கின்றனர்.
சில நாட்களாகத் தான் சென்னையில் இருந்து திரும்புவோரை தேடிப்பிடித்து சுகாதாரத்துறைபரிசோதனை செய்கிறது. இதுவரை அனுமதி பெற்று சென்னையில் இருந்து ரயில், விமானம், கார், டூவீலர்களில் வந்தவர்கள்எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இவர்களில் மிகச் சொற்பமானவர்களுக்கு தான் பரிசோதனை நடந்துள்ளது.
ஒரு புறம் கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 400ஐ நோக்கி வேகமாக நகரும் நிலையில், மக்கள் மிகவும் அலட்சியமாக, கொரோனா பயமின்றி செயல்படுகின்றனர். ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் கொரோனா மதுரையில் அடங்கிவிட்டதாக மக்கள் எண்ணுகின்றனர்

அலட்சியங்களில் சில ;

• வேலைக்கு, அவசர தேவைக்கு போவோர் மட்டுமல்லாது, தேவையின்றி வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் வருகின்றனர். இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அலைவது வருத்தமானது.
• வெளியில் அலைபவர்களில் 40 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை.
• இருசக்கர வாகனத்தில் இருவர் முகக்கவசம் இன்றி செல்கின்றனர்.
• கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் பலர் முகக்கவசம் அணிவதில்லை.
• மைதானங்களில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் முகக்கவசம் இன்றிகூடி விளையாடுகின்றனர்.
• வாக்கிங் செல்வோர் பலர் முகக்கவசம் அணிவதில்லை.
• பஸ்களில்அரசு சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மாறாக கூட்டம் அலைமோதுகிறது.
• வங்கிகளில் சமூக இடைவெளிகள் இல்லாமல், வாடிக்கையாளர்களை வரிசையாக நிற்க வைக்கின்றனர்.
• ஏ.டி.எம்.,களில் சானிடைஸர் இல்லை. பல 'ஏசி'யுடனும் செயல்படுகின்றன.

 இப்படியே போனால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லையேல்,சில வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு,மதுரையும் சென்னையாகும் அபாயம் உள்ளது. இப்படியொரு நிலை வந்தால் நிச்சயம் தூங்கா நகர் தாங்காது .

கோவை, திருச்சியில் மக்கள் விழிப்புணர்வுடன் நடப்பதால் மதுரையை விட மிகக்குறைவான பாதிப்பே உள்ளது.
கொரோனாவை வெல்ல அரசின் முயற்சி மட்டும் போதாது. மக்கள் தங்கள் சமூகப்பொறுப்பை உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
மதுரை மக்களே...கவனமாக இருந்து கொரோனாவை வெல்வோம்.

Best regards,

Friday, 12 June 2020

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

Best regards,

Thursday, 11 June 2020

உண்மையான தியாகிகள் ..!

உண்மையான தியாகிகள் ..!

ஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து  பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .

அதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில நாட்களில் அதாவது இன்றைய தேதி (22/05/2000) யில்  வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால்z பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்திரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .

கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்க ப்பட்டது.

இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர்.  மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .

ஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.

வாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா ? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ..."இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு ( இந்த இடத்திற்கு )டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல "...என்று சொல்லி நிறுத்தினார்.

வாத்தியார் அந்த  Junior Commissioned Officer வின் கைகளைப்பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் " என்று கூற "நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ...

"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின் (Heavy Machine Gun) எச்.எம்.ஜியால்  வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க. நமது முழு   Brigade  அளவிலான படைவீரர்களின் முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல வரஉள்ளது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...." என்று சொல்லி அந்த  கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.

"என்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வாத்தியார் கேட்க ... Junior Commissioned Officer ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க (bunkar ) பதுங்கு குழிவரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .

அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .

பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம் ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .

உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் (Evacuations) செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார்  . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .

ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் ." என்று பெருமூச்சுடன் முடித்தார். (i)

கிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார். 

வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல .. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு..

இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க ..அதான் அவன் உயிர் விட்டஇ
டத்துலேயே வச்சிறலாம்.ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு  கொண்டு வந்தேன் . ஆனால்  இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் .

கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.

பின்குறிப்பு : ஆகவே என் இனிய  நண்பர்களே.... நமக்கு  இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள்.வீணாப்போன அரசியல்வியாதிகளையும், சினிமா நடிகர்களையும் கொண்டாடாமல் உண்மையான செயல்வீரர்களை கொண்டாடுங்கள்....
வாழ்க பாரதம்...
பாரத அன்னைக்கு வணக்கம்...Best regards,

Wednesday, 10 June 2020

சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்.😳😳

சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்.😳😳

மக்களுக்கு தொற்றின் தீவிரம் புரியவில்லை.😷😷

சினிமா பார்த்து மரத்து போன மண்டைகள்.

தமிழக நிலவரம் கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதாரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌😔😳

சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை.மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை

ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லாம் கொரோனா என அது மிகபெரும் திகிலை கொடுக்கின்றது. அணுவெடிப்பு வேகத்தில் அதன் பரவல் இருப்பதுமிகபெரும் ஆபத்து.😱

குழந்தைக்கு கொரோனா,17 வயது மாணவி மரணம் இன்னும் சில பிரமுகர்கள் ரகசிய சிகிச்சையில் இருக்கின்றார்கள் என்பது கலங்க வைக்கும் விஷயம்

சென்னையிலும் இதர தமிழகத்திலும் மிக வேகமாக‌ பரவி கொண்டிருக்கும் கொரொனா தொற்று உலகை அதிர வைக்கின்றது, இந்திய அரசே சிறிது பதற்றத்தில் இருக்கின்றது.

