Monday, 18 April 2016

பானகம்

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.
இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள்.
வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.
நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

Best regards,

Saturday, 16 April 2016

தமிழ் வருடங்களின் வரலாறு

தமிழ் வருடங்களின் வரலாறு
*******************************************
தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை.
ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில் பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம் முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று சொல்லுவார்கள்.
நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை.
அவையாவன
1. பிரபவ வருடம்
2. விபவ வருடம்
3. சுக்கில வருடம்
4. பிரமோதூத வருடம்
5. பிரசோற்பத்தி வருடம்
6. ஆங்கீரச வருடம்
7. ஸ்ரீமுக வருடம்
8. பவ வருடம்
9. யுவ வருடம்
10. தாது வருடம்
11. ஈசுர வருடம்
12. வெகுதானிய வருடம்
13. பிரமாதி வருடம்
14. விக்கிரம வருடம்
15. விஷு வருடம்
16. சித்திரபானு வருடம்
17. சுபானு வருடம்
18. தாரண வருடம்
19. பாரத்திப வருடம்
20. விய வருடம்
21. சர்வசித்து வருடம்
22. சர்வதாரி வருடம்
23. விரோதி வருடம்
24. விகிர்த்தி வருடம்
25. கர வருடம்
26. நந்தன வருடம்
27. விஜய வருடம்
28. ஜய வருடம்
29. மன்மத வருடம்
30. துர்முகி வருடம்
31. ஏவிளம்பி வருடம்
32. விளம்பி வருடம்
33. விகாரி வருடம்
34. சார்வாரி வருடம்
35. பிலவ வருடம்
36. சுபகிருது வருடம்
37. சோபகிருது வருடம்
38. குரோதி வருடம்
39. விசுவாவசு வருடம்
40. பராபவ வருடம்
41. பிலவங்க வருடம்
42. கீலக வருடம்
43. சௌமிய வருடம்
44. சாதாரண வருடம்
45. விரோதிகிருது வருடம்
46. பரிதாபி வருடம்
47. பிரமாதீச வருடம்
48. ஆனந்த வருடம்
49. இராட்சத வருடம்
50. நள வருடம்
51. பிங்கள வருடம்
52. காலயுத்தி வருடம்
53. சித்தார்த்தி வருடம்
54. ரௌத்திரி வருடம்
55. துர்மதி வருடம்
56. துந்துபி வருடம்
57. ருதிரோற்காரி வருடம்
58. இரத்தாட்சி வருடம்
59. குரோதன வருடம்
60. அட்சய வருடம், என்பனவாம்.
வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்
*************************************************************
நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை.
365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது.
இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம்.
தமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது.

Best regards,

Friday, 15 April 2016

நட்சத்திர கிரிக்கெட்டை புறக்கணிப்போம்

ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கவும் அனைவரும் அறிந்து கொள்ள பகிருங்கள்(Share).
புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.
மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடு செய்ய என்ன செய்வான்? வங்கில் வாங்கிய கடனை செலுத்த என்ன செய்வான்? தன்னுடைய பணிச்சுமையை அதிகரிப்பான்.
ஆனால் நீங்கள்??
திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.
படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கைகடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.
ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய்சம்பாதித்து10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.
பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.
நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.
மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.
புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்றுவெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற பவருகிறார்கள்.
ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திரகிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
இந்த செய்தியை முடிந்த வரை அனைத்து
குழுக்களுக்கும் பகிரவும். அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா??

Best regards,