Wednesday, 12 December 2018

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :
சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்குபஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*


Best regards,

Tuesday, 11 December 2018

மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).

மனோகர்   பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி

என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.

கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.


🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில்  நாம்  அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது

🔥மரணத்தை நான் நெருங்கும்  ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.


இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு  சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.

மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.

உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று  இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.

எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும்  நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்

எனவே நண்பர்களே, உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள் உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.

 பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.
                                -மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).

Best regards,

Sunday, 9 December 2018

இதுவும் கடந்து போகும்”

இதுவும் கடந்து போகும்” ...
................................................
ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது.
தொடர்ந்து புத்தரை நோக்கி,
“புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம்.
நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.
மௌனமாக சிரித்த புத்தர்,
“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்ள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.
“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.
அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..
ஆம்,நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சோர்ந்துவிட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில் வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவர்கள் இருக்கும்போது அவர்களை கொளரவிப்பீர்கள்..
அவர்கள் விலகும்போது பாதிப்படைய மாட்டீர்கள்.
எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்
உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.
“இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள்.
கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள்,
நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள்,
திசை தெரியாமல் இருப்பவர்கள் ,
அனைவரும் தினமும் இதை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.
வெற்றி நிச்சயம்…


Best regards,

Saturday, 8 December 2018

செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.

செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.
செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.
ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)
இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.
பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களைச் செய்யமுடியாது.
அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.
இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.
லேண்ட்லைனில், தரைவழி கம்பி வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே இதில் கிடையாது.
என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.
செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.
தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.


Best regards,

Friday, 7 December 2018

இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு........

இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு........

    ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.

15ம் நூற்றாண்டில் தற்போதைய ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி , கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.

பின்னர் கி.பி 1063ல் சோழ மன்னரான ராஜேந்திரசோழன் தனது பேரரசில் இணைத்தார். பின்னர் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520ம் ஆண்டில் விஜயநகர பேரரசன் நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

இரண்டு நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்சி புரிந்தனர். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் குடும்ப சண்டை காரணமாக இராமநாதபுரம் பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மன்னனின் உதவியுடன் 1730ம் ஆண்டு சேதுபதி சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னர்களின் ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைய துவங்கியது. இதனால் பாளையக்காரர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். இதில் சிவகங்கை மன்னரும், இராமநாதபுரம் சேதுபதியும் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்தனர்.

1741ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744ம் ஆண்டில் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795ம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதியை பதவியிறக்கம் செய்து விட்டு ராமநாதபுரத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர். 1803ம் ஆண்டு சிவகங்கை மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர்.

1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார். 1910ம் ஆண்டில் இராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இராமநாதபுரம் இராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களை கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மாவட்டம். (தற்போது சிவகங்கை மாவட்டம்)

2. ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், இராஜபாளையம் தாலுகாக்களை கொண்ட காமராஜர் மாவட்டம். (தற்போது விருதுநகர் மாவட்டம்) .

3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், இராமேஸ்வரம் தாலுகாக்களை கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.

இராமநாதபுரம் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் போது எஸ். குருமூர்த்தி கலெக்டராக இருந்தார். 1985ல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்த ஒரு கிராமம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. 1995ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகா, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாக்களாக பிரிக்கப்பட்டது.
1998ம் ஆண்டு இராமநாதபுரத்தில் இருந்த திருவாடானை தாலுகா சிவகங்கை மாவட்டதில் உள்ள தேவகோட்டை தாலுகாவிற்கு மாற்றப்பட்டது.1999ல் திருவாடானை தாலுகாவில் இருந்த வளனை என்ற கிராமம் சிவகங்கையில் சேர்க்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் உள்ள அரண்மனையில் இன்னமும் சேதுபதி ராஜாவின் வாரிசுகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனினும் பள்ளிகள் கல்லூரிகள், மருத்துவமனைகள் அமைத்து சேவை செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பள்ளிக்கு கல்வி கற்றுதர வரும் வெளிநாட்டவர் இந்த அரண்மனையில் தான் தங்குவர்.ராமேஸ்வரம் ராமநாதபுரத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த இடம் முக்கியமான புனித ஸ்தலமாக விளங்குகிறது. ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்படும். இராமநாதபுரத்திற்கு வைகை நீர் பாசனம் அளிக்கிறது.