மெல்ல உலகம் இயங்க ஆரம்பிக்கும் நேரமிது, ஜூன் 15க்கு பின் சர்வதேச போக்குவரத்துகள் தொடங்கபடலாம்

ஆனால் இனி உலகெல்லாம் இயங்க ஆரம்பிக்கும் பொழுது சென்னை துண்டிக்கபடும், சர்வதேச விமானங்களோ கப்பலோ சென்னைக்கு வராது.

இது பெரும் முடக்கத்தை கொடுக்கும்,இன்னும் சில நாட்களில்சென்னையின் கொரோனா அளவு மிக கடுமையாக இருக்கும் என்கின்றார்கள், அப்பொழுது சென்னை முழுவதும் துண்டிக்கபடலாம்

வேறு வழி இருப்பதாக தெரியவில்லை

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நிலைமை சரியாக இல்லை, ஒருவித வேகமான கொரோனா அலை தெரிகின்றது.

நிச்சயம் மிக பெரிய நடவடிக்கை எடுத்து இன்னும் இருவாரங்களுக்கு மகா கடுமையான இறுக்கமான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நேரமிது ஆனால் அரசு தயங்குகின்றது

அரசு வருமானம் பாதிக்கும், மாநில அரசு இயங்கமுடியாது எனும் சுயநலத்தில் மிகபெரிய விலை கொடுக்க தயாராகின்றது தமிழக அரசு

சென்னை மகா மோசமான நிலைக்குதள்ளபடுகின்றது, தமிழகத்தின் இதர சூழலும் சரியாக இல்லை, மிக பெரும் நெருக்கடியில் மாநிலம் சிக்க போகின்றது

பொறுப்பற்ற மக்கள் இருந்தால் அரசு உறுதியாய் இருந்து அடக்குதல் வேண்டும், அரசு பொறுப்பற்று இருந்தால் மக்கள் பொங்கி திருத்தவேண்டும்

இரண்டு தரப்புமே பொறுப்பற்று இருந்தால் ஒரு மாநிலம் எப்படி நாசமாகும் என்பதற்கு தமிழகமே சான்று

பலத்த எச்சரிக்கை தமிழகத்துக்கு விடபடும் நேரமிது, புயல் ஆபத்துக்கெல்லாம் ஓடி ஓடி பாதுகாக்கும் தமிழகம், கொரோனாவில் கோட்டை விட்டது மட்டுமல்ல இன்னும் ஆபத்தை உணர மறுப்பது சோகம்

இனி சர்வதேசம் இயங்கும் பொழுது துண்டிக்கபடுவதுசென்னையாக மட்டும் இராது,திருச்சி மதுரை போன்ற விமான நிலையங்களாக இருக்கலாம் தூத்துக்குடியாகவும் இருக்கலாம்

இப்பொழுது முடக்கினாலும் சென்னை மீள சில மாதமாகும் என்பதால் நிலைமையின் வீரியம் மகா ஆபத்தானது

சென்னை போலவே சிக்கியிருக்கும் இன்னொரு நகரம் மும்பை,அங்கு இனி பருவமழை தொடங்க போகின்றது மும்பையின் மழை சாதாரணம் அல்ல‌

அந்த கொடும் மழையில் தனித்திருத்தல் சமூக இடைவெளி சாத்தியமில்லை, மும்பைக்கு விடபட்டிருக்கும் எச்சரிக்கை சிகப்பு எச்சரிக்கை

தமிழக மக்கள் இனியும் விழித்து கொள்ளாவிட்டால் அதற்கு கொடுக்க போகும் விலை மிக மிக அதிகம்Best regards,

நேரம் காலம்

நேரம் காலம் 🌿🎄எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

🎄ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

🎄ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்.

🎄பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.

🎄ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

🎄ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.

🎄இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.

🎄22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

🎄ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்.

🎄எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை  ராஜயோக வாழ்க்கை.

🎄சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.

🎄பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.

🎄டால்ஸ்டாய் தனது 82 வது வயதில், I Cannot Be Silent என்றார்.

🎄வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

🎄எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான்.

🎄எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

🎄 உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

🎄யார் கண்டது..?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!
இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!

🎄எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...

🎄இங்கே இப்போது இந்த நொடியில்  என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ  அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்.

🎄அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.

🎄தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் .

🎄ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

🎄இது தான் வாழ்க்கை!🌻இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
👌👌👏👏🌹🌹

Best regards,

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்...

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்...
*********உங்கள் ஊர் அஞ்சலகம் அந்தக் கடமையைச் செய்கிறதா?

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’..

இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது.

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று  நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் விதமாக போர்டு ஒன்று ஏன் வைக்கக் கூடாது?

ஒருவேளை அஞ்சல்துறையிடம் இந்த போர்டு வைப்பதற்கு பணம் இல்லை என்றால், ஆங்காங்கு உள்ள தொண்டு நிறுவனங்களை இத்தகைய போர்டுகளை வைக்க அனுமதிக்கலாம்.
Best regards,

காய்கறிவிலை ஏறிவிட்டதென பொங்குபவர்களுக்கான பதிவு...!!! 🌸

 காய்கறிவிலை ஏறிவிட்டதென பொங்குபவர்களுக்கான பதிவு...!!! 🌸☘️பொதுநலம் சார்ந்த பதிவு...

☘️தக்காளி விலை ஏறிவிட்டது,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!!

☘️நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
 என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..

☘️COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்???

☘️எளியவர்களை கேள்வியால் துளைக்கும் நீங்கள் இதர கார்பொரேட் பொருட்கள் விலையேறினால் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்???

