Sunday, 31 March 2019

மதிப்பிற்கும் அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.....

மதிப்பிற்கும் அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்.....

          கடந்த சட்ட மன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதியில் DMK சார்பாக திரு.அப்பாவு அவர்களும் ADMK திரு.இன்பத்துரை அவர்களும் போட்டியிட்டனர்  வாக்கு எண்ணிக்கையில் ADMK சார்பாக திரு.இன்பத்துரை அவர்கள் பெற்ற வாக்குகள் 69,590 ம் இவருக்கு அடுத்தபடியாக DMK வேட்பாளர் திரு.அப்பாவு அவர்கள் பெற்ற வாக்குகள் 69,541. வெற்றி பெற்ற ADMK வேட்பாளர் வெறும் 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால் DMK வேட்பாளர் திரு.அப்பாவு அவர்களுக்கு தபால் ஓட்டுகள் மட்டும் சுமார் 610 ஓட்டுகள் இருந்தன . ஆனால் அந்த 610 தபால் ஓட்டுக்களும் மொத்தமாக செல்லாத ஓட்டுகள் என தேர்தல் அதிகாரி கூறி விட்டார். ஏன் செல்லாது என்று விளக்கம் கேட்கும் போது அந்த தேர்தல் அதிகாரி கூறிய காரணம் என்ன தெரியுமா..... நண்பர்களே 13A படிவத்தினை நிரப்பி அதில் வாக்களிப்பவர் கையொப்பம் இட்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் என்ற இடத்தில் அந்த 610 ஓட்டுக்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்றதால் அந்த 610 ஓட்டுகள் அனைத்தும் செல்லாத ஓட்டுகள்  என்று விளக்கம் அளித்தார் கையொப்பம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்ல என்று கூறி விட்டனர் இதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக வட்டார கல்வி அலுவலர் அல்லது உயரநிலை பள்ளி அல்லது மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது அரசு மருத்துவரிடம் மட்டுமே 13A படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும் அவ்வாறு கையொப்பம் பெறாத தபால் ஓட்டுகள் அனைத்தும் செல்லாத ஓட்டுகள் ஆகிவிடும் கவனமாக வாக்களியுங்கள்.......

உங்கள் ஓட்டு செல்லாத ஓட்டா????????

       அல்லது

உங்கள் ஓட்டு செல்லும்
ஓட்டா ??????

Best regards,

Saturday, 30 March 2019

இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி

இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,

"மின்மோட்டாரைத்" தயாரித்த மாநிலம்-தமிழ்நாடு.

தயாரிக்கப்பட்ட வருடம் 1937.

தயாரித்தது யார் தெரியுமா?

முறையான பள்ளிக் கல்வியைக் கூட தாண்டாத ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்.

அந்த சிறுவனின் 126 வது பிறந்தநாள் கூட இன்று தான்.

நம்ப முடிகிறதா?

யார் அவர்?

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அச்சிறுவனுக்கு,பள்ளிக் கல்வியின் மேல் நாட்டமில்லை,எனவே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே,ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் அவ்வழியே வந்த பிரிட்டீஷ்காரரின்-மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.பைக் என்பதே அரிதலும்,அரிதான அக்காலகட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து,அங்கு ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஓடி வந்து-பைக் கை பிரித்து மேய்ந்து பழுது நீக்கி அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்.அன்று தான் அதுவரையிலும் அச்சிறுவன் மனதில் தீப்பொறியாய் இருந்த விஞ்ஞானத் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி-கோவையில் ஒரு உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம்.பல மாத சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது.வாங்கிய கையோடு அதை பகுதி பகுதியாகப் பிரித்து-அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து,பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.அதன் பின் சின்ன சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார்.அன்று தொடங்கிய அந்த பயணம் இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது.

யார் அவர் என புதிராக இருக்கிறதா?

மேலும் வாசியுங்கள்...

1945 இல் நடந்த சம்பவம்.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது.அக்கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான்.ஆனால் அவரோ பள்ளிப் படிப்பையேத் தாண்டாதவர்,ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும்  இல்லாத காரணத்தினால்,அவரையேப் அப்பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம்.

பிரிட்டிஷ் அரசால்,தயாரிக்கப்பட்ட, அக்கல்லூரியின் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையேயில்லை.அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும்,இரண்டாண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார்.ஆனால் அதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை.

உடனடியாக அக்கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  இராசினாமா செய்தார்.

இதில் வேடிக்கையானே விஷயம் என்னவென்றால்,அவர் அளித்த நன்கொடைகளாலும்,அவரின் அயராத முயற்சியாலுமே தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான அது,
கோயம்புத்தூரில் அமைந்தது.

அவர் நன்கொடை தந்து அவரால் உருவாக்கப்பட்ட அந்த கல்லூரியின் முதல்வர் பதவியை தான் அவர் இராஜினாமா செய்தார்.

அந்தக் கல்லூரி தான், துவக்கத்தில் ஆர்தர் ஹோப் கல்லூரி என்று பெயரிடப்பட்டு, பின்னாட்களில்,கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி என்றான,

இன்றைய  Government College of Technology -GCT Coimbatore.

புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே அதை ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி,புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று திடமாக நம்பிய 1930 களின் காலகட்டத்தில்,  அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும்,அதை அவர் கையாள்வதும்--வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட,அந்தக் காலகட்டத்திலேயே அவரிடம் கேமரா இருந்தது.அதுவும் அவரே வடிவமைத்த கேமரா.அதைக் கொண்டு 1935 இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்தபொழுது-அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியேப் படம் பிடித்தார்.இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர்--இந்தியாவில் சும்மா இருப்பாரா?நேதாஜி,காந்தி,நேரு,காமராஜர்,
பசும்பொன் தேவர்,பெரியார்  என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை.

1937 இல் முதன் முதலில் இந்தியாவில்,உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட-முதல் எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.

1940 களிலேயே,ஒரு முழு வீட்டையும்,அஸ்திவாரம் தொடங்கி,முழுக் கட்டிடம் வரையில்-எட்டே மணிநேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.

1940 களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட--தானியங்கி முகச்சவரக் கத்தியை வடிவமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.

1952 இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில்,பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார்.ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் அக்காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.

பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி, பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களைக் ஒரே கிளையில் தரும் மாமரம் என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.இவையெல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள்...

முறையான கல்வியறிவு ஏதுமின்றி-தன் சொந்த முயற்சியாலும்,கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான்,

கோவை அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்ட பொழுது,அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியவரும்,

GCT எனப்படும்,கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சியெடுத்து,நிதியுதவி செய்து,அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த,

கொங்கு மண்டலத்தின் தங்கம்,

"கோபாலசாமி துரைசாமி நாயுடு.... சுருக்கமாக....ஜி.டி.நாயுடு..."

கல்வி இல்லையே,பணமில்லையே,
வசதியில்லலையே,வாய்ப்புகள் இல்லையே...என்று இல்லைகளை பட்டியலிட்டு இயலாமையில் இருக்காமல்,

நாம் நிற்கும் அந்தப் புள்ளியிலிருந்து தான் உலகமே துவங்குகிறது.நாமே நமக்கு மூலதனம்.

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் கண்டு நோகாமல்,அவற்றைச் சேர்த்து வைப்போம்,நம் வெற்றிவிழாவில் மற்றவர்கள் அதை பெருமையாக பேசுவார்கள்....என்று நினைக்கத் தொடங்கினால்,

நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்திருக்கிறது....என்பதற்கு ஒரு பெரும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அந்த மாமேதையின் 126 வது பிறந்தநாள் இன்று...

