Tuesday, 30 April 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்

அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய்

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல்

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம்

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம்

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா

(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம்

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி

(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி

பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

Monday, 29 April 2013

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது. இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள். —

Sunday, 28 April 2013

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.


6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

Saturday, 27 April 2013

உடலை எப்படி அழகா வெச்சுக்கணும் தெரியுமா?

அழகாக இருக்கிறோம் என்றால் முகம் மட்டுமல்ல, உடலை வைத்தும் தான் சொல்வார்கள். அவ்வாறு உடலை அழகாக வைத்துக் கொள்பவர்கள் தான தற்போது உலக அழகியாக வருகிறார்கள். ஏன் உலக அழகி போட்டிக்கு செல்பவர்கள் மட்டும் தான் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு சிலவற்றை செய்தால், உலக அழகி என்ன அதை விட பேரழகியாகவே ஆகலாம்.

அதிலும் உடலில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி பராமரிப்பை செய்ய வேண்டும். மேலும் சருமம் மிகவும் மென்மையாக இருக்க, சருமத்திற்கு சரியான பராமரிப்பை மேற் கொள்ள வேண்டும். ஆகவே உடலை அழகாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, நீங்களும் அழகியாக மாறுங்களேன்…

கழுத்து – முகத்தை விட கழுத்தில் தான் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படியெனில் கழுத்தின் பின்புறம், கூந்தல் அடிக்கடிப்படுவதால், அங்கு அதிகமான வியர்வை ஏற்பட்டு, அழுக்குகள் படிந்துவிடுகின்றன. ஆகவே மற்ற இடத்தை விட கழுத்திற்கு அதிகப்படியான கவனிப்பு தேவைப்படுகிறது. மேலும் எந்த ஒரு கிரீமை முகத்திற்கு பயன்படுத்தினாலும், அதை கழுத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்து, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் முகமும் கழுத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். மேலும் சருமமும் மென்மையடையும்.

கைகள் – பெண்களின் கைகள் எப்போதும் பட்டுப் போன்று இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய கைகளை எப்போதும் சரியாக பராமரிக்க வேண்டும். உடல் அழகாக பராமரிக்கும் போது, தவறாமல் கைகளையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் கைகளில் அதிகமாக வெயில் படுவதால், அவை கருப்பாக மாறிவிடும். அதுவே குளிர் காலங்களில் வறட்சியுடன் காணப்படும். எனவே எப்போது கைகளை கழுவினாலும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். இதனால் கைகள் சற்று மங்கலாக காணப்படுவதைத் தவிர்க்கலாம். அதிலும் கை மூட்டுகளில் தான் அதிகமான கருப்பு காணப்படும். ஆகவே அங்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இதனால் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம்.

பின்புறம் – வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பின்புறம் நன்கு ஈரப்பதத்துடன் காணப்படும். அதுமட்டுமல்லாமல் தினமும் குளிக்கும் போது, சிறிது மாய்ஸ்சுரைசரை தடவி குளிக்க வேண்டும். இதனால் பின்புறம் அழகாக இருக்கும்.

வயிறு – சேலைகள் கட்டும்போது கண்டிப்பாக இடுப்பு பகுதி வெளியே தெரியும். அத்தகைய இடுப்புகள் அழுக்கில்லாமல், நன்கு சுத்தமாக சற்று ஈரப்பசையுடன் காணப்படும். அதற்கு சற்று பஞ்சை நீரில் நனைத்து, வயிறு மற்றும் இடுப்பை நன்கு துடைக்க வேண்டும். பின்னர் அங்கு மாய்ஸ்சுரைசர் கிரீமை தடவி வந்தால், அந்த இடம் பார்க்க அழகாக, கண்ணை கவரும் வகையில் இருக்கும்.

கால்கள் – உடல் பராமரிப்பில் கால்களை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஏனெனில் சிறு வயதில் அடிக்கடி முட்டிப் போட்டு நடத்தல் மற்றும் இதர காரணங்களால், முழங்கால்களில் கருப்பாக இருக்கும். ஆகவே அந்த இடத்தில் ஒயிட்னிங் கிரீம் அல்லது ஏதேனும் பேக்கை போட்டு வர வேண்டும். இதனால் கருப்பாக இருப்பது மாறி, குட்டையான ஸ்கர்ட் அல்லது சாட்ஸ் போன்றவை போடும் போது, அந்த இடம் அழகாக கணப்படும். அதுமட்டுமல்லாமல், பாதங்களையும் நன்கு அடிக்கடி மசாஜ் அல்லது ஸ்கரப் செய்து வந்தால், பித்தவெடிப்புகள ஏற்படாமல் இருப்பதோடு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.

மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு நடந்தால், சருமம் மென்மையாக காணப்படுவதோடு, உடலும் அழகாக காட்சியளிக்கும்.

Friday, 26 April 2013

இந்திய நாட்டின் குடிமகனுக்கு அவனது மொழியில் குடியுரிமை சீட்டு இல்லை ! என்ன கொடுமை இது !

பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு என்பது குடியுரிமைக்கான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை அந்த ஆவணம் இந்திய குடியுரிமை பெற்றவர்களின் சொந்த மொழியில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழி நிலை. ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து ஹிந்தியர்களின் ஆட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட காலம் முதல் இந்தியாவில் அனைத்து மொழியின மக்களுக்கும் அவர்கள் மொழி மறுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. கடவுச் சீட்டு எந்த மாநிலத்தில் வழங்கப்படுகிறதோ அந்த மாநில மொழியில் தானே விவரங்களில் இருக்க வேண்டும் . மாறாக அனைத்து மாநிலங்களிலும் வழங்கப் படும் கடவுச் சீட்டுகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியல் மட்டும் தான் விவரங்களை அச்சிட்டு கொடுத்து வருகிறது இந்திய அரசு . இது எவ்வளவு பெரிய மொழித் தீண்டாமை கொள்கை .

இந்தியாவில் உள்ள பல கோடி மக்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தாய் மொழி அல்ல. அப்படி இருக்கும் போது, அவரவர் தாய் மொழியில் கடவுச் சீட்டு இல்லை என்றால் அவர்களும் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் எப்படி உணர்வார்கள்?

தமிழினப் படுகொலை செய்யும் இலங்கையில் கூட தமிழ் மக்களுக்கு புரியும் வகையில் அவர்கள் கடவுச் சீட்டில் தமிழ் மொழி உள்ளது . குடிவரவு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளது. ஐம்பது இலட்சம் தமிழ் மக்கள் இருக்கும் இலங்கையில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு உள்ளது. ஆனால் பத்து கோடி தமிழ் மக்கள் வாழும் இந்தியாவில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு இல்லை. மேலும் இந்தியாவில் கடவுச் சீட்டு மற்றும் ஏனைய குடிவரவு ஆணவங்கள் எதுவும் தமிழில் கொடுக்கப் படுவது இல்லை என்பது இந்திய அரசின் ஹிந்தி ஆதிக்க மனப்பான்மையை தான் காட்டுகிறது .

இந்த நிலையை மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிக்கும் அதிகாரமும் ஆட்சி மொழிக்கான அங்கீகாரமும் முக்கியத்துவமும் கொடுக்கப் படவேண்டும் . அதற்கு இந்தி அல்லாத வேற்று மொழியினர்கள் குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கையை உடைத்தெறிய வேண்டும் . கடவுச் சீட்டு , வருமான வரி அட்டை போன்ற முக்கிய குடியுரிமை ஆவணங்கள் அவரவர் மொழியிலேயே இருத்தல் அவசியம் . இதற்கான முன்னெடுப்புகளை மாநில அரசும் எடுக்க வேண்டும் .

பி.கு : அப்பாவி இந்திய தமிழர்களின் கவனத்திற்கு. இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது . இந்தியாவில் தமிழ் உட்பட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும். ஆனால் இந்தியை மட்டுமே இந்திய அரசு பயன்பாட்டில் வைத்துள்ளது . ஏனைய மொழிகளுக்கு எந்த வித மதிப்பும் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Thursday, 25 April 2013

*தமிழ்க் குடியரசின் வரைபடம்*


1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மை பூர்விக மண்ணே ஆகும்.

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த இனத்தினருக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன,

வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள், தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள், திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள்,சொலவடைகள்,செவிவழிக் கதைகள், பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள், உடற்கூறு,தோற்றம், உறவுமுறைகள்,சமூகக்கட்டமைப்பு, தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு.
தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்;
கனிசமான எண்ணிக்கை, சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமைகொண்ட வேற்றின மக்கள்

ஈழம்;ஒரு முன்னோட்டம்;
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்;
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது,உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி.

அந்தமான்-நிகோபர் தீவுகள்;இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்;
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும்உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.

