Monday, 29 August 2016

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்

பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்
* வீடும் செல்வமும் தந்தையின் பரிசு, புத்தியுள்ள மனைவி கடவுளின் பரிசு.
* ஒரு வினாடியில் நாம் செய்யும் தவறு வாழ்நாள் முழுவதும் வேதனை தரும்.
* தெரிந்தது குறைவாக இருந்தாலும் அதை நீ நேசித்தால் உன்னை உயர்த்தும் அதுவாக.
* தெரிந்ததை விட தெரியாததில் ஈர்ப்பு சக்தி அதிகம் நீ அறியாமலேயே அதன் வலையில் விழுவாய்.
* தெரியாததை நம்புவதில் எந்த நன்மையும் இல்லை. தெரிந்த பின் நம்பிக்கையே வேண்டாம்.
* கோபம், பொறாமை, பொறுமையின்மை தன்னறிவற்ற மனிதன் தகுதியற்ற வெளிப்பாடு.
* தெளிந்தால் தெளிவு வரும், தெளிந்தபின் மகிழ்ச்சி வரும், மகிழ்ச்சியே நேசிக்கும் மனநிலை.
* பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம், அலட்சியம் செய்தால் எதிரியை விட உயர்ந்தவர்களாவோம்.
* பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைகளில் உங்களுக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு .
* பலவீனம், பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள்

Best regards,

Sunday, 28 August 2016

கல்வி உதவி தேவை....!!!

கல்வி உதவி தேவை....!!!
வணக்கம் சகோதர சகோதரிகளே.....
தயவு செய்து படிக்கவும்...!!!
கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு வரும் ஒரு பெண்ணின் கல்வியை மீட்க கோரி உதவி கேட்டு நிற்கின்றோம்.
இவள் பெயர் "தெபொரல்" தற்போது வேலூர் மாவட்டம், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கல்லூரியில் B.Com (CA) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கூலி தொழில் செய்து வரும் தந்தையால் வரும் வருமானம் வீட்டு வாடகை , குடும்ப செலவு , மேலும் மற்றும் தம்பி சாமுவேல் அடிப்படை கல்வியை பூர்த்தி செய்யவே சரியாக உள்ளது.
தெபோரல் ஒருவரின் உதவியால் தான் தன் மேற்படிப்பை தொடர்ந்தார். முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் அவரின் உதவியுடன் கட்டப்பட்டது ஆனால் அவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறைவனடி சேர்ந்தார்.
தற்போது அவரின் இழப்பு தெபோரல் படிப்பை பாதித்துள்ளது.
இரண்டாம் ஆண்டு தந்தையின் கல்விதுறையில் மன்னிப்பு கடிதம், மன்றாடி கேட்டதாலும் மேலும் மாணவியின் நல்ல சதவீத மதிப்பெண்களை கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதியளித்தது.
இப்போது மூன்றாம் ஆண்டு கட்டணம் செலுத்தினால் தான் தேர்வு எழுத முடியும் முழு தொகையும் செலுத்தினால் தான் சான்று பெற முடியும் என்ற கட்டாயத்தில் நிற்கின்றனர்.
இரண்டு வருட கல்வி கட்டணம் நிலுவையில் உள்ளது மொத்த தொகை -/60000 ரூபாய்
நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாயும் தெபோரல் - கு உதவியாக இருக்கும்.
உங்களின் உதவி ஒரு பரம்பரையை வாழ வைக்கும்.
ஒரு குடுத்தின் சூழ்நிலையை மாற்ற உதவும்.
வாழ்வளிக்க ஆதரவு தாருங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அழிந்து வரும் கல்வியை உயிர்பிழைக்க செய்யும்.
இத்தகவல் முற்றிலும் உண்மை ஆதாரத்திற்காக கல்லூரியில் பெற்ற அனைத்து ஆதாரங்களின் சான்றுகள் இணைத்துள்ளேம்.
மேலும் பாதுகாப்பு அடிப்படையில் மாணவியின் புகைபடம் தவிர்கப்பட்டது.
வீட்டு முகவரி:-
D.Stanley, 4/37,Indira Nagar, New Street, Velam-632501
கல்லூரி முகவரி:-
ASM Women's College , Arcot - Arani Main Road , Villapakkam- 632521
வங்கி கணக்கு விவரங்கள்:-
Indian bank
name; D.Stanley A/c number :782997058 IFSC Code: DIB00A018
branch: Ammoor
மேலும் விவரங்களுக்கு:-
கல்லூரி நிர்வாகம்:- 9894280109
தந்தை:- ஸ்டான்லி - 9626091593
கூடுதல் தகவல்களுக்கு:-
இமயம் ஃபவுண்டேஷன்
7373337738/ 9500852632
தயவு செய்து அனைவரும் ஒன்று சேர்ந்து கை கொடுப்போம் மாணவியின் படிப்பை தொடர செய்வோம்.
வாழ்க வளமுடன்...!!!