Best regards,

Tuesday, 4 December 2018

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர் நினைவு தினம்

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர் நினைவு தினம் இன்று
அவரை பற்றிய ஒரு விரிவான பார்வை
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.
அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.
சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.
பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.
அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில் 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, 2. பாண்டியன் புத்தகசாலை 3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
சங்கம் தோன்றக் காரணங்கள்
முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழவுற்று சிதைந்தன. கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல்இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிகும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய பாண்டியத்துரைத் தேவர், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப்பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப்பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
சங்க நோக்கங்கள்
1. நான்காம் தமிழ்ச்சங்கம் பொழுது போக்குக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, அரசியல் செல்வாக்குப் பெறுதற்காகவோ அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.
2. அரசின் பொருட்கொடையையோ, பல்கலைக் கழகங்களின் நல்குதலையோ எதிர்பார்த்து தொடங்கப்பட்டதும் அல்ல.
3. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், முச்சங்கம் கண்டு முன்பு தமிழ் மொழி பெற்றிருந்த உச்ச நிலைக்கு மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நன்னோக்கோடும் உருவாக்கப்பட்ட சங்கமே நான்காம் தமிழ்ச்சங்கம்
தொடக்க நாளிலே உருவாக்கப்பட்ட சங்கத் தீர்மானங்கள்
நான்காம் தமிழ்ச்சங்கத் தொடங்க விழாவிற்கு மன்னர் பாசுகர சேதுபதியவர்கள் தம் பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தார். சேதுநாட்டு அவைப்புலவர்களும் பாண்டித்துரை தேவர் தம் அவைப் புலவர்களும் குழுமினர். பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை விழாவிற்கு வந்திருந்தனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் கண்டது. சங்கத் தொடக்க நாளிலேயே கீழ்க்காணும் “9 தீர்மானங்கள்” நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல்.
2. தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல்
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6. தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8. தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இந்த ஒன்பது நோக்கங்களை நிறைவேற்றத்தக்க ஏழு அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கின.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை.
2. பாண்டியன் புத்தக சாலை.
3. நூலாராய்ச்சி சாலை.
4. கல்விக் கழகம்.
5. தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்)
6. செந்தமிழ் என்னும் திங்களிதழ்
7. தமிழ்த் தேர்வு என்பவைகளாம்.
சேது சகோதரர்களின் கொடைகள்
ஒன்றுவிட்ட உடன் பிறப்புக்களான மன்னர் பாண்டித்துரையாரும் மன்னர் பாசுகர சேதுபதியவர்களும் இளம்வயிதலேயே தந்தையர்களை இழந்தபோதிலும் மனம் தளராமல் தமிழ்த் தொண்டாற்றத் துணிந்தனர். இன்று நான் காணும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம் போன்ற அனைத்துமே அவர்கள் தந்தருளிய கொடைகளே. வேந்தர் பாசுகரசேதுபதி சங்கத் தொடக்க நாளிலே 10000 வெண்பொன் வழங்கி வாழ்த்தினர். பாண்டித்துரைத் தேவர் தாம் குடியிருந்த மாளிகையையே சங்கத்திற்குத் தியாகம் செய்த்ததோடு மட்டுமல்லாமல் சங்கம் என்ற குழந்தை எந்தவிதக் குறையின்றி வளரத் தேவைபடும் அனைத்து வசதிகளையும் தம் சொந்தச் செலவிலேயே பராமரித்தார். சங்கம் என்றுமே சுயமாக தங்குதடையின்றி நடைபெறுவதற்கு தக்க வகையில் சில நிலையான அறக்கட்டளை பாண்டிய மன்னர் பாசுகர் சேதுபதியவர்கள், கடைச் சங்க பாண்டிய மன்னம் உக்கிரப் பெருவழுதி காலத்தில் கி.பி. 250ல் மறைந்த தமிழ்ச் சங்கம், 1901இல் பொன்பாண்டித்துரைத் தேவரால் மீண்டும் நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் உயிர்பெற்று எழுந்தது. நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, உயிர்கொடுத்து, உடல் வளர்த்து, கல்லூரி கண்டு, செந்தமிழ் என்னும் திங்களிதழ் பெற்று, தமிழ்மனம் வீச வீரநடை போடுகிறதென்றால் அது சேது சகோரதர்கள் வழங்கிய கொடைகளே.
இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம்
அன்று, அதாவது 1910 இல், எவ்வளவு சிறப்பாக இந்த நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டதோ அதே சிறப்புடன் அதே நோக்கங்களை நிறைவேற்றி, வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறிச் செல்கிறது. இன்று சங்கம் தொடங்கப்பட்ட அன்றே நிறைவேற்றப்பட்ட முதல் அய்ந்தாம் தீர்மானங்கள் உடனே நிறைவேற்றப்பட்டு, செந்தமிழ்க் கல்லூரியாகவும், செந்தமிழ் திங்களிதழாகவும் மலர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல தமிழ் அறிஞர்களையும், தமிழ் முனைவர்களையும், தமிழ் இலக்கிய மேதைகளையும் உருவாக்கி மகிழ்கிறது நான்காம் தமிழ்ச் சங்கம்.
தமிழ்ச் சங்க நிர்வாகங்களை, தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு கண்காணித்து வருகிறது. ஆட்சிக் குழுவின் தலைவராக – முகவை மன்னர் மாட்சிமை தாங்கிய திரு, இராசா நா .குமரன் சேதுபதியவர்களும், துணைத் தலைவராக திருமதி. இராணி இலட்சுமி நாச்சியார் அவர்களும் மாண்புமிகு அய்யா திரு. இரா. அழகுமலை அவர்கள் செயலாளராகவும் மற்றும் ஒன்பது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் பங்கேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகங்களை கல்லூரிக் குழு கண்காணிக்கிறது. கல்லூரிக் குழுவின் தலைவராக மாண்புமிகு டாக்டர் ந. சேதுராமன் அவர்களும், செயலாளராக மாண்புமிகு அய்யா திரு. இரா. குருசாமி அவர்களும் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. செந்தமிழ் திங்கள் இதழ் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
பாண்டித்துரைத் தேவர்கள் உருவச்சிலை
கொடைவள்ளல், சங்கம் கண்ட தமிழ்ச் செம்மல், மாண்புமிகு மன்னர் பாண்டித்துரைத் தேவரின் திரு உருவச் சிலை மீண்டும் அதே இடத்தில் 2007இல் சங்கம் நிறுவியது. சங்கத் தலைவர், துணைத்தலைவர், சங்கச் செயலர், சங்க ஆட்சிக்குழு, பொதுக்குழு, கல்லூரிக் குழு, கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆர்வத்தாலும் அயராத உழைப்பாலும் சிலை நிறுவப்பட்டதோடு மட்டுமல்லாமல், மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதைகளோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குழு
நான்காம் தமிழ்ச் சங்கவெளியீடாகிய செந்தமிழ் என்னும் திங்கள் இதழ், 1902 முதல் இன்று வரை மிகச்சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவ்விதழை சிறப்புடன் வெளியட ஆசிரியர் குழு ஒன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இக்குழுவில் தமிழறிஞர்களும், பெரும்புலவர்களும், பேராசிரியப் பெருமகளும், முனைவர் பெருமக்களும், மொழி ஆய்வாளர்களும், தமிழார்வளர்களும் பங்கேற்று தொண்டாற்றுகிறார்கள். தமிழ் அறிஞர் முனைவர் திரு. தமிழண்ணல், பெரும்புலவர் திரு. இரா இளங்குமரன், நா. பாலுசாமி, ம. ரா. போ. குருமசாமி, அ.அ. மணவாளன், கதிர் மகாதேவன் மற்றும் தமிழார்வளர்கள் ஆலோசகர்களாகவும் அவைப் புலவர்களாகவும் வீற்றிருக்கின்றனர்.
நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்களால் 1901 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் நூறு ஆண்டைக் கடந்து எட்டாம் ஆண்டில் நடைபயின்று கொண்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெறவேண்டிய நூற்றாண்டு விழா இவ்வாண்டு 2008ல் நடைபெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சங்க ஆட்சிக்கு குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா வெற்றிவாகை சூடட்டும். கொடை வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் புகழ் ஓங்கட்டும். நான்காம் தமிழ்ச் சங்கம் செழித்தோங்கி வளரட்டும்.
நாற்சங்கம் கண்ட செம்மொழி தமிழே நீ வாழ்க!

