Tuesday, 28 May 2013

மூடன் ராஜீவ் காந்தி மரணம்

1991ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அதிகாலையில் வழமைக்கு மாறாக நான் அடைத்து வைக்கப்ட்டிருந்த மதுரை சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்ட்டிருந்தது. இது குறித்து காவல் நின்ற அதிகாரியிடம் கேட்ட போது ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டார்கள் என்றார். இதைக் கேட்ட நான் சந்தோச மிகுதியில் அந்த அதிகாரிக்கு கைகுலுக்கிவிட்டேன். இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத் துறையினருக்கு சென்றுவிட்டது. அதன் பலன் அடுத்தநாள் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் நான் விசாரிக்கப்பட்டேன்.

அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவத்தால் நான் மூன்று தடவை துன்புறுத்தப்பட்டேன். எனது ஊரில் ஒரு ஆசிரியரின் மனைவி கற்பழிக்கப்ட்டார். எனது அயல் கிராமத்தில் இருந்த ஒரு ஜயர் பெண் கற்பழிக்கப்பட்டது மட்டுமன்றி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டபோது காரினுள் வைத்து தீயிட்டு கொல்லப்பட்டார். அதுமட்டுமன்றி எமது ஊரில் அனைவருக்கும் தெரிந்த ஒரு 70 வயதான பையித்தியக்காரக் கிழவiனை சுட்டுக் கொன்றுவிட்டு மூத்த விடுதலைப் புலி உறுப்பினர் கொல்லப்பட்டதாக கூறினார்கள். இவ்வாறு என் கண் முன்னே நிகழ்ந்த இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான ஒருவர் கொல்லப்படும்போது நான் மகிழ்வு கொள்ளாமல் இருக்கமுடியுமா என அவ் அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

ஜம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் அழிக்கப்ட்டன. பல பெண்கள் கற்பழிக்கப்ட்டார்கள். 80வயது கிழவியைக்கூட கற்பழித்த பெருமை இந்திய அமைதிப்படையையே சேரும். ராஜீவ் காந்தியை கொன்ற தானு கூட இந்திய ராணவத்தால் கற்பழிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர். ஆனால் அது எந்தளவுதூரம் உண்மை என்று அறிய முடியவில்லை. எனினும் இந்த கொலை ஒட்டு மொத்த பாதிப்படைந்த அப்பாவி மக்களின் வெளிப்பாடே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால்தான் ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்றதும் யாழ்ப்பாண குடா நாடெங்கும் ஆயிரக் கணக்கான மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஒருவருடைய மரணம் இனிப்பு வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டது என்பதை முதன் முதலாக அன்றுதான் நான் அறிந்தேன். இதிலிருந்தே அமைதிப்படை செய்த கொடூரத்தை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

ஒரு கம்யுனிஸ்ட் என்ற வகையில் தனி மனித கொலைகள் தீர்வாகாது என்று கருதுபவன் நான். ரஸ்சியாவில் ஜார் மன்னனை கொல்ல முயன்று மரண தண்டனைக்குள்ளான தனது சகோதரன் பாதையை தோழர் லெனின் தவறு என்று கூறியுள்ளதை நான் படித்திரக்கிறேன். ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதாலேயே இந்தியா எமக்கு உதவவில்லை. இல்லையேல் இந் நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என சிலர் அப்பாவித்தனமாக தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது என்னவெனில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் ஈழம் மலர்ந்திருக்காது. ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் ஈழத்தை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்னரே புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியில் இந்திய உளவுப்படை “றோ” இறங்கிவிட்டதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் சிலர் கோரி வருகின்றனர். அப்படியாயின் முதலில் அமைதிப்படை என்ற பெயரில் வந்து அக்கிரமம் செய்த இந்திய ராணுவத்திற்கும் அதற்கு பொறுப்பானவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள். அதன் பின் ராஜிவ் கொலையை விசாரியங்கள். அதைவிடுத்து “நாம் பலமானவர்கள். நாம் அப்படித்தான் திமிர்தனமாக நடந்து கொள்வோம். நீங்கள்தான் நாம் செய்யும் அக்கிரமங்களை பொறுத்து தொடர்ந்தும் எமக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்ற கருதுவீர்களாயின் ராஜீவ் கொலை போன்ற பதிலடிகள் தொடரவே செய்யும்.

Monday, 27 May 2013

கனவுகள் ஓர் அறிமுகம்

வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

“அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே!

உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல் இவை மூன்றையும் சரிசமம் செய்து ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்கிறது.

எப்பொழுது மூளை, மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அவ்வேளையில் முன்னர் சேமிக்கப்பட்ட பதிவுகளை மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போது மனதில் சேமிக்கப்பட்ட மனக்கிளர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் இவற்றோடு குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி, ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மனத்திரைப்படமே கனவு எனப்படுகிறது. இனி கனவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

வரலாறுகளில் கனவுகள் பற்றி:

பழங்காலங்களில் சில இன மரபுக் குழுக்கள் கனவுகளை ஆராய்ந்து அதில் தங்கள் குழு பற்றியும், மனிதர்கள் பற்றியும் புரிந்து கொள்ள முயன்றனர்.

கிரேக்கர்கள் கனவுகளைக் கொண்டு, நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் பல வழிமுறைகளை கண்டனர். இவர்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் மருத்துவமனைகளையே கட்டினர். அதனை அஸ்கிலாபியன் சாங்சுவரிஸ் (Asklepian Sanctuaries) என்று அழைத்தார்கள்.

19ம் நூற்றாண்டில் பல மேற் குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டனர். எவ்வாறு ஒலி, வாசனை போன்றவை ஒன்றினைந்து செயல்பட்டு கனவு களின் உட்பொருளை பாதிக்கின்றன என்பதனை விரிவாக ஆராய்ந்தனர்.

20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கு முக்கியத்துவம் உயர்ந்தது. முக்கியமாக ரெம் (REM) தூக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஆராய்ச்சிகள் வெகுவாக உயர்ந்தன.

கலாச்சாரமும் கனவும்:

பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடமிருந்து வரும் நற்செய்திகளாகவும் தீய சக்திகளிடமிருந்து வரும் கெட்ட செய்திகளாக வும் கருதுகின்றனர்.

அசீரியர்கள் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகளாக கனவுகளைக் கருதினர். கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கருதினர். மற்ற கனவுகளை ..ஆலோசனைகளாக நினைத்தனர்.

எகிப்தியர்கள் கனவுகளை கடவுள் தங்களுக்கு கூறும் செய்திகளாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் தீய காரியங்களுக்கு எச்சரிக்கைகளாகவும் கருதினர்.

கிரேக்கர்கள் எதிர்காலம் பற்றி கூறுவனவாக கனவுகள் அமைகின்றன என்கின்றனர். சில சமயம் நல்ல கனவுகள் மட்டும் வர வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை பின் பற்றினர். ரோமானியர்களும் இதனை யே நம்பினர்.

ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் களாகவும், தங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பதில்களைத் தருவதாகவும் கனவுகளைக் கருதினர்.

உறக்க‌ம் - படிநிலைகள்:

கனவுகள் பற்றி விரிவாக காண்பதற்கு முன் உறக்கத்தின் படிநிலைகள் பற்றி அறிய வேண்டியது அவசியம்.

படிநிலை-1: இது விழிப்பு நிலையி லிருந்து தூக்க நிலைக்கு மாறும் போது உள்ள நடுநிலை. இது நான்-ரெம் (Non-REM--Non Rapid Eye Movement) வகையை சேர்ந்தது.

படிநிலை-2: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் உடலின் வெப்பநிலை குறைந்து, தசைகள் தளர்வடைந்து ஓய்வு நிலையில் இருக்கும்.

படிநிலை-3: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையே. இந்த நிலையில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம்.

படிநிலை-4: இந்த படிநிலை ரெம்(REM) வகையைச் சார்ந்ததாகும். இந்த நிலையில் நமது கண்கள் விரைவாகவும், அப்படியும், இப்படியும் அசைந்து கொண்டிருக்கும். நாம் காணும் பெரும்பாலான கனவுகள் இந்த நிலையிலேயே வருகின்றன. இவ்வேளையில் ஒருவரை எழுப்பினால் அவர் அப்போது கண்ட கனவுகளை தெளிவாக நினைவில் வைத்திருப்பார்.

