Monday, 31 October 2011

கம்ப்யூட்டர் கிராஷ்

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்
Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.


வெற்றி நமதே!-ஆக். 31 கந்தசஷ்டி!

முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், “ஸுப்ரஹ்மண்ய’ என்பர். “ஸு’ என்றால் “உயர்ந்த’, “ப்ரஹ்மண்யம்’ என்றால், “இறைவன் அல்லது சத்திய சொரூபம்’ என்று பொருள். “உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்’ என்று பொருள் கொள்ளலாம்.
ஆம்… மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக் கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை நினைத்தும் பெருமைப்படுகிறான், சந்தோஷம் கொள்கிறான், கவலைப்படுகிறான். இப்படி, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வாழ்கிறான். இதைத்தான் ஆன்மிகம், “அஞ்ஞானம்’ என்கிறது. ஆனால், சத்திய சொரூபமான இறைவனை மறந்து விடுகிறான். அவன் தான் எல்லாவற்றுக்கும் அதிகாரி, இங்கே நாம் பிறக்கக் காரணமான அவனே, நம் இறப்புக்கும் காரணமாக இருக்கிறான். எனவே, எங்கிருந்து வந்தோமோ, அங்கே செல்வதற்கும், அவனுடைய உலகத்தில் பசி, தூக்கம், துக்கம் எதுவுமே இல்லாமல் நித்யானந்த வாழ்வு வாழ்வதற்கும் உரிய வழி வகைகள் பற்றி சிந்திப்பதே இல்லை. தற்காலிக வாழ்வுக்காக பல பாவங்களைச் செய்கிறான். இதனால், இறைவனின் கோபத்துக்கு ஆளாகி, பல பிறவிகளை எடுக்கிறான்.
எனவே தான், மகான்கள் பிறப்பற்ற நிலை வேண்டும் என்பதற்காக, பல பயிற்சிகளை மேற்கொண்ட னர். பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளில் சரணடையும்படி கூறினர்.
கஷ்யபர் என்ற முனிவருக்கு, இரண்டு மனைவியர். அவர்களுக்கு தேவ பிள்ளைகளும், அசுரப் பிள்ளைகளும் பிறந்தனர். தாய் வேறு என்பதால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அசுரப் பிள்ளைகளின் தலைவனான சூரபத்மன், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவபெருமானிடம், 108 யுகங்கள் வாழ, அவன் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பல கொடுமைகள் செய்தான்.
எனவே, சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். தன் வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய சூரபத்மனை அழிக்க, சிவன் முருகப் பெருமானையும், அவருக்கு உதவியாக நவவீரர்களையும் பிறப்பித்தார். நவவீரர்களின் தலைவனாக வீரபாகுவை நியமித்தார் முருகன். அவர்கள் துணையுடன், முருகப் பெருமான் சூரபத்மன் முன் வந்து நின்றார்.
முருகனைப் பார்த்ததுமே சூரபத்மனுக்கு ஞானம் வந்து விட்டது. நல்லவர் தரிசனம் நன்மையையே தரும் என்பதை இதன் மூலம் உலகத்துக்கு உணர்த்தினார். அவனுக்கு, பல நல்லுரைகளை எடுத்துரைத்தார் முருகர். பின், தன் மாயையால் அவற்றை மறக்கடித்து அவனை இருகூறாகப் பிளந்தார். ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி, தன் வாகனமாகவும், இன்னொரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும் ஏற்றார். இதன்மூலம் சூரனைக் கொல்லாமல் அவனை ஆட்கொண்டார்.
விநாயகர், கஜமுகாசுரனைக் கொன்றார். துர்காதேவி, மகிஷாசுரனைக் கொன்றாள். ராமன், ராவணனைக் கொன்றார். கண்ணன், கம்சனைக் கொன்றார். சிவன், திரிபுர அசுரர்களைக் கொன்றார். இப்படி தெய்வங்களால் அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறைப் படித்திருக்கிறோம். முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்டார். அவனை தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றதில் இருந்து அவர் எதிரிக்கும் அருள் செய்யும் கருணைக் கடலானார். அதனால் தான், சுப்பிரமணியர் என்ற பெயரில் உயர்ந்த தெய்வமாக அவரை வணங்குகிறோம்.
ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், அம்மாத சஷ்டி சிறப்புக்குரியதாயிற்று. இந்நாளில், குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி சஷ்டியில் துவங்கும் விரதத்தை தொடர்ந்து வரும் சஷ்டி திதிகளில் கடைபிடிப்பவர்கள், முருகப் பெருமானுடன் ஐக்கியமாகும் பாக்கியத்தைப் பெறுவர்.”ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே…’ என தினமும் ஒருமுறை சொல்லி, முருகனைப் பிரார்த்திப்பவர்கள், ஒரு கோடி முறை முருகனை வணங்கிய பாக்கியம் பெறுவர். “நமஸ்தே, போற்றி, ஜெய…’ என்ற பிரார்த்தனை வார்த்தைகளை, ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தினால், அது, கோடி முறை பயன்படுத்தியதற்கு சமம்.
வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெற்றியல்ல. பிறப்பற்ற வாழ்வைப் பெறுவதே நிஜமான வெற்றி. அந்த வெற்றி நமதாக வேண்டுமானால், சுப்பிரமணியரின் திருவடியில் சரணடைவோம்.27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்

 
அசுவனி-தனவந்தன்,நீதிமான்,

பரணி-கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,

கிருத்திகை-கல்விமான், அசடு,

ரோகினி- புலமைமிக்கவன்,செல்வந்தன்

மிருகசீரிஷம்-சத்தியவான், தனவான்,

திருவாதிரை-ஐனவசியன், சுயநலவாதி,

புனைபூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,

பூசம்-பக்திமான், சுகவாசி,

ஆயில்யம்-முன்கோபி, ஸ்திரீதுவேசி,

மகம்-பலவான், ஸ்திரீதுவேசியன்,

பூரம்-நீதிமான், ஆஸ்திகன்,

உத்திரம்-யோகவான், சுகபோகி,

அஸ்தம்-ஆஸ்திகன், அறிஞன்,

சித்தரை-காரியவாதி, ஏழை,

சுவாதி-பக்திமான், கலகக்காரன்,

விசாகம்-கல்விமான், சாமர்த்தியன்,

பூராடம்-செல்வந்தன், உபகார்,

உத்திராடம்-திறமைசாலி, பலவான்,

திருவோணம்-பொதுநலவாதி, தருமவான்,

அவிட்டம்-கம்பீரமானவன், அவசரக்காரன்,

சதயம்-நல்லவன், பிடிவாதக்காரன்,

பூரட்டாதி-கலைஞன், கீர்த்தியுடையவன்,

உத்திரட்டாதி,-செல்வந்தன், திறமைசாலி,

ரேவதி-இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்..மூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா? : சீமான் கேள்வி


ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.

3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.

அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழ் இணையங்கள்

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்
அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.
பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.
பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.