Best regards,

Monday, 3 December 2018

*"மனிதனின் வெற்றிகள்:"*

*"மனிதனின் வெற்றிகள்:"*
1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . .
4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .
8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . .
12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . .
18 − வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .
23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . .
25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . . .
30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . .
35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . .
45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . .
50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . .
55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . .
60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .
65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது . . .
70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . .
75 − வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . .
86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது . . .
*வாழ்க்கை என்பது ஒரு வட்டம். . .*

Best regards,

Saturday, 1 December 2018

ரொம்ப முக்கியமான சாக்கான விஷயம் ஒன்னு இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் பெரியது இருந்தாலும் படியுங்கள்

 ரொம்ப  முக்கியமான சாக்கான விஷயம் ஒன்னு இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் பெரியது இருந்தாலும் படியுங்கள்
__________

எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில்,  வயது 68 பழுத்த பழம் பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார், பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்ற வேலை, மனுஷன் லொக்கேசனை  பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை, சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் சுமார் மாதம் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை  சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்

இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது அப்படியே சொன்னேன் எங்க ஊரு திருச்சில புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு எப்பவுமே நடக்காத விசயமாக ,கடலே இல்லாத  திண்டுக்கள் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை  சொல்லி ஆச்சரிய படுத்தினார்.

ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன ரகம் எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல் என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வழியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார்.   அட என்னங்கசார்  புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது. ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு அதெப்படின்னு கேட்டேன்.

புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார். நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன்.   ஆமாம் கரெக்ட் புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார்..அங்கே எல்லாம் விவசாயம் தான். இப்ப தான் ஒரு ரெண்டு மூணு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்..  ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.     ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாசின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது. வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும் குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும்                   நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்.

வெப்பமான இடத்தை நோக்கி செல்லலும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரித்து  இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு.     நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீன்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற சாக் நியுசையும் சொன்னார்.             சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு சொன்னேன் சவூதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு பூலோக படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகா போவது இல்லை இது பாலை வனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.

அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் - நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து  அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லிள் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை ஒன்று கூட்டி பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.

எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சியம் கிடையாது, இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை .அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஸ் காரர் கூறியது சரியா என்று விளக்கவும்.