தமிழ்நாடு;தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில்
உள்ள நிலப்பகுதி ஆகும்;
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை. இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்துவருவதே ஆகும்.இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர். வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, ட்ரினாட் டொபகோ போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது. அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறுமொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது. பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்துவிடவில்லை.
தவிர,தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர் இன்றும்
தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.தவிர இது கூடிக் கொண்டே போகிறது.
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா?
முடியாதுதானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்டபோதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
வந்துள்ளனர்.இது அனைவரும் அறிந்த உண்மை.அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் சமவுரிமை பெற்று வாழ்வர் என்பது உறுதி.
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 65% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்;1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது. அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்;
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
மபொசி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை,திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது;
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்;
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்;
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன;(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக்கொணரப்பட்டவை)
எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை;
தடயங்களின் அடிப்படையில் நாம் முழுஇந்தியாவையும் கோரலாம்தான்; ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்;
அதேபோல எண்ணிக்கைபடி தமிழர் மியான்மர்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை மற்றும் பல நாடுகளில் சிலபகுதிகளில் அப்பகுதி பூர்விக குடிகளைவிட அதிகம் வாழ்கின்றனர்;
அவை தமிழரின் பூர்வீக மண் இல்லை; எனவே அவற்றை நாம் கோரவியலாது.
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறியவேண்டியது நிறைய உள்ளது;

பல நூறு வருடங்களாக வேற்றினத்தவர் தமிழர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து குடியேறியதும்; தமிழர் அவர்களை ஆதரித்ததும், பின் தமது சொந்த மண்ணிலேயே தமிழர் சிறுபான்மையினராகும் அளவுக்கு வேற்றினத்தவர் குடிபுகுந்ததையும்; வேற்றினத்தவர் ஆட்சியில் (விசயநகர மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி) இவ்வகைக் குடியேற்றம் தமிழரின் பூர்விக நிலத்தின் மூலைமுடுக்குவரை ஒரு இடம் விடாமல் புகுத்தப்பட்டதும்; தமிழரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் காலம்காலமாக தொடர்வதும்; வேற்றினத்தவர் ஆட்சியில்(நாய்க்கர் ஆட்சி) தமிழர் கூட்டம் கூட்டமாகத் தமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டிவந்ததும்(மும்பை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு);
தமிழர் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டதும்(இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற இடங்களுக்கு வெள்ளையர்களால்) ; உலகம் முழுவதும் பரவியுள்ளத்தமிழரின் பிரச்சனைகள் மற்ற பகுதித் தமிழருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதும்(ஈழப்பிரச்சனை, மலேசியத் தமிழர் பிரச்சனை, அந்தமான் நிகோபர் தமிழர் பிரச்சனை, மற்றும் உலகம் முழுவதும் இரண்டாந்தரக் குடிகளாக தமிழர் நடத்தப்படுவது); தமிழரின் தகவல் தொடர்பு ஊடகங்கள்(தொலைக்காட்சி ,நாளிதழ்) வேற்றினத்தவர் பிடியிலேயே எப்போதும் இருப்பதும்; தமிழுணர்வு எழுச்சி பெறவிடாமல் தமிழரை ஆண்டாண்டு காலமாக வேற்றினத்தவரே(தமிழகத் திராவிட , ஈழத்தில் சிங்கள மற்றும் தீவுகளில் வங்காளிய ஆட்சி) அடிமைப்படுத்தி வருவதும்; தமிழ்மொழி ஆராய்ச்சிக்குப்(தமிழக, ஈழ நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சி) போதிய முயற்சிகள் எடுக்கப்படாததும், வெளிநாட்டினரால் வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழரின் வரலாறும் (சிந்து சமவெளி, குமரிக்கண்ட ஆராய்ச்சிகள்) ஆதாரங்களும் மறைக்கப்படுவதும் தடைவிதிக்கப்படுவதும்; தமிழரின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரீகம் காணாமல் அடிக்கப்பட்டதும்; தமிழுடன் பிற மொழி

Wednesday, 24 April 2013

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...


ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80
ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின்
மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த
ஊழலில் சில 'துளிகளை'
இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76
லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த
பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின்
ஆட்சிக் காலத்தில் நடந்த
முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான்.
ஆனால் 2001-ம்
ஆண்டிலிருந்தே இதுபோல
முறைகேடு நடந்துள்ளதாகக்
கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால்
கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத்
தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள்.
இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும்
ஆணையிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச
நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது:
'இந்தியாவில் இதுவரை நடந்த
ஊழல்களை வெட்கப்படச்
செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம்
முறைகேடு' ('The spectrum scam
has put 'all other scams to
shame!'.)
2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000
கோடி:
இவ்வளவுதான் ஊழல்
நடந்தது என்று இன்னும் கூட
அறுதியிட்டுச் சொல்ல முடியாத
அளவுக்கு தோண்டத் தோண்ட
முறைகேடுகள்
வரைமுறையற்று கொட்டிக்
கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின்
சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில்
நடந்ததுதானே என்று விட்டுவிட
முடியாது. பொதுமக்களின் பணம்
சம்பந்தப்பட்டது.
இவ்வ
ளவையும் செய்துவிட்டு, சிறையில்
செல்போன், சாட்டிலைட் டிவி,
பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப்,
ஷட்டில்காக் விளையாட்டு என
ராஜபோகத்தில் திளைத்துக்
கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக்
கொள்பவர்களை செக்குமாடாய்
அடித்தே கொல்கிறார்கள்!
3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல்
- மதிப்பைக் கணிக்க முடியாத
அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால்,
வீட்டுப் பத்திரம்
தொடங்கி அனைத்தையுமே அடமானமாக
பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித்
துறை, பெரும் பணக்காரர்களின்
டுபாக்கூர்
நிறுவனங்களுக்கு பல்லாயிரம்
கோடி ரூபாயை கடனாக
வாரி வழங்கியுள்ளதை சிபிஐ
கண்டுபிடித்தது. காரணம்... இந்தக்
கடன்களில் குறித்த சதவீதம்
சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு லஞ்சமாகக்
கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள்
காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன்
பிரிவு பல ஆயிரம்
கோடிகளை வாரி வாரி பெரும்
தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன.
இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம்
கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய
அடிப்படை என்பதும் வெட்ட
வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில்
கைமாறிய லஞ்சத்
தொகை எவ்வளவு என்பதை இன்னும்
கூட மத்திய அரசால் சொல்ல
முடியவில்லை.
இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம்
கோடி என்கிறது சிபிஐ.
4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப்
பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத்
மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான்.
ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம்
ஆண்டில் இது மாபெரும் தொகை.
இன்றைய
ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச்
சொல்லலாம். அதிகப்படியான
விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள்
விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம்
கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.
2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப்
போய்விட்டாலும், அந்த முறைகேடுகள்
தொடர்பான வழக்குகள் இன்னும்
முடியவில்லை.
5. ஹஸன் அலிகான் (ரூ 80,000
கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும்
வரி ஏய்ப்பின் மூலம்
மட்டுமே ரூ 39120
கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த
ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த
ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில்
வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத
வகையில் இதுதவிர ரூ 40000
கோடிக்கு செட்டில்
செய்யுமாறு வருமான
வரித்துறை இவருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள
கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத்
கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய
விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக்
கண்டறியும் முயற்சியும். சுவிஸ்
வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள்
மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய
தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம்
கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது.
இது நன்கு தெரிய வந்துள்ள தொகை.
இன்னும் வெளியில் தெரியாத
தொகை எத்தனை லட்சம்
கோடி என்று தெரியவில்லை.
7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில்
முதலீடு என்ற பெயரில்
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம்
ரூ 8000 கோடிக்கு மேல்
வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல்
பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத்
தெரியவில்லை.
8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)
ஹர்ஷத் மேத்தான் இந்த
கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச்
சந்தையை ஆட்டிப் படைத்து பணம்
குவித்தார். போலிப் பெயர்களில்
பங்குகளை வாங்கி, செயற்கையான
டிமாண்டை உருவாக்கி,
விலையை உயர
வைத்து பங்குகளை விற்றார் இந்த
கேத்தன். இதில் அடிக்கப்பட்ட
கொள்ளை ரூ 1000 கோடி.
9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல்
(ரூ 1300 கோடி)
உரம் மற்றும்
சர்க்கரை இறக்குமதி மூலம்
மட்டுமே ரூ 2300 கோடி ஊழல்
நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும்
மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300
கோடி, யூரியா ஊழல் ரூ 133
கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல்
ரூ 950 கோடி (லாலு -
ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).
10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல்
(ரூ 18,978 கோடி)
பிரான்ஸிடமிருந்து 6
நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில்
1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல்
இது. இதே காலகட்டத்தில்
ராணுவத்தில் மேலும் ரூ 5000
கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில
மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார்
வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி,
சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500
கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட
ஊழல் ரூ 374 கோடி... என ஊழல்
மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

