Wednesday, 30 October 2019

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.  ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்.

நம்மைப் படைத்த கடவுள் காரணமில்லாமல் எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்குத் தருவதில்லை எல்லா கஷ்டங்களும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களேBest regards,

Monday, 28 October 2019

சிறுவன் சுர்ஜித்

சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில

அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன்.
செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார் இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று, அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,  அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான்  உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும்  விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.  அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று  விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான்.  மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது,  உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது

வல்லுநர்களே படித்தால் மட்டும் போதாது அனுபவம் றொம்ப முக்கியம்Best regards,

Saturday, 26 October 2019

உச்சகட்ட தீபாவளி...கைக்கு எட்டியது உடுத்த கிடைக்குமா...

உச்சகட்ட தீபாவளி...கைக்கு எட்டியது உடுத்த கிடைக்குமா...🤔
தீபாவளி ஜவுளிக்கான லோன் கிடைக்குமா..என்ற ஒரு குண்டை போட்டார் அப்பா...😔😞
ஒரு வாரம் சோகமாய் இருந்த வீடு சந்தோசமானது லோன் கிடைத்ததாய் அப்பாவிடமிருந்து வந்த செய்தியால்...
எப்பொழதும் போல கோ.ஆப்.டெக்சில் தான் ஜவுளி...

எங்கள் அனைவருக்கும் ஸ்கூல் யூனிபார்ம் எடுத்திடலாம் என்றார் அப்பா...😭😭 அழுது அடம் பிடித்து கலர் சட்டைக்கு அப்ரூவல் கிடைத்தது அம்மாவின் சிபாரிசில்😀😃

அப்பா சைக்கிளில்🚲 செல்ல நாங்கள் எல்லோரும் டவுன் பஸ்ஸில் சென்று சேர்தோம்..ஒரே கூட்டம் கடையில்👬👫👯‍♀👨‍👩‍👧

எப்படியோ வேட்டி..சேலை..சட்டை..டவுசர்..பாவாடைதுணி என வாங்கியது போக மீதியில் இரண்டு ஜமுக்காளமும் வாங்கியாச்சு..

பட்டாணி..உப்புகடலை..பகோடாவுடன் வீடு வந்து சேர்தோம்..
ஒரு நாள் பூராவும் தெருவே வந்து பார்த்துபோனது எங்கள் வீட்டு ஜவுளியை...

டேய் ஜெயபால் டைலரிடம் கொடுத்திருக்கேன் போய் அளவு கொடுதிடுங்க. நல்லா லூசா கொடுங்கடா இரண்டு மூன்று வருடம் வர்றமாதிரி
என்றார் அப்பா..

லேட்டஸ்ட் பாபி ஸ்டைல் நீண்ட ரவுண்டு காலர்..இரண்டுபக்கமும் மூடி வைத்த பாக்கட் என அளவு கொடுத்தாச்சு.🧥👚
👕👔
அனைவருக்கும் ஒரேமாதிரி கலர்.அதற்கு பெயர் family uniform..

தினமும் பள்ளி விட்டு டைலர்கடை வழியாகத்தான் சுற்றி வருவோம். தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு வரை கட்டிப்போட்ட துணி அப்படியே பண்டலாக இருந்தது..பிரிக்கவே இல்லை...

தச்சாச்சா என்று கேட்டோம் தீபாவளிக்குமுதல் நாள் வா என்றார் டைலர்..

தீபாவளிக்கு முதல் நாள் அன்று பள்ளி அரை நேரம்தான்.மதியம் சாப்பிட்டுவிட்டு நான்கு மணிவாக்கில் சென்றுகேட்டோம்...வெட்டியாச்சு தையல் ஒடிக்கிட்டிருக்கு ராத்திரி சாப்பிட்டு எட்டு மணிக்குவா என்றார்...டைலர்.

விடிந்தால் தீபாவளி..கிடைக்குமா கிடைக்காதா திக்.. திக்..என்று இருந்தது.
உண்மையிலேயே வெட்டிதச்சிருந்தா பிட்டுகள் கீழே கிடக்கிறதா என பார்தோம்.. கிடந்தன துண்டுகள்..சந்தோசமாய் இருந்தது😆😆

இரவு சாப்பிட்டு சற்று தாமதாக சென்றோம்.ஓன்பது மணி..தெருவில் சிலர் மத்தாப்பு  புஸ்வாணம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்..நாய்கள்வேற அங்கங்கே குறைத்தது...🐕🐕
கடையைசென்று சேர்தோம்..உட்காருங்கபா இதோ பட்டன்கட்டி காஜா எடுத்தாவுது..ஒரு அரைமணிநேரம் ரெடியாயிடும் என்றார் .