பதிவு எழுதி 10 மணி நேரம் கழித்து இடை செருகள்: இந்த பதிவை படித்த ஒரு மீடிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார் நாகபட்டினம் புயல், தனுஷ் கோடி புயல், தானே, நிஷா புயல் எல்லாம் எப்படி அதெல்லாம் இந்த மீத்தேன் வரதுக்கு முன்னாடியே வந்துடுச்சேன்னு. உடனே அவருக்கு போனை போட்டு கேட்டேன்

அந்த புயலுக்கும் இந்த புயலுக்கும் உள்ள வித்தியாசத்தயும் பாதிப்பையும் கவனிக்க சொன்னார் .   நாகபட்டினம் புயல் வந்த பொழுது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் சேதாரம் தனுஸ்கோடி ராமேஸ்வரம் தீவு மட்டுமே சேதாரம். கரையை கடந்த உடனே வலுவிழந்து நீர்த்து போய் விட்டது, ஆனால் இந்த கஜா புயல் கரைக்கு ஏறிய உடன் தான் முன்பு இருந்த வலுவை விட மேலும் மேலும் ஆக்ரோஷமாக கிட்ட தட்ட நான்கு ஐந்து மாவட்டங்களை துவம்சம் செய்து முக்கியமாக மீத்தேன் எடுக்கும் நில பரப்புகளான டெல்ட்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தமிழகத்தின் மைய பகுதியில் (திண்டுக்கல்) நிலை கொண்டு கொடைக்கானல் மலை பகுதியில் மோதி நீர்த்து போய் விட்டது.அங்கே கொடைக்கானல்  மலை இல்லாவிட்டால் இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்து என்றுமே  புயலுக்கு வாய்போ இல்லாத கோவையையும் பதம் பார்து இருக்கும் என்று அடித்து கூறுகிறார்.

Best regards,

Friday, 30 November 2018

அன்புள்ள நண்பர்களுக்கு , இது சற்றே பெரிய பதிவு , நேரம் ஒதுக்கி படிக்கவும் .

அன்புள்ள நண்பர்களுக்கு , இது சற்றே பெரிய பதிவு , நேரம் ஒதுக்கி படிக்கவும் .
ரேடியோ கண்டுபிடித்தது மார்கோனி இனி எவர் சொன்னாலும் அவர் தலையில் குட்டு வைத்து பெருமையுடன் கூறுங்கள் அதை கண்டுபிடித்தது எங்கள் இந்தியன் ஜகதீஷ் சந்திர போஸ் .
இவரின் வரலாறும் , மர்கோனியின் துரோகமும் ....
இன்று இந்த மாமனிதரின் பிறந்த நாள் .
ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும், வித்தியாசமான நபர். ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை
செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை
இங்கிலாந்துக்கு படிக்க அனுப்ப முடிவு செய்தார். கண்டிப்பாக சிவில் சர்வீஸ் வேலைக்கு தன் மகன் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். காரணம் அது எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மக்களுக்கு சேவை செய்யப்பயன்படும் மருத்துவம் படிக்க கொடுமையான வறுமைக்கு நடுவிலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்பினார். அங்கே போய் பிணவறைகளின் நாற்றம் பொறுக்காமல் இயற்கை அறிவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று போஸ் திரும்பினார்.
ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். இந்தியர்களை மனிதர்களாக நடத்தியவர் அவர். மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம்
தந்தார்கள்.இந்திய கல்வித்துறை பணிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்தார் ரிப்பன். கடும் போராட்டத்துக்கு பின் அவரை அப்பதவிக்கு கொண்டு வந்தார் ரிப்பன்.
முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் ; அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற
புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார். கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார் அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார்.
ஆனால்,அந்தக்கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில்
கொண்டுவந்தார் .
இன்னமும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து,மீண்டும் அதை திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து
மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று
அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.
ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடன்ட் செய்ய மறுத்தார் ; "என்
தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள்
எனக்கில்லை" என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை
பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. இந்த பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்கு பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாக சமாளித்தார். உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளை பற்றி தெரிந்தே இருக்கவில்லை என்று
அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாக சொன்னார் .
போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை அவர்கள்,
போஸ் தான் அதைக்கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று சொல்லுங்கள்

Best regards,

Thursday, 29 November 2018

வாழ்க்கை

எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது...

💗🙏🏻ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்...

💗👌🏻ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்...

💗👍🏻பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்...

💫🙏🏻ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்...

💗👍🏻ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது...

💗🤷🏻‍♂இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...

💶🤦🏻‍♂22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

💶👍🏻ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்...

👌🏻💗எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை...

🤷🏻‍♂சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்...

🤷🏻‍♂பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்...

🤷🏻‍♂👌🏻டால்ஸ்டாய் தனது 82 வது வயதில்
I Cannot Be Silent என்றார்...

🤷🏻‍♂🥧வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

🤗🥧எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான்...

🤷🏻‍♂👍🏻எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்...

🤷🏻‍♂👍🏻உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்...

💶🤷🏻‍♂யார் கண்டது, ?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!

🤷🏻‍♂🥧இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!

💫👍🏻எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...

😐💪🏻இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...

🤗💗அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்...

🤷🏻‍♂🥧தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்...

🤷🏻‍♂👍🏻ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது...

🤷🏻‍♂💵இது தான் வாழ்க்கை
இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
*மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...