☘️சிறு காய்கறி கடைகளில் விலையினை குறைத்து கேட்டு மல்லுகட்டும் நீங்கள், ஷாப்பிங் மால்களிலும், பெருவணிக வளாகங்களிலும் எவ்வளவு விலை கூடியிருந்தாலும், பகட்டால் வாயை மூடுவது ஏன்???

☘️6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..?????

☘️விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா??? இல்லை, JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..


🙏 விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்..

இல்லையேல்,
 கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி.  கடைசி மீனும் பிடிபடும்போதுதான்
உரைக்கும்,

பணத்தை சாப்பிட முடியாதென்று..!!!! 🙏

Best regards,

Monday, 8 June 2020

வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு:வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு:

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.

ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்!

மாஸ்க் கட்டாயம் அணியுங்கள்
நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க...

Best regards,

#லாக்டவுன் # தளர்வு #ஏன்?

#லாக்டவுன் # தளர்வு #ஏன்?

நாம் கொரோனாவை வென்று விட்டோமா?

இந்திய மருத்துவ சங்கம், ஈரோடு கிளையின் தலைவர்,  டாக்டர்.சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் பதில்.

இல்லை இல்லை இல்லவே இல்லை!

அப்பொழுது இந்த 45 நாடகள் வேஸ்ட்டா?

அதுவும் இல்லை!

லாக் டவுன் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ் நாட்டில் மட்டும் 1.5 கோடி நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும்

அவ்வாறு நடந்திருந்தால் மருத்துவம் சீர்குலைந்து விடும்.
இன்று 1 சதவீதம் உள்ள இறப்பு விகிதம் 10 சதவீதமாக மாறியிருக்கும்.
அதாவது நாம் 10 லட்சம் பேரை இழந்து இருப்போம்....

பின் எதற்காக இந்த தளர்வு

நாம் ஊர் சுற்றவும், காலையில் வாக்கிங் என்ற பெயரில் முகக்கவசம் அணியாமல் செல்ல அல்ல

நம் வறுமையை போக்கிட, நிதி நெருக்கடியை நாமே சரி செய்ய அரசாங்கம் கொடுத்த வாய்ப்பு.
அதை சரியாக பயன்படுத்த வேண்டும்

இப்பொழுது கொரோனாவில் இருந்து மீழ்வது மக்கள் கையில் உள்ளது!!!

கோயம்பேடு நமக்கு ஒரு பாடம்.
நம் கவனக்குறைவாலோ, அல்லது எனக்கு வராது என்ற குருட்டு தைரியத்தால் நமக்கு தொற்று ஏற்பட்டால் அது நம்மை நம்பி உள்ளவர்களையும் அது தாக்கும்.
நாம் தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் நம் வீட்டில் உள்ள பெரிவர்களுக்கு இதுவே ஆபத்தை விழைவிக்கும்.

நம் நலம் நம் உயிர் கையில்........

அப்போ என்னதான் செய்ய வேண்டும்..!?

வீடு டு அலுவலகம் ..
அலுவலகம் டு வீடு.

முடிந்தவரை அலுவல் வேலைகளை வீட்டில் முடித்துவட்டு முக்கிய காரணத்திற்காக மட்டும் வெளியில் செல்லுங்க.

அங்கும் சமூக இடைவெளி அவசியம்.
முகக்கவசம் கட்டாயம் தேவை.

உடன் வேலை செய்வோர், பார்ட்னர், உயிர் நண்பன், தாய் மாமா என்று பாகுபாடு இல்லாமல் சமூக இடைவெளி அவசியம்.

காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு வாரம் ஒரு முறை மட்டும் செல்ல வேண்டும். அதுவும் ஒருவர் மட்டும்.

அங்கும் சமூக இடைவெளி அவசியம்.
5 அடி கட்டாயம் தேவை.

மற்ற நேரம் வீட்டில் பத்திரமாக இருங்கள்.

வாக்கிங், அவுட்டிங், கோவில், பக்கத்து வீடு, நண்பன் பார்ட்டி என்று எதுவும் வேண்டாம்.

முக்கியமாக நெரிசலை தவிர்க்க வேண்டும்.

நம் ஆரோக்கியம் நம் கையில். நம் உயிரும் நம் கையில்.
நம் நாடு நம் கையில்.

விலகி இருப்போம்
பிழைத்திருப்போம்.

(எத்தனையோ தகவல்களை வெறுமனே பார்வேர்ட் செய்கிறோம்.. இது மிக நல்ல, உபயோகமான தகவல் என்பதால்.. நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 10 பேருக்கு அனுப்பலாம்.)

Best regards,

ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், 10ம் ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2:30 மணிககுள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் கூறியதாவது: லட்சகணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு மாதம் தள்ளி வைக்காமல் ஏன் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது. 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், போலீசார், வருவாய்த்துறையினரை இக்கட்டுக்கு ஆளாக்குவது ஏன்? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது.

ஊரடங்கு காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வர் - அமைச்சர் சந்தித்தது தொடர்பான நிலவரங்களை விளக்க வேண்டும். என்ன முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராக முடியாது என்பதால், வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 15ல் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது.
கொரோனா பரவல் குறைந்த பின் தான் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடையை திறப்பது போல், பத்தாம் வகுப்பு தேர்வு கிடையது. இரண்டும் வெவ்வேறானவை. பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.

Best regards,

DTCP அப்ரூவல் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!! ************

DTCP அப்ரூவல் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!!
************


நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாகமாற்றுதல் (Conversion), அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுதல்போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்புஇயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP)அனுமதி தேவைப்படும்.

