Tuesday, 20 August 2019

யார் ஏழை

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

Best regards,

Monday, 19 August 2019

துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!  செத்தது சமூக நீதி!
-----------------------------------------
அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!
42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.
STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off!

இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது!

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில்  கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.

Cut-off விவரம் (Out of 100):

EWS என்னும் உயர் சாதியினர்: 42
ST: 89.6
SC: 94.8
OBC: 95
UR என்னும் பொதுப் போட்டி: 95.2

உயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.

யார் இந்த அரிய வகை ஏழைகள்?

* பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்)
* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர்
* 5 ஏக்கர் நிலம் உள்ளோர்
* 1000 சதுர அடி வீடு உள்ளோர்.

இவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!

PhD படித்தவர்கள் எல்லாம் குப்பை அள்ளும் வேலைக்கும் பியூன் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில் இது கசக்குமா?

தகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்

தேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.

SBI மதிப்பெண்களாவது முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்கள்.

அஞ்சல் துறையோ வேலையே கொடுத்து விட்டது!

இதுவாவது பரவாயில்லை.

மாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)

PH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2
PH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4
PH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8
PH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8

பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8

ST மக்களுக்கு 89.6

95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்!

அப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,
OBC மக்கள் இருப்பார்கள்!

அவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தந்துள்ளார்கள்.

நம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள்.

ஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன?

500க்கு 210 மதிப்பெண்கள்!

இத்தனை ஆயிரம் பேர் முழுத் தகுதியோடு  முட்டி மோதும் போது பத்தாம் வகுப்பில் 500க்கு 210 மதிப்பெண்ணுடைய மக்கு பிளாஸ்திரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்!

உயர் சாதியினராகப் பிறந்தாலே போதும்!

இந்திய அரசு இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலையை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்!

உயர் சாதியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%.

எனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.

இது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக,  97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பொதுப்போட்டியிலேயே 800 OBCக்கள், 4 STக்கள், 64 SCக்கள் இடம் பிடித்துள்ளார்கள். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் ஒரு OBC.

ஆக, இத்தனை நாள் தகுதி இல்லாமல் மற்றவர்கள் இடங்களை அள்ளிப் போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு பல் இளிக்கிறது அல்லவா?

இப்போது 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் இடங்களைத் திருடிப் போவது யார் என்று புரிகிறதா?

***

தரவு ஆய்வு மற்றும் படமாக்கல் உதவிக்கு நன்றி - Ashok Kumar, Sathya Narayanan, Surendar Sekar

ஆய்வு வெளியீடு -  Ravishankar Ayyakkannu மற்றும் திராவிட ஆய்வுக் குழு நண்பர்கள்.

(ஆதாரங்கள் மறுமொழியில்) #10percentfraud #reservation

Best regards,

Sunday, 18 August 2019

அப்பாவின் அன்பான பொய்கள்.

அப்பாவின் அன்பான பொய்கள்.
(படித்ததில் பிடித்தது)

மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..

நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல் ,
அழுவதாக
பொய் சொல்லியும்..

இரவுகளில்
பேய்க்கனவு
கண்டு..
பாதியில்
எழுந்து
அழும்போது,,
தோள்களில்
இறுக்கமாய்
அணைத்துக்கொண்டு
பேய்
ஓடிப்போனதாக
பொய்சொல்லியும்..

முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..

குலதெய்வம்
கோவிலில்..
காது
குத்திக்கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு
"டூ "
விட்டுவிட்டதாக
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி
வேண்டாமென
அழும்போது..
மாத்திரை
மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாக
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம்
திட்டு
வாங்கிக்கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்கு
படிக்க
தெரியவில்லை,,
என
பொய் சொல்லியும்..

திருமணம்
முடிந்து,,,
புகுந்தவீடு
செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாக
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது
பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை
இருமிவிட்டு..
துளியளவு
தைலத்தில்
எல்லாமே
சரியாகிப்போனதாக,
எனது
மகளிடம்,
மீண்டும்
ஏமாற்ற துவங்குகிறார்...!