Best regards,

Wednesday, 28 November 2018

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?
சனாதன தர்மம் சாஸ்திரம்.
ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.
👌👌👌👍🙏👍👌👌👌
எளிய முறையில் சரணாகதி விளக்கம்....🔑🗝📩
மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை
மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு
ஆனால்.....
வண்டிக்காரன்
உயிரில்லாத
வண்டியை....
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல
வேண்டும்...
என்பதை தீர்மானித்து,
வண்டியை
செலுத்துவான்.
எவ்வளவு தூரம்...
எவ்வளவு நேரம்...
எவ்வளவு பாரம்...
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!
அறிவிருந்தும்.....
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...
அதுபோல....
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி
இறைவன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்....
அவனே தீர்மானிப்பவன்
அவன் இயக்குவான்..
மனிதன் இயங்குகிறான்
👉 *எவ்வளவு காலம்..
👉எவ்வளவு நேரம்..
👉எவ்வளவு பாரம்..
தீர்மானிப்பது இறைவனே
இதுதான்
நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
டிசைன்..!
இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும்
அசைன்மென்ட்..!
இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..
இதை
உணராதவனுக்கு
அமைதி இல்லை.
இருக்கும் காலங்களில்
இனியது செய்வோமே!.
ஓம் நமசிவாய ஓம் சிவசிவ ஓம் ..

Best regards,

Tuesday, 27 November 2018

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.

பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்
ஒரு 🎈🎈
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில்
எழுதி முடித்தவுடன் ,

அதை இன்னொரு
அறையில் குவியலாக போட சொன்னார்.

இப்பொழுது
அந்த பேச்சாளர்,
 உங்கள் பெயர் எழுதிய
பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து
அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து
தேடினர் .

 ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து

தங்கள் பெயருக்குரிய 🎈பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
5 நிமிடம் கடந்த போதிலும்
 ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,

’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும்
எடுங்கள்,
அந்த பலூனில் 🎈யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’இது தான்
வாழ்க்கை.

எல்லோரும்
மகிழ்ச்சியை தேடுகிறோம்,

ஆனால்
அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.

*அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்*’......


Best regards,

Monday, 26 November 2018

முதல் ஐந்து முட்டாள்கள் யார்

முதல் ஐந்து முட்டாள்கள் யார்

நாட்டை  ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை  இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

‪ஆத்தீ‬ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

நண்பர்களே கோபம் வேண்டாம்..take it easy..

Best regards,

Sunday, 25 November 2018

இது தெரிஞ்சா MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டிங்க....!!!

இது தெரிஞ்சா MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டிங்க....!!!
No automatic alt text available.
கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பது போல நவீன கருவிகள் அன்று இல்லை.
எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி,
எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது.
அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலன்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள்.
இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.
எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை
எக்ஸ்ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும்.
இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை ஏற்படுத்துமாறு இந்த கருவி வடிவமைக்கப்படுள்ளது.
இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்புகளின் உயர்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.
இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார்.
எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது.
அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டான்களில் மின்சார சமிக்ஞைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது.
இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்களையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.
இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும்.
இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.
கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருங்கிணைத்து அதனை முப்பரிமாண படங்களாகத் தயாரித்து திரையில் காண்பிக்கும்.
எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.
இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார்
15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது.
காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று.
சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையும் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.
எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும்.
இதனால் காயம் ஏற்படும். சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்டிமெண்ட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.

Best regards,

Saturday, 24 November 2018

`சாதாரண காய்ச்சலென்று விட்டுவிடாதீர்கள்!' - பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அட்வைஸ்

`சாதாரண காய்ச்சலென்று விட்டுவிடாதீர்கள்!' - பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் அட்வைஸ்

மழைக்கால பாதிப்புகளான டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்கள் எளிதில் தாக்கும் பட்டியலில் குழந்தைகள் முன்னிலையில் இருக்கின்றனர்.
``குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கும் என்பதால் காய்ச்சல் பாதித்தால் அவர்களைத் தனிக்கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

``பன்றிக்காய்ச்சல் காற்றில் பரவும் தொற்று. அதனால் குழந்தைகளை அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் இருமும்போது தும்மும்போது அவர்களிடமிருந்து கிருமி பரவ வாய்ப்புள்ளது. பள்ளிக்குச் சென்று வந்ததும், வெளியே விளையாடிவிட்டு வந்தாலும் கை, கால்களைச் சுத்தமாக கழுவச் சொல்ல வேண்டும். பன்றிக்காய்ச்சலைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளன. ஆரம்பத்திலேயே மருத்துவர்களிடம் கொண்டு சென்றுவிட்டால் கூடுதல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் சாதாரண காய்ச்சல்தானே என்று பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது.