இது சென்னை பெருநகர்வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத் திலிருந்து வேறுபடுகிறது.

சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதிகார வரம்புஎன்பது சென்னை மற்றும் அதன்அருகாமையில் உள்ளபகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின்அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது.

 எனவே டீ.டி.சி.பி.அப்ரூவ லுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியேமிக மிக முக்கியமானது.

 அப்ரூவல் வாங்க வேண்டியபகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம்எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின்டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.

இது தவிர,லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால்சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமைஅலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக்கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றுஅவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்கவேண்டும்.

அவர்கள் அதை சரி பார்த்துவிட்டு, மாவட்டடீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.

 டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானைபல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதிகொடுப்பார்கள்.

சில சமயங்களில் அவர்களே ஒருபிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.

அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்துஇருப்பார்கள்.

 அதைத்தான் லே- அவுட் புரமோட்டர் அல்லதுஉரிமையாளர் பின்பற்ற வேண்டும்.

பின்பற்றுவதோடுமட்டு மல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அந்த பிளானில் உள்ளபடியே பிளாட் (Plot)களைவிற்கவே விளம்பரம் செய்யவோ வேண்டும்.

 24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப்பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியைதனியாக வாங்கவோ அதில்கட்டடம் கட்டவோ பஞ்சாயத்துஅனுமதி தேவைப்படும்.

 அந்த 24 செண்ட் அளவுக்குமேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல்மட்டுமல்லாது, வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும்அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமேகிடையாது.

 அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடையகட்டுப்பாட்டின்கீழ் வரும். எனவே, பஞ்சாயத்துஅனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப் பகுதியைவாங்குவது நல்ல விசயம் அல்ல.

விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி  /தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைகுடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதிதேவை.

 சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றதிட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan),நிலப் பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி.அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர,குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தைஎந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும்தெரிவித்து விட வேண்டும்.

டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தைஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றியதகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும்கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள்.

எந்த ஆட்சேபணை யும் வரவில்லை என்றால், உடனடியாகZone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள்அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங் களாகக்கருதப்படுகின்றன.

 இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின்அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம்,ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின்அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று ஒத்து வரவில்லை என்றாலும்அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது.

சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ளசாலையின் அகலம் குறைந்த பட்சம் 80 அடியும், கட்டிடம்கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்கவேண்டும்.

 இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்குஅனுமதி மறுக்கப்படும்.நன்றி 🙏🙏🙏🙏

Best regards,

Saturday, 6 June 2020

இசையும், தியானமும் இரண்டு கண்களில் மிளிர சிரிக்கிறார் இளையராஜா .அவரிடம் ஒரு புல்லட் பேட்டி.

இசையும், தியானமும் இரண்டு கண்களில் மிளிர சிரிக்கிறார் இளையராஜா.

 .அவரிடம் ஒரு புல்லட் பேட்டி.

75 வயது இளையராஜாவிடம் 75 கேள்விகள்...அத்தனைக்கும் அவரின் அசராத பதில்கள் இதோ...

1. இளமை தொடங்கி இன்றும் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கம்....

யார், எதை நல்லப் பழக்கமாக எடுத்துக் கொள்கிறார்கள் என தீர்மானமாக தெரியாததால், நான் கடைப்பிடிக்கும் பழக்கம் நல்ல பழக்கமா... கெட்டப் பழக்கமா... என்பதை நான் தீர்மானிக்க முடியாது. எனக்குப் பிடித்ததை எல்லாம் செய்கிறேன். அவையெல்லாம் நல்ல பழக்கம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் பழக்கங்களில் வித்தியாசங்கள் எனக்குக் கிடையாது.

2. சிறு வயதில் அதிகம் கேட்டு ரசித்த பாடல்....

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே...' கேட்டதை விட அதிக முறை பாடிய பாடல்.

3. சினிமாவில் நீங்கள் யார் ரசிகர்...

நல்ல சினிமா தருபவர்களுக்கு நான் ரசிகன். பொதுவாக சிவாஜியை எனக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆரின் வெற்றிகரமான படங்கள் எல்லாம் பிடிக்கும்.

4. அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்....

சின்ன வயதில் முணுமுணுத்ததோடு சரி... இப்போது அப்படி எதுவும் இல்லை.

5. பிடித்த உணவு

எது என் முன்னால் வைக்கப்படுகிறதோ, அதுவே என் உணவு. ஏனென்றால் என் உடல் ஓர் பிச்சைப் பாத்திரம்.

6. டி.வி..யில் பார்க்கும் நிகழ்ச்சி..

பார்ப்பதே இல்லை.

7. சந்திக்க விரும்பும் நபர்....

ஜான் வில்லியம்ஸ், ஸ்டீபன் ஸ்பீல் பர்க்.

8. பிடித்த இசை முன்னோடி...

ஏராளமான பேர் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் சொன்னால் அது உங்களுக்கு பெயராகத் தெரியும். ஆனால் அது எனக்கு கடவுளின் சோஸ்திரம் மாதிரி.

9. சந்திக்கவே கூடாது என நினைக்கும் நபர்...

அவர்களை நான் சந்திப்பதே இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதும் இல்லை.

10. பிடித்த பொன்மொழி

"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்'' எனும் குறள். உன்னையே உனக்கு பிடிக்க வேண்டும் என்றால், சின்ன தவறு பக்கம் கூடப் போகாதே என்று சொன்ன குறள். அதுவே பிடித்த பொன்மொழி.

11. படித்ததில் பிடித்த புத்தகம்...

ரமணர் வாழ்க்கை வரலாறு.

