Wednesday, 23 March 2016

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

"திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த
விதிமுறையை நீக்கிவிட்டோம்," என்று சொல்கிறார் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர்...
அது தான் ஏற்கனவே தேடி புடிச்சு சினிமாவுலயும் பாடியாச்சு.....
அப்புறம் என்ன வெண்ணைக்கு " தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் " என்ற ஸ்லோகன், என்னவோ புது குரலை தேடற மாதிரி ...!!!
"தமிழகத்தின் மலையாள பின்னணி பாடகர்களில் ஒரு பிரம்மாண்ட குரலுக்கான தேடல் " ன்னு மாத்தி தொலைக்க வேண்டியது தானே....
"முன்னாடி மக்கள் ஓட்டு போட்டு வின்னரை தேர்ந்தெடுக்கிற விதிமுறை
இருந்துச்சு... ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கி
விட்டோம்.... 5/10 ரூபா செலவழிச்சு மக்கள் ஓட்டு போடணும்...
ஆனால் வெற்றியாளரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம்..." என்ற
அடுத்த உண்மையை விஜய் டிவி எப்போ சொல்ல போறாங்களோ...!!!
" 'விஜய் டிவி' தமிழகத்தின் பிரம்மாண்ட பொய்க்கான தேடல் "
Best regards,

Tuesday, 22 March 2016

200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்
பிளாஷ் ஸ்டோரேஜ் கருவி விற்பனையில் முன்னிலையில் இருந்து வரும் 'சான்டிஸ்க்' நிறுவனம் இந்தியாவில் புதிய ஒயர்லெஸ் பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
200 ஜிகாபைட் சேமிப்புத்திறன் கொண்ட இந்த பென்டிரைவை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவி என அனைத்துவிதமான டிஜிட்டல் கருவிகளுடனும் பயன்படுத்தலாம்.
பாஸ்வேர்டு பாதுகாப்புடன் வை-ஃபை மூலம் இந்த பென்டிரைவை கனெக்ட் செய்வதால் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக 'ஆப்' ஒன்றையும் 'சான்டிஸ்க்' வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கடைகளிலும் விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒயர்லெஸ் பென்டிரைவை பயன்படுத்த இண்டர்நெட் அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best regards,

Monday, 21 March 2016

அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது..../// அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது....
- பொன். ராதாகிருஷ்ணன், பாஜக.... \\\
.
.
அது என்ன பாரம்பரியம்....?!
எல்லா சாதி பயலும்,
கல்லு சிலைய தான் கும்பிடுறான்....
அந்த சிலைக்கு வாழைபழம் தேங்காய்
வச்சு தான் கும்பிடுறான்....
மஞ்சள் நூலை தான் தாலியா கட்டறான்....
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல தான்
மளிகை சாமான் வாங்குறான்....
ஒரே மாதிரி தான் வீடு கட்டறாங்க...
.
எல்லா சாதி பொம்பளையும்,
பட்டு சேலை தான் கட்டறா....
சுடிதார், லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் போடுறா.....
சரவணாஸ், போத்திஸ் சென்னை
சில்க்ஸ் தான் துணி எடுக்கறா...
கல்யாண், அலுக்காஸ், கஸானால
தான் நகை எடுக்கறா...
.
எல்லா சாதி ஆணும் பெண்ணும் ,
ATM ல தான் பணம் எடுக்கறாங்க....
28, 29,30,31, 1 தேதிகள்ல தான்
எல்லாருக்கும் சம்பளம் கிடைக்குது....
.
எல்லா சாதி ஜனங்களும்,
ஒரே ஒட்டு தான் ...
ஓட்டு போடற மெஷின் ஒன்னு தான்...
ஒரே பஸ்ல தான் போறாங்க...
ஒரே ரயில்ல தான் போறாங்க...
ஒரே விமானத்துல தான் பறக்குறாங்க....
ஒரே தியேட்டர்ல படம் பாக்குறாங்க...
ஒரே ஆஸ்பத்திரில தான் ட்ரீட்மென்ட் எடுக்கறாங்க...
ஒரே மாதிரி தான் சாகுறாங்க....
செத்தா கவர்ன்மெண்ட் சுடுகாட்டுல தான்
எரிச்சு சாம்பலா குடுக்கறாங்க...
எந்த சாதி பொம்பளையும் இப்போ
வெள்ளை புடவை கட்டறதும் இல்லை....
எந்த சாதி விதவைன்னும் கண்டுபிடிக்க முடியாது....
இப்டி பொறக்கறதுல இருந்து சாகுற
வரைக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை
முறை உள்ள ஜாதிகளில் என்ன பாரம்பரியம்
இருக்கு மிஸ்டர் பொன்னார்.....
வெறி புடிச்சு அலையிரதுலையா...?
சாதி சாதின்னு வெறி புடிச்ச நாயா
அடுத்தவங்களை கடிச்சி குதறது தான் பாரம்பரியாமா...?
நியாயமா இப்புடி வெறி புடிச்சி
அலையிறவனை மென்டல் ஹாஸ்பிடல்
தான் சேர்க்கணும் மிஸ்டர் பொன்னார்...
அதுக்கு உங்க அரசு மூலமா
நடவடிக்கை எதாவது எடுங்க...
அத விட்டுபுட்டு பாரம்பரியம், பாரம் இல்லாத
பரியம்ன்னு கத வுட்டுகிட்டு இர்க்காதிங்க...
 
Best regards,

Sunday, 20 March 2016

முடி கொட்டாம இருக்கணும்னா

முடி கொட்டாம இருக்கணும்னா இதை ஷேர் பண்ணுங்க!!!
கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும்
வளர:-
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்
.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...

Best regards,

குடும்ப அட்டை - ரேஷன் கடை

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது
இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசியம் நண்பர்களுக்கு பகிரவும்
நன்றி Ammu Kutty

Best regards,

Saturday, 19 March 2016

பெண்!!!

பெண்!!!
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.
கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………

Best regards,

Thursday, 17 March 2016

காய்கறி வாங்குவது எப்படி?காய்கறி வாங்குவது எப்படி?
இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்

Best regards,

Wednesday, 16 March 2016

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்
1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்
1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921
2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926
3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930
4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932
-->
5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936
6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936
7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937
8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937
9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939
10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947
11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949
12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952 -->
13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954
14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963
15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967
16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969
17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976
18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987
19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988
20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991
21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996
22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001
23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001
24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002 -->
25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006
26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011
27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்
-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.
மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்
மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்
: # தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் நம்மாழ்வார்
# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை
# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் தேவநேயப் பாவாணர்
# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
# இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரம்
# அறிவுடை நம்பியைப் பாடியவர் பிசிராந்ததையார் பாண்டியன
# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் பிசிராந்தையார்
# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் பிசிராந்ததையார்
# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை பதினோராம் திருமுறை
# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது தமிழ்
# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் மதுரைக் காஞ்சி
# பொருநராற்றுப்படையைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார்.
# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் கூத்தாற்றுப்படை
# முல்லைப்பாட்டைப் பாடியவர் நப்பூதனார்.
# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை
# உலா நூல்களுள் மிகப் பழமையைனது திருக்கைலாய ஞான உலா
# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு கலிவெண்பா

Best regards,

Tuesday, 15 March 2016

அரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்

அரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்
#. இந்தியாவின் தற்போதைய (2015), தலைமை தேர்தல் ஆணையர் யார்? - சையது நசீம் அகமத் ஜைதி
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யார்? - நீதிபதி சிரியாக் ஜோசப்
#. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் யார்? - விஜய் சர்மா
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் யார்? - ஸ்ரீ நசீம் அகமது
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் யார்? - பி.எல். புனியா
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் யார்? - ரமேஷ்வர் ஓரோன்
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் யார்? - லலிதா குமாரமங்கலம்
# இந்தியாவின் தற்போதைய (2015), அணு சக்தி கமி‘னின் தலைவர் யார்? - ரத்தன் குமார் சின்ஹா
#. இந்தியாவின் தற்போதைய (2015), விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் யார்? - ஏ.எஸ். கிரண் குமார்
#. இந்தியாவின் தற்போதைய (2015), ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவர் யார்? - தீபக் குப்தா
#. இந்தியாவின் தற்போதைய (2015), தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவர் யார்? - சாம் பிட்ரோடா
#. இந்தியாவின் தற்போதைய (2015), பல்கலைக்கழக மானியக் குழுத் (University Grants Commission) தலைவர் யார்? - வேத் பிரகாஷ் (Ved Prakash)
#. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் யார்? - அஷ்வின் பி. பாண்டியா
#. இந்தியாவின் தற்போதைய (2015), விண்வெளி பயன்பாடுகள் மையத்தின் (Space Application Center) நிர்வாகி (டைரக்டர்) யார்? - தபன் மிஸ்ரா
#. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்
#. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
#. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே
#. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி
#. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி
# சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி
#. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி
#. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி
#. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி
#. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
#. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே
=================================
* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
* கொசுக்களில் 3500 வகை உள்ளது
* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.
* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.
* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
*உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.
* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.
*1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
*சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.
# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்
# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை
# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்
# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
# இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
# அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன
# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்
# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
# பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
# முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
# உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

Best regards,

Monday, 14 March 2016

ஏன் செவ்வாய் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு தெரியுமா?

ஏன் செவ்வாய் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு தெரியுமா?
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ பலரும் வருவோம்.
இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.
துர்கை மற்றும் லட்சுமி தினம்
இப்பழத்திற்கு பின்னணியில் வேறு பல உண்மைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
செலவு கூடாது
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.
வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
துரதிர்ஷ்டம்
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிழமை துர்கை மற்றும் லட்சுமிக்கு உரியது என்பது மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஜோதிடத்தின் படி…
இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. ஒருசில லாஜிக்குகளைக் கொண்டு ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனராம். செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறாராம். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
மற்றொரு ஜோதிடர் கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்வடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதுப் பற்றி எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருகின்றனர்.

Best regards,

Saturday, 12 March 2016

மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு

மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு - See more at: http://cineithal.com/newsdetail/2699#sthash.SE4se68A.dpuf

கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

ஆசிரியைமாணவர் மாயம்
நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர், கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014–ம் ஆண்டில் 6 மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். எல்.கே.ஜி. வகுப்புக்கு பாடம் நடத்தினார். அதே ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. எம்.எஸ்சி. பட்டதாரியான கோதைலட்சுமிக்கு, செங்கோட்டை அருகில் உள்ள காலாங்கரை சொந்த ஊர் ஆகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31–ந்தேதி கோதைலட்சுமி திடீர் என்று மாயமானார். அவரை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், அவரைப் பற்றி தகவல் தெரியவராததால், தந்தை கேசரி செங்கோட்டை போலீசாரிடம் புகார் செய்தார்.

கோதைலட்சுமி மாயமான நாளில், 10–ம் வகுப்பு மாணவர் ஒருவரும் மாயமானார். இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசில், புகார் செய்யப்பட்டது.

காதல்
இருவரும் மாயமானது குறித்து 2 போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், ஆசிரியை கோதைலட்சுமி வேலைபார்த்து வந்த, அந்த பள்ளிக்கூடத்தில்தான் அந்த மாணவரும் 10–ம் வகுப்பு படித்து வந்தார் என்ற விவரம் தெரியவந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்து வந்த அந்த மாணவரும், ஆசிரியை கோதைலட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பள்ளிக்கூட இடைவேளை நேரங்களில் இருவரும் சந்திப்பது, வெளியிடங்களில் சுற்றித்திரிவது என்று இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியையுடன், மாயமாகி விட்டார்.

தென்காசி பகுதியில் இருந்து கிளம்பிய அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் என அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வைத்து இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

ஐகோர்ட்டில் மனு
இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில், அந்த மாணவரின் தாயார் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவரையும், ஆசிரியை கோதைலட்சுமி ஆகிய 2 பேரையும் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் மீட்பு
இந்தநிலையில் திருப்பூர் பகுதியில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து, அவர்களை பிடித்தனர்.

அந்த மாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும், ஆசிரியை கோதைலட்சுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கோதைலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கோர்ட்டில் ஆஜர்
அங்கிருந்து இருவரையும் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மாலையில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஆசிரியை–மாணவர் மாயம்

- See more at: http://cineithal.com/newsdetail/2699#sthash.SE4se68A.dpuf