Tuesday, 29 November 2011

மக்கள் விருப்பம் !

அரசியல் நேயர் விருப்பம்


நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்
நமது அரசியல் வாதிகள் விரும்பி கேட்க்கும் பாடல்கள்
...


ஜெயலலிதா :

வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் ...
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் .......

விஜயகாந்த் :

தாயில்லாமல் நானில்லை ...
தானே எவரும் பிறப்பதில்லை ...
எனக்கொரு தாய் இருக்கின்றாள் .....

கருணாநிதி 

வீடு வரை உறவு வீதி வரை மனைவி ...
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ...

வடிவேலு : 

போடா சொன்ன போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே ....

இளங்கோவன்: (தங்கபாலு ஆதரவாளர்களை பார்த்து)

புத்தி கேட்ட மண்டுகளா ... போட்டி போட்டு வந்தீங்களா .......

தங்கபாலு 

சட்டி சுட்டதடா .... கை விட்டதடா

ராமதாஸ் :

போனால் போகட்டும் போடா .....

அழகிரி : 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ....

ஸ்டாலின் : 

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ...
வந்ததை எண்ணி அழுகிறேன் ...
வருவதை எண்ணி சிரிக்கிறேன் ...
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்

ராஜா : 

கையில வாங்கினேன் ... பையில போடலை ..... காசு போன இடம் தெரியலை

கனிமொழி :

ஆடாமல் ஆடுகிறேன் ... பாடாமல் பாடுகிறேன் .....
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா ...

வை.கோ : 

நான் ஒரு முட்டாளுங்கோ ... ரொம்ப நல்ல படிச்சவன்னு நாலு பேரு சொன்னாங்க ... நான் ஒரு முட்டாளுங்க ...

வீரமணி : 

குமரி பெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரலாமா .... 
 
மக்கள் :  (இரண்டு பாடல்கள்)

 
பாடல் 1
இரவும் வரும் பகலும் வரும் ... நிலைமை .... ஒன்று தான்
 
பாடல் 2
 
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நாம் என்ன ... அட நீ என்ன ஞயான்ப்பெண்ணே
வாழ்வின் வகை என்ன?  நீ வந்த கதை என்ன?

பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...


     அந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய  புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். நன்றி: கூகிள் சர்ச்

Monday, 28 November 2011

அழகு உங்கள் கையில்..!

அழகு குறைந்தாலோ, தலைமுடி பொலிவிழந்தாலோ வயதாகு முன் சீக்கிரமே தலைமுடி நரைத்து விட்டாலோ, தன்னம்பிக்கையே போய்விடும். நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்வதன் மூலமும், சிற்சில குறைகளைத் திருத்துவதன் மூலமும் தன்னம்பிக்கையை, அழகை அதிகரித்துக் கொள்ளலாம்.

நம்மில் உருவ அமைப்பு வேறுபடுவது மாதிரிதான் தலைமுடியும். சரும வகையும் வேறுபடும். அதன் அடிப்படையைத் தெரிந்துகொண்டு பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு தீர்வு காண்பதே நல்லது.


தலையை, தலைமுடியைப் பொறுத்தவரை ஆண், பெண் இருபாலாருக்குமே நிறைப் பிரச்சனைகள் இருக்கின்றன. பேன், பொடுகு, நரைமுடி, பிசுபிசுப்பு, முடி கொட்டுதல், பிளவுபடுதல், இளவயதில் வழுக்கை விழுதல் இப்படிப் பல.

பொதுவாக வீட்டில் இருப்பவர்களை விட வெளியில் அலைபவர்களைத்தான் இந்தப் பிரச்சினைகள் மிகவும் பாதிக்கிறது. இவற்றிற்கு என்ன காரணம்? அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

கீழ் கண்டவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ இருக்கலாம்.
 • பரம்பரை
 • மாசு
 • டென்ஷன்
 • அதிகமான உடல் உஷ்ணம்
 • வைட்டமின் ஏ, இ, இரும்பு, புரோட்டீன் இவற்றில் ஏதாவது ஒரு சத்து குறைபாடு
 • பேன், பொடுகு தொல்லை
 • சரியான முறையில் தலை முடியைச் சுத்தமாகப் பராமரிக்காதது
 • தரமில்லாத சோப்பு, ஷாம்பூவை உபயோகிப்பது
 • ஹார்மோன் குறைபாடுகள்
 • டைபாய்டு ஜுரத்தால் பாதிக்கப்படுதல்
 • வேர்க்கால்கள் பலவீனமடைதல்
 • தண்ணீர் சரியாக இல்லாதது
 • அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிப்பது
 • ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவு.
 • பெண்களுக்குப் பிரசவத்திற்கு பின்
இந்த முடிப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா? என்று கவலைப்படாதீர்கள். கட்டாயம் உண்டு. சராசரியாக தினம் 50-லிருந்து 100 முடிகள் உதிர்வது சகஜம். அதற்கு மேல் கொட்டினால் தான் கவலைப்பட வேண்டும்.கீழ்க்கண்ட டிப்ஸ்களை கடைப்பிடித்தாலே, பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

தலைமுடியின் ஆராக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு முறையும் ஒரு காரணம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணவு விஷயத்தில் அக்கறையே இல்லை. ஆரோக்கியமான தலைமுடியைப் பெற ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது முக்கியம்.

எண்ணெய், கொழுப்பு மிகுந்த உணவுப் பதார்த்தங்களைத் தவிருங்கள். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளைத் தினமும் உணவில் அதிகமாகச் சேருங்கள்.


வாரம் ஒருமுறை 'ஹாட் ஆயில் மசாஜ்' செய்து கூந்தலை அலசுங்கள்.

மேலே உள்ள முடியை மட்டம் அலசுவதால் எந்தப் பயனுமில்லை. வாரம் இரு முறையாவது இயற்கைப் பொருட்கள் கலந்த பொடி அல்லது மூலிகை கலந்த ஷாம்பூ உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகிக்கும் போது, மயிர்கால்களில் உள்ள அழுக்குப் போகும்படி முடியை நன்கு அலச வேண்டும்.

தலைக்குக் குளித்தவுடன் சுத்தமான துவாலையால் ஈரத்தை துடைக்க வேண்டும்.


அவசரத்திற்கு அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகப்படுத்தினால், முடி பலவீனமடைந்து கொட்ட ஆரம்பிக்கும். எனவே, கூடுமானவரை ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிருங்கள். அதுவும் வறண்ட கூந்தல் உடையவர்கள் கண்டிப்பாக ஹேர் டிரையர் உபயோகிக்கக் கூடாது.

எப்பொழுதும் தலைமுடியைக் காய்ந்த பிறகே வார வேண்டும். ஈரத்தோடு தலை வாரினால் பலமிழந்த முடிகள் கையோடு வந்து விடும்.

கூடுமானவரை சீப்பு, சோப்பு, டவலை தனியாக உபயோகியுங்கள்.


டூ வீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டால், முடி கொட்டுகிறது என்று நினைப்பார்கள். அதற்கு தலையில் ஒரு மெலிதான துணி அல்லது ஸ்கார்ஃப் போட்டு அதன் மேல் ஹெல்மெட் அணியலாம்.

முடி குட்டையாக இருந்தால் 4 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை முதல் நாள் இரவு தலைமுடியில் தடவி அடுத்த நாள் காலை அலசுங்கள்.

நன்றி :தினகரன்
:

PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?

நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM  காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக  RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை  Pen Drive களின் விலை குறைவானதே. 
முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது  என பார்ப்போம். 


முதலில் Pen Drive ஒன்றை ( குறைந்தது 1GB ) USB port வழியாக பொறுத்துங்கள்.
 1. பின் My Computer ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
 2. அதிலுள்ள Advanced பகுதியில்  Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
 3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து Pen Drive வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max  எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
 5. பின்னர் Set செய்து உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.


அல்லது  ReadyBoost  அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்  வை பொறுத்தி eboostr control pannel இல் pendrive வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)

Windows 7 யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்துவது என பார்ப்போம்.  உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா "உங்கள் கணனி 256GB RAM கொண்டிருந்தால்...."  8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடைய pendrive பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம். 

 உங்கள்  Pen Drive ல் Right Click செய்து  Properties தெரிவு செய்யுங்கள்.
அதில்  ReadyBoost  பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.


"Space to reserve for system speed" என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது  Apply செய்து விடுங்கள் , அவ்வளவுதான் ...  உயர் performance ஐ அனுபவியுங்கள்...

Sunday, 27 November 2011

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!


`சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!
15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.
நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.
வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.
இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

Saturday, 26 November 2011

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொ ருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ் வினி குமா ர் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட் டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்க ங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நா ட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அம லுக்கு வந்தது.
மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத் தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண் டும்.
எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய் யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திரும ணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு க்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாள் களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாத வர்கள், அடுத்த 60 நாள்களுக்கு ள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக் கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய் து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத் தில் தாக்கல் செய்ய வேண் டும். படிவத் தில் கணவன், மனைவி இருவரது புகைப் படங்களை யும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப் படத்தை யும் இணைக்க வேண்டும்.
மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக் கான அத்தாட்சி, அடை யாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்க வேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்க வேண்டும். திரு மண த்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கை யொப்பம் இட வேண்டும்.
மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்க ளும் மனுவில் சாட்சி கையெழுத்து போ டவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில் லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப் படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.
திருமணங்கள் நடைபெறும் குறிப்பி ட்ட சில கோயில்களிலேயே கூட, திரு மணங்களைப் பதிவு செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தக வல் உண்டு.
மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கொ ண்டு சம்மந்தப்பட்ட சார் பதிவாளரைச் சந்தித்து, உங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!
கம்ப்யூட்டர்ப் புதியவரா? பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்


கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும். எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும். இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
உங்களது பைல்கள்:
எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.
எழுத்து வகைகள்:
பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள். C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.
இன்டர்நெட் விவரங்கள்:
இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.
Friday, 25 November 2011

முகத்திற்கு அழகு தரும் பொட்டு


நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர்.
குங்குமத்தை சாதாரணமாக நெற்றியிலிட்டுக் கொள்வதை விட, கொஞ்சம் வெள்ளை வாசலைன் முதலில் இட்டு, அதன் மீது குங்குமத்தை பொட்டிட்டால், பொட்டு நீண்ட நேரம் அழியாமல், புத்தம் புதிதாக இட்டது போலக் காட்சி தரும். நெற்றியில் ஏதாவது வண்ண சாந்து அல்லது குங்குமத்தால் பொட்டு இட்ட பிறகு, அதைச் சுற்றி வேறு வண்ணத்தில் ஒரு கோடு தீட்டிக் கொண்டால், திலகம் எடுப்பாக இருப்பதோடு, அழகாகவும் தோற்றமளிக்கும். இந்நாளில் பிளாஸ்டிக் ஷீட்களை வட்ட வடிவில் பொட்டுகளாக கத்தரித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பொட்டுகளை அச்சடித்தும் விற்கின்றனர். அவற்றை வாங்கி நெற்றியில் ஒட்டிக் கொண்டு விடலாம். பொட்டிடும் சிரமம் குறையும். நெற்றியில் பொட்டிடும் போது, நுணுக்கமான வேலைப்பாடு இருக்கத் தேவையில்லை. பளிச்சென பார்த்த மாத்திரத்திலேயே கண்களைக் கவரும் வண்ண அமைப்புடன் இருந்தால் போதும்.
சாந்தை உபயோகித்து பொட்டிடும் போது, பொட்டிட்ட பிறகு முகப்பவுடர் பூசிக் கொள்வது, முகத்தைப் பளிச்சென தோற்றுவிக்கும். ஆனால், குங்குமம் உபயோகிக்கும் போது, முதலில் பவுடர் பூசி விடுவது தவிர்க்க இயலாதது. எனினும், பொட்டிட்ட பிறகு, மிக எச்சரிக்கையுடன் முகத்தில் மற்றுமொரு தடவை பவுடரை லேசாக ஒற்றிக் கொள்ளலாம்.
நெற்றி விசாலமாக அமையப் பெற்ற பெண்கள், பெரிய பொட்டாக வைத்துக் கொண்டால்தான் பாந்தமாக இருக்கும். குறுகிய நெற்றியை பெற்றவர்களோ, சிறிய அளவிலேயே பொட்டிட்டு கொள்வதுதான் அழகாக இருக்கும். அகன்ற நெற்றியுடைய பெண்கள் மேல் நோக்கி, நீண்ட வாக்கில் கோடாக இழுத்துக் கொள்வது அழகூட்டுவதாக அமையும்.
நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர். மிகவும் சிவந்த நிறமுடைய பெண்கள், கரு நிறச் சாந்தால் பொட்டு இட்டால், மிகவும் அழகாக இருக்கும். கருநிறச் சாந்து பொட்டிட்டுக் கொண்டால், எந்த மாதிரி வண்ண உடை அணிந்தாலும், பொருத்தமாகவே இருக்கும். இவர்கள் குங்குமம் இட்டுக் கொள்வதாக இருந்தால், ஆழ்ந்த நிறமாக பார்த்து இட்டுக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ்: ஸ்டிக்கர் பொட்டு வைத்தபடியே தூங்கி விடாதீர்கள்; அந்த இடமே அலர்ஜி ஆகிவிடும்.
*பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றால் அப்படியே முகத்தை துடைக்கக் கூடாது; நனைத்துதான் துடைக்க வேண்டும்.
* கை, கால் நகங்களை, “வி’ வடிவத்தில் வெட்டாதீர்கள்; உடைந்து விடும். ரொம்பவும் ஒட்ட, ஒட்ட வெட்டவும் கூடாது. கீழே சதை நோக்கி வளர ஆரம்பித்து விடும்.
* நகத்தால் வெறுமனே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க முயலக் கூடாது. நகத்தைச் சுற்றி டிஷ்யூ பேப்பரை அல்லது மெல்லிய துணியை விரலில் சுற்றிக் கொண்டு தான் நீக்க வேண்டும்.
* பழுத்த பருவையும், வெறும் விரல்களால் அழுத்தக் கூடாது. பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை விரலில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
* வெறும் காலுடன் சகதியில் அல்லது ஈரத் துணியில் அதிக நேரம் இருக்கக் கூடாது. சேற்றுப்புண் மாதிரி நோய் தொற்று ஏற்படும். பாத வெடிப்பின் வழியாகவும் கிருமிகள் உடம்பினுள் செல்லும்.
* வறண்ட தோல் உடையவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு, முகம் கழுவக் கூடாது. பால் அல்லது தயிர் தடவியோ அல்லது பேஷ் வாஷ் உபயோகித்தோ முகம் கழுவலாம்.
* முகத்துக்கு மேக்-அப் போடும் போதும், பேஸ்பேக் போடும் போதும் கழுத்தை கவனிக்காமல் விடக் கூடாது. முகமும், கழுத்தும் தனித்தனியான கலர்களில் தெரியும்.
* ஒவ்வொரு முறை நகரத்துக்கு பாலிஷ் போடும் போதும், இடையே ஒரு நாள், நகம் சுவாசிக்க ஓய்வு தரவேண்டும். இல்லையெனில், நகம் மஞ்சள் கலராகிவிடும்.

மஞ்சளின்மகிமை


 

.எதாவது புது உடை எடுத்தல் அதிலும் மஞ்சள் இட்டு உடை அணிவது வழக்கம்.மஞ்சள் அதிகம் விளைவிக்க படுவது ஈரோடில் தான்.
*புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.
*மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கக் கூடிய நிறமாகவும், அனைவருக்கும் ஏற்றதாகவும் அமைந்திருப்பதால் அனைவருக்கும் மஞ்சளைப் பிடிக்கின்றது. மஞ்சளில் பலவகை காணப்படுகின்றது. அவற்றில் பிரதானமானவை.பொதுவாக மஞ்சள் அனைத்து சரும நோய்களுக்கும் பயன் தரக்கூடியது.
*இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை 10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வர எத்தகைய உள்மூலமும் வெளிமூலமும் குணமாகும். தீராத பொடுகு, பேன் தொல்லைகளுக்கு மஞ்சள், வேப்பந்துளிர், குப்பைமேனி ஆகியவற்றை அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர நீங்கும்.
*பெண்களின் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பருகிட மாயமாய் மறைந்திடும்.மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது.
*மஞ்சள் புண்ணுக்கு மேல் பூசுவதற்கு சிறந்த மருந்தாகும். கட்டி பழுத்து உடைய, வெட்டுக்காயம், உள் காயம், தீக்காயம், சேற்றுப்புண், நகச்சுற்றி, தலையில் காயம், நரம்பு சிலந்தி போன்ற அனைத்திற்கும் வெளிபூச்சு மருந்தாக பயன்படுத்திடலாம். மஞ்சளை சுட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினால் மூக்கடைப்பு நீங்கும்.
*பசும்பாலுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகினால் வறட்டு இருமல் நீங்கும். கஸ்தூரி மஞ்சள், புதினா, கருந்துளசி, உப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி பல் பொடி போல உபயோகித்தால் பல்வலி நீங்கும். குழந்தைகளின் வயிற்றுப் போக்கின் போது மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கும் நீங்கும் உடலும் வளம் பெறும்.


Thursday, 24 November 2011

Hard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி?


 

வைப்பது எளிது. டிரைவை மறைத்து வைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் இப்பதிவில் சற்று எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.

வழிமுறைகள் :

 • windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "gpedit.msc" என டைப் செய்து group policy editor ஐ திறக்கவும்.
  • group policy editor ஐ திறந்ததும் User Configuration > Administrative Templates > Windows Components ஊடாக சென்று Windows Explorer ஐ கிளிக் செய்யவும்.
  • இப்போது வலது பக்க திரையில் "Hide these specific drives in my computer" என்ற வரிசையை கண்டுபிடித்து அதனை இரண்டு தடவை கிளிக் செய்வதன் மூலம் அதன் Properties ஐ திறவுங்கள்.


 • Properties இல் "enabled " என்பதை தெரிவு செய்த பின்னர் "Restrict All Drives" என்பதை கிளிக் செய்வதினூடாக நீங்கள் மறைக்க வேண்டிய டிரைவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக drive D ஐ மறைப்பதாக இருந்தால் "Restrict D drive only" என்பதை தெரிவு செய்யுங்கள். இப்போது ok ஐ கிளிக் செய்த பின் group policy editor லிருந்து வெளியேறுங்கள்.
  அவ்வளவுதான். இப்போது My Computer ஐ திறந்து டிரைவ் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். • 40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்?

   


  பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்குகிறது.
  பெண்களுக்கு மாத விடாய் நின்ற பின்னரும், ஆண்களை வயோதிகத்திலும் அச்சுறுத்தும் நோய், எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்). எலும்புகள் வலு விழப்பதால் நாம் அன்றாட வேலைகளை செய்யும்போது கூட, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டால், நமது இயக்கம் முடக்கப் படுகிறது. எனவே, எலும்பு வலுவிழத்தல் நோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, உரிய நிவாரணம் பெறுவது அவசியமாகிறது.
  எலும்புகள் திரட்சியாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் வரை தான் வலுவாக இருக்கும். எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிப் பதற்கு, கால்சியம் சத்து மிக அவசியம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் சத்தை உட்கிரகிக்க, எலும்பு செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, இயல்பான எலும்புகளை உருவாக்க, வைட்டமின், “டி’ இன்றியாமையாதது.
  எலும்பு ஓர் இயக்காற்றல் கொண்ட உயிருள்ள திசு. நமது உடல் இடை விடாது, புதிய எலும்பை உருவாக்குகிறது. பழைய எலும்பை நீக்குகிறது. குழந்தைப் பருவத்தில், உடலில் இருந்து நீங்கும் எலும்பை விட, புதிதாக உருவாகும் எலும்பு அதிகம். இதனால், எலும்பு வளர்கிறது. ஆனால், 40 வயதுக்கு மேல், புதிதாக உருவாகும் எலும்பை விட, உடலில் இருந்து கழியும் எலும்பு, அளவில் அதிகமாக இருக்கும். இதனால் எலும்பின் திரட்சி, அடர்த்தி குறைந்து வலுவிழக்கிறது. இதுவே ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்பு வலுவிழத்தல் நோய்) என அழைக்கப் படுகிறது.
  நாற்பது வயதுக்கு பின் ஆண், பெண் இருபாலாருக்கும், எலும்பு அடர்த்தி குறையத் துவங்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, எலும்பு அடர்த்தி வேகமாக குறையத் துவங்கும்.
  காரணம் என்ன?: பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) உடலில் எலும்புகளை உருவாக்க துணைபுரிகிறது. எலும்புகள் இளம் வயதில் அதிக அடர்த்தியாக இருந்தால், வயதாகும் நிலையில், எலும்புகள் மெதுவாக வலுவிழக்கும். ஆனால், இளமையில் எலும்பின் அடர்த்தி போதுமான அளவு இல்லையெனில், 40 வயதை கடக்கும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும்.
  எலும்பு வலுவிழப்பதற்கு பொதுவான காரணங்கள்
  *பெண்ணாக இருப்பது.
  *ஆசிய இனத்தவராக இருப்பது.
  *மெலிந்த மற்றும் சிறிய உடலமைப்பு.
  *பாரம்பரியம்.
  *புகை பிடித்தல்.
  *மது அருந்துதல்.
  *உடற்பயிற்சி இல்லாமை.
  *உணவில் மிக குறைவான கால்சியம்.
  *உணவிலிருந்து ஊட்டச் சத்துகள் சரியாக உறிஞ்சப்படாமை.
  *பெண் ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன்) குறைவாக சுரத்தல்.
  *மாதவிலக்கு இல்லாத பெண்கள்.
  *மூட்டு அழற்சி, நாட்பட்ட கல்லீரல் நோய்கள்.
  *அதிகமாக தைராய்டு சுரத்தல்.
  *வைட்டமின், “டி’ பற்றாக்குறை.
  அறிகுறிகள்: ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இருக்காது. ஆனால், எலும்பு வலு குறையக் குறைய அறிகுறிகள் தெரியும். முதுகு வலி, உயரம் குறைதல், கூன் விழுதல், முதுகெலும்பு, மணிகட்டு, இடும்பு எலும்பு அல்லது மற்ற எலும்புகளில் முறிவு ஏற்படுதல்.
  இருமினால் கூட முறியும்… எலும்புகள் வலு விழந்து மிகவும் பலவீன மடைந்து விட்டால், சிறு உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். கனமாக பொருள்களை தூக்கினால் கூட, எலும்பு முறியும் ஆபத்துண்டு. சிலருக்கு இருமும்போது கூட எலும்பு முறிவு ஏற்படும். வழக்கமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், சிறிது நாள்களில் எலும்பு வளர்ந்து வழக்கமான நிலையை அடையும். ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்பட்டு, எலும்பு முறிந்தால், எலும்பு சேர்ந்தால் கூட மீண்டும் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்துள்ளது. முதுகெலும்பில் எலும்பு முறிவு ஏற்படும்போது , முதுகுத் தண்டின் எலும்பு உயரம் குறை கிறது. இவை அழுத்த எலும்பு முறிவுகள் என்றழைக்கப்படுகின்றன. முதுகெலும்பில் ஏற்படும் முறிவு கூன் போட காரணமாக அமைகிறது. பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்கு கிறது.
  பரிசோதனைகள்: ஆஸ்டியோபோரோசிஸ் நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது முக்கியம். பெண்கள் மாதவிடாய் நிற்கும் முன், பரிசோதிப்பது நல்லது. பாரம்பரியத்தில் யாருக்காவது நோய் இருந்தால், எலும்பின் அடர்த்தியை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலும்பு அடர்த்தியை கொண்டு, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகளை கண்டுபிடித்து விடலாம். “டூயல் எனர்ஜி எக்ஸ்-ரே அப்சார்ப்ஷியோமெட்ரி’ சோதனை மூலம் எலும்பு அடர்த்தியை சரியாக கணக்கிடலாம். சாதாரண எக்ஸ்-ரே மூலமும் கண்டுபிடிக்க முடியும். ஆனால், 30 சதவீத பாதிப்புக்கு பிறகே, எக்ஸ்-ரே மூலம் அறிய முடியும். பாரம்பரியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், முன்னதாகவே மாதவிடாய் வந்தவர்கள், மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எப்படி?: நம் உடலில் போதிய அளவு கால்சியம் உள்ளதா எனத் தெரிந்து, குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பால், முட்டை, பச்சை காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் 4 டம்ளர் குடிப்பதால், 1,200 மி.கி., கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது.
  உணவில் உள்ள கால் சியம் சத்தை கிரகித்து கொள்ள வைட்டமின் “டி’ அவசியம். வைட்டமின் “டி’ சத்தை சூரிய ஒளியிலிருந்து நம் உடல் கிரகித்துக் கொள்கிறது. அதுதவிர முட்டையின் மஞ்சள் கரு, கடல் மீன், ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் “டி’ உள்ளது. எலும்பை வலுவாக்க உடற்பயிற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் நோய் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் அறிவுரைப்படியே உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்.
  டாக்டர் ராஜேஸ்வரி,
  எலும்பு மற்றும் மூட்டு நோய் சிகிச்சை நிபுணர்,
  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை

  வேகமான இயக்கம் – எது உண்மை?


  பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது நம் அனைவரின் இலக்காக எப்போதும் உள்ளது. இது குறித்து பல கருத்துக்களும், இலவச ஆலோசனைகளும் நமக்கு இணையத் திலும், நண்பர்களி டத்திலும் கம்ப்யூட்டர் இதழ்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் வழக்கமாக நமக்குக் கிடைக்கும் சில செய்திகளை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கையில் பல தகவல்கள் ஆதாரமின்றி இருப்பதாகவே தோன்றுகிறது. அவற்றை இங்கு காணலாம்.
  1. அதிக ராம் மெமரி வேகத்தை அதிகரிக்கும்: இது உண்மையே; ஆனால் இப்போது அல்ல. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி இயக்கங்களில் இது உண்மையே. இப்போது வரும் கம்ப்யூட்டர்கள் எல்லாம், குறைந்தது 2ஜிபி ராம் மெமரியுடன் வருகின்றன. இது நம் வேலைகளுக்கு போதுமானது. மேலும் ராம் மெமரியை அதிகப்படுத்துவதனால், குறிப்பிடத்தக்க அளவில் வேகம் அதிகரிக்காது என்பதே உண்மை. ராம் மெமரியின் மொத்த அளவு எவ்வளவு என்பதைக் காட்டிலும் அது எப்படி பல அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கிடையே பிரிக்கப்படுகிறது என்பதே மிக முக்கியம். இரண்டு அல்லது மூன்று வழிகளுடன் குறைந்த அளவேயான ராம் மெமரி, ஒரு வழியுடன் அதிக அளவு ராம் மெமரியைக் காட்டிலும் வேகமாகவே இயங்கும்.
  2. அதிக core கொண்ட சிப் – அதிக வேகம்: பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளுக்கு, Two cores சிப்களே போதுமானது. இன்னும் அதிகமான cores அடங்கிய சிப்களை வாங்குவது பணத்தை வீணாக முடக்குவதே ஆகும். மிகவும் கணிப்புகள் அல்லது பன்முறை இயக்கங்கள் கொண்ட அப்ளிகேஷன்களை அடிக்கடி பயன் படுத்தினால் மட்டுமே நமக்கு அதிக cores கொண்ட சிப் தேவை.
  3. ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் இயக்கத்தினை நிறுத்து: மிகவும் வேகமாக உங்கள் சிபியு இயங்க வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் இயக்கங்களை நிறுத்தி வைப்பது நல்லது என்று பலமுனை அறிவுரைகள் கிடைக்கின்றன. இதுவும் பழைய கம்ப்யூட்டர்களுக்கே பொருந்தும். ஆனால் இப்போது வரும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் மல்ட்டி-கோர் (multicore processor) ப்ராசசர்கள் இணைக்கப்பட்டு, அவை மிக அதிகமான வேகத்துடன் இயங்குவதால், இந்தப் பிரச்னை தலை எடுப்பதில்லை. எனவே மேலே கூறப்பட்ட புரோகிராம்கள் எந்நேரமும் பின்னணியில் இயங்கினாலும், வேகம் பாதிக்கப்பட மாட்டாது. ஒரே நேரத்தில், பல்வேறு பணிகளைச் சமாளிக்கும் வகையில் புதிய ப்ராசசர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.
  4. ரெஜிஸ்ட்ரியின் அதிக பட்ச திறன் தரும் புரோகிராம்கள்: ரெஜிஸ்ட்ரியைச் சீரமைத்துத் தரும் புரோகிராம்களை இயக்கினால், கம்ப்யூட்டரின் இயக்க வேகம் கூடும் என்று ஒரு கூற்றும் உண்டு. பழைய கம்ப்யூட்டர் களில் கூட இந்த புரோகிராம்களினால், மிகக் குறைந்த அளவிலேயே வேகம் கூடுகிறது. புதிய கம்ப்யூட்டர்களில் இந்த புரோகிராம் களினால், எந்த வகையிலும் வேகம் அதிகப்படுத்தப்படுவதில்லை. ரெஜிஸ்ட்ரியின் தேவையற்ற வரிகளை நீக்குவது, ரெஜிஸ்ட்ரி புரோகிராமின் அளவினை வேண்டுமானால் குறைக்கலாம்; கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்துவதில்லை.
  5. பிரவுசர் ஹிஸ்டரியை, கேஷ் மெமரியை காலி செய்திடுக: இது எந்த வகையிலும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்தப் போவதில்லை. பிரவுசர் ஹிஸ்டரியை நீக்குவது, நம் பிரவுசிங் குறித்த பதிவுகளை நீக்கும். குக்கீஸ் மெமரியில் இடம் பிடிப்பதில்லை என்பதால், அவற்றை நீக்குவதும் வேகத்தினைத் தராது. கேஷ் மெமரியை நீக்குவது வேகத்தை அதிகப்படுத்தாது; மாறாக, நம் பிரவுசிங் வேகத்தை மந்தப்படுத்தும். ஏனென்றால், பிரவுசர், அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்ட இணைய தளங்களிலிருந்து இறக்க வேண்டியதிருக்கும்.
  அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் வேகத்தை அதிகப்படுத்தும் வகையில் கம்ப்யூட்டரில் எந்த ட்யூனிங் வேலையும் மேற்கொள்ள முடியாதா? என நீங்கள் கேள்வி கேட்கலாம். கீழே உறுதியாக வேகத்தினை அதிகப்படுத்தக் கூடிய சில வழிகள் தரப்படுகின்றன. இவை சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டவையும் கூட.
  1. செக்டிஸ்க் டிஸ்க் ரிப்பேர் புரோகிராம்: உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டமும், டேட்டாவும் உங்கள் ஹார்ட் ட்ரைவில் பதியப்பட்டு தங்குகின்றன. சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர், முறையற்ற வழியில் பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்கத்தை நிறுத்துவதாலும், மற்றும் சில காரணங்களினாலும், ஹார்ட் டிஸ்க்கின் சில இடங்களில், மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு, அந்த இடத்தில் உள்ள டேட்டா படிக்கப்பட முடியாமல் போகலாம். இந்த டேட்டா, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்பந்தப்பட்டது எனில், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்க சற்று அதிக நேரம் ஆகலாம். இது போன்ற பிரச்னைகளை டிஸ்க் செக்கிங் புரோகிராம் மூலம் சரி செய்துவிடலாம்.
  விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து சி ட்ரைவ் என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Tools டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் “Check now” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் உள்ள இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடையாளம் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். அதன் பின்னர் Start என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் ட்ரைவின் கொள்ளளவின் அடிப்படையில் இதற்குச் சற்று நேரம் ஆகலாம். உங்கள் சி ட்ரைவ் இந்த வகையில் ஸ்கேன் செய்யப்படுகையில், வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாறு ஸ்கேன் செய்யப்படும் முன், கம்ப்யூட்டர் தானாகவே ரீஸ்டார்ட் ஆகித்தான் செயல்படத் தொடங்கும். இதே போல மற்ற ட்ரைவ்களுக்கும் ஸ்கேன் மேற்கொள்வது நல்லது.
  இதே வேலையை ரன் கட்டத்தில், Chkdsk C: என்ற கட்டளை கொடுத்தும் மேற்கொள்ளலாம்.
  இந்த வழி தான் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பழுதடைந்த செக்டார் பிரிவுகளை சரி செய்திடும் சிறந்த வழி ஆகும்.
  2. தேவையற்ற டேட்டாவினை நீக்குக: பல புரோகிராம்களைத் தொடர்ந்து இன்ஸ்டால் செய்வதனால், நம் கம்ப்யூட்டரின் இயக்க வேகம் குறையத் தொடங்கும். எனவே நமக்கு ஒரு காலத்தில் தேவைப்பட்ட, இப்போது நாம் தொடாத புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது நல்லது. இதனை முறையான அன் இன்ஸ்டால் மூலம் செய்திட வேண்டும். இதனால் நீக்கப்படும் புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களும் நீக்கப்படும்.
  அடுத்தபடியாக, கம்ப்யூட்டர் தன் இயக்கத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளும் தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். இதற்கு System Tools என்ற போல்டரில், Accessories என்ற பிரிவில் இருக்கும் Disk Cleanup என்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்த ட்ரைவ் சுத்தப்படுத்தப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து இந்த கட்டளையை இயக்கலாம். இந்த செயல்பாடு, டிஸ்க்கை ஸ்கேன் செய்து, எந்த பைல்களை நீங்கள் நீக்கலாம் என்று உங்களுக்கு வழி காட்டும். நீங்களும் தேவையற்ற பைல்களைத் தேர்ந்தெடுத்து நீக்கலாம். இதன் மூலம் தேவையற்ற ஒரு புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கலாம்.
  3. ஹார்ட் ட்ரைவினை டிபிராக் செய்திடுக: டிஸ்க்கில் இருக்க வேண்டிய டேட்டா பைல்கள் குறித்து முடிவு எடுத்து, தேவையற்ற டேட்டாவின நீக்கிய பின்னர், Disk Defragmenter புரோகிராமினை இயக்கலாம். இதன் மூலம் பல இடங்களில் சிதறலாகப் பதியப்பட்ட பைலை ஒன்றிணைக்கலாம். இதனால் பைல் ஒன்றைத் தேடுவதன் நேரம் குறையும். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகரிக்கும். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து, சி ட்ரைவ் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Tools டேப்பில் கிளிக் செய்து “Defragment now” பட்டன் மீது கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் காணப்படும் இரண்டு செக் பாக்ஸ் களிலும் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
  இந்த செயல்பாட்டினை, நீங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கும் பைல்களின் எண்ணிக்கைகளுக்கேற்ப, வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை எனக் கால வரையறை செய்து கொண்டு மேற்கொள்ளலாம்.
  4. ட்ரைவர் பைல்களை மேம்படுத்துக: ஹார்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் சாதனங்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளின் அடிப்படையில், அவற்றை இயக்கும் ட்ரைவர் பைல்களை மேம்படுத்து கின்றன. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அனைத்திற்குமான ட்ரைவர் புரோகிராம்களை, அந்த நிறுவனங்களின் தளங்களுக்குச் சென்று அப்டேட் செய்திட வேண்டும்.
  5. சாலிட் ஸ்டேட் டிஸ்க்கினை பயன்படுத்துக: இந்த மாற்றத்தினை இப்போது அனைவராலும் மேற்கொள்ள முடியாது என்றாலும், இதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தற்போதைய சுழலும் ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக, அண்மைக் காலமாக, சாலிட் ஸ்டேட் டிஸ்க் என்று ஒரு வகை ஹார்ட் டிஸ்க் பழக்கத்திற்கு வந்து கொண்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், எத்தனை மாதங்கள், ஆண்டுகள் இதனைப் பயன் படுத்தினாலும், இதன் செயல் வேகம் குறையாது. டேட்டா டிபிராக் செய்தல் என்னும் பேச்சுக்கே இதில் இடமில்லை. மிகவும் குறைவான மின்சக்தியை இது பயன்படுத்துகிறது. இது செயல்படுகையில் இதன் எந்த பகுதியும் நகர்ந்து செயல் படுவதில்லை என்பதால், இந்த டிஸ்க் எந்தவிதமான அதிர்ச்சிக்கும் ஆளாவதில்லை.
  ஆனால், இதன் விலை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் அதிகம் என்பதால், பலரும் இதனை வாங்கிப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். ஒரு சிறிய அளவிலான (30 ஜிபி) சாலிட் ஸ்டேட் டிஸ்க் வாங்கி, கம்ப்யூட்டரை பூட் செய்திடப் பயன்படுத்தலாம்.
  மேலே சொன்ன கூற்றுக்களும் மேலாகச் சில அடிப்படையற்ற தகவல்களும், நிஜமான தீர்வுகளும் கம்ப்யூட்டர் இயக்க உலகில் உலவுகின்றன. இவற்றை அடையாளம் கண்டு, அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு இயங்குவது நல்லது.

  Tuesday, 22 November 2011

  வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் காஸ் ?


  பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோலிய பொருட்களை தயாரிக்க இந்திய விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் இயக்குனர் மதுக்கர் ஓம்காரநாத் கார்க் தலைமையில் விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.
  பிளாஸ்டிக்கை ரசாயன ஊக்கிகள் மூலம் பெட்ரோல், காஸ் என மாற்ற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் காஸ் அல்லது டீசல் மற்றும் காஸ் என தயாரிக்கலாம். 

  இந்த தயாரிப்பு பணி, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். இதுபற்றி ஆய்வு குழுவில் இடம் பெற்ற விஞ்ஞானி எஸ்.கே. சர்மா கூறுகையில் நமது விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மிகப் பெரிய சாதனைஎன்றார். இந்த திட்டத்துக்கு இந்திய இயற்கை எரிவாயு கழகம்(கெயில்) உதவ உள்ளது.


  எவ்வளவு கிடைக்கும்

  உலகம் முழுவதும் இப்போது ஆண்டுக்கு 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக்கில் உள்ள பாலியோலெபினிக், பாலி எத்திலீன் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல், டீசல், காஸ் தயாரிக்கப்படும். ஒரு கிலோ மூலப்பொருளில் 700 மி.லி. பெட்ரோல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும். அல்லது 850 மி.லி. டீசல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும்.