Best regards,

அடேங்கப்பா பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா..!!

அடேங்கப்பா பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா..!!

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு பயன் பெறுங்கள்

Science Courses (3 Years)

Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation

Commerce Courses

CA Chatted Account
CMA Cost Management Account
 CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation &Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA  /. BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF

Humanities Courses

Advertising
BS General
Criminology
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism

Management Courses

Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources​ Managemet
Logistics Management

Law Courses (3/5 Years)

LLB,
BA+LLB
B.Com + LLB
BBM+LLB,
BBA. +LLB

Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)
M.Arch

MEDICAL COURSES

MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy​
BDS Dental
BVSc Veterinary.

PARAMEDICAL COURSES

Nursing
Pharm D
B.Pharm
D.Pharm
M. Pharm
Anesthesia technical
Cardiac Care technical
Perfusion technology
Cathllab technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical imaging & Tech...
Medical Lab technician
Medical Records tech
Medical X Ray Technician
Nuclear Medicine Tech
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
PHYSIOTHERAPY
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech..
Bsc Renal Dialysis

B.Tech Engineering (4year)

Petro chemical Engineering
Petroleum Engineering
Civil Engineering
Mechanical Engineering
Aeronautical Engineering
Aerospace Engineering
Agricultural Engineering
Architecture Engineering
Automobile Engineering
Automation & Robotics Eng.
Avionics Engineering
Biomedical Engineering
Bio technological Eng..
Chemical Engineering
Ceramics Engineering
Computer Science Engi..
Electronics &Comm.Engi.
Electrical & Electronics Engi.
Environmental Science Engi.
Information Science Engi
Industrial Engineering
Industrial Production Engi..
Instrumental Technology
Marine Engineering
Medical Electronics Engi..
Mining Engineering
Manufacturing Science Engi.
Naval Architecture Engi....
Nanotechnology Engi..
Polymer Technology Engi..
Silk Polymar Engi...
Carpet Technology Engi...
Textile engineering
Robotics
Genetic

POLYTECHNIC (10 th class)

Civil engineering
Mechanical engineering
Automobile engineering
Computer science engi.....
Electronics and communication Engineering
Electrical engineering
Petro chemical engineering

Management
(new job opportunity Course​s 2/3/5Years Duration)

BBA /BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics

BCA SAP
BCA Cloud Computing

MBA Logistics
         Aviation
         HR
         Management
Best regards,

Thursday, 28 March 2019

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோவின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய ஒன்று

வைகோ, வேல்முருகன் மட்டும் இதற்கு குரல் கொடுத்தால் போதாது, BJP அரசு தமிழர்களுக்கு இழைத்து உள்ள மாபெரும் துரோகம், ஆளும் மத்திய அரசு தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஒடுக்க நினைக்கிறது.

நாம் இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால், நாளை தமிழகம் நம்ம கையில் இல்லை!

அவசியம் வைகோவின் அறிக்கையை முழுவதும் படிக்கவும், இந்த செய்தியை மக்கள் இடத்தில் கொண்டுசெல்ல வேண்டும் அனைத்து வாட்ஸ் ஆப் குரூபில்ழும் அனுப்பவும், அதிகம் share செய்து மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.

இனி அறிக்கை:

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில்
வடமாநிலத்தவர் பணி நியமனம்

வைகோ கண்டனம்

தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.

குறிப்பாக தென்னக இரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.

2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது. ஆனால் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்தனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.

இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8

Best regards,

Wednesday, 27 March 2019

Mankading வரலாறு தெரியுமா? அஷ்வின் செய்தது சரியா? பிராட்மேன் கற்பித்த பாடம்!

Mankading வரலாறு தெரியுமா? அஷ்வின் செய்தது சரியா? பிராட்மேன் கற்பித்த பாடம்!


இவ்வளவு நடந்தும், ஜோஸ் பட்லர் மீண்டும் அவ்வாறே நடந்து கொண்டதற்கு கிடைத்த சரியான பாடம் அது
Mankading முறையில் இலங்கை பவுலரால் அவுட் செய்யப்படும் பட்லர்

இன்று விடியற் பொழுதில் இருந்தே, சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் தொடர்பாக ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருப்பது அஷ்வினின் மேன்கேடிங் பற்றியே. அவர் எப்படி அப்படி செய்யலாம்?, அவர் செய்தது விளையாட்டு மாண்பை குலைத்துவிட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி, என்ன செய்துவிட்டார் அஷ்வின்? வாங்க பார்க்கலாம்… அதுக்கு முன்னர் நேற்றைய போட்டியைப் பற்றிய ஒரு சிறிய முன்சுருக்கம்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 184 ரன்கள் எடுக்க, தொடர்ந்து சேஸிங் செய்த ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இதில், ராஜஸ்தான் அணியின் ஓப்பனர் ஜோஸ் பட்லர், 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட் தான், இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

12.6வது ஓவரை, பஞ்சாப் கேப்டன் அஷ்வின் வீசுகிறார். அப்போது, எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்தவர் ஜோஸ் பட்லர். அஷ்வின், பந்தை வீசும் போது, அவர் ரன்னர் எல்லைக் கோட்டினை தாண்டிச் செல்கிறார். இதை பந்துவீசிக் கொண்டே கவனிக்கும் அஷ்வின், ஸ்டம்ப்பை பதம் பார்த்து, ரன் அவுட்டிற்கு அப்பீல் செய்கிறார். அம்பயர், மூன்றாவது நடுவருக்கு மாற்றிவிட, அவரோ அவுட் என தீர்ப்பளிக்கிறார். இதுதான் இப்போது பிரச்சனை!

அஷ்வின் இவ்வாறு அவுட் செய்த விதத்திற்கு பெயர் தான் Mankading. இந்த முறையில் பெரும்பாலும் யாரும் அவுட் செய்யப்படுவதும் இல்லை… அவுட் செய்வதும் இல்லை. ஆனால், அஷ்வினுக்கு இந்த டெக்னிக் பழசு. சர்வதேச போட்டியிலேயே அவர் இதனை செய்திருக்கிறார்.

Mankading வரலாறு என்ன?

1947ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் வினு மான்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் அவுட் செய்கிறார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் இதே பில் பிரவுன் எனும் வீரரை வினு மான்கட் இப்படி ரன் அவுட் செய்கிறார்.

இதனால் கொந்தளித்த ஊடகங்கள், விளையாட்டின் மாண்பை மான்கட் குலைத்துவிட்டார் என்று எழுதி மிகக் கடுமையாக அவர் விமர்சித்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் டொனால்ட் பிராட்மேனோ மான்கட்-க்கு ஆதரவாக இருந்தார்.

“பத்திரிகைகள் அவரது விளையாட்டை ஏன் கேள்விக்கு உள்ளாக்குகின்றன? கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு தானே அவர் அவுட் செய்திருக்கிறார்? இப்படி செய்தால் தான், எதிர் முனையில் இருப்பவர்கள், அவசர அவசரமாக ரன்னிங் ஓடுவதை தடுக்க முடியும். அவர் செய்த செயல் சரியானது தான்” என மான்கட்-க்கு சப்போர்ட் செய்தார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு தான், இந்த வகை விக்கெட்டுக்கு Mankading என்று பெயர் வந்தது.