Best regards,

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…….
வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.
அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.
புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும்.
அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.
பேசிக்கொண்டே நடப்பது,
பேச்சின் மூலம் அன்பை,
நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும்.
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும்.
இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.
உன் அழகு உருவத்தில் இல்லை,
மனதில்தான் இருக்கிறது,
உனது பேச்சுதான் உனக்கு அழகு,
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்
Best regards,

Tuesday, 23 August 2016

காமம்

காமம் இயற்கை உணர்வு என்பதை மறுத்து சமூக அறங்களுக்குள் சேர்க்கப்பட்ட போதே அது வக்கிரமாக மாற தொடங்கிவிட்டது.
எதிர்பாலினருடன் பேசுவதையே மாபெரும் கிளர்ச்சியாக நினைக்கும் ஒரு தலைமுறையே உணர்வு சிக்கலில் நிற்கிறது. இதில் ஒரு படி மேலே போய் பெண்ணிடம் எதையும் பேசுபவன் ஆண்மைமிக்கவனாக, பிற ஆண்கள் பொறாமைபடுவார்கள் என எண்ண தொடங்கியதும், எண்ணியதும் அதை பெருமையாக பீற்ற தொடங்கியதும் அந்த தலைமுறையில் தான். பெண் என்பவள் எப்படியும் அடையும் பொருளாக உருமாற தொடங்கியதும் அங்கே தான்.
சர்வ சாதாரணமாக ஆண் பெண் பழகி இன்னும் சொல்லபோனால் கிணற்றடியில், ஆற்றில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ஆணும், ஒரு பாவாடையை கட்டி கொண்டு பெண்ணும் ஆளுக்கொரு பக்கம் குளித்த போது இல்லாத வக்கிரம் இன்று பாத்ரூமில் குளிக்கும்போது தலைவிரித்தாடுகிறது.
மிக சாதாரண விஷயத்தை சினிமா ஆபாசமாக்கியது ஒருபுறமென்றால் மறுபுறம் ஆபாசமான பல விஷயங்களை ஹீரோயிசமாக்கியது.
பெண்ணுடன் , பேசுவதே சாதனையாக கருதும் மனதை ஆண்களும், ஆண்கள் பேசினாலே அது காதல் என்றும் (பெண் காமம் என்று கூட நினைக்கமாட்டாள், காரணம் காமம் தவறு அதை பெண் பேச கூடாது) பெண் அர்த்தப்படுத்தி கொள்ளுமாறு ஒரு சமூக கட்டமைப்புக்குள் அத்தனை உணர்வையும் மூச்சு திணற வைத்து கொண்டிருந்தோம். திடீரென சமூக வலைத்தளம் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவை மூச்சு முட்டிக்கிடந்த உணர்வுக்கு வடிகால் அமைக்க பாலியலுக்கான வடிகாலாக ஆண் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த சிக்கல்களில் சிக்கி சின்னா பின்னமாவது தான் எதை தேடுகிறோம் என்று தெரியாமல் எதிலோ தொடங்கி எதிலோ சிக்கி கொள்ளும் இருபாலரும் தான். அதிலும் உணர்வு சிக்கலில் சிக்கி கொள்வது அதிகமாக பெண்களே. எப்போதும் ஆண்கள் தெளிவாக இருக்கிறார்கள் காமம் தான் தன் தேடல் என்று ஆனால் பெண்களால் காதல் தாண்டிய காமம் குற்றமாகவே பார்க்கப்படுவதால் அதிக மனச்சிக்கலுக்குள் வீழ்கிறார்கள்.
ஆண் மோசமானவன் என்பது அல்ல என் வாதம். சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்ளும் பெண்களை பற்றிய பதிவு.

Best regards,

Thursday, 11 August 2016

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்
உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். இங்கே ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள்.
அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள். ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும். ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா? மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள். ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.
ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை. எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும். இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும். இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும். நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.
‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள். ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது. ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும். ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும். ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.
உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது. ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம். அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும். உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்.

Best regards,

Wednesday, 10 August 2016

அடர்த்தியான கண் இமைகள் பெற மஸ்காரா பயன்படுத்துங்கள்:

அடர்த்தியான கண் இமைகள் பெற மஸ்காரா பயன்படுத்துங்கள்:

வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழிமுறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.
செயற்கை இமை ரோமங்கள்:
கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்:
கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.
எண்ணெய்கள்:
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும்.

Best regards,

Tuesday, 9 August 2016

விந்து உடனே வருகிறதா ..? வீண் கவலை வேண்டாம்..!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :
1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.
3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.
5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.
மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய திரி இது.
முதலில் உங்கள் பிரச்சினைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுய இன்பம் செய்துகொள்பவரா நீங்கள்..?
2. உடல்பயிற்கிகள் செய்யாதவரா நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல்பயிற்சியை செய்யாதவரா நீங்கள்..?
3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?
4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?
மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.
1. விந்து முந்தி வெளிய்யெறுதல்
2. விறைப்பின்மை
3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.
மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பி பி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.
* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
* சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
* புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.
* ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.
* ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.
* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.
* முறையற்ற திருட்டுத்தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும் போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.
* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக்குறித்து அஞ்சாமல் அமைதியான சூழலில் ஈடுபடுதல் நல்லது.

Best regards,

Monday, 8 August 2016

VERY VERY URGENT AND IMPORTANT MESSAGE!

 DENGUE FEVER

Best regards,

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.
👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
குறையும்.
👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.

Best regards,