12. எதை பெரும் இழப்பாகக்
கருதுகிறீர்கள்...

இந்தப் பிறப்பை...

13. மறக்க முடியாத சென்னை நாள்...

எந்த நாளை நான் மறந்தேன்.

14. கிராமத்து விளையாட்டு...

அது திரும்ப வராது.

15. அம்மாவை நினைக்கும் போது...

நினைக்காத நாள் ஏது? அம்மாவை வணங்கி விட்டுத்தான் என் எல்லா நாள்களும் தொடங்கும்.

16. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை...

ச்சே...

17. பிடித்த வாகனம்...

அப்படி எதுவும் இல்லை.

18. பொது வாழ்க்கையில்
பிடித்த தலைவர்..

என் வாழ்க்கையே பொதுவாக இருக்கிறது.

19. சந்திக்க விரும்பும் தலைவர்

அப்படி எதுவும் இல்லை

20. முதல் சம்பளம்

வைகை அணையில் வேலை செய்த போது, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் வீதம், வாரத்துக்கு 7 ரூபாய். எல்லாம் புது ரூபாய் நோட்டுகள்.

21. ரோல் மாடல்

நான் யார் மாதிரியும் வர முடியாது என்று எனக்குத் தெரியும். அது தெரிந்ததால், ரோல் மாடல் என்று எவரும் இல்லை.

22. யாருடைய இழப்பு உலுக்கியது...

அம்மா, சகோதரர்கள், சகோதரி எல்லா இழப்பும்தான்.

23. மகன்கள், மகளுக்கு சொல்லும்
அறிவுரை...

அதை தனியாக சொல்லிக் கொள்வேன்

24. பண்ணைபுரம் என்றதும் நினைவுக்கு வருவது...

மேற்குத் தொடர்ச்சி மலை, மணல் ஓடை, இரட்டை ஆலமரம், வீரன்தோப்பு எல்லாமும்தான்.

25. சென்னையில் பிடித்த பகுதி...

பிரசாத் ஸ்டுடியோ.

26. எம்.ஜி.ஆர், சிவாஜி தந்த மறக்க முடியாத பரிசு...

இரண்டு பேருமே தனியாக எதுவும் கொடுக்கவில்லை. மக்களுக்கு அவர்கள் நடித்துக் கொடுத்த படங்கள் எல்லாம் பரிசுதான். அது எனக்கும் பரிசுதான்.

27. ஆட்டோகிராப் வாசகம்..

இறையருள் இளையராஜா.

28. பிடித்த அயல்நாடு...

ஆஸ்திரியாவின் "வியன்னா' .
ஹங்கேரியின் "புடாபெஸ்ட்'
இரண்டுமே இசை நகரங்கள்.

29. பிடித்த வரலாற்று நாயகன்...

நல்ல நீதி சொன்னவர்கள்தான் வரலாற்று நாயகர்கள் என்பது என் கருத்து. அப்படிப் பார்த்தால் திருவள்ளுவர், மகாகவி பாரதியார்

30. அம்மா உங்களிடம் பேசிய கடைசி வார்த்தைகள்...

நினைவில் இல்லை.

31. மறக்கவே முடியாதவர்...

நிறையப் பேர் இருக்கிறார்கள்

32. பேரன், பேத்தியிடம் ரசிப்பது....

கொஞ்சும் மொழிகள்.

33. 75 வயதில் உங்கள் மனம் என்ன சொல்கிறது..

மனம் வயதை பற்றிக் கவலை கொள்வதே இல்லை!

34. இசையைத் தவிர்த்து என்னென்ன வேலை செய்து உள்ளீர்கள்...

இசையே பெருங்கொடை. வேறு என்ன வேண்டும்?

35. வாலி எழுதிய பாடல்களில்
பிடித்தது...

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா...'

36. கண்ணதாசன் என்றதும் நினைவுக்கு வருவது....

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே...'

37. போட்டோகிராபர் ராஜா...

நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும்

38. நன்றி சொல்ல தேடிக் கொண்டிருக்கும் நபர்...

யாரையும் தேடுவதில்லை. என் உள்ளத்திலேயே நன்றி சொன்னால், அவர்களுக்குப் போய்ச் சேரும் என்பது சத்தியம்.

39. இசைஞானி பட்டம் கொடுத்த கலைஞர் குறித்து...

அவர் என்னை இசைஞானியாகப் பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத்தான் இருந்தது. அதுவே எனக்கு பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது.' " சங்கீதக் கனவுகள்' இரண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டே வந்திருக்கிறார். கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களைப் படித்தது பற்றிச் சொன்னார். அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மிகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு "இசைஞானி' என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார். அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடம், "இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்' என்றேன். "அது தெரியும். அதனால்தான் வைத்தேன்' என்றார். அவர் வைத்த பெயர் அப்படியே மக்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

 "உளியின் ஓசை' படத்தின் பிரிவியூ காட்சி ஃபோர் பிரேம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த சமயம் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடம் இளையராஜாவுக்கு "இசைஞானி' என்ற பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தம் என்று குறிப்பிட்டதாகவும் அறிந்தேன்.

40. மெட்டுக்கு எழுதிய பாடல் எது... பாடலுக்கு மெட்டு போட்ட முதல் பாடல் எது...

நிறைய இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல முடியாது

41. படத்தில் அறிமுகப் பாடல்களில் வந்தது பற்றி...

ஞாபகம் இல்லை.

42. ரஜினி, கமல் தந்த பரிசு...