காஜாபையன் தூங்கிவழியவே பளார் என ஒரு அடி விட்டு போய் டீ வாங்கிட்டுவா என சொம்பை கொடுத்தார்..
பாதியில் விட்டுவிட்டு விட்டால்போதும்என கிளம்பியவன் வர வெகுநேரமானது...😇😇

#பெட்ரூமாஸ் லைட் வெளிச்சம்...
#தையல்மிஷின் ஓடும் சத்தம்...
#மர்பி ரேடியோவில் விவத்பாரதியின் தேன்கிண்ணம்...🎻🎻
#பி.பி.சீனுவாசின் ரம்மியமான இரவு பாடல்..
#M.A.Jacob..ன் கார்பட் விளம்பரம்..
#புளிய மர காற்று..
#எங்கோ கேட்கும் ஓரிரண்டு வெடி சத்தம் ''
ரம்மியமாக இருந்தது..அந்த சூழல்...

ஒருவழியாக தினதந்தி பேப்பரில் சுற்றி மேலே நூற்றிஇருபது ரூபாய் கூலி என எழுதிக்கொடுத்தார்.
இரவு பதினோருமணி வீடு வந்துசேரும்போது...🤸‍♀🤸‍♀

ஒரே ஒரு குறை அயன்பண்ணி தரவில்லை😕😕
சட்டையை அழகாக மடித்து பாய்க்கும் தலையணக்கும் இடையில் வைத்தால் அயர்ன் செய்தது போல இருக்கும்..

கைக்குஎட்டியது ஒரு வழியாக கட்ட கிடைத்து விட்ட சந்தோசம்😀😃😄😁

அடுப்பில் அம்மா சுடும் முருக்கு..அதிரசம்..சோமாஸ் வாசனையில் விடிந்தால் தீபாவளி கொண்டாடபோகும் மகிழ்ச்சியில் கண்உறங்கினோம்😔😔

அந்த தீபாவளியை யாராவது பார்தால் அனுப்பிவையுங்களேன்
.🙏🏻🌾🌾🙏🏻
ஆம். தீபாவளியை எதிர்பார்த்த மகிழ்ச்சியும் தீபாவளி முடிந்தபின் எதோ நண்பனை பிரிந்தாற்போன்ற சோகமும் இன்னமும் நினைவில்.... Wish you happy Diwali in Advance....Best regards,

மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*

மருந்து செலவை நினைத்து இனி கவலை வேண்டாம்*
சென்னையில்  மத்திய அரசு மக்கள் மருந்தகத்தில் (www.makkalmarundhagam.com)
 * 30% முதல் 90% வரை விலை குறைவாக கிடைக்கிறது.. Pradhan mantri bhartiya Jan aushadhi Kendra என்ற பெயரில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு எடுத்துவந்த உள்ளது. எனவே நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நமது வாட்ஸ்அப் குரூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இதை ஷேர் செய்தால் பலருக்கு பெரும் நன்மையாக அமையும். நிறையப்பேர் உயிர்காக்கும்  மருந்து வாங்கி சாப்பிட வசதி இல்லாமல்  தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு  இந்த செய்தி  சென்றடைந்தால் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல் இருக்கும்.

சென்னையில் மக்கள் மருந்தகம்  உள்ள முகவரிகள்:-

மாங்காடு:-
 மக்கள் மருந்தகம் ,     RC மருத்துவ வளாகத்தில்
No 76, குன்றத்தூர் மெயின் ரோடு
 மாங்காடு , சென்னை-122.
Mobile 9150202721

நங்கநல்லூர்:-
மக்கள் மருந்தகம்
No 1/55, குபேர முனுசாமி தெரு, உள்ளகரம், நங்கநல்லூர், சென்னை-56
Mobile 6369844016.

K.K.நகர்:-
மக்கள் மருந்தகம்
No 20, 1 வது தெரு, 1 வது செக்ட்டார்,
கே.கே நகர்,சென்னை-78
Mobile 9025384722.

மந்தைவெளி:-
மக்கள் மருந்தகம்,
No 9/3, மாரி செட்டி தெரு ,
மந்தைவெளி ,சென்னை-28
Mobile 9884441067.