டெங்கு சாதாரண காய்ச்சல் போன்றுதான் இருக்கும். இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு காய்ச்சல் குறைவது போன்று இருக்கும். ஆனால், 99, 100 டிகிரி எனக் குறைவான காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் சில குழந்தைகளுக்கு உடலில் உள்ளுறுப்புகளில் ரத்தப்புள்ளிகள் ஏற்படும். ரத்தத்தில் தட்டணுக்கள் குறையும். அடுத்தகட்டமாக ரத்தக்குழாய்களிலுள்ள நீர் உடலுக்குள்ளேயே கசியத் தொடங்கிவிடும். அது 'டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' நிலை. மருத்துவரின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்தால் தீவிர சிகிச்சையின் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள குழந்தைகள் கை, கால்கள் வெளியே தெரியாமல் ஆடை அணிவது நல்லது. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களால் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்க முடியாது. அதனால் வீடுகள், பள்ளிகளின் அருகில் கொசு உற்பத்தியாகாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பிரச்னை இருந்தால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம். அதன் மூலம் பிற குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட வேண்டும்" என்கிறார் டாக்டர் ரெக்ஸ்.

Best regards,

Friday, 23 November 2018

மீன்டும் தெரிவிக்கின்றோம் - UPS

மீன்டும் தெரிவிக்கின்றோம்
UPS வைத்துள்ள அனைத்து மின் பயனீட்டாளர்களுக்கு மின்சார வாரியம் அன்பான வேண்டுகோள் 
தங்கள் வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு 
மின்வாரிய எர்த்துடன் இனணக்கப்பட்டு இருக்கும் மின்சாரம் இல்லாத போது தங்களது UPS முலம் மின்சாரம் தங்கள் வீட்டில் எரியும் போது
எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து நிறைய ஊழியர்கள் இறந்து உள்ளனர்
ஆகவே தங்கள் UPS ல் உள்ள எர்த் பயன்படுத்தி கொள்ள மின்கம்பத்திற்கு மின்சாரம் வராது
அல்லது மின்சாரம் இல்லாத போது MCB trip செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவிடுங்கள்
உயிர் பலியினை தடுத்திடுங்கள் 


Best regards,

கார்த்திகை தீப வழிபாடு ஸ்பெஷல்:

கார்த்திகை தீப வழிபாடு ஸ்பெஷல்:

22.11.18 பௌர்ணமி:

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த நாள், கார்த்திகை பௌர்ணமி தினமாகும்.

ஜோதிப் பிழம்பே மலையாக எழுந்தருளும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

23.11.2018 கார்த்திகை மகாதீபம் :

அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார்.

அருணாசலத்தில் அஷ்டலிங்க வழிபாடு

நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும்.  கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான்.  இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

01 இந்திர லிங்கம்: கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது.  அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

02 அக்னி லிங்கம்:  கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது.  எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.

03 எம லிங்கம்:  கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது.  அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.

04 நிருதி லிங்கம்:  கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது.  அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.

05 வருண லிங்கம்:.  கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார்.

அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

06 வாயு லிங்கம்:.    கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார்.  அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.

07 குபேர லிங்கம்:.    கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.

08 ஈசானிய லிங்கம்:  கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது.  இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
              திருச்சிற்றம்பலம் ..

Best regards,

Thursday, 22 November 2018

பக்திக்கு எல்லை எது ?

பக்திக்கு எல்லை எது ?
பக்திக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நம் முன்னோர்கள். வாழ்க்கையில் பக்திக்கு எல்லை என்பது எது வரை என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் அவர்கள். வரகுண பாண்டியன் என்ற மன்னன் சிவ பூஜையும், சிவ கைங்கரியமுமே தனது வாழ்க்கையின் பொருள் என வாழ்ந்து வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் திருவிடைமருதூர் சிவன்கோயிலுக்காக விளைந்த எள்ளை, கோயிலின் எதிரே காயவைத்திருந்தனர். ஒருவன் வந்து ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து வாயில் போட்டபோது, மன்னன் பார்த்துவிட்டான். ஆனால், எள்ளை அள்ளியவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதைச் சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தான்.
மன்னன் அவனை அழைத்து, "சிவாலயத்தின் எள்ளைச் சாப்பிட்டால் தண்டனை கிடைக்கும், தெரியுமா"? என்றான்.
"தெரியும்" என்று நிதானமாகச் சொன்னதுடன் கிடைக்கப் போகும் தண்டனையை அனுபவிக்கக் காத்திருந்தவனைப் போல் சலனமில்லாமல் காணப்பட்டான்.
"உனக்கான தண்டனை என்னவென்று தெரியுமா?" என்று கேட்டான் அரசன்.
"தெரியும்... அடுத்த பிறவியில் எருதாகப் பிறந்து, இந்த ஆலயத்தின் வேலைகளுக்காகப் பயன்படுவேன்"! என்றான் மகிழ்வோடு.
"வாயைத் திற!" என்றான் அரசன் அதட்டலாக. சொல்பவன் அரசனாயிற்றே என்று பயந்து, நடப்பது நடக்கட்டும் என்று வாயைத் திறந்தான் அவன்.
பாண்டியன் உடனே அவன் வாயில் விரலைவிட்டு நாலு எள்ளை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டு சொன்னான்:
"நீ எருதாகப் பிறந்து ஆலயத்துக்கு உழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், நானும் உன் வாயிலிருந்த எள்ளை முழு மனதோடு எடுத்துத் தின்றேன்.
நானும் எருதாகப் பிறந்து உனக்கு ஜோடியாக வந்து நாமிருவரும் சிவாலயத் தொண்டுசெய்து மகிழலாம்" என்றான்.
எள்ளைத் தின்றவன், வரகுணபாண்டியனின் மேன்மையான உள்ளத்தை நினைத்து, வியந்து வாயடைத்துப் போய் நின்றான்.
பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா ?