இருவருமே நாட்டுக்குக் கிடைத்த பரிசு. கமல் உன்னதக் கலைஞர். ரஜினி அற்புத மனிதர். நாங்கள் மூன்று பேருமே ஒரே நேரத்தில் திரைத்துறைக்கு வந்தோம். இன்றும் நண்பர்கள். என்றும் நண்பர்கள். மற்றவர் குறைகளை நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்ளத் தயங்க மாட்டோம். ஆனால், அதை வெளியில் போய் பேசிக்கொள்வதில்லை. ஒருவரையொருவர் மதிக்கிற பண்பு எங்களிடம் இருக்கிறது.

43. பிடித்த அயல்நாட்டுத் திரைப்படங்கள்....

எக்கசக்கம்.

44. இசையமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாட்டு...

பாடு நிலாவே....

45. முதலில் எழுதிய பாடல்...

இதயம் ஒரு கோயில்...

46. திருத்திக் கொண்டே இருந்த பாடல்...

நிறைய இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.

47. பிடித்த வெளிநாட்டுப் பெண்மணி....

யாரும் இல்லை.

48. பிடித்த நிறம்...

வெள்ளை.

49. பிடித்தது....

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

50. பிடிக்காதது....

பிடிக்காதது என்று எதையும் சொல்லக் கூடாது.

51. மீண்டும் மீண்டும் படிக்கும்
புத்தகம்...

ரமணர் வாழ்க்கை.

52. மழை பெய்யும் போது... என்ன தோன்றும்...

சிறு வயதில் கப்பல் விட்டது ஞாபகத்துக்கு வரும்

53. அப்பாவுடன் பேசிய கடைசி வார்த்தைகள்...

அப்பா படுக்கையில் இருந்தார். நான், பாஸ்கர், அமர் மூன்று பேரின் கைகளையும் பெரியண்ணன் பாவலரின் கைகளில் பிடித்துக் கொடுத்தார். அங்கே வார்த்தைகள் எதுவுமில்லை. மௌனம்தான் இருந்தது. பொய் சொன்னதற்காக என்னை அவர் அடித்திருக்கிறார். அதிலிருந்து பொய் சொல்வதை விட்டு விட்டேன். சினிமாவுக்கு வந்தவுடன் மீண்டும் பொய் சொல்லத் தொடங்கி விட்டேன்.

54. நீங்கள் எழுதியதில் அதிகமாக விற்பனையான புத்தகம்...

பதிப்பகத்தாரைத்தான் கேட்க வேண்டும்.

55. நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம்...

நான் படித்தவனும், படிக்கிறவனும் இல்லை.

56. மனிதனின் உண்மை முகம் எது...

எல்லாவற்றையும் மறைப்பது. நல்லது என்று நினைப்பதை மட்டுமே வெளியில் சொல்லுவது... மோசமானதை மறைத்துக் கொள்வது...

57. ரமணர்?

அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே அருகதை வேண்டும்.

58. பஞ்சு அருணாசலம் - இளையராஜா முதல் சந்திப்பு...

முதல் சந்திப்பில் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. ஏனென்றால் கண்ணதாசனுடன் பாடல் எழுத ஜி.கே. வெங்கடேஷ் மியூசிக்கலுக்கு வந்தார். கிளப் ஹவுஸில் நான் தனியாகப் பார்க்கும் போது, "வாப்பா... உட்கார்' என்றார். அவ்வளவுதான்.

59. உங்கள் குரு தன்ராஜ் மாஸ்டர் உங்களிடம் எந்த விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார்....

கண்டிப்பு எதுவும் இல்லை.

60. பெருந்தலைவர் காமராஜர் பற்றி

 சிலாகித்துப் பேசுவதுண்டு.. அவரிடம் பிடித்த விஷயம் என்ன..
இந்த நாட்டை ஆண்டவர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் காமராஜர்

61. பாதுகாத்து வரும் பொருள் என்ன...

மனசு.

62. விருப்பமான ராகம்...

மௌன ராகம்.

63. முடங்கி விட்ட பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா...

எடுக்கப்பட்டு வெளிவராத பாடல்கள் நிறைய உண்டு.

64. முதல் காதல்?

அதற்கெல்லாம் நேரம் இல்லை.

65.குறுகிய காலத்தில் உருவான பாடல்...

3 நிமிடங்களுக்கு மேலாக எந்தப் பாடலுக்கும் எடுத்துக் கொள்வதில்லை.

66. தீவிர ரசிகர் குறித்து...

நிறையப் பேர் இருக்கிறார்கள். தினம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

67. பிடித்த குறள்?

தன்னைத்தான் காதலன் ஆயின்... எனத் தொடங்கும் குறள். இன்னொன்று மனத்துக்கண் மாசிலன் ஆதல்...எனத் தொடங்கும் குறள்.

68. அடிக்கடி செல்லும் இடம்...

திருவண்ணாமலை.

69. வெள்ளை உடைக்கு மாறிய தருணம்...

மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த போதிலிருந்தே என்னுள் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் பேண்ட், ஜிப்பாவுக்கு மாறினேன். அதன் பின் வேஷ்டி, ஜிப்பாவுக்கு மாறி விட்டது.

70. எல்லா ஆன்மாக்களுக்கும் உங்கள் இசை பொருந்துவது எப்படி?

உணர்வதே இசை. அந்த தன்மை இருந்தால்தான் அது இசையின் அடையாளம்.

71. பாலிவுட் இயக்குநர்களில் உங்கள் நண்பர் யார்...

பால்கி. அவர் பெரும் ரசிகர்.

72. ஹிந்தியில் பயன்படுத்தப்பட்ட பாட்டு எது..

"மன்றம் வந்த தென்றலுக்கு..."

73. எல்லா உணர்வுகளுக்கும் பாடல், இசை தருவது எப்படி...