இந்த நான்கு படிநிலைகளும் சுழற்சி முறையில், தூங்கும் போது மாறிக்கொண்டே இருக்கும். இவற்றில் முதல் 3 படிநிலைகளை விட 4ஆம் படிநிலையில் தான் அதிக நேரம் தூங்குகிறோம். என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கனவுகளின் இயக்கவியல்:

நாம் கனவு கண்டு கொண்டி ருக்கும் போது கவனிக்கத் தக்க மாறுதல்கள் உடலில் ஏற்படுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தான் மிகவும் வலுவிழந்த இதயம் கொண்டவர்கள் இந்த மாற்றங்களைத் தாங்க முடியாமல் தூக்கத்தோடு தூக்கமாக உயிரை விட்டு விடுகின்றனர்.

நாம் நன்றாக உறங்க ஆரம்பித்து 30லிருந்து 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் ஆரம்பிக் கின்றன. ஓரு இரவில் 4லிருந்து 7 முறைகள் வரை ரெம் படிநிலை வருகிறது. இந்த வேலையிலும் உடலும் உடற் தசைகளும் முழுமையான ஓய்வு எடுக்கின்றன. ஆனால் ரெம் படிநிலையில் மனம் முழு செயல் பாட்டில் இருக்கும்.

வேதியியல் மாற்றங்கள்:

கனவுகளின் போது மூளையில் நார்-அட்ரீனலின் மற்றும் செரடோனின் அளவுகள் வீழ்ச்சியடைகின்றன. இதனால்தான் கனவுகளை நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கனவு -வகைகள்:

கனவுகளை பல விதங்களாக பிரிக்கின்றனர். இங்கு முக்கியமான வகைகளை மட்டும் காண்போம்.

1. பகல் கனவுகள்

2. தெளிவுநிலை கனவுகள் (Lucid dreams)

3. கொடுங்கனவுகள் (Nightmares)

4. அடிக்கடி வரும் கனவுகள் (Recurring dreams)

5. எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (prophetic dreams)

6. இதிகாசக்கனவுகள் (Epic dreams)

7. நோய்நீக்கும்கனவுகள் (healing dreams)

8. பொய் விழிப்பு கனவுகள் (False Awakening dreams)

1.பகல் கனவுகள்

உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே உள்ள உணர்வு நிலையைத்தான் பகற்கனவு என்கிறோம். ஆராய்ச்சிகளில் ஒரு மனிதர் ஒரு நாளில் சராசரியாக 70-120 நிமிடங்கள் பகற் கனவுகளில் செல விடுகிறார்கள் என கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது நமது கற்பனை குதிரையை ஓடவிடும் வேளையே பகல் கனவு.

2. தெளிவு நிலை கனவு:

இந்த நிலையில் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்திருப்போம். சிலர் அப்படியே ஆனந்தமாக கனவை தொடர்ந்து கொண்டிருப்பர். பெரும் பாலும் இந்த வகை கனவு களில், கனவு காண்பவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார்.

3.கொடுங் கனவு:

இதனை சிறு வயதுப் பிள்ளை களிடம் அதிகமாகக் காணலாம். தூங்கும் போது பயங்கரமான கனவுகள் தோன்றி திடீரென்று படபடப்புடனும், பயத்துடனும் எழ வைக்கும் கனவுகளையே கொடுங் கனவு என்கிறோம். சில சமயங்களில் வாழ்வில் நடக்கும் விபத்துக்கள் அல்லது மோசமான சூழ்நிலைகளாலும் இத்தகைய கனவுகள் வரலாம். இந்த கனவுகளை போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் நைட் மேர் என்று அழைக்கிறார்கள்.

சிலருக்கு இக்கனவுகள் தோன்றுவது வழக்கமாகவே இருக்கும். இது பரம்பரையில் யாருக்காவது மனப் பிரச்சனைகள் இருந்திருந்தாலோ அல்லது அந்நபரின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ ஏற்படும். ஆழ் மனதில் உள்ள பயங்களை சுட்டிக் காட்டுபவையாக இக் கனவுகள் அமைகின்றன.

4. அடிக்கடி வரும் கனவுகள்:

இவை பெரும்பாலும் கொடுங் கனவு வகை கருத்துருவையே கொண்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் இருக்கும். சில சமயம் நல்ல கனவுகளாகவும் இருக்கும். இக் கனவுகள் வாழ்வில் சரி செய்யப்படாத சில பிரச்சனைகளால் வருகிறது. அப்பிரச்சனைகளுக்கு விடை கண்டு தீர்த்து விட்டால் மீண்டும் வருவது நின்று விடலாம்.

5.எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள்:

இக்கனவின் போது ஒரு கோட்பாடாக மனது பல கருத்துக்களையும், நுண்காட்சிப் படிவுகளையும் பொருள் தரும்படியான திரை ஓட்டமாக மாற்றுகிறது. இதனால் எதிர் காலத்தில் என்ன நடக்கலாம் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும்.

6. காவியக் கனவுகள்:

இவை மிகவும் அழகாக, பிரம் மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக் கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உண்மையிலேயே உள்ளது போலத் தோன்றும். இக் கனவு முடிந்து துயில் எழும்போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.

7.நோய் நீக்கும் கனவு: இவ் வகைக் கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சி களில் ஆஸ்த்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற நோய் உடையவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது நமது உடல் உயிர் மற்றும் மனம், ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால் இது சாத்தியமாகிறது என்கின்றனர். இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமின்றி, அந்நோயை எவ்வாறு சரி செய்வது என்று கூட ஆலோசனையும் வழங்குவதுண்டு என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

8. பொய் விழிப்பு கனவுகள்:

நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939)

சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.

இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.

நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.

மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.

1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு

2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை

3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது.

நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.

இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட விடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.

எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.

ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.

Sunday, 26 May 2013

பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை.!


யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் நாடி சுத்தி செய்து கொண்டு, மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள்.

இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண். இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம்.

மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள். ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும்.

மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழழ்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால்,

1. பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை.

2. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை.

3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது.

4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது.

5. ஆக்சிஜன் பற்றாக் குறை.

6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது.

இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும். இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது.

இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம்,பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி. ஆண்களும் குழந்தை பாக்யத் தடை நீங்க இந்த ஆசனங்களையும், பிராணாயாமம் பயிற்சியையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தனுராசனமும், யோக முத்ராவும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. அர்த்த மத்ஸ்யேந் திராசனம் செய்வது நல்லது. பிராணாயாமம் செய்யும் போது உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகம் செய்ய வேண்டும். இதனால் ஆண் இனப்பெருக்க மண்டலங்களுக்கு இரத்த நாளங்கள் அதிகமாக இரத்தத்தை அளிக்கும்.

ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு பெண்குழந்தைகள் பிறக்கும். ஆக்சிஜன் அதிக அளவு பெறுகிற உடல் அமைப்பு பழக்க வழக்க முள்ளவர்களுக்கு காரத்தன்மை அதிகமான உடல் அமைப்பு இருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். மலைப் பிரதேசங்களில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பதன் காரணம் இதுதான். ஆக்சிஜன் நம் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது. புரதங்களை உற்பத்தி செய்கிறது. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்தின் இடது ஆரிக்கிள், இடது வெட்ரிக்கிள் அறைகளில் ஆக்சிஜன் செல்லும் போது மின் சக்தியை இரத்தத்திற்கு அளிக்கிறது. இந்த மின் சக்தி நம் உடல் முழுவதும் பரவயிருக்கிறது

தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது . ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல்தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும ், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால்அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பத ை பார்த்திருப்பீர ்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.

தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள்வடிவமைக்கப்படுக ின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல்மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார் . அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவி ட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால் , நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.

இதற்கு எடுத்துக்காட்டு , 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது . அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாகஅதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது .

அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனித ர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும்.மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்கமாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள் ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.க ப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும ். அப்பொழுது பலூன் பறக்காது.

பொறியியல் மற்றும் மருத்துவம் தாண்டி எத்தனையோ படிப்புகள்?

பொறியியல் மற்றும் மருத்துவம் தாண்டி எத்தனையோ படிப்புகள்?
-

“பத்தாவதுல 472 மார்க் எடுத்தான்...இப்பவும் டோட்டல் 1043 இருக்கு...ஆனா கட் ஆஃப் சரியில்லை....என்ன செய்யறது?” என்ற ரீதியில் புலம்பிக் கொண்டிருக்கும் யாரையாவது கடந்த இரண்டு நாட்களில் பார்த்தீர்களா? நான் பார்த்தேன். ஒன்றில்லை ஏகப்பட்ட ஆட்களை.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் அதே அளவுக்கு பிரகாசிக்க முடியாமல் போவது சர்வ சாதாரணம்தான். அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் ‘உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கும்’ கான்செப்ட்தான். பத்தாம் வகுப்பில் அதிகமான மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் 'Over confidence' உருவாகியிருக்கும். அதை தூபம் போட்டு சுற்றியிருப்பவர்கள் ஊதிவிடுவதால் அதே ‘Over confidence' அடுத்த இரண்டு ஆண்டுகளில் கவிழ்த்து குப்புற போட்டுவிடுகிறது என்கிறார்கள் சில மனோவியல் நண்பர்கள். இது பற்றி தனியாக அலசுவோம்.

இப்போதைக்கு கவிழ்ந்தாகிவிட்டது. அடுத்தது என்ன செய்வது? முதலில் குழம்ப வேண்டாம். கப்பல் எதுவும் கவிழ்ந்துவிடவில்லை. ஜஸ்ட் +2 மதிப்பெண்கள்தான் குறைந்திருக்கிறது. ஒரு விதத்தில் இது நல்லதும் கூட. பொறியியல், மருத்துவம் என்ற பெருங்கூட்டத்தில் இருந்து விலகி வேறொரு நல்ல படிப்பைப் பற்றி யோசிப்பதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

B.Sc(Statistics) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தப்படிப்பை முடித்தவர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? பி.எஸ்.சியில் Psychology பாடப்பிரிவு இருப்பது தெரியுமா? இந்தப் பாடத்தில் முதுநிலைப் படிப்பிற்கு இருக்கும் பிரகாசமான வேலை வாய்ப்பு பற்றி அறிந்திருக்கிறீர்களா? வனவியல், மீன்வளம் ஆகியன பற்றிய படிப்புகளுக்கு உருவாகியிருக்கும் அளவுக்கதிகமான ‘டிமாண்ட்’ பற்றி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா?

ம்ஹூம். கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

நமக்கு +2 முடித்தால் இரண்டே குட்டைதான் தெரிந்திருக்கிறது. ஒன்று மருத்துவக் குட்டை. இன்னொன்று பொறியியல் குட்டை.

கோடிக்கணக்கில் டொனேஷன் கொடுப்பதற்காக அப்பனும் ஆத்தாளும் சம்பாதித்து வைத்திருந்தால் மருத்துவக்குட்டையில் விழுந்துவிடலாம்தான். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள்? பல் மருத்துவத்திற்கு தனியார் கல்லூரிகளில் ஃபீஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஐந்து லட்சம் கேட்கிறார்கள். டிகிரி முடித்து வரும் போது கிட்டத்தட்ட முப்பது லட்சம் செலவு ஆகியிருக்கும். எதற்காக இத்தனை பல் மருத்துவர்களை இந்த தேசம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது? உண்மையில் அத்தனை பல் மருத்துவர்களுக்கான தேவை இருக்கிறதா? போகிற போக்கைப் பார்த்தால் வெட்டுப்பல் ஸ்பெஷலிஸ்ட், சிங்கப்பல் ஸ்பெஷலிஸ்ட், கடவாய்ப்பல் ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டுகள் தொங்கும் போலிருக்கிறது.

தமிழ்நாட்டில் இஞ்ஜினியரிங் பற்றி கேட்கவே தேவையில்லை. நூற்றுக்கு அறுபது சதவீத எலெக்ட்ரிக்கல் இஞ்ஜினியர்களுக்கு ‘மின்சாரத்தை’ வரையறுக்கத் தெரியாது. கம்யூனிகேஷன் இஞ்ஜினியர்களுக்கு ‘பைபர் ஆப்டிக் கேபிள்’ இயங்கும் தத்துவம் தெரியாது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியர்களால் ‘ஹார்ட் டிஸ்க்’ பற்றி மூன்று நிமிடங்கள் தொடர்ந்து பேச முடியாது. இது ‘டூ மச்’ ஆகத் தெரிந்தால் நீங்களே உங்களுக்குத் தெரிந்த இஞ்ஜினியரிங் மாணவர்களிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்.இன்னும் ஒருபடி மேலே போய் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களிடம் கூட ‘டெஸ்ட்’ செய்து பார்க்கலாம்.

தமிழகத்தில் ஐந்நூற்று சொச்சம் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொரு ஆண்டும் ‘வத வத’வென பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பொறியியல் முடித்தவர்கள் எல்லாம் ஆறு இலக்கச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெறும் மாயை. மிகச் சொற்பமான நபர்கள்தான் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டும்தான் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள். ஆனால் பொறியியல் முடித்துவிட்டு திக்குத் தெரியாமல் நிற்கும் மாணவர்கள் ஏராளமாக உண்டு. பி.ஈ. முடித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வேலையில் இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் நிலைமை மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும்.

வேறு வழியும் இல்லை. ‘போனாம் போக்கி’ கல்லூரிகளில் படித்துவிட்டு ‘ஏனோ தானோ’ என வெளியில் வரும் இலட்சக்கணக்கான இளைஞர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை. அவர்கள் அத்தனை பேருக்கும் வேறு ஏதாவதொரு திறன் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் திறமை, ஆர்வம் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் சொன்னான், பங்காளி சொன்னான் என பொறியியல் குட்டையில் தள்ளிவிட்டு ‘மந்தைகளாக்கி’ அவர்களின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கிறோம். பரிதாபமாக இருக்கிறது.

பொறியியல், மருத்துவம் ஆகியன மட்டுமே படிப்பு இல்லை. ஏகப்பட்ட choice இருக்கின்றன. ப்ளீஸ்...இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டு வேறு படிப்புகளையும் யோசிப்போம்

Thursday, 23 May 2013

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரை பற்றிய ஒரு வரலாற்று பார்வை !!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.
அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து “காங்கிரசைக் காத்தவர்” எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.
முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர். ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.
அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்
18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.
சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.
மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார்.
இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.
1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது.
தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார்.

Wednesday, 22 May 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

Tuesday, 21 May 2013

கம்ப்யூட்டரால் ஏற்படும் பிரச்னைகள்:-

கம்ப்யூட்டரால் ஏற்படும் பிரச்னைகள்:-

கம்ப்யூட்டர் என்பது இன்று அநேகம் பேருக்கு 3வது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்ப்யூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர்.

அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு......இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளாக இருக்கும்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க 20-20-20 விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடிய கண்கள் மேல் வைத்து எடுக்கலாம்.

கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரைப் பார்க்கவும். வறட்சியோட அளவைப் பொறுத்து தேவைப்பட்டால் கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கம்ப்யூட்டர் வேலையில் சேருவதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.

கிட்டப்பார்வையும் இல்லாமல், தூரப் பார்வையும் இல்லாமல் கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப் பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கிறது. ஸ்பெஷல் கோட்டிங்கோடு. நடுத்தரப் பார்வைக்கான அதை கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்க வேண்டும். பாதங்கள் தரையைத் தொடுகிற மாதிரி உட்கார வேண்டும். 90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சரியாக இருக்கும். கம்ப்யூட்டருக்கு ஆண்ட்டிரெப்ளெக்ஷன் மானிட்டர் போடுவது கண்களைப் பாதுகாக்கும். பொதுவாக 40ல் இருப்பவர்களுக்கு, வெள்ளெழுத்தோடு சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காமல் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Monday, 20 May 2013

தேர்தல் ஆணையத்திடம் திறந்த கேள்விகள்:

தேர்தல் ஆணையத்திடம் திறந்த கேள்விகள்:

1. தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய வேண்டிய கண்கானிப்புகளையும் கடமைகளையும் நாடு முழுக்க ஏன் பொது மக்கள் மேற்கொண்டனர்?

2. தேர்தல் மையத்தைவிட்டு ஏன் நாடாளுமன்ற வாக்குப்பதிவு ஏடு தேர்தல் ஆணைய அதிகாரியால் வெளியே கொண்டு வரப்பட்டது? (காணொளி ஆதாரம்: http://www.youtube.com/watch?v=WrKt1YE-Tr0)

3.குறைந்தது 5 நாட்களாவது அழியாத மை எனச் சொல்லியும் ஏன் நீங்கள் இட்ட மை அடுத்த இரண்டு மணி நேரத்தில் அழிந்தது? இதற்கு ஆதாரம் மலேசிய குடிமக்களின் ஆங்காங்கே பதிவான புகார்கள்.

4.ஜொகூர் மாநிலத்தில் ஏன் வாக்குப்பதிவுகள் கொண்ட பெட்டி வாடகை காரில் இரவு 10மணிக்குத் திடிரென்று வாக்குக் கணக்கிடும் இடத்திற்கு வரவேண்டும்? (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=d34AT8srNlQ)

5. சரியாக 3.45க்கு ஏன் ஓட்டுப்பதிவுகள் கொண்ட தேர்தல் ஆணையத்தின் இரு மஞ்சள் சாக்குகள் பொது திடலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? உடன் ஒரு தேர்தல் அதிகாரியும் போலிசும் இருப்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=8SKnvjZZzsY)

6. ஓட்டுப் போடுவதற்கு முன்பே ஏன் விரலில் மையிட வேண்டும்? வயதானவர்கள் தடுமாறி மையை ஓட்டுத் தாளில் இழுப்புவதற்கு அதிக வாய்ப்புண்டு. அப்படி மை பட்ட ஓட்டுத் தாள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வேளையில் ஓட்டுப் போட்டப் பிறகு மையை விரவில் இடும் சேவையை முன்னெடுத்திருக்கலாமே?

7.இரண்டாம் குடியுரிமை பெற்ற எந்த வெளிநாட்டு வேலையாட்களும் அந்த நாட்டின் அரசியலிலோ தேர்தலிலோ ஈடுப்பட முடியாத சட்டம் உண்டு. சிங்கப்பூரிலும் இது பின்பற்றப்படுகின்றது. அப்படியிருக்க எப்படி வங்காளதேசிகள் ஓட்டுச்சாவடிக்குள் பிரவேசிக்க முடிந்தது? அல்லது கொண்டு வரப்பட முடிந்தது? (ஆதாரம்: காணொளி: http://www.youtube.com/watch?v=RsyM_i87Ots)

8. Sk seri Manjung ஓட்டு மையத்திற்கு வெளியே BHK 2025 காரிலிருந்து ஓட்டுப்பதிய வந்த சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட நேரடி காணொளியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த ஓட்டாளர்களைக் காரிடம் அழைத்து வரும் மலாய் பெண்மணியின் முகமும் பதிவாகியிருப்பதோடு அவர் தேசிய முன்னணி கூடாரத்திற்குள்ளிருந்து வெளியேறுகிறார் மேலும் அந்தக் கட்சியின் சின்னம் உள்ள சட்டையையும் அணிந்திருக்கிறார். அவரையும் அந்தக் காருக்குள் இருந்தவரையும் உடனே கைது செய்து விசாரிக்க முடியுமா? (ஆதாரம்:http://www.youtube.com/watch?v=lkdg21W1TYk)

9. ஓட்டுச்சாவடிகளில் சந்தேகத்திற்குரிய வங்காளதேசிகளைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தி அவர்களைச் சோதனையிட்டு கேள்விக்குள்ளானவர்கள் சீனர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏன் அங்கு ஓட்டுப் பதிவு செய்யப்போன தமிழர்களின் கண்களுக்கு இந்த அநீதிகள் தெரியவில்லை, அவர்களுக்கு என்ன நேரந்தது என ஒரு சமூக ஆய்வை முன்னெடுக்க முடியுமா? (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=ntu8biBT78c)

10. 5 மே இரவு நேரத்தில், அதாவது ஓட்டுச் சாவடிகள் மூடப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் குறிப்பிட்ட கணக்கெடுக்கும் மையத்திற்குச் சென்று பல மணி நேரங்கள் ஆன வேளையில், திடிரென கார் எண் JPG1555- இன் மூலம் ஓட்டுப் பெட்டிகள் போலிஸ் பாதுகாப்புடன் ஏன் கொண்டு வரப்பட வேண்டும்? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சில இடங்களில் 6மணிக்கெல்லாம் இரவாகிவிடும் என்று சொல்ல முற்பட்டால், மன்னிக்கவும். (ஆதாரம்: http://www.youtube.com/watch?v=j1njvXK_hqo)

11. மக்களால் சமூக இணையத்தலங்களில் வெளியிடப்பட்ட இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மலேசியன் என்கிற முறையில் இதையெல்லாம் கேட்க எனக்கு உரிமை உண்டா? அதையும் நீங்களே சொல்லிவிடுங்கள். அப்படி இல்லையென்றால் இதையெல்லாம் கேட்க நமது நட்பு நாடான பங்களாடெஷிலிருந்து சிறப்பு குழுவையாவது அழைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதுவும் இல்லையென்றால் இந்தியாவிலிருந்து விஜயகாந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை அழைக்கவும். நன்றி.

Sunday, 19 May 2013

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :


முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.


தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.


வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!

Saturday, 18 May 2013

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/
பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

Friday, 17 May 2013

வெற்றிலை போடுவது ஏன்?

-------------------------------------
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.