அரும்பாக்கம் :-
மக்கள் மருந்தகம் ,
16, லட்சுமி  அம்மாள் தெரு, அய்யாவு காலனி, அரும்பாக்கம், சென்னை-106.
Mobile 90257 03291, 94448 14818.


புரசைவாக்கம் :-
மக்கள் மருந்தகம்,
No 111, வெள்ளாள தெரு ,
புரசைவாக்கம் ,சென்னை-84.
Mobile 99620 159999.


கெருகம்பாக்கம் :-
மக்கள் மருந்தகம்
1, குன்றத்தூர் மெயின் ரோடு, பெரியபனணிச்செரி , சென்னை-128.
Mobile 9884000959,7358425577.

சேலையூர்:-
மக்கள் மருந்தகம்,
No 52/2 ,A1 ஸ்கூல் ரோடு,
சேலையூர் சென்னை-73.
Mobile 63815 65336.

பூந்தமல்லி:-
மக்கள் மருந்தகம்,
 No 4/149,ஆஞ்சநேயர் கோவில் தெரு,
 பூந்தமல்லி, சென்னை-56.
Mobile 9884076205


இந்த மருந்து கடைகள் பற்றி சில குறிப்புகள்:
* வெளி கடைகளில் சுமார் ரூபாய் 1000 க்கு வாங்கும் மருந்து இங்கு சுமார் 300 ரூபாய்க்குள் கிடைக்கும்.
*விலை குறைவு என்றவுடன் நமக்கு தரத்தைப் பற்றி கேள்வி எழும்பும்.
Nable test போன்ற பரிசோதனைக்கு உட்பட்டு தான் மருந்து வருகிறது.
*தயாரிப்பு நிறுவனம் பெயரில்லாமல் ஜெனரிக் பெயரில் மருந்துகள் கிடைக்கும்.
*ஜெனரிக் என்றால் என்ன என்று நமக்கு சந்தேகம் எழும்பும்.
 ஜெனரிக் என்பது மருந்தின் கலவையின் பெயராகும். உதாரணமாக Dolo 650, crocin 650, calpol 650 போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் பெயர் உள்ளது இவர்கள் அனைவரும் பாராசிட்டமால் (paracetamol) 650 என்ற மருந்தை தான் தயார் செய்கிறார்கள். ஒவ்வொரு கம்பெனியின் பேக்கிங், விலையும் வித்தியாசப்படும் ஆனால் மருந்து கலவை அதேதான். பெரும்பாலான மருத்துவர்களும் மருந்துகளின் கலவை பெயர் எழுதாமல்  தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தான் எழுதுவார்கள். இங்கு paracetamol 650 என்ற கலவையின் பெயரில் மருந்து கிடைக்கும்.

*Dolo 650 crocin 650 போன்றவை 15 மாத்திரை சுமார் 30 ரூபாய் இருக்கும். அதுவே மக்கள் மருந்தகத்தில் paracetamol 650
ரூபாய் 9 க்கு கிடைக்கும்.

*இதுபோன்று அனைத்து மருந்துகளும் விலை குறைவாக கிடைக்கும்.
இங்கு மருந்து 30% முதல் 90% குறைவான விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம் Rs.300 மிதிப்புள்ள மருந்து Rs.79ருபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் தெறியபடுத்துங்கள்#
மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மெடிக்கல்களில் ரூ.1000க்கு வாங்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே  வரும்.
சர்க்கரை,இரத்தஅழுத்ததம்,இருதயம்,கொழுப்பு, அலர்ஜி,போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன.