ஒரு பெண் என்ன நினைப்பாள்... என்பதையும் என் இசை தொட்டிருக்கிறது... எல்லா உணர்வுகளுக்குள்ளும் நான் பயணமாகிறேன் என்பதுதான் காரணம்.

74. இசைத் தேடல்...

அது தேடல் அல்ல. அந்த கண நேரத்தில் நடக்கிறது. அவ்வளவுதான்....

75. பயத்தைத் தருவது எது?

பயம் குறித்து இளையராஜா எழுதிய கவிதையை ப் படித்துக்காட்டியது:

என்மனப் பேய்க்கும் அஞ்சேன்
நான் எனும் நாய்க்கும் அஞ்சேன்
வஞ்சமாம் வாய்க்கும் அஞ்சேன்
அஞ்செனும் தீய்க்கும் அஞ்சேன்
நெஞ்சிலான் உள்ளும் ரமணன்
நிற்கிலா தருளும் அருளை
துஞ்சலில் மறப்பேன் எனிலோ
அய்யநான் அஞ்சும் ஆறே!

வேர்விடும் வினைக்கும் அஞ்சேன்
சீர் புகழ் சிறுமைக் கஞ்சேன்
நேர்கொலும் நெஞ்சிற் கஞ்சேன்
நீர்மையில் நீசர்க் கஞ்சேன்
மார்பிலார் மனத்தும் மண்டும்
மாதவன் ரமணன் அருளால்
நீர்விடாக் கண்கள் காணில்
அய்யநான் அஞ்சும் ஆறே!

பிறந்த ஓர் பிறப்புக் கஞ்சேன்
பெற்றிடார் பிதற்றற் கஞ்சேன்
இறந்துபோம் காலம் அஞ்சேன்
இடர்தரும் கோள்கள் அஞ்சேன்
பிறங்கிடும் ரமணன் அருளே
பிறண்டிடா தென்றும் உண்டேல்
மறந்திடா தளிப்போன் மறக்கில்
அய்யநான் அஞ்சும் ஆறே!

பெற்றவர் கடமை அஞ்சேன்
உற்றநோய் உடைமை அஞ்சேன்
கற்றிலான் மடமை அஞ்சேன்
சுற்றமும் சூழலு மஞ்சேன்
உற்றதோர் ரமணன் உறவும்
உளக்கல்லும் உருகும் அருளும்
மற்றுயான் மறந்தேன் எனிலோ
அய்யநான் அஞ்சும் ஆறே!

சாக்குடை தேகம் அஞ்சேன்
மோகமாம் தாகம் அஞ்சேன்
தாக்கும்தீக் காமம் அஞ்சேன்
தகிக்குமதன் வேகம் அஞ்சேன்
நோக்கிலா ரமணன் நோக்கால்
நோயெலாம் ஓடும் அருளே
வாய்க்கிலா வஞ்சர் வாழ்ந்தால்
அய்யநான் அஞ்சும் ஆறே!
வறண்டமண் வாழ்வும் அஞ்சேன்
வாயிலாத் தாழ்வும் அஞ்சேன்
வரவுறும் போக்கும் அஞ்சேன்
வறுமையின் சிறுமைக் கஞ்சேன்
துறந்திடா உறவாம் ரமணன்
தூய்மையால் அருளும் கருணை
பெறற்கிலாப் பிறப்பைக் கண்டால்
அய்யநான் அஞ்சும் ஆறே!

குற்றங்கூடிட்டார்க் கஞ்சேன்
குற்றங்கொள் கூட்டும் அஞ்சேன்
சுற்றமாம் விதியும் அஞ்சேன்
பற்றுவீனைப் படலம் அஞ்சேன்
பெற்றதோர் தவமாம் ரமணன்
பேரருட் கனியாய்க் கனிந்தும்
பெற்றிடாப் பிழையாய்ப் பிறந்தார்க்
கய்யநான் அஞ்சும் ஆறே!

என் அவம் எண்ணற் கஞ்சேன்
என்னையான் நோதற் கஞ்சேன்
என்னவன் பின்யான் செல்ல
ஏசிடும் எத்தர்க் கஞ்சேன்
தன்தவம் தனக்கே கொள்ளாத்
தாரணிக் கருளும் ரமணன்
தன்பலன் கொள்ளார் தாளேன்
அய்யநான் அஞ்சும் ஆறே !
வாழ்ந்துசெல் வயதுக் கஞ்சேன்
வந்துபோம் வாழ்வுக் கஞ்சேன்
வீழ்ந்தெழும் பொழுதிற் கஞ்சேன்
வேறுபொய் தொழுவார்க் கஞ்சேன்
ஆழ்ந்து என் உள்ளில் நோக்கி
அடிவினை மெய்வேர் பேர்த்து
வாழ்விடும் வார்கழல் வணங்கார்க்
அய்யநான் அஞ்சும் ஆறே!
மெய்வழி சேரற் கஞ்சேன்
மேன்மைகொள் நெறிக்கும் அஞ்சேன்
மெய்யெனும் பொய்க்கும் அஞ்சேன்
கண்ணியர் மைக்கும் அஞ்சேன்
துய்யநற் றவத்தால் தனித்தோன்
தூமலர் அடிக்கீழ் துவண்டு
அய்யன்தன் கண்கள் காணில்
அய்யநான் அஞ்சும் ஆறே !Best regards,

மின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்?

மின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்?
கரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மத்திய அரசு அவசர அவசரமாக மின்சாரச் சட்டத் திருத்தம்-2020–ஐ இயற்றியுள்ளது.