Mankading பற்றி ஐசிசி விதி சொல்வது என்ன?

ஐசிசியின் விதி 41.16-படி, ஒரு பவுலர் தனது கையில் இருந்து முழுமையாக பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, நான் ஸ்டிரைக்கர் கிரீஸை விட்டு வெளியே செல்லக் கூடாது. அப்படி வெளியே சென்றால், பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பவுலருக்கு முழு உரிமை உண்டு என ஐசிசி தெரிவிக்கிறது.

அப்படிப் பார்க்கும் பொழுது, அஷ்வின் செய்தது முழுக்க முழுக்க சரியான செயலே! மாண்பை குலைக்கும் செயல் என்றால், ஏன் இப்படியொரு விதியை ஐசிசி எழுத வேண்டும்? காரணம், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பேட்ஸ்மேன்கள் அதிக சிங்கிள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்பதற்கே.

இந்தியா சார்பில், முரளி கார்த்திக் இருமுறை இவ்வாறு எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்திருக்கிறார். இதே ஜோஸ் பட்லர், இதற்கு முன்பும் இப்படியொரு முறை அவுட் ஆகியிருக்கிறார் என்பது உச்சக்கட்ட காமெடி…

2014ல் இலங்கையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இலங்கை பவுலர் சசித்ரா சேனநாயகே பந்து வீசுவதற்குள்ளாகவே, ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதற்கு எச்சரிக்கை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு அடுத்த சேனநாயகே ஓவரிலும், பட்லர் வெளியே செல்ல, ரன் அவுட் செய்யப்பட்டார்.


Mankading முறையில் இலங்கை பவுலரால் அவுட் செய்யப்படும் பட்லர்

இலங்கை கேப்டனும், கண்டிப்புடன் அவுட் அப்பீல் செய்ய, வேறு வழியின்றி விதிகளுக்கு உட்பட்டு பட்லருக்கு அம்பயர் அவுட் கொடுத்தார், இவ்வளவு நடந்தும், ஜோஸ் நேற்று மீண்டும் அவ்வாறே நடந்து கொண்டதற்கு, அஷ்வின் தந்தது மிகச் சரியான பாடமே தவிர அது விளையாட்டின் மாண்பை குலைக்கும் செயலே அல்ல!.


Best regards,

Saturday, 23 March 2019

பெற்றோர்களின் கவனத்திற்கு..!..

பெற்றோர்களின் கவனத்திற்கு..!..

இந்த இரண்டு மாத பள்ளி, விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன..?

Mobile,TV என்று வெட்டியாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை முயற்சிக்கலாம்,

 அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி...

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள்.

வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள்.

 A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும்...... அழைத்து சென்று,

 அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்..? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள்..,

 அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை.. பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள்.

 மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள்,

அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள்,

 விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்று வருபவரை காணச்செய்தாலே போதும் ... அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று, நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி ... அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள்,

 நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக அவர்கள், பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8 ) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள்,

 அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள்,

அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள்...

 அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதையும் உணர்த்துங்கள்.

11)இறை தியானம் என்றால் என்ன,என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்

12) வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற லிஸ்ட்டை அவர்களையே எழுதச் சொல்லி, பணத்தையும் கொடுத்து கூடவே அழைத்து செல்லுங்கள்.

 அவர்களாகவே கணக்கு பார்த்து  வாங்கிய பொருளுக்கு சரியான பணத்தை கொடுக்கச் சொல்லுங்கள்.

 பணத்தின் அருமையும், சிக்கனமும், சேமிப்பும் புரியும்.

இப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்.

இதுவே இப்பதிவின் வெற்றி.

IPL ல் உங்களது .... மற்றும் உங்கள் குழந்தைகளின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.

Please visit our website www.s2ay.in

Best regards,

Wednesday, 20 March 2019

நோய்கள் உருவாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                         

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                       

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???


Best regards,

Tuesday, 19 March 2019

மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி

மனோகர்   பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி

என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.

கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன்.

🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில்  நாம்  அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது

🔥மரணத்தை நான் நெருங்கும்  ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.

இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு  சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.

மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.

உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று  இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.

எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும்  நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்

எனவே நண்பர்களே, உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள் உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.

 பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.
                                -மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).

(தமிழாக்கம் :
திரு. விஜய்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி, பவித்ரம்.
கரூர் மாவட்டம்.)

வாழ்வின் இறுதி காலத்தில் மிகப்பெரிய உண்மையை அற்புதமாக வெளிப்படுத்திய திரு.மனோகர் பாரிக்கர் அவர்களுக்கு புகழ் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறோம்!!

Best regards,

Monday, 18 March 2019

இதயத்துக்கு இதமாய் இருங்க... 100 வயது வாழ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம் அட்வைஸ்

 இதயத்துக்கு இதமாய் இருங்க... 100 வயது வாழ டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம் அட்வைஸ்


அமெரிக்காவுல இருக்கறவங்கள கவனிக்கவா, உன்னைய படிக்க வெச்சோம். பக்கத்து வீட்டு ஆத்தாள யாருய்யா பாக்கறது'னு அப்பா-அம்மா கேட்டது, என்னை யோசிக்க வெச்சது.

அமெரிக்காவுல இருக்கறவங்கள கவனிக்கவா, உன்னைய படிக்க வெச்சோம். பக்கத்து வீட்டு ஆத்தாள யாருய்யா பாக்கறது'னு அப்பா-அம்மா கேட்டது, என்னை யோசிக்க வெச்சது. பணக்கார நாட்டுல டாலர்ல சம்பாதிக்கறதைக் காட்டிலும், உள்ளூர்ல சாப்பிடற அளவுக்கு சம்பாதிச்சா போதுமுன்னு முடிவு செஞ்சேன். எங்க பேராசிரியர்கிட்ட போயி `அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, இந்தியாவுக்குப் போறேன்`னு சொல்லிட்டு, உடனே கிளம்பி வந்துட்டேன். இப்பவும் நிறைய பேரு அமெரிக்காவுலயே தங்கி, இந்தியாவை மறந்துடறாங்க. வெள்ளைக்காரங்களுக்கு கைகட்டி வேலை செய்யறதை சிலர் இன்னமும் நிறுத்தல. இந்த நிலைமை மாறனும்" என்று இந்தியா திரும்பியதை விவரித்தார் கே.ஜி.பக்தவத்சலம்.

"1974-ல் திரும்பவும் அரசு மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். `நாமளே கோயம்புத்தூர்ல ஆஸ்பத்திரி கட்டலாம்`னு  அப்பா சொன்னாரு. `இடத்துக்கு எங்கப்பா போறது`னு கேட்டேன். இப்ப கே.ஜி. ஆஸ்பத்திரி இருக்கற இடத்திலேயே 50 சென்ட் நிலம் வாங்கி, கட்டிடம் கட்டினாரு. இதுக்காக 19 பர்சென்ட் வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கினாரு. அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைங்கற பேர்ல, 10 படுக்கை ஆஸ்பத்திரியைக் கட்டினோம். அப்புறமா நான் கே.ஜி. மருத்துவமனைனு பேரை மாத்தினேன்.