Best regards,

Wednesday, 21 November 2018

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?{கேள்வி: பாலா முருகன்}
1.காமராஜர் யுனிவெர்சிட்டி , MGRயுனிவெர்சிட்டி என்று தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடந்த 15 வருடங்களில் நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்று அதிமுக இல்லை திமுக அனுதாபிகள் தான் பதவியில் இருந்திருப்பர். பொதுவாகவே இது ஆளுநர் அதிகார வட்டத்தில் வந்தாலும் - ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.
2.உதவி பேராசிரியர் வேலைக்கு 15-20லட்சம் வரை லட்சம் கொடுக்க வேண்டும் , லேப் கிளர்க் வேலை என்றால் கூட 3-4லட்சம் லட்சம் கொடுத்து தான் வேலையைக் கைப்பற்றுகிறார்கள் - பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்கு 2கோடி , 4கோடி என்று பேரம் பேசி தான் விற்பனை செய்யப்படுகிறது. இது தான் உண்மை. இதைத் தாண்டி பேப்பர் சேசிங்க் ஆரம்பித்துக் கூடுதல் மதிப்பெண் வரை அனைத்திற்கும் இங்கே வழியுண்டு. {காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் இங்கே சாதிக்கலாம் என்ற ஒரு கேடுகெட்ட நிலை உருவாக்கிய பெருமை திராவிட கட்சிகளை சாரும்.}
இப்போது விசயம் "நிர்மலாதேவி இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண்களைத் தவறான வழிக்கு அழைத்தார் என்பது".
3.நிர்மலா தேவி விவகாரமான ஆடியோ வெளியானது 2018 மார்ச் மூன்றாவது நான்காவது வாரங்களில் - அவர் கைது செய்யப்பட்டது 2018 ஏப்ரல் 16ஆம் தேதி. இன்று ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது 2017 அக்டோபர் 6ஆம் தேதி - அதை அடுத்து அவர் இங்கே வந்து செட்டில் ஆகி நிர்வாகத்தைத் தொடங்க டிசம்பர் ஆகிவிட்டது. {பொதுவாக 30-45 நாட்கள் தேவை ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் குடியேறி பணிகளை முழுமையாகத் தொடங்க. ரோசய்யா அவர்கள் பதிவு விலகி சுமார் 1.5ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் வருகிறார் என்பதால் அது இன்னும் வேலைப் பழு அதிகம்.}
4.இந்த நிலையில் வந்து 2 மாதங்களில் இதை ஆளு நர் செய்கிறார் என்று கூச்சமே இல்லாமல் விசயத்தை அப்படியே தூக்கி அந்த 79 வயது மனிதர் மீது போட்டு எதோ அவர் தான் ஆள் நியமனம் செய்து இந்த வேலையைச் செய்வது போல் தொடர்ந்து அவசரமாக , ஆர்வமாக நக்கீரன் பத்திரிக்கை எழுதுவது எனக்குத் தெரிந்து உண்மையான குற்றவாளியை காப்பாற்ற வேலை செய்வது போல் தான் தோன்றுகிறது. பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமே திராவிட கட்சிகள் நியமனம் செய்யும் இந்த Vice Chancellors தான் முக்கிய காரணம்.{Vice Chancellors தான் அனைத்து ஊழல்களில் கிடைக்கும் பணத்தையும் கொண்டு போய் திராவிட கட்சி தலைமைக்கு கொடுத்து அதை பங்குபிறிப்பவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் நிர்வாகத்தில் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம்.}
5.இந்தக் காமராஜர் பலகலைக்கழகத்தின் Vice Chancellors யார் ???? கடந்த பத்து வருடங்கள் யார் என்று கொஞ்சம் தேடுங்கள்
இப்போது ஆளுநர் நியமனம் செய்த செல்லதுரை நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது Vice Chancellors பதவி காலியாக உள்ளது. இதற்கு முன் இருந்தது யார்??? கல்யாணி மதிவாணன் அவர்கள் - இவர் திமுக உருவாகக் காரணமான 5ம் பெரும் தலைவர்களில் முக்கியமானவரான இரா. நெடுஞ்செழியன் அவர்களின் சொந்த மருமகள். அவருக்கு முன் யார் Vice Chancellors??? கற்பக குமாரவேல் இவர் யார் ? இவர் சின்னக் கலைஞர் என்று திமுக கட்சி ஆட்களால் அழைக்கப்பட்ட கோசி மணி அவர்களின் மருமகன். அதற்கு முன் Vice Chancellors இருந்தவர் யார்??? மருதமுத்து இந்த ஆள் யார் தெரியுமா???? திமுகவில் அழகிரி அவர்கள் உச்சத்தில் இருந்த போது நேரடியாகச் சென்று காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு வந்த உத்தமன்.