மக்களை அழிக்கும் பொருட்கள் ( மதுபானம்)மலிவான விலையில் கிடைக்கின்றது.
 ஆனால்  உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. இதை மாற்றவே  மக்கள் மருந்தகங்கள்.
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை உங்கள் மற்ற நண்பர்களுக்கும் SHARE செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறோம் 🙏Now we opened our GENERIC SHOP IN Chennai -
 சென்னை மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு  JAN AUSHADHI MEDICAL STORE Generic medical shop துவங்கியுள்ளது.அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக:
இருதய நோயளிகளுக்கு: மாதம்:ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும் ..
மிகவும் முக்கியம்..... அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக 👩⚕👩⚕ டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை மாத்திரைகளையே(அது குறைவாக கிடைக்கும் என்ற போதும்)அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.......
(1) "1MG Health app for India "என்பதை உங்கள் 📱மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்.......
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும். (உதாரணம்..லிரிகா 75 மில்லி கிராம்)(பிபிசர் கம்பெனி).....
(4) கம்பெனி பெயர்,மருந்து பெயர்,விலை,கலந்துள்ள வேதிப் பொருள்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளீக் செய்யவும்....
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்..... (உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே.......
Ex.
1.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.7
2.GLYCOMET GP 1.-10 மாத்திரை விலை Rs.12
3.GEMER 2.  -10 மாத்திரை விலை Rs.12
4.ATORVA 10.  -10 மாத்திரை விலை Rs.6
5.ATORVA 20.  -10 மாத்திரை விலை Rs.10
6.GLYCINORM M80- 15 மாத்திரை விலை Rs.32
7.GULCORED FORT -10 மாத்திரை விலை Rs.11
8.PAN D.  -10 மாத்திரை விலை Rs.19
9.SHELVAL-10 மாத்திரை விலை Rs. 4
10.ATORLIP F-15 மாத்திரை விலை Rs.30
    அன்புக்கு விலை இல்லை.......மற்ற குருப்பில் பதிவிடவும்....... மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்..

*இனைய முகவரி
(www.makkalmarundhagam.com)