அப்ப பாலக்காடு, ஹைதராபாத்துல மட்டும்தான் இ.சி.ஜி. மெஷின் இருந்தது. நான் அமெரிக்காவுல இருந்து வரும்போதே ஒரு இ.சி.ஜி. மெஷினும், மூச்சுவிட உதவும் மெஷினும் கொண்டுவந்தேன். இங்க ஒரு எக்ஸ்ரே மிஷின் வாங்கினோம். எட்டுக்கு ஆறு அடியில ஆபரேஷன் தியேட்டர், சின்னதா ஸ்ரெர்லைசர், டேபிள்னு மருத்துவமனையை தொடங்கினோம். முதல் 5 நாள் சாதாரண மருத்துவத்துக்குத்தான் ஆளுங்க வந்தாங்க. நான் படிச்சதோ அறுவைசிகிச்சை, அதனால என்ன, வர்றவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்போம்னு பணியைத் தொடங்கினோம்.

உத்வேகம் தந்த கேலி, கிண்டல்கள்...

அப்ப, உள்ளூர் டாக்டருங்க சில பேரு, `அமெரிக்கா டாக்டரு, அமெரிக்காவுல இருந்து மிஷினு கொண்டாந்திருக்காரு, பேஷன்டும் அமெரிக்காவுல இருந்து கொண்டாருவாரா?'னு நக்கல் பேசினாங்க. அதுமட்டுமில்லாம, `ரூம் வாடகை ரூ.30, ஆபரேஷனுக்கு ரூ.1,000 எவன்யா கொடுப்பான்'னும் நையாண்டி பண்ணாங்க. பஞ்சு வியாபாரத்துல சம்பாதிச்சத ஆஸ்பத்திரியில போட்ட அப்பா ஒரு பக்கம், கேலி செய்யற டாக்டருங்க இன்னொரு பக்கம்.

இந்த மாதிரி பேச்சு அப்பா காதுக்கும் போச்சு. 'பையன் ஒண்ணும் பென்ஸு கார் வாங்கி, ஊர்வலம் போகலை. கஷ்டப்படறவங்களுக்கு சேவை செய்யறான். யார் வேணா, என்னா வேணா சொல்லட்டும்'னு சொல்லிட்டாரு. இது எனக்கு பெரிய உந்துதலா இருந்தது. ராப்பகலா உழைச்சேன். சலிக்காம வேலை செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினோம். எல்லா ஆபரேஷனும் சக்ஸஸ் ஆச்சு. வெறிநாய் கடி, காலரா பாதிப்பு, தீக்காயமடைஞ்சவங்கனு எல்லா நோயாளிகளும் வந்தாங்க.

போலீஸ் இன்ஸ்பெக்டரா...கடமையா?

விபத்துல காயமடைஞ்சவங்களும் மருத்துவமனைக்கு வந்தாங்க. ஆனா, `இது லீகல் கேஸ் அட்மிட் செய்ய வேணாம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சிடுங்க'னு  போலீஸ் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தினாரு. `சரிங்க, ஆனா, ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொறுப்பேற்கிறேனு எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுங்க, நான் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறேன்`னு  இன்ஸ்பெக்டர்கிட்ட நான் சொன்னேன். `என்னா, மிரட்டறீங்களா?`னு அவர் கேட்டாரு. `காயமடைஞ்சவங்களுக்கு சிகிச்சை அளிக்கிறேனு மெடிக்கல் கவுன்சில்ல சத்தியம் செஞ்சிருக்கேன். விபத்து கேஸா, போலீஸ் கேஸா, கொலைக் கேஸாங்கறதுல எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. உயிரைக் காப்பாத்தறது மட்டும்தான் என்னோட வேலை. அதுல நான் தவற மாட்டேன்'னு சொல்லிட்டேன்.  கோயம்புத்தூர்லயே மெடிக்கல் லீகல் கேஸுங்களை அட்மிட் செஞ்ச முதல் மருத்துவமனை கே.ஜி.தான்.

அமெரிக்காவுல வேலை செஞ்ச 2 வருஷத்துல, அங்க இருக்கற மருத்துவமனைகளோட தரம் தெரிஞ்சது. உலகத்திலேயே சிறந்த மருத்துவமனைகளா, அமெரிக்க மருத்துவமனைகள் இருந்தது. அதனால, கே.ஜி. மருத்துவமனையை, அமெரிக்காவுல இருக்கற மருத்துவமனைகளுக்கு நிகரா நடத்தனுமுன்னு முடிவு செஞ்சேன். உலகத்துல எந்த சிறந்த மருத்துவ உபகரணங்கள் வந்தாலும், அதை கே.ஜி.க்கு கொண்டுவந்துடுவோம். கொஞ்சம் வருஷத்துல அமெரிக்காவுல இருக்கற மருத்துவமனைகளைவிட சிறப்பாக நடத்தினோம்.

நல்ல மருத்துவத்தைக் கத்துக்க அமெரிக்கா போகலாம். அதேசமயம், அங்க கத்துக்கிட்டு, இந்தியாவுக்கு வந்துடனும். நாம கத்துக்கிட்டது நம்ம நாட்டுக்குப் பயன்படனும்.  ஒரு கட்டத்துல, வெளிநாட்டுல இருந்தெல்லாம் கே.ஜி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரத் தொடங்கினாங்க. மருத்துவத் துறையில இந்தியாவோட வளர்ச்சி அபாரமானது. உண்மையில, கணிதம், மருத்துவத் துறையில எல்லாம் இந்தியாதான் ஒருகாலத்துல முதன்மை வகிச்சது.

வெள்ளைக்காரங்க நம்மை அடிமைப்படுத்தி, நம்முடைய திறமைங்களை மறச்சிட்டாங்க. நம்மோட பாரம்பரிய விஷயங்களை ஒண்ணுமில்லாம செஞ்சாங்க. கி.மு. 800-ம் ஆண்டிலேயே அறுவைசிகிச்சையை மேற்கொண்டவர் இந்தியாவோட சுஸ்ருதர். அறுவைசிகிச்சையின் தந்தைனு அவரைப் போற்றுவாங்க. இதையெல்லாம் வெள்ளைக்காரங்க மறக்க வெச்சாங்க. ஆனாலும், சுதந்திரத்துக்கு அப்புறம் நம்மளோட வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியல.

10-லிருந்து 500-ஆக...

ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், 10 படுக்கை வசதினு தொடங்கின கே.ஜி. மருத்துவமனை, இன்னைக்கி 500 படுக்கை வசதி கொண்டதா மாறியிருக்கு. மல்டி ஸ்பெசாலிட்டி, சூப்பர் ஸ்பெசாலிட்டினு எல்லாத்தையும் தாண்டி வளர்ந்திருக்கு. ஒரே நேரத்துல எத்தனை பேர் விபத்துல அடிபட்டு வந்தாலும், சிகிச்சை கொடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கோம். எல்லா வகையான வியாதிகளுக்கும் சிகிச்சை தர்றோம். 60 தீவிர சிகிச்சைப் பிரிவு, 175 முழுநேர டாக்டர்கள் 75 முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 200 தொழில்நுட்பப் பணியாளர்கள்னு 1500-க்கும் மேற்பட்டவங்க பணியாற்றுகிறாங்க. அதுமட்டுமில்லா, மருத்துவம் தொடர்பாக 1,000 பேருக்கு மேல படிக்கிறாங்க.

ஆனா, எங்க வீட்டுல யாரும் மருத்துவம் படிக்கலை. என்னோட மகள் வசந்தி, நிர்வாகப் படிப்பு படிச்சிட்டு, கே.ஜி. மருத்துவமனையை பாத்துக்கிறாங்க.  மகன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சிட்டு, மிகப் பெரிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துகிறார். அவங்களை மருத்துவம் படிங்கனு நான் வற்புறுத்தவேயில்லை.