>>லலித்மோடி,சுரேஸ் கல்மாடி,ஆதர்ஸ் வீடு,சவப்பெட்டி,அலுவாலியா கக்கூஸ் செலவு இன்னும் தொடரும்.....
ஆனா பாருங்க 6 சிலிண்டர்கு மேல பயன்படுத்துரவன்லாம் பணக்காராணாம்..
டீசல் அதிகமா பணக்காராங்க தான் பயன்ப்டுத்துராங்களாம்,நாம தான் ஆடிலையும் பென்சுலையும் போறம்ல....
டீசல் கார்களுக்கு அதிக வரிய போட்டு விற்பனைய தடுக்க துப்பில்ல,அத விட்டு போட்டு ரேட்ட ஏத்துராங்க கையாலாதபயளுக

Tuesday, 23 April 2013

பளபளப்பான முகத்திற்கு ஏற்ற ஒயின் ஃபேஷியல்!!!

இதுவரை ஆல்கஹாலை குடிக்க மட்டும் தான் செய்திருப்போம். அதிவும் ஒயின் பழரசங்களால் ஆனதால், உடலுக்கு மிகவும் நல்லது. இத்தகைய ஆல்கஹாலில் ஒன்றான வைத்து ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். மேலும் இந்த ஒயினை தலைவலி அதிகம் இருக்கும் போது அருந்தினால், உடனடியாக தலைவலி நீங்கிவிடும். ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளன.

மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு ஃபேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்ப்போமா!!!

* இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

* 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.

* ரெட் ஒயினுடன், கற்றாழை ஜெல்லை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். ஏனெனில் ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, அந்த கலவை சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. மேலும் இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும், சருமமும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

* போர்ட் ஒயினுடன் 2-3 டீஸ்பூன் தேனை ஊற்றி. கலந்து, சருமத்திற்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தை பொலிவாக்குவதோடு, சரும செல்களை சரிசெய்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

Monday, 22 April 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!


சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? ன்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.

தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.


Sunday, 21 April 2013

MEDICINE TIPS

அம்மைநோயைத் தடுக்க!


அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும், மேலும் பல நோய்கள் வரும் முன் தடுக்கவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அம்மைநோயைத் தடுக்க:

ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அம்மைநோய் வேகத்தை தணிக்க:

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும். தினம் சந்தனச் சோப்பு போடவும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

நரம்புத்தளர்ச்சிக்கு அருகம் புல்:

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப் புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆருடம் கூறுகிறது.

உஷ்ணத்தைத் தணிக்கும் அகத்திக்கீரை:

அகத்திக்கீரை உள்ளே இருக்கும் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வுப் பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை தின்றால் விரைவில் குணமாகும்.

அஜீரணசக்திக்கு:

சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி சேர்த்து தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அரைக்கருப்பன் சரியாக:

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அதை நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும். பப்பாளிப்பழச்சாறும் பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்துப் பூசினாலும் குணமாகிவிடும்.

ஆசனவாசல் குடைச்சலுக்கு:

இப்படியான அரிப்புக்குக் காரணம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்நோய் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும். அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும். கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.

ஆரோக்கியத்திற்கு:

தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்­ரும், கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

ஆண்மை வலுப்பெற:

அரசம்பழத்தை பாலில்போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும். தளர்ச்சி நீங்கும். ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரை சேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும். இலுப்பைப்பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

Saturday, 20 April 2013

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்....

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்


பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Friday, 19 April 2013

வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை

வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை

வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

"அகத்தியர் வர்ம திறவுகோல்"

"அகத்தியர் வர்ம கண்டி"

"அகத்தியர் ஊசி முறை வர்மம்"

"அகத்தியர் வசி வர்மம்"

"அகத்தியர் வர்ம கண்ணாடி"

"அகத்தியர் வர்ம வரிசை"

"அகத்தியர் மெய் தீண்டா கலை"

ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்

நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்

முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்

கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்

கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்

கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள் !

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்