Best regards,

Monday, 21 October 2019

நன்றியுணர்வின் சக்தி

நன்றியுணர்வின் சக்தி
~~~~~~~

வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை,  பாலைவனத்தின் வெப்பத்தால் தன் இறகுகளை இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது...

 தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் வாழ்ந்து வந்தது...

ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்...?" என்று கேட்டது...

 "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை  சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர்...

 உடனே அப்பறவை, "எப்போது என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை  கேட்டது.

 "கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்...

தன் குருவை  அடைத்த அந்த ஞானி, அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி "எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும்" என்று கேட்டார்.

 "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும்...
அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்...

 "இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே" என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி "ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும்" என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  *அனைத்தும் நன்மைகே...! அனைத்திற்கும் நன்றி...!
என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார்...

 சில நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

 அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன...!

 அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது...!

ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது...!

 ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது...!

குருவிற்கு  மகா ஆச்சர்யம்...
 ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு  கூறினாரே... இன்றெப்படி இது சாத்தியம்... என்று எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச் சென்றார்...

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான்...
ஆனால் "அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி" என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது...!

 பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது....!

 வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது....!

 சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று  பதில் கூறினார்.

 ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்விலும் உபயோகிக்க ஆரம்பித்தார் சந்திக்கும் எல்லா சூழல்களிலும்...!

 அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி

என்று உளமார கூற ஆரம்பித்தார்.

 உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர்... என அனைத்திலும், எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே,..!

 எனவே
நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்...!.

இந்த கதையை  மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .

தன்னம்பிக்கை  அளப்பரிய சக்தி மிக்கது...!

வாழ்க வளமுடன்...!

பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு...!

நல்லதே நடக்குமாக...!

Best regards,

Sunday, 20 October 2019

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

யம தீபம்
-------------------

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

தொழில் முன்னேறும்.

திருமணத் தடைகள் விலகும்,

சொத்துகள் சேரும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.

3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
--- தீபாவளிக்கு பட்டாசு வெடிங்க.....

 உங்களாலே எவ்வளவு முடியுமோ. அவ்வளவு வெடிங்க.

நம்ம பெரியவங்க சொன்னதை கேளுங்க.

தீபாவளி சமயத்திலே தட்பவெப்பத்லே ஏற்படும் மாற்றங்களாலே வித விதமான பாக்டீரியாக்களும். வைரஸ் களும் உற்பத்தியாகி மக்களை தாக்கி உயிர் பலி வாங்கும் அதுக்குதான் பட்டாசு வெடிக்க சொன்னாங்க .

நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

பட்டாசுலே இருக்கிற சல்பர் மற்றுமுள்ள ரசாயனங்கள் அந்த பாக்டீரியாக்களை அடியோடு அழிக்கும்.

 மழைகாலத்தின் சிறந்த கிருமிநாசினி.

பட்டாசு அதிகமா வெடிங்க டெங்குவை விரட்டுங்க.

Best regards,

Saturday, 19 October 2019

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்.!

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்?

ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!

டீம்_வொர்க்
‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம்.

இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில் முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்.

முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்.
முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல,தோல்வி முடிவல்ல..
முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

Best regards,

Friday, 18 October 2019

இங்க் பேனா - சுஜாதா

இங்க் பேனா - சுஜாதா

ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ?
 12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில்  தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்
படுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும்.
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம்  தொலைத்துவிட்டோம்.

நான் ரசித்தது பிறர் ரசிக்க

Best regards,

Thursday, 17 October 2019

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...!

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...!

🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎

"சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்கு செயல்வழி கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... "கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!" என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின் போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார், "மகனே நினைவில் வைத்துக்கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். #மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம், "மகனே! உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!" இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... "மகனே! எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்புவது கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது"

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார், "மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?" இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன், "அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார், "மகனே, நினைவில் வைத்துக்கொள், "மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!"

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, அழகிய வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் என் நினைவில் நான் வைத்திருக்கிறேன்.

Best regards,

Sunday, 13 October 2019

இதுதான் நம் தேசம்

"இதுதான் நம் தேசம்"

👉சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

👉பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

👉சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.....

👉ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

👉சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷசம்பளம்...

👉ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

👉சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

👉சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

👉சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

👉நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

👉பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

👉கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும் தேசம் இது

Best regards,

Saturday, 12 October 2019

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன்.

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. 

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார்.

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..
   நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். 

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...?

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன்.

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே.

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான். 

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். 

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்.

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. 

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. 

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். 

எப்படி அவரை விரட்டுவது..?,👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

 பளிச்சென்று யோசனை பிறந்தது. 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🇦🇼🇦🇼🇦🇼

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀

அம்மா....!!
   அப்பா உள்ளே இருக்கார்.

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்க இருக்கார்.....!
   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம்
😆😆😆😆😆😆😆😆😆 என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும் சரி 😅😅😅
 இல்லை எவனாயிருந்தாலும் சரி  ,,,,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!..🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃 இதுவே உலக நீதி.. . .

Best regards,

Friday, 11 October 2019

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
****************

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால்  காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)

Best regards,

Thursday, 10 October 2019

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி .

இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் .

அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும்.

அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.

" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.

" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,

" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.

தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . நாட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்.

*கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.

அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.*.

Best regards,

Wednesday, 9 October 2019

அருமையான தகவல்... அனைவருக்கும் பகிருங்கள். . . .மிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான Online புகார் :

அருமையான தகவல்... அனைவருக்கும் பகிருங்கள். . . .மிக மிக முக்கியமான செய்தி :  ATM / BANK சம்பந்தமான Online புகார் :

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html.

பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் :

Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in

Best regards,

Thursday, 3 October 2019

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாத பயிற்சி+ வேலை+ சம்பளம்.. அதிர வைக்கும் கும்பல்

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாத பயிற்சி+ வேலை+ சம்பளம்.. அதிர வைக்கும் கும்பல்

 
சென்னை:

 செல்போன்களை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமைப்பது எப்படி, ஆங்கிலம் கற்பது எப்படி, மெக்கானிஸம் படிப்பது எப்படி, இந்தி கற்பது எப்படி, மேக்கப் போடுவது எப்படி என இப்படியே பட்டியல் நீளும் அளவுக்கு நாம் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையில் சென்னையில் ஒரு கும்பல் செல்போனை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
சென்னை யானைக்கவுனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை போலீஸார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். அப்போது சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற அவர் அங்கு வைத்திருந்த செல்போனை அங்கிருந்த நபரிடம் கொடுத்தார்.


தினசரி நாளிதழ்கள்
உடனே போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் சோதனையும் நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தெலுங்கு மொழியிலான தினசரி நாளிதழ்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

செல்போன் திருட்டு
ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோழவரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியபடி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.


6 மாத பயிற்சி

ஆந்திராவில் இருந்து இளைஞர்களை அழைத்து வரும் கும்பல் அவர்களுக்கு செல்போன் திருடுவது எப்படி என்பது குறித்து 6 மாத பயிற்சி வகுப்பை அளித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களுக்கு தெலுங்கு பேப்பரை வாசித்து கொண்டே செல்லும் இந்த கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருட்டு கும்பல்
செல்போன்களை திருடி வரும் இளைஞர்களுக்கு மாதச் சம்பளத்தையும் ரவி கொடுத்துள்ளார். இந்த போன்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் திருட்டு கும்பலின் தலைவன் ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Best regards,

Tuesday, 1 October 2019

மருத்துவமனைகளின் மறுபக்கம்

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே,  “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:

' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள். 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது.  " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?

Best regards,