அரசியலும், மருத்துவமும் பணம் சாம்பாதிக்கிறதுக்கான வேலை இல்லீங்க. ரெண்டுமே சேவை. ஆனா, இந்த நிலை நிறைய மாறிப்போச்சு. `இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யணுமப்பா'னு அப்பா சொல்லிக்கிட்டே இருப்பாரு.  அவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டப்ப, ரூ.10 லட்சம் செலவு செஞ்சேன்.

நம்மளால முடியுது, செலவு செஞ்சோம். ஏழைங்க என்னா பண்ணுவாங்கனு தோணிச்சு. சரவணம்பட்டியில கண் மருத்துவமனையைத் தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சை செய்திருக்கோம். இதுக்காக மத்திய அரசு ரூ.500-ம், அரிமா சங்கம் ரூ.500-ம், எங்க அறக்கட்டளை ரூ.2000-ம் வழங்கியது.

இதே மாதிரி,  கோவை குண்டுவெடிப்புல காயமடைந்த 200 பேருக்குமேல சிகிச்சை கொடுத்தோம்.  கும்பகோணம் தீ விபத்து, குஜராத் பூகம்பம், கஜா புயல், கேரளா மழை, வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கும் சிகிச்சை கொடுத்திருக்கோம். கே.ஜி. வெறும் மருத்துவமனை மட்டும் இல்ல. பொதுநல சேவை நிறுவனம். நிறைய பேருக்கு குறைந்த கட்டணத்துல சிகிச்சை கொடுக்கிறோம். இதுவரைக்கும் ஆயிரக்கணக்கானவங்களுக்கு இதய அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சைகளை செய்திருக்கோம். இதுக்கெல்லாம் காரணம் உண்மையா உழைக்கிற எங்க டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும்தான்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அப்துல் கலாமின் நட்பு

கே.ஜி. மருத்துவமனைக்கு அப்துல் கலாம் 5, 6 முறை வந்திருக்கிறார். கலாம் என்று சொல்லும்போதே கே.ஜி.பக்தவத்சலத்தின் முகம் மலர்கிறது. "1997-ல் அவர் பாரத ரத்னா விருது வாங்கினாரு. அப்ப அவரு பிரதம மந்திரியின் பாதுகாப்பு ஆலோசராக இருந்தாரு. நான் டெல்லிக்கு போன்ல தொடர்புகொண்டு, கலாம்கிட்ட பேச அனுமதிகேட்டேன். அடுத்த நாள் அவர்கிட்ட பேச முடிஞ்சது. நீங்க யார் தம்பி, என்ன வேணும்னு சொன்னாரு. நான் ஒரு டாக்டர். கோயம்புத்தூர்ல இருந்து பேசறேன். நீங்க கோயம்புத்தூர் வரணும்'னு கேட்டேன். பாக்கலாம்னு சொன்னாரு.

உடனே, `நாங்க  ஒரு டிரஸ்ட் மூலமா ஏழைகளுக்கு வைத்தியம் செய்யறோம். கண் அறுவைசிகிச்சைகளை இலவசமாக செய்யறோம்'னு சொன்னேன். அதுக்கப்புறம் அரை மணி நேரம் பேசினாரு. ஒரு மாசம் கழிச்சி கோயம்புத்தூர் வந்தாரு. `இந்தியா 20-20'ங்கற தலைப்புல ஒரு கருத்தரங்கில பேசினாரு. எல்லோரும் அசந்து போயிட்டாங்க. அப்புறம் எங்க மருத்துவமனைக்கு வந்தாரு. அவர் குடியரசுத் தலைவரா பொறுப்பேத்ததுக்கு அப்புறமும் வந்தாரு. பதவியில இருந்து விலகினதுக்கப்புறமும் வந்தாரு. அவர் கடவுளோட பிரதிநிதிங்க. அவரை மாதிரி இன்னொருத்தர் பிறக்க மாட்டாங்க" என்று கூறியபோது, பக்தவத்சலத்தின் கண்கள் லேசாக கலங்கின.

ஆசிரியப் பணியில்...

பேச்சை மாற்ற வேண்டி, "இந்த 76 வயசுலேயும் தினமும் வகுப்புகளை நடத்திக்கிட்டிருக்கீங்களாமே?" என்றோம். "நான் நேசிக்கிற மற்றொரு வேலை ஆசிரியர் வேலை. நல்ல பேராசிரியர்கள்கிட்ட நான் கத்துக்கிட்டேன். நானே படிச்சும் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் தினம் 2 புத்தகம் படிக்கிறேன். படிச்சதையெல்லாம் நானே வெச்சிக்கிட்டா எப்படிங்க? அதனால, கடந்த 40 வருஷத்துக்கு மேலாக தினமும் ஒரு மணி நேரமாவது டாக்டர்களுக்குப் பாடம் நடத்தறேன். இப்பவும் தினமும் காலை 7 மணிக்கு, எங்க டாக்டர்களுக்கு பாடம் நடத்துகிறேன். அதுக்கப்புறம் எங்க நிர்வாகிகளுக்கு வகுப்பெடுக்கிறேன். வெறும் மருத்துவமும், நிர்வாகமும் மட்டும் நடத்தறதில்லை. வாழ்வியலையும், அறத்தையும் கத்துக்கொடுக்கிறேன். இதுக்காகவே நிறைய படிக்கிறேன். நிறைய பேரை, குறிப்பா, ஆன்மிகவாதிகளை சந்திச்சி பேசறேன். பிழைப்புக்காக படிக்கறது வேற, வாழ்க்கைக்காக படிக்கறது வேற. இப்ப நான் வாழ்க்கைக்காக படிக்கறேன். அதை மத்தவங்களுக்கும் கத்துக்கொடுக்கறேன்.

என்னோட பணி தொடர்ந்து நடக்கறதுக்கும், வெற்றிகளுக்கும் முக்கியக் காரணம் என்னோட மனைவி தனலட்சுமிதான். நான் சமூகத்துக்காக உழைச்சப்ப, என்னைப் பாத்துக்கிட்டது அவங்கதான். குழந்தைகளை படிக்கவெச்சு, நல்ல நிலைக்கு ஆளாக்கினதும் அவங்கதான். எனக்கு 6 அம்மாங்க. என்னைப் பெத்த ருக்மணி அம்மா, சித்தி சீதாலட்சுமி, மாதா அமிர்தானந்தமயி, நாராயணி பீடம் சக்தி அம்மா, மனைவி தனலட்சுமி அம்மா... கடைசியா ஆயிரம் ஆயிரம் பேருக்கு உயிர் கொடுத்த, பல்லாயிரம் பேருக்கு சோறுபோடற கே.ஜி.ங்கற அம்மா" என்று கூறியவரிடம், "இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?" என்று கேட்டோம்.

சினிமா, டிவி-யில நேரத்தை தொலைக்காதீங்க. மனசு கெட்டுப்போயிடும். ஒழுக்கமும், நேர்மையும், கடமையை தவறாமல் செய்யற மனப்பான்மையும் ரொம்ப முக்கியம்" என்றார்.

எழுத்தாளர் ஜி.பி.!

ஆசிரியப் பணி மட்டுமல்ல. எழுத்துப் பணியிலும் அவ்வப்போது இவர் கவனம் செலுத்தியிருக்கிறார்.  `இதயம் ஒரு கோவில்', `உயிரே...உயிரே...`, `நெஞ்சே...நெஞ்சே...', `பல்லாண்டு...பல்லாண்டு...' போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

நூறு வயது வாழ...