ஏற்கெனவே, மின்சாரச் சட்டம்-2003–ன் விளைவாக, மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50% மின் உற்பத்தி தனியார் வசம் சென்றுவிட்டது. மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்கள் மின் உற்பத்தியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் 34 தனியார் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்படவில்லை.

ஏன் இந்த அவசரம்?

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் வாரியங்களுடன் செய்துகொண்ட நீண்ட கால மின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது குறித்தும், மின்சாரக் கொள்முதல் விலை குறித்த பிரச்சினைகள் குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான மொத்த மூலதனத்தில்
75% வங்கிகளிடமிருந்து கடனாகப்  பெறப்பட்டவை.

இது இந்தியாவில் வங்கிகள் கொடுத்துள்ள மொத்தக் கடனில் 17%. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வாராக்கடனாக மாறியுள்ளன.

வங்கிகள் தங்களுக்கு வர வேண்டிய கடன்களுக்காகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இந்த அழுத்தத்திலிருந்து மின் உற்பத்தி நிறுவனங்களைக் காப்பாற்ற, தனியார் மின் நிறுவனங்களை லாபத்துடன் இயங்க வைப்பதற்காகவும், மின் வாரியங்கள் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் செய்ய வைப்பதற்காகவும் தற்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மின் விநியோக உரிமைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவும் இச்சட்டத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

என்னென்ன பாதிப்புகள்?

தற்போதைய மின் கட்டண நிர்ணய முறையில் வணிக மின் நுகர்வோர்களும் தொழிற்சாலை மின் நுகர்வோர்களும் சற்றுக் கூடுதல் கட்டணமும், இதர நுகர்வோர்கள் சற்றுக் குறைவான மின் கட்டணமும் பெறுகிறார்கள்.

இம்முறையை மாற்றும் வகையில், இடை மானியத் தொகையை முழுமையாக நீக்கி, ஒரே மாதிரியான மின் கட்டணம் இனி நிர்ணயிக்கப்படும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வீடுகளில் தற்போது செலுத்திவரும் மின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு மின் கட்டணமாகச் செலுத்தும் நிலை ஏற்படும்.

குடிசைகள், வீடுகளுக்குத் தற்போது தமிழக அரசால் இலவச மின்சாரத்துக்கென மானியத் தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய சட்டத் திருத்தத்தால், மாநில அரசானது மானியத்தை மின்சார வாரியத்துக்குச் செலுத்தாமல், மின் நுகர்வோர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

இது நடைமுறைக்கு வந்தால், தற்போது இலவச மின்சாரம் பெற்றுவரும் வீடுகள், பொது வழிபாட்டுத் தலங்கள், கைத்தறி மின் நுகர்வோர்கள் அனைவரும் கட்டாயம் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

வீடுகளைப் பொறுத்தவரை மாதந்தோறும் ஒரே அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கோடைகாலங்களில் அதிக அளவு மின்சாரமும், குளிர் காலங்களில் குறைந்த அளவு மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர்கள் உபயோகிக்கும் மின்சார அளவுகளைக் கணக்கிட்டு, அதற்குரிய மானியத்தை ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் மாநில அரசு நேரடியாகச் செலுத்துவது எப்படி நடைமுறைக்குச் சாத்தியமாகும்?

வாடகை வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின் கட்டணத்தை வீட்டின் உரிமையாளர் முன்னமே செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் வீட்டு உரிமையாளர் தன்னுடைய வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின் அளவுகளைக் கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தை அரசிடமோ, அரசு சொல்லும் தனியாரிடமோ செலுத்த வேண்டும்.

தற்போது, தமிழக அரசானது மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரத்துக்குக் குறைவாகப் பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது.

தற்போதைய சட்டத் திருத்தத்தின்படி இம்மானியம் யாருக்கு வழங்கப்படும்? வீட்டு உரிமையாளர்களுக்கா? இல்லை வாடகைதாரர்களுக்கா? வாடகைதாரர்களுக்குக் கிடைக்கக்கூடிய மானியத்துக்காக வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்துவார்களா?

தமிழகத்தில் சுமார் 23 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. இலவச மின்சாரத்துக்குப் பதிலாக விவசாயிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்க விரும்பினால், அதை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தட்டும் என்று தற்போதைய சட்டத் திருத்தம் சொல்கிறது. இது சாத்தியமே இல்லாதது.

தனியார்மயமாக்கும் முயற்சி

மின்சாரச் சட்டம்-2003–ன் படி, மின் வாரியங்களை உரிமதாரர்களாக வைத்திருக்கிறது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்தைத் தமிழ்நாடு மின் வாரியம்தான் விநியோகிக்கிறது.

ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின் படி, ஒரே உரிமதாரர் என்ற நடைமுறையை ஒழித்து, மாவட்ட வாரியாக உப-உரிமதாரர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் தனியார் நிறுவனமாகத்தான் இருக்க முடியும்.

ஏற்கெனவே, மாநில அரசுகளால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மின் விநியோகத்தைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையிலேயே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் வாரியங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற வாதத்தை முன்வைத்து, இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது பெரிய பொய்.

ஏனெனில், மின் வாரியங்கள் மற்றும் மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்த பாக்கித் தொகை ரூ.88,311 கோடி (ஜனவரி, 2020 வரை). அதில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை ரூ.19,714 கோடி மட்டுமே.

நிதி ஆயோக், தேசிய கல்விக் கொள்கை–2019, உதய் மின் திட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மின்சாரச் சட்டத் திருத்தமும் அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலிலுள்ள கல்வி, விவசாயம், மின்சாரம், வனம், நீதி நிர்வாகம் என ஒவ்வொரு துறையாக மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்துக்கொள்வது சரியானதுதானா?

Best regards,