Vice Chancellors தாண்டி நிர்வாகத்தில் எவர் உள்ளே வரமுடியாத அளவு பலமான இந்தப் பதவிக்கு கடந்த வரலாறுகளில் ஏறக்குறைய திமுக அடிமைகள் தான் பதவிக்கு வந்து சென்றனர். {இதில் கல்யாணி மதிவாணன் அதிமுக திமுக இரண்டுமே கூட ஆதரவு உண்டு என்பது போல் தான் செய்தி} இப்போது என்ன செய்வது???? இவ்வளவு காலம் ஒரு பல்கலைக்கழகத்தை அதன் நிர்வாகத்தை இஞ் இஞ்சாக கொள்ளை அடித்து நாசம் செய்த திராவிட கட்சிகள் எவருக்கும் இங்கே நடக்கும் இந்த நிர்மலாதேவி விவகாரத்தில் பங்கு இல்லை - 2 மாதம் முன் வந்த 79 வயது மனிதர் தான் நேரடியாகக் காரணம்????
இதெல்லாம் கேட்க நகைச்சுவையாக இல்லையா??? பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாதவனுக்கு வேண்டுமானால் நக்கீரன் எழுதிவரும் நிர்மலாதேவி தொடர்கதைகள் உண்மை போல் தோன்றலாம் ஆனால் நக்கீரன் பத்திரிக்கை எவரையோ காப்பாற்ற மொத்த விவகாரத்தையும் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக்க திசைமாற்ற முயற்சிக்கிறது என்பது தான் எனக்குத் தெரிந்து உண்மை. {எழுதும் அனைத்துமே வட்டாரங்கள் சொன்ன தகவல் என்ற அடிப்படையில் நக்கீரன் எழுதி வருகிறது. இது கருத்து சுதந்திரம் என்று பெயரில் அப்படி நடக்கிறது என்று தகவல் வருகிறது இப்படி நடக்கிறது என்று தகவல்கள் வருகிறது என்று இவர்கள் இஷ்டத்திற்கு எழுதி பரப்புவது இங்கே நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு மிக சர்வசாதாரணம்.}
நிர்மலாதேவி அவர்கள் ஜாமினில் வெளியே ஏன் வரவில்லை என்று கவலைப்படும் ஒரே கட்சி தலைமை யார்???? திமுக தலைமை தான் நிர்மலாதேவிக்கு ஏன் பிணை கிடைக்கவில்லை என்று கருத்து கூறியவர். இப்போதைக்கு நிர்மலாதேவி வெளியே வந்தால் அவர் தற்கொலை தான் செய்யவேண்டும். அந்த அளவுக்கு ஒரு கூட்டம் வெளியில் காத்திருக்கிறது. எனவே பாதுகாப்பாக அவர் உள்ளேயே இருந்து எந்த வெறிபிடித்த ஓநாய் அந்த வேலையைச் செய்ய சொன்னது என்ற உண்மையை உடைத்து மொத்த பல்கலைக்கழகங்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் CBCID .
ஒரு பெரும் குற்றத்திற்கு முக்கிய சாட்சி சிக்கிவிட்டது - ஒன்று அந்தச் சாட்சி கொலை/தற்கொலை செய்யவேண்டும். இல்லை வழக்கை மக்கள் மத்தியில் திசைதிருப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யவேண்டும். இது திராவிட கட்சிகளின் பொதுவான அரசியல்பாணி. என்னைக் கேட்டால் இந்த நக்கீரன் விடும் கதைகளை எல்லாம் நம்புவதை விடக் கொஞ்சம் CBI வழக்கை முடிக்கும் வரை நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்கலாம். வேண்டுமானால் பாருங்கள் இந்தத் திராவிட கட்சிகள் எவனாது மாட்டுவான் - அப்போது இதே நக்கீரன் அதை "பிஜேபி உதவியுடன் ஆளுநர் மாளிகை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கபார்க்கிறது என்று எழுதுவார்கள்" பொறுத்திருங்கள்.
அப்படி குற்றவாளி ஆளுநர் மாளிகையாக இருந்தால் கட்டாயம் கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இல்லை என்றால் நக்கீரன் பத்திரிக்கை குழுமத்தை முழுவதும் தடை செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய் செய்திகள் குறிப்பிட்ட கட்சிக்காகக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகப் பரப்பியதற்காக.
இந்த பல்கலைக்கழகத்தின் நடந்த நடக்கும் ஊழல்கள் முறைகேடுகள் அனைத்தும் வெளியே வந்தால் திராவிட கட்சிகள் பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்கும் என்பதால் - ஆளுநர் மாளிகை பத்திரிக்கை பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவே நான் கருதுகிறேன். ஆய்வுக்குப் பல அரசு நிர்வாகிகளுடன் செல்லும் ஆளுநர் பாத்ரூம் எட்டிப் பார்த்தார் என்று எழுதும் அளவுக்கு இங்கே பத்திரிக்கை தரம் இருக்கு என்றால் இங்கே எதுவும் சாத்தியம்.
பல்கலைக்கழகங்கள் பற்றி நிர்வாகம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் "தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகமும் கெட்டு நாசம் ஆனதற்கு முழுகாரணம் திராவிட கட்சிகள் - ஒரு தவறு இங்கே நடக்கிறது என்றால் கட்டாயம் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது என்பது என் நம்பிக்கை".
-மாரிதாஸ்


Best regards,