"100 வயசு வாழனுமுன்னா, ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்டவை 100 அளவுக்குள்ள இருக்கனும். மாசத்துக்கு 100 கிலோமீட்டர் நடக்கனும். எடை மட்டும் 100-ஐ எட்டவே கூடாது. இப்ப எல்லாம் நிறைய பேரு மாரடைப்பால பாதிக்கப்படறாங்க. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம்னு இதுக்கு நிறைய காரணம். அதனால, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, நடைப் பயிற்சி, யோகானு நல்ல விஷயங்களைக் கடைப்பிடியுங்க. ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி பரிசோதனைகளை செஞ்சிக்கோங்க. இதயத்துக்கு இதமா இருங்க" என்று 100 வயது வாழ அட்வைஸ் கொடுக்கிறார் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்.

குவித்த விருதுகள்...

இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 2005-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பத்மஸ்ரீ விருது வழங்கினார். 1984-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் கே.ஜி.பக்தவத்சலம். அண்மையில் மருத்துவத்துக்கான சிறந்த தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த மருத்துவமனை விருதை,  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அப்பாதான் ரோல் மாடல்..

கே.ஜி.பக்தவத்சலத்தின் மகன் முனைவர் அசோக் பக்தவத்சலம், கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பும், நியூயார்க் சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். (கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி.யும் முடித்துள்ளார். கோவை கே.ஜி. இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (கேஜிஐஎஸ்எல்) நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். "டாக்டர் தொழிலை ரொம்ப நேசித்தவர் அப்பா. ஆரம்பத்துல எங்ககூட இருந்த நேரத்தைக் காட்டிலும், மருத்துவமனையிலதான் நிறைய நேரம் இருப்பாரு. தீபாவளி, பொங்கல்னு பண்டிகையப்பதான் ஒண்ணா இருப்போம். உண்மையில் அவர் கடவுளால ஆசிர்வதிக்கப்பட்டவரு. இவ்வளவு பெரிய மருத்துவமனையை உருவாக்கி, லட்சக்கணக்கானவங்களோட நோயைக் குணமாக்கியிருக்காரு. அதேசமயம், டாக்டருக்குப் படினு எங்கிட்ட சொன்னதேயில்லை. உனக்குப் பிடிச்சதை படினு முழு சுதந்திரம் கொடுத்தாரு. நான் அமெரிக்கா போனப்ப, பைக் ஓட்டாதே, சிகரெட் குடிக்காதேனு ரெண்டு விஷயத்தை மட்டும் வலியுறுத்தினாரு. இன்னைய வரைக்கும் அதை நான் கடைப்பிடிக்கிறேன். இந்த வயசுலயும் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்காரு. அவரோட வயசுல, அவர் சுறுசுறுப்புல பாதியாவது நமக்கெல்லாம் இருக்குமாங்கறது சந்தேகம்தான். நான் சாஃட்வேர் துறையில இந்த அளவுக்கு வளர்ந்திருக்கறதுக்கு, அவர் கொடுத்த சுதந்திரமும், ஊக்கமும்தான் காரணம். எப்பவும், என்னோட ரோல் மாடல் அப்பாதான். `எப்பவும் லாபத்தை மட்டும் பார்க்காதே, தொழிலாளர், சமூக நலனும் முக்கியம்`னு  சொல்லுவாரு. அவரோட சமூகப் பணிகளை முன்மாதிரியா வெச்சுத்தான், எங்க நிறுவனமும் பல சமூகப் பணிகளில் ஈடுபடுது. அமெரிக்காவுல நான் இருந்தப்ப, `சீக்கிரம் கோயம்புத்தூர் வந்து, என்னோட இருப்பா`னு கேட்டுக்கிட்டாரு. அவரோட அன்பு என்னை நெகிழ வெச்சது. அவர் சொன்னபடியே, கோயம்புத்தூருக்கு வந்துட்டேன்" என்றார் பெருமிதத்துடன்.

Best regards,

Sunday, 17 March 2019

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...
=================================================
பெயர்:
உ.சகாயம்

பிறப்பு:
பெருஞ்சுணை கிராமம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉

பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.

அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗
   அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗

தொழில்:
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்

மிகவும் பிடித்த வாசகம்:

✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
✅உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:
1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

நீண்டகால சாதனை:
👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..

👌கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.

👌மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.

👌சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்

 மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼

  சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼
 
 பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼
 
   கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼

நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼

✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

✅✅✅உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.

எதிரிகள்:
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.

சமீபத்து எதிரிகள்:
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.

ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்:
நேர்மை

பலவீனம்:
❎❎ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.

லட்சியம்:
🎯ஊழல் இல்லா இந்தியா

🎯கிராமப்புற ஏழைகளுக்காக
அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.

இதுவரை அறிந்த உண்மைகள்:
நேர்மை நிச்சயம் வெல்லும்,
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.👍👍👍

இதுவரை புரியாதது:
அடுத்த பதவியும் இடமும்

விரும்புவது:
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗

விரும்பாதது:
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை❓

நண்பர்களே..!

நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.

சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,
நம் குழந்தைகளுக்கு
முன்மாதிரியாக அறியத்தருவோம்.

ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.
👍👍👍👍👍👍

எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம்

இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான்

சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை

நன்றி

Best regards,

Saturday, 16 March 2019

பெண்களை மிரட்டி வீடியோ எடுத்தது எப்படி? சிபிசிஐடியில் திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம்

பெண்களை மிரட்டி வீடியோ எடுத்தது எப்படி? சிபிசிஐடியில் திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம்
அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஒரே கேங்காக சுற்றுவோம். எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான்.

அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம்.

 எங்களுக்கு போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தவறுக்கு மேல் தவறு செய்ய ஆரம்பித்தோம்.

எங்களைப்போலவே, சிவில் இன்ஜினியர் சபரிராஜனும், பெண்களை காதலித்து உல்லாசமாக இருந்து வந்தார்.

 ஏராளமான பெண்களை எங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தோம்.

 அதில் இருந்த வீடிேயாக்களில் இருந்த பெண்களை சபரிராஜன் மூலம் பண்ைண வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருந்தோம்.
எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்துள்ளார். அந்த ெபண்ணை அழைத்துவந்தபோது அவர் எங்களை அடையாளம் கண்டுகொண்டார். இதனால், சிக்கிக்ெகாண்டோம்.

