Wednesday 29 October 2014

தேவர் திருமகன் - பசும்பொன் உ.முத்து ராமலிங்க தேவர்

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண்களாக போற்றி வளர்த்திட்ட பசும் பொன் உ.முத்து ராமலிங்க தேவரின் 106 வது ஜெயந்தி விழா இன்று ..

தேவர் திருமகன் 30-10-1908 அன்று பிறந்தார்
தேவர் திருமனார் பிறவிலேயே புத்தர், வீரர் விவேகானந்தர், அருள்வள்ளல் இராமலிங்கர், இவர்களைப்போல இளமையிலேயே மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசையைத் துறந்தார்.

தன் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்கே அளித்தார்.
தன் மூச்செல்லாம், பேச்செல்லாம் இந்தியத் திருநாடு!
அதன் விடுதலை!
விடுதலை என்றே வாழ்ந்தார்!

அதற்காக அவர் சிந்திய ரத்தம் செய்த தியாகம் ஆயிரம்! ஆயிரம்!

அவர் இம்மண்ணில்வாழ்ந்த நாட்கள் 20,075.
சிறையில் இருந்த நாட்கள் 4,000. அந்த விடுதலை வேந்தர் இந்திய நாட்டின் விடுதலைக்காகச்சிறை சென்றார்!

விடுதலை பெற்ற இந்தியத் திருநாட்டில் இந்தியனின் நல்வாழ்விற்காக வாழ்ந்தார் தமிழ்ப் பண்பாட்டிற்காக வாழ்ந்தார், தெய்வீகத்திற்காக வாழ்ந்தார் 30-10-1963ல் இறைவனடி சேர்ந்தார் ஆம் இந்நாட்டில் கங்கையும் யமுனையும் பாயும் வரை தேவர் வாழ்வார் இம்மண்ணில் இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும் வரை தேவர் பெருமானின் புகழ் நிலைத்து நிற்கும்.


வாழ்க தேவர்! வளர்க அவர்புகழ்!! ஓங்குக உலகம்