Best regards,

Saturday, 17 August 2019

இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் !

இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”

இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு

தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.

பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.

நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும்.

எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.

ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.

அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.

தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.

அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது.

எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.

கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.

சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள்.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.

ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ!

முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.

பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...

வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே,  நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்...  என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)...  என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும்  கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? ..

சிந்திப்போம்...

இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ  எதை விட்டுச் செல்ல போகிறோம்...???

நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...???

இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல்  நல்லவைகளை பேசி, முடிந்தவரை  பிறருக்கு உதவி  செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!

குறைந்தபட்சம் இந்த குழுவிலிருந்தாவது அதை ஆரம்பிப்போம்...
....நன்றி....

Best regards,

Friday, 16 August 2019

பானிபூரியின்_ஆரோக்கியம்

பானிபூரியின்_ஆரோக்கியம்

நேற்று இரவு வீட்டில் பாணி பூரி வேண்டுமென குழந்தைகள் நச்சரிக்க, நானும் குடத்தில் வைத்து விற்கும் வட இந்திய வாலிபரிடம் வாங்கி சென்றேன்.

ஐயமிட்டு உன் எனும் அவ்வை மொழியில் எதையும் சோதிக்காமல் உண்பதில்லை.

அப்போது அந்த கிழங்கு மசாலாவை கையில் எடுத்து சோதித்த பொழுது வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்.

அதன் மணத்தை சோதித்த பொது அது பழையது போலவும், அதில் இருந்து #முட்டைமற்றும்புகையிலை வாசனையும் வந்தது.

கிழங்கு கெட்டுப்போய் உள்ளதை மறைக்க முட்டையையும் புகையிலை சாற்றையும் சேர்த்திருக்கின்றான். நாய்க்கு போட்டேன். அது கூட அதை சாப்பிடவில்லை. இந்த #மசாலா_பாணி எனும் #ரசத்தில் உள்ள புதினா மற்றும் புளியில் கெட்டுப்போன உணவின் மனமும் சுவையும் மாறிவிடுகின்றன.

முக்கால் வாசி பேர் உணவில் சுவைக்கு தரும் முக்கியத்துவத்தை தரத்திற்கு தருவதில்லை.

இந்த பானிபூரியை சாப்பிட்டால் வயிற்றில் வலி வருவது மட்டுமில்லாமல், புகையிலை இன்ன பிற போதையை தூண்டும் வஸ்துக்களின் விளைவுகளையும் சந்திக்க வேண்டும். இதை சாப்பிட்ட குழந்தைகளுக்கு மறுநாள் பேதி ஆகும் போது, மருத்துவமனைக்கு செல்லும் பரபரப்பில் நமக்கு #பானி_பூரியின் நினைவு மனதிற்கு வருவதே இல்லை.

உணவு நுகர்வோர் தர கட்டுப்பாட்டு நிறுவனமான FSSAI இதை கண்டுகொள்வதுமில்லை.

சாலை ஓர வியாபாரிகளுக்கு முக்கியமாக வட இந்திய பாணி பூரி விற்பனையாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம் வேரு யாருக்கும் இல்லை. தமிழக சுகாதாரத்துறை இவர்களை கண்டு கொள்வதேயில்லை என்பது வியப்பும், ஐயமும் ஏற்படுகிறது.

இவர்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது.

அவர்களின் உடையில் இருக்கும் அழுக்கு, அவர்கள் வாயில் உள்ள புகையிலை, அவர்கள் தட்டை துடைக்கும் துணி, அவர்கள் வைத்திருக்கும் குடம், இவற்றில் உள்ள சுகாதார ஓட்டைகளை அடைத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் இதர நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கழிவறைகளின் சுத்தம் மட்டும் சுத்தமான இந்தியாவை உருவாக்காது. நடமாடும் கழிவறைகளாக உள்ள அழுக்கு மண்டிய வட இந்தியர்களையும் அவர்களின் பாணி பூரியையும் அறவே ஒழித்து சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த அழுக்கின் சம்பாதிப்பு மட்டும் அவனுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 2000 முதல் 3000 வரை.