கோவை: பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பணம் பறித்தது குறித்து சிபிசிபிஐடி போலீசில் திருநாவுக்கரசு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவி அங்குள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவரை, தனி அறையில் அடைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (27), இவரது கூட்டாளிகளான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் மேற்பார்வையில், ஐ.ஜி ஸ்ரீதர், எஸ்.பி. நிஷா பார்த்திபன் ஆகியோரது தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் திருநாவுக்கரசு தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, இவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சிபிசிஐடி எஸ்.பி. நிஷா, கோவை சி.ேஜ.எம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி நாகராஜ் மனுவை விசாரித்தார். அப்போது, திருநாவுக்கரசை, கோவை மத்திய சிறையில் இருந்து, கோர்ட்டுக்கு அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், கோர்ட்டுக்கு வெளியே வக்கீல்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதையடுத்து, திருநாவுக்கரசுவிடம் வீடியோகான்பரன்சிஸ் மூலம் நீதிபதி விசாரித்தார். பின்னர், திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். விசாரணையை முடித்து வரும் 18ம்தேதி மாலை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின், கோவை சிறையில் இருந்து நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் திருநாவுக்கரசு வெளியே அழைத்து செல்லப்பட்டான். சிபிசிஐடி போலீசார், திருநாவுக்கரசுவை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள ஒரு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:

என்னுடைய அப்பா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். எங்களுக்கு 5 ஏக்கரில் பண்ணை உள்ளது. எனது பெற்றோர் எனக்கு செலவுக்கு அளவுக்கதிகமாக பணம் கொடுத்தனர். இதனால், பைக், கார் வாங்கி சுற்றி வந்தேன். அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன், சதீஷ், வசந்தக்குமார் உள்பட 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் உருவாகினர். எங்க கேங்கல எல்லாருமே அதிமுகக்காரங்கதான். நாங்கள் ஒரே கேங்காக கூடி, சுற்றுவோம். மது அருந்துவோம். எல்லா கெட்ட பழக்கங்களும் எங்களுக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தலைவராக இருந்தது பார் நாகராஜ்தான். நாங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருப்போம்.

நாகராஜ் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வந்தார். அவரது அப்பா சாதாரண நிலையில்தான் இருந்தார். அவரது அப்பாவும் அதிமுகவில் நகரத்தில் சிறிய பொறுப்பில் இருந்தார். இதனால் அவர் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டார். அவரது தீவிரத்தைப் பார்த்து நகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் பதவி கிடைத்தது. பின்னர் ஜெயலலிதா பேரவை பொறுப்பு கிடைத்தது. அவர் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றார். பொள்ளாச்சி விஐபிக்கும், அவரது மகன்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். இதனால் பொள்ளாச்சி விஐபி அவருக்கு பார் நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்தார். முதலில் ஒரு பார் கிடைத்தது. அதன்பின்னர் 3 பார் கிடைத்தது. நகரில் பார் திறக்காத நேரம் அதாவது காலை 6 மணிக்கே பாரை திறந்து மது விற்பனை செய்து வந்தார். நகரில் வேறு பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் திறந்தால் போலீசுக்கு தகவல் கொடுப்பார். போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால் நாகராஜை கண்டு கொள்ள மாட்டார்கள். இதனால் கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிரந்தரமாக அனுமதி இல்லாத பார் நடத்தத் தொடங்கினார். போலீசாருக்கும் முறையாக மாமூல் கொடுத்தார். இதனால் போலீசார் இவரை கண்டு கொள்ள மாட்டார்கள். அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம். இதனால் நாங்கள் சின்ன சின்ன பிரச்னைக்கும் நாகராஜை தொடர்பு கொண்டோம். இதனால் போலீஸ் நிலையத்தை கட்டப்பஞ்சாயத்து இடமாக மாற்றிக் கொண்டார். எங்களுக்கு போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தவறுக்கு மேல் தவறு செய்ய ஆரம்பித்தோம்.

இதனால் பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பினோம். இதனால் நாங்கள் போலியான பெயரில் குறிப்பாக பெண்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி, பேச ஆரம்பித்தோம். அதில் பலரை எங்கள் வலையில் வீழ்த்தினோம். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டரையும் வீழ்த்தினோம். அவரிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை மிரட்டி வாங்கினோம். இதனால் அவர் போலீசில் வாய்மொழியாக புகார் கொடுத்தார். எழுத்து மூலமாக கொடுக்காததால், போலீசார் எங்களை மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு விடுவித்து விட்டனர். பார் நாகராஜ்தான் பஞ்சாயத்து செய்தார். அதன்பின்னர் எங்களுக்கு முழுமையாக பயம் போய்விட்டது. யாரும் எங்கள் மீது புகார் செய்யவில்லை.

இதனால் ஏராளமான பெண்களை எங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தோம். பெரும்பாலானவர்கள் இதைத்தான் தொழிலாள செய்து வந்தோம். அதில் பணமும் அதிகமாக கிடைத்தது.எங்களைப்போலவே, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சபரிராஜனும், பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி உல்லாமாக இருந்து வந்தார். இந்த தகவல் ஒரு நண்பர் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இதனால், அவரை நாங்கள் காரில் தூக்கி வந்து, அடித்து உதைத்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பிடுங்கினோம். அதில் இருந்த வீடியோக்களை பார்த்தோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்களுடன், மாணவிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம். ஆனால் அவன் தனியாகவே 60 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை வைத்திருந்தான். அதை நாங்கள் எங்களது செல்போனுக்கு மாற்றிக் கொண்டோம். பின்னர் அதில் ஒவ்வொரு பெண்களாக தேர்ந்தெடுத்து, அவருக்கு எங்கள் முன்பு சபரிராஜனை பேசச் சொல்வோம். அவரும் பேசுவார். அந்த பெண்களை எங்கள் பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தவுடன், நாங்கள் இந்த வீடியோவை காட்டி எங்களுடன் உல்லாசமாக இருக்கச் செல்வோம். கடந்த 8 மாதத்துக்கு முன்னர், ஒரு பெண்ணை மிரட்டி நானும் 4 பேரும் உல்லாசமாக இருந்தோம்.

எங்களை தாக்கி, செல்போனில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழித்து விட்டு, எங்கள் மீது புகார் கொடுத்தார். போலீசார் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் கொடுத்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர். இந்த பஞ்சாயத்தை பார் நாகராஜ்தான் செய்தார்.
இதற்கிடையில், சபரிராஜனிடம் உள்ள பல காதலிகளை ஒவ்வொருவராக அழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். சிலர் முரண்டு பிடித்தனர். அவர்களைத்தான் அடித்து, உதைத்து, பணம் பறித்து வந்தோம். அப்போது எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்துள்ளார். அவரையும் ஒருநாள் எங்கள் பண்ணை வீட்டுக்கு எங்களது மிரட்டலுக்கு பயந்து அழைத்து வந்தார். எங்களைப் பார்த்தவுடன் நண்பரின் சகோதரி, கண்டுபிடித்து விட்டு ஓடிப்போய் நண்பரிடம் கூறிவிட்டார். இதனால் நண்பனும் அவனது உறவினர்களும் சேர்ந்துதான், சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிகண்டன் மற்றும் என்னையும் தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்தனர். பின்னர் செல்போனை பறித்துக் கொண்டனர். எங்களை அடிப்பதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். 3வது முறையாக போலீசில் மாட்டினோம். இதற்கிடையில் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்து பத்திரிகையில் வந்தது.
இதனால் போலீசார் என்னையும், மணிகண்டனையும் விடுவித்து விட்டனர். மற்ற 3 பேரையும் சிறையில் அடைத்தனர். நான் திருப்பதி, சேலம் ஆகிய இடங்களுக்கு சுற்றினேன். பின்னர் போலீசார் கைது செய்தனர். இவ்வாறு சிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதன் மூலம் பார் நாகராஜ் உள்ளிட்ட 20 பேருக்கு இந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசுவிடம் உள்ள செல்போனில் உள்ள படங்களை வைத்தும், வாக்குமூலத்தில் கூறியவர்களையும் கைது நடவடிக்கைகளை தொடர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் பொள்ளாச்சி விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பிரமுகர் பார் நாகராஜிக்கு சொந்தமாக பொள்ளாச்சியில் கோட்டூர் ரோடு மேம்பாலம், சின்னாம்பாளையம், குஞ்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் பார்கள் உள்ளன. இந்த பார்கள் அனைத்தும் ஏலம் விடப்படாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருபவை ஆகும். இது போலீசாருக்கு தெரிந்திருந்தும் மாமூல் கிடைத்து வருவதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோட்டூர் சாலையில் மேம்பாலம் அருகே இருந்த பார் பொதுமக்களால் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தாக்கப்பட்டது பார் என்று குறிப்பிட்டால் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதாலும், பார் நாகராஜை காப்பாற்றும் வகையிலும் பாஸ்ட்புட் உணவகம் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தஞ்சையில் ஆளுங்கட்சி விஐபி ஒருவருக்கு சொந்தமான வீட்டில் பார் நாகராஜ் கடந்த சில நாட்களாக தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனாலும் நாகராஜின் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செல்போன் சர்வீஸ் கடைகளில் விசாரணை:

ஆளுங்கட்சி விஐபிக்கள் தொடர்பான பலாத்கார வீடியோக்கள் உலா வர வாய்ப்பு உள்ளதாக பொள்ளாச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செல்போன் சர்வீஸ் கடைகளில் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் செல்போன்களில் இருந்து ஏற்கனவே பல பலாத்கார வீடியோக்கள் நண்பர்கள் வட்டாரத்திற்குள் ஷேர் செய்யப்பட்டுள்ளதாகவும், அது போன்ற வீடியோக்கள் தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் நண்பர்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார் சிலரிடம் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பொள்ளாச்சியில் உள்ள சில செல்போன் சர்வீஸ் கடைகளில் இருந்து வீடியோக்கள் வெளியாகி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து செல்போன் சர்வீஸ் கடைகளில் கடந்த 2 நாட்களாக போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சி விஐபிக்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3 நாளில் 50 பேரிடம் விசாரணை
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் 3 நாளில் 50 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Best regards,

திமுக - காங்கிரஸ் கூட்டணி

கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! முஸ்லீம்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களின் ஒரு வோட்டுக் கூட அதிமுக - BJP - பாமக கூட்டணிக்கு இல்லை! திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தமாக விழப் போகும் வோட்டுக்கள் அவை!

இந்துக்களே நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம்? 'நடுநிலை' யா? 'முற்போக்கா'? 'பரந்த மனித நேயமா'? 'எல்லாரும் நம் சுற்றமா?'....

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்! நாம்தான் பல தினுசாக இருக்கிறோம்! அவர்கள் இலக்கில் - மோடியை வீழ்த்துவதில்- வெறிகலந்த லட்சியப் பிடிப்போடு இருக்கிறார்கள்!

இந்துக்களே நீங்கள் 'மைனாரிட்டி' ஆகிவிடுவீர்கள்! தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும் உரிமை மட்டுமல்ல (புகை மாசு!) - கோவிலில் மணி ஒலிக்கும் உரிமை (ஒலி மாசு) முதல் வீட்டு வாசலில் கோலம் போடும் உரிமை (சாணி பவுடர் மாசு)வரை - சகலமும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்! அந்த நிலை வந்த பிறகுதான் விழித்துக் கொள்ளப் போகிறோமா? 

அவன் புத்தாண்டுக்கு 10000 வாலா பட்டாசு விடுவான் - அப்போது கெடாத சுற்றுச் சூழல் நீ வெடிக்கும் தீபாவளிப் பட்டாசிலும், மாரியம்மன் திருவிழா வாணவேடிக்கையிலும் போய்விடும் என்று வழக்குத் தொடுப்பான்!

தேவையா இந்துவே உன் பரந்த மனம்?

அன்பான ஹிந்து சொந்தங்களே. வணக்கம்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரை, ஹிந்து கோவில்களோ அல்லது ஹிந்து குருக்களோ, ஹிந்துக்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொன்னதில்லை.

ஆனால்...

இந்த தேர்தலில் ஹிந்துக்கள் வோட்டு மிக முக்கியமானது. ஏனென்றால், சில வருடங்களாக ஹிந்து எதிர்ப்பு சக்திகள் மிக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஹிந்துக்கள் ஆகிய நாம் எந்தெந்த கட்சி ஹிந்துக்களுக்கு விரோதமானது  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடந்த சில கட்சிகளின் ஹிந்து விரோத செயல்களை பார்ப்போம்.

🚩 தி மு க தலைவர் ஸ்டாலின், ஹிந்து திருமணங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்து விமர்சித்து  ஒரு மாற்று மதத் திருமணத்தில் பேசியிருக்கிறார். கனிமொழி திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை கேலி செய்து பேசி இருக்கிறார். அது மட்டும் அல்ல. கலைஞர் இருந்த வரையில் அவர் அதிக அளவு ஹிந்து விரோத பேச்சுக்களை தான் பேசிவந்தார். தவிர தி கவின் சொல்படிதான் தி மு க நடந்து கொண்டிருக்கிறது.

🚩Congress - DMK ஆட்சியில் இருந்த போது ராம சேதுவை அழிக்க திட்டமிட்டார்கள். அப்பொழுது, "ராமன் ஒரு குடிகாரன். ராமன் எந்த Engineering கல்லூரியில் படித்தான் ?" என்று கருணாநிதி கேள்வி கேட்டார்.

🚩இஸ்லாமிய தீவிரவாதத்தால் நாம் பல இந்திய உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆனால், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவர்கள் சனாதன தீவிரவாதம் என்று மாநாடு நடத்துகிறார்கள்.

🚩காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை நிறுவினார்.

🚩சென்ற வருடம் நமது தாய் ஆண்டாளை தி மு க நட்புடைய வைரமுத்து தாசி என கூறினார். ஆனால், பா.ஜ.க தவிர வேறு கட்சியும் அந்த கருத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை.

🚩ஐயப்பன்  கோவில் விவகாரத்திலும் பா.ஜ.க தவிர வேறு எவரும் எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை. சீமான் போன்றவர்கள் ஐயப்பனையே விமர்சித்தது பேசினார்கள்.

🚩லயோலா கல்லூரியில் ஹிந்து அவமதிப்பு ஓவியங்கள் வைத்து நமது மதத்தை இழிவு படுத்திய போதும் யாரும் வாய் திறக்கவில்லை. சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

🚩திரிபுவனம் ராமலிங்கம் காலையில் இஸ்லாமிய மத மாற்றத்தை தடுத்தார். மாலை அவர் கைகள் வெட்டப்பட்டு  கொல்லப்பட்டார். எந்த மீடியாவும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன், இந்த கொலையை செய்தது ஹிந்துக்கள் என்கிறார்.

🚩மோகன் சி லாசரஸ் என்கிற கிறிஸ்துவ போதகர், ஹிந்து கடவுள்களை சாத்தன் என்றும், ஹிந்து கோவில்களை சாத்தானின் இருப்பிடம் என்றும் கூறுகிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பல பல ஹிந்து விரோதப் பேச்சுக்களும், செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் ஹிந்துக்கள் இவை எல்லாம் சகித்தது கொள்ள வேண்டும். நம் பொறுமைக்கும் அளவு உண்டு. நமது கோபத்தை அறவழியில் காட்ட வேண்டும். அதற்கு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

"வரும் தேர்தலில் ஹிந்துவாகிய நான், எனது மதத்தை ஏளன படுத்தும் கட்சிக்கும் அவர்களது கூட்டணிக்கும் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வாக்களிக்க மாட்டோம்."

இவ்வாறு நாம் ஹிந்துக்கள் ஒரு முறை DMK, Congress, VCK, NTