Saturday, 30 June 2012

SAND SCULPUTURES‘பில்லா-2′

ஜூலை 2ல் பிரம்மாண்டமாக வெளிவருகிறது ‘பில்லா-2′ பட டிரைலர்!


அஜீத்தின் ‘பில்லா-2′ படம் ஜூலை 13-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்னொரு புத்தம் புதிய டிரைலரை ஜூலை 2ம் தேதி பிரம்மாண்ட விழா எடுத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அஜித்தின் பில்லா ‌வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக உருவாகியிருக்கும் படம் பில்லா-2. பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால் என ஏகப்பட்ட நட்சத்திரங்களின் நடிப்பில், சக்ரி டோல்ட்டியின் இயக்கத்தில், யுவனின் மிரட்டல் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புதிதாக ஒரு டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் முதல் முன்‌னோட்டம் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா போன்றவைகளை எந்த ஒரு விழாவும் வைக்காமல் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். ஆகையால் இந்த 2வது டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, அதற்காக வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் விழாவுக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை பேரும் பங்கேற்க உள்ளனர். அதேசமயம் இந்த விழாவில் நடிகர் அஜித் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
 
 
 

Thursday, 21 June 2012

ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்?


லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம்பெற இருப்பதாக  இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில்  நடக்கும் பல்வேறு கலை  மற்றும் கலாச்சார  நிகழ்ச்சிகளில்,  உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய நிகழ்ச்சியும் ஒன்று. இதில் இடம்பெற்றுள்ள 86 பாடல்களில், தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களின் பெரும்பாலான பாடல்கள் இடம்பெறும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில்   தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ராம் லஷ்மண் படத்தில்  எஸ்.பி., பாலசுப்ரமணியம் பாடிய  “நான் தான் ஒங்கப்பண்டா” என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள  இங்கிலாந்து இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிரபல இங்கிலாந்து இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷதுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்த பாடலின் இசையும், ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடும் என இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி இடம்பெற்றுள்ளது.  இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினர்  படத்தை இயக்கிய டானி போயல் அவர்கள் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார். அவரது மேற்பார்வையில், சுமார் 27 மில்லியன் பவுண்ட் செலவில் உருவாகி வரும் இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில்,  உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை இடம்பெற போவது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

Sunday, 3 June 2012

டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா


ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

பூக்களின் வாசம் தரும் இதம்

மலர்களின் வாசனை தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

நெருக்கமாக அமருங்கள்

துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

திராட்சையும் ஸ்ட்ராபெரியும்

காதலை வெளிக்கொணரும் பழங்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

இதமாக வருடுங்கள்

பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்

தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.

இந்த வழிமுறைகளை நீங்கள் முயற்சி  செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்களோ அது வேண்டியது தானாகவே கிடைக்கும். 


fax:
your@email.com
http://www.yoursite.com