சுவையை வைத்து ஏமாற்றி நோயை அளிக்கும் அவன் உணவில் இருந்து விடுதலை பெறுவோம்.

இந்த செய்தி சுகாதார இயக்குனரகம் செல்லும் வரை பகிர்வோம்...!

படித்ததில் பிடித்தது ஆகையால் பதிந்துள்ளேன்..!

Best regards,

Tuesday, 13 August 2019

எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்

எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்
சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் கையில் அணிந்திருக்கும் பல வண்ணக் கயிறுகளை அகற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.
இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், ``2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில மாணவர்களின் கையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள், அதுகுறித்து விசாரித்துள்ளனர்.
`பள்ளியில் விளையாடும்போது டீம் பிரிப்பதற்காக மாணவர்களைத் தேர்வு செய்வோம். அப்போது, எங்கள் சமூக மாணவனை அடையாளம் காண்பதற்காகக் கையில் கயிறு கட்டியுள்ளோம். இந்த அடையாளத்தை வைத்து எங்கள் சமூகத்தவர்கள் மட்டுமே ஒரு டீமாக விளையாடுவோம்’ எனப் பதில் வந்துள்ளது. ஒருசில இடங்களில் ஒரே சாதி மாணவர்கள், ஒரே டிசைன் மோதிரம், ரப்பர் பேன்ட் அணிந்துகொள்வது, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது எனச் செயல்படுவதையும் பார்த்துள்ளனர்.
திடுக்கிட்டுப் போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இப்பழக்கத்தை உடனடியாகத் தடைசெய்யுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனடிப்படையில்தான் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக, கையில் பல வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் இதுபோன்ற கயிறு கட்டும் பழக்கம் உள்ளது என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களைக் கேட்டுள்ளோம். சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை
பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஜூலை 31-ம் தேதி அளிக்கப்பட்ட இச்சுற்றறிக்கைக்கு, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாகப் பதில் அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒருசில அரசுப் பள்ளிகளில் சாதிய அடையாளக் கயிறுகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் தடைவிதிக்கும் பட்சத்தில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்து வந்தது. தற்போது பள்ளிக் கல்வித்துறையே சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான கயிறுகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

Best regards,

Saturday, 10 August 2019

*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*

*தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு*
********
 🌷தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ  என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
 *_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /*
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*🌷

படித்து கண் கலங்கிய வரிகள்...
அன்பு நெஞ்சங்களே...
தாய் தந்தையரை பரிதவிக்க செய்து விடாதீர்கள்..
Best regards,

Friday, 9 August 2019

காஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ ?

காஷ்மீரைப் போல் கட்சத் தீவும் மீட்கப்படுமா? இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னென்னெ ?காஷ்மீர் – வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டுள்ளதா? அரங்கேற்றப்பட்டுள்ளதா என விவாதம் நடைபெற்று வரும் வேளையில்காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டது வரலாற்றுப் பிழை சரிசெய்யப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான ஒப்பந்தம் (Instrument of Accession)
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காஷ்மீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இஸ்லாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய காஷ்மீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.


1947 இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார். ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காஷ்மீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாகிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

கச்சத்தீவு வரலாறு

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரினியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.

கட்சத்தீவு தாரை வார்ப்பு

1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லக்கூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது. இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல்(Historic Waters) எல்லையும் சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26,28 ஜூன் 1974 கையெழுத்தானது.

காஷ்மீர்-கச்சத்தீவு ஒற்றுமைகள்

இரண்டு பகுதிகளுமே ஒப்பந்தத்தால் ஆனவை. இரண்டையுமே காங்கிரஸ் அரசே செய்துள்ளது. காஷ்மீரை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைத்தது. அதேபோல் கச்சத்தீவை ஒப்பந்தத்தின் மூலம் தாரை வார்த்தது.
ஆனால் காஷ்மீர் நாடாளுமன்ற ஒப்புதலுடன், அரசமைப்புச் சட்ட வடிவம் பெற்று இணைந்தது. கச்சத்தீவோ எந்த நாடாளுமன்ற ஒப்புதலுமின்றி தாரை வார்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர் வரலாற்றுப் பிழை என்றால், முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத்தீவு தாரைவார்ப்பும் வரலாற்று மற்றும் சட்டப் பிழை.

Best regards,

Wednesday, 7 August 2019

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும்..

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும்..

ஏரிக்கரைகளில் கார்ப்ரேட் வியாபாரிகள் ரிச்சர்ட்களை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்..

காஷ்மீர் ஆப்பிள் மரப்பணுமாற்றுக்கு  ஆளாகும் ..

பண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர். மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழந்கதையை பேசகூடாது
..
உண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..

பெரியார் சொல்கிறார்.

 கஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் ..
விடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி ..
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.

இதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் .இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது.
பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்என்று அழைக்கப்படுகிறது.. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி நிலம் இந்திய கட்டுபாட்டுக்கள் வந்த போது மன்னர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார் .. சிறப்பு பிரிவின் படி கஷ்மீரில் கஷ்மீரிகளை தவிர (பண்டிட் இஸ்லாமியர்கள்) யாரும் நிலம் வாங்க அனுமதியில்லை எந்தவொரு சட்டமும் கஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு பிறகே நடப்பாக்கவேண்டும் ..தனி கொடி தனி சின்னம் ..
இவையெல்லாம் உள்ளடங்கிய சிறப்பு பிரிவை தான் இன்று ரத்து செய்து பிற மாநில யூனியனை போல கஷ்மீருக்கும் பொருந்தும்...
..
கஷ்மீரை போல நாகலாந்தில் 371A

அஸ்ஸாமில் 371B

மணிப்பூரில் 371C

சிக்கிமில் 371F

மிசோராம் 371 G பிரிவுகள் உண்டு.

நாகலாந்தில் மணிப்பூரில் அருணாச்சலத்தில் வெளி மாநிலத்தவர் நுழைய  அனுமதி வேண்டும். இதிலெல்லாம் கைவைக்காத பாஜக அரசு கஷ்மீரை மட்டும் குறிவைப்பதின் பின்னணியில் மிக பெரிய வியாபார சக்தி இருக்கிறது. மிக சிறந்த சுற்றுலாத்தளம் என்பதும் கவனத்தில் கொண்டால் பிடிகிட்டும்.
..
No debate, no discussion, no dissent, and the Constitution is changed..
விவாதமின்றி மக்களிடம் கருத்துகேட்காமல் நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதிக்காமல்.. கஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுகாவலில் வைத்து விட்டு அவசரகதியில் சிறப்பு பிரிவை ரத்து செய்து சர்வாதிகார சூழலை உருவாக்கியிருக்கிறது .. கஷ்மீரிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக காங்கிரஸ் உட்பட மாநில கட்சிகள் என வாக்களித்து தங்களை இந்தியாவில் ஒரு அங்கமாகதான் நினைக்கிறார்கள்  ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்களை உள்ளே அனுமதிக்க வேண்டி .. கஷ்மீர் நிலத்தை கூறு போடவே அன்றி இதனால் அம்மக்களுக்கு பலனில்லை ..
..
இன்று திருச்சி சிவா பேசியதை போல அரசியல் அமைப்பிற்கு எதிரானது. தவறான முன்னுதாரணம்
சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி இந்த வழக்கு நகர்த்தபடலாம் இன்றைக்கு ஆதரிக்கிறவர்கள் உண்மையில் தங்கள் மாநில மக்களுக்கு எதிரானவர்கள் ப.சிதம்பரம் கூறியதைப்போல நாளை எல்லா மாநிலங்களுக்கு இது நடக்கும் .. அதிகபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுர பலத்தோடு இருப்பதால் எதை வேண்டுமானும் செய்யலாம் நடத்தலாம் என்ற சர்வாதிகார போக்கு வீழ்ச்சியிலேயே முடியும் .. உலகில் பலவேறு நாடுகளின் சரித்திரங்கள் நாம் காண்கிறோம் அடக்குமுறையும் தான்தோன்றிதனமும் .. திணிப்பும்
ஒற்றை கொள்கை கோட்பாடும் பிரிவினையில் தான் முடிவுற்றிருக்கிறது ..

இனியும் இதுபோன்று தொடர்ந்தால் united India .. ஒருங்கிணைந்த இந்தியா சிதறுண்டு போகுமென்ற இன்றைய வைகோவின் பேச்சு மிகப்பெரிய உண்மை.
..
ஏரிக்கரையின் அழுகுரல்..
..
ஆலஞ்சியார்

Best regards,

Tuesday, 6 August 2019

சட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,

சட்டப்பிரிவு 370 காஷ்மீரில் உள்ளதைப் போன்றே,

Article 371A (Nagaland)
Article 371B (Assam)
Article 371C (Manipur)
Article 371F (Sikkim)
Article 371G (Mizoram)
Himachal Pradesh too follows similar rules.

இத்தனை சட்டப்பிரிவுகள் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மிசோரம்,
இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இருக்கின்றன.. வெளிமாநிலத்தவர் சொத்துக்களை வாங்க முடியாது..
இதைவிட நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம்
போன்ற மாநிலங்களுக்கு
பிற மாநில ஆட்கள்  செல்வதற்கு அனுமதி வாங்க வேண்டும்,
விசா போன்று.
ஆனால் காஷ்மீரில் அதுபோன்ற நிலை இல்லை..

காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், அங்குள்ள சட்டப் பிரிவு மட்டும் சங்கிகளின் கண்களை உறுத்துகிறது..

அதே நேரத்தில்,
பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமில்லாமல், மன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ்
தனி நாடாக விளங்கிய ஜம்மு & காஷ்மீர் பகுதியை, இந்தியாவுடன் 1947 க்கு பின் இணைக்க முன்வந்தபோது, அம்மக்களுக்கு அப்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 & 35A அரசியல் சாசன உரிமைகளை நீக்க முயல்வது
தவறான ஒன்று..
அப்படி செய்தால், காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கை செல்லாமல் போகவும் வாய்ப்புண்டு.
உச்சநீதிமன்றமும் ஏற்கனவே இந்த சட்ட பிரிவை நீக்கமுடியாது என தீர்ப்பு அளித்துள்ளது.
(The Supreme Court on Apr 4, 2018, said Article 370 of the Constitution, conferring special status on Jammu and Kashmir and limiting the Central government's power to make laws for the state, had acquired permanent status through years of existence, making its abrogation impossible.)

இப்படி நடந்தால்,
காஷ்மீர் விவகாரம் மீண்டும்
ஐநா சபைவரை செல்ல வாய்ப்புண்டு.. 1947 இல் காஷ்மீர் விவகாரம்
ஐநா சபைக்கு முதன்முதலாக சென்றபோது,
இந்தியா & பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி, ஐநா மேற்பார்வையில் அம்மக்களிடம்,
1. இந்தியாவுடன் இணைவதா
2. பாகிஸ்தானுடன் இணைவதா
3. யாருடனும் இணையாமல் தனி நாடாக இருப்பதா, என்ற மூன்று வாய்ப்புகளை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்ய வேண்டும் என ஐநா சபை உத்தரவிட்டது.. ஆனால், அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை..

சட்டப்பிரிவு 35A, 
அம்மாநில குடிமக்கள் அல்லாதவர்கள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் நிலம் போன்றவற்றை வாங்குவதை தடைசெய்கிறது.
இந்த பிரிவை நீக்குவது, பெருமுதலாளிகளாக உள்ள
மார்வாடி & குஜராத்திகள் பெருமளவில் அங்கே நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கவே வழிசெய்யும். அம்மாநில வளங்களை
#அதானிஅம்பானிஜிண்டால்_வேதாந்தா போன்ற பெருமுதலாளிகள் சூறையாட வழிசெய்யும்.
எப்படி தமிழ் நாடு போன்ற
மற்ற மாநிலங்களின் சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எல்லா ஊர்களிலும் மார்வாடி & வட மாநில மக்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரோ, வீடுகள், கடை வணிக வளாகங்கள், விவசாய & தொழிற்சாலை இடங்கள் என வாங்கி குவிக்கின்றனரோ,
அப்படியான நிலை ஜம்மு & காஷ்மீரிலும் உருவாகலாம்..
(தமிழ் நாடு போன்ற பிற மாநில மக்களும் மற்ற மாநிலங்களில் வீடுகள் வாங்குகிறார்கள்,
ஆனால் அவை பெரும்பாலும் அம்மாநில தலைநகரங்களில் மட்டுமே,
அதுவும் மிஞ்சிப்போனால் வேலைநிமித்தம் குடியிருக்க 2BHK பிளாட்டுகள்..
மார்வாடி சேட்டுகளை போல குக்கிராமம் வரை சொத்துக்களை வாங்கி குவிப்பதில்லை)...

Best regards,

Monday, 5 August 2019

முத்தலாக் - ஒரு சிறு விளக்கம்

முத்தலாக் - ஒரு சிறு விளக்கம்

"தலாக்" என்ற
அரபுச்சொல்லுக்கு,
"விவாகரத்து" என்று பொருள்.
"முத்தலாக்" என்றால்,
மூன்று முறை "விவாகரத்து" செய்வது.

இஸ்லாமிய மார்க்கத்தில்
சட்டமாக உள்ள "இந்த விவாக ரத்து" முறை, பெண்ணுரிமையை பேணும்,
உலகளாவிய சட்டங்களில் உயர்வானது...

இஸ்லாமியர் ஒருவருக்கு,
தன் மனைவியின் மீது அதிருப்தி ஏற்பட்டு
அவரை விவாகரத்து செய்து விட
முடிவெடுத்தால்,
தன் மனைவியிடம்,

"உங்களுடனான என் விவாக பந்தத்தை,
இன்றோடு ரத்து செய்கிறேன்"
என்று தெரியப்படுத்த வேண்டும்.

(உடனே அந்த விவாகம் ரத்தாகாது)

அதன் பிறகு தன் மனைவி
இந்த விசயத்தைப்பற்றி நன்கு யோசித்து
முடிவெடுக்க ஒரு குறிப்பிட்ட
கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

(அந்த அவகாச காலத்தில்,
இரண்டு குடும்ப பெரியவர்களும்,
இதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை,
கணவன், மனைவி இருவருக்கும்
எடுத்துச்சொல்லி,
விவாகம் ரத்தாவதை தடுக்க
எல்லா வித முயற்சிகளும்
எடுக்க வேண்டும்...)

அந்த அவகாசத்தில்,
கணவனும், மனைவியும்
தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை உணர்ந்து திருத்திக்கொண்டால், எந்தப்பிரச்சினையும் இல்லாமல்
ஒற்றுமையாக சேர்ந்து வாழலாம்...

கால அவகாசத்திற்குப்பிறகும்,
இருவருக்குள்ளும் கருத்து ஒற்றுமை
ஏற்படவில்லையென்றால்,

இரண்டாவது முறையாக,
கணவன், தன் மனைவியிடம்,

"உங்களுடனான விவாக பந்தத்தை
இன்றோடு ரத்து செய்கிறேன்"
என்று தெரியப்படுத்த வேண்டும்...

(இப்பவும் அந்த விவாகம் ரத்தாகாது)

திரும்பவும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு,

(திரும்பவும் இரு குடும்பத்தாரும்
இருவருக்குள்ளும் சமாதானத்திற்கான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.)

இரண்டு கால கட்ட முயற்சிகளுக்குப்பிறகும்,
இருவருக்குள்ளும், அல்லது
யாராவது ஒருவருக்கு
சேர்ந்து வாழ்வதில் திருப்தியில்லையென்றால்,

மூன்றாவது முறையாக,

கணவன், தன் மனைவியிடம்,

"உங்களுடனான விவாக பந்தத்தை
இன்றோடு ரத்து செய்கிறேன்"
என்று தெரியப்படுத்த வேண்டும்...

இப்பொழுது,
இவர்களுக்குள் விவாக பந்தத்தை
ஏற்படுத்த முன் நின்ற,
அந்த வட்டார, மார்க்க பெரியோர்கள்,
இந்த விவாக ரத்தை உறுதி செய்ய வேண்டும்...

இது தான் "முத்தலாக்" என்பது.

இது ஆண்களுக்கான நடைமுறை.

பெண்களுக்கு,
இன்னும் சிறப்புச்சலுகையாக,
தன் கணவனோடு சேர்ந்து வாழ்வது
பிடிக்கவில்லையென்றால்,
காலக்கெடுவெல்லாம் கொடுத்து,
காத்துக்கொண்டிருக்காமல்,

"குலா" என்ற பதத்தை பயன்படுத்தி,
உடனே கணவனை "விவாக ரத்து"
பண்ணி விடலாம்...

இஸ்லாம், பெண்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும்
எவ்வளவு மதிப்பளிக்கிறது, பாருங்கள்...

இது தான், இஸ்லாமிய மார்க்கம்
பின்பற்றும், "ஷரீயத் சட்டம்".
இந்த சட்டத்தை,
இந்திய அரசியல் சாசன சட்டம்
அங்கீகரித்துருக்கிறது.

(பொது சிவில் சட்டப்படி,
கணவனோ, மனைவியோ
விவாக ரத்து செய்து கொள்வதில்,
வக்கீல், நீதி மன்றம் என்று
வருடக்கணக்காக அலைந்து திரிந்து,
நீதி மன்றத்தில், கேள்விகளால்
துகிலுரியப்பட்டு, கேவலப்பட்டு,
பணம் காசை இழந்து, நிம்மதி குலைந்து,
இன்னும் என்னென்னவோ
நடைமுறை சிக்கல்களையெல்லாம்
தாண்டி, வயதும் வாலிபமும் போன பின் தான், விவாக ரத்து பெற முடியும்...
அதிலும், வாழ்க்கை முழுவதையும்
தொலைத்து, கிழவன் கிழவி ஆகியும்,
விவாக ரத்து பெற முடியாதவர்களும்
இருக்கிறார்கள்)

இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றியோ,
இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தைப்பற்றியோ
எவ்வித ஞானமும் இல்லாத,
ஒரு குறிப்பிட்ட மத சார்புள்ள,
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, அரசியல் சாசன சட்ட அமர்வுக்கு
கொண்டு செல்லாமலே,

"இஸ்லாமிய மக்களுக்கு எதிராக
என்ன வேண்டுமானாலும் செய்வோம்"
என்ற ஆணவப்போக்கில்,
குறுக்கு வழியில்,
"முத்தலாக் தடைச்சட்டம்"
நிறைவேற்றியிருப்பது,

இந்திய அரசியல் சாசனத்தையும்,
இந்திய இறையாண்மையையும்,
கேலிக்கூத்தாக்கியிருக்கிறது....

Best regards,

Sunday, 4 August 2019

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!

ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.

சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்!

கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:

துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!

இந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று! அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!

ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால் = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது! $1 = Rs.1.71 !

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!

இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?
percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்!

நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!
-----------------------
இந்த ஆய்வுக் கட்டுரையை
படிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...

Special Thanks to : நாணயம் விகடன்

Best regards,

Saturday, 3 August 2019

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…


Best regards,

Friday, 2 August 2019

ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள்

ஒரு வங்கிக் கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்
இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் .
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .
". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்....
இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""
கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .
மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.
இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
கொள்ளை நடந்த போதே,வங்கியின் முகாமையாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.
" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
இதுதான் சுயநலமான உலகம்!
This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.
கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .
எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .
கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.
ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது
இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்
True. Knowledge is nowadays very important than money in this world.
*நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும்,  அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!
பாவம் மக்கள்!*

Best regards,

Thursday, 1 August 2019

இடம் மாறிப் பார்ப்போம்...

இடம் மாறிப் பார்ப்போம்...

- *இறையன்பு*IAS_

ரவிந்திரநாத் தாகூர் தன்னுடைய வங்காளம் குறித்த கடிதம் ஒன்றில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்.

 ஒருநாள் தன் பணியாளர் வராமல் போனதற்கு தாகூர் மிகுந்த கோபம் அடைந்தார்.

நாள் முழுவதும், அவன் வராததால் அவன் செய்ய வேண்டிய பணிகளை அவரே மேற்கொள்ள நேர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்கு கோபம் வந்தது.

அடுத்த நாள் அவன் பணிக்கு வந்த போது "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கடுகடுத்த முகத்துடன் குரலை உயர்த்திக் கடிந்து கொண்டார்.

 அப்போது மிகவும் வருத்தத்துடன் அந்தப் பணியாள் "என் மகள் நேற்று இறந்துவிட்டாள். ஈமக்கிரியைகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் வர முடியவில்லை" என்றார்.

தாகூர் தொடர்ந்து எழுதுகிறார்.  "நம்மைச் சுற்றியும், நம்மிடமும், பணிபுரிபவர்கள்,

எத்தனை சோகங்களைச் சுமந்து கொண்டு பணி புரிகிறார்கள் ?
என்பது நமக்குத் தெரியாது" என்று.

தன் உடல் உபாதைகளையும், இதயக் கசிவுகளையும்,

 கண்களுக்குள்ளேயே காய்ந்து ஆவியாகிவிடும் கண்ணீரையும்,

 சுமந்துகொண்டு எத்தனை பேர் பணி புரிகிறார்களோ?

 எல்லோரும் நம்மைப் போலவே சௌகரியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.

 நமக்கு ஒரு துன்பம் வந்துவிட்டால் அதை தாள முடியாமல் துவண்டு போகிறோம்.

எத்தனை பேர் தன் மகளுக்கு திருமணமாகாத சோகத்துடன் பணிபுரிகிறார்ளோ,

 எத்தனை பேர் கணவனை இழந்து வருத்தத்துடன் காரியமாற்றுகிறார்களோ,

எத்தனை பேர் புத்தி சுவாதீனமின்மையால், உடல் ஊனத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை இதயத்தில் சுமந்து வருகிறார்களோ,

 எத்தனை பேர் தனக்கே இருக்கும் இரத்தக் கொதிப்பையும், இதயநோயையும், கல்லீரல் பிரச்சனையையும், நுரையீரல் தளர்ச்சியையும், வெளிப்படுத்தாமல் பணியாற்றுகிறார்களோ?
யார் கண்டது.

ஒரு வேளை நாம் அவர்களிடத்தில் இருந்திருந்தால்...

 நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

 அப்படிப்பட்ட சோகங்கள் பாரம் தாங்காமல் நாம் அப்பளம் போல நொறுங்கி விடுவோம்.

 அடுத்தவர்கள் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நாம் செய்பவற்றையே சாதனை என்றும், நாம் மட்டும் தான் கடமையிலிருந்து வழுவாதவர்கள் என்றும்,

 நம்மைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

 அது எவ்வளவு போலியானது, என்பதை நம்மிலும் சிறந்தவர்களை காணும் போதுதான் புலப்படும்.

கொஞ்சம் இடம்
 மாறிப் பார்ப்போம்
இடம் மாறி யோசிப்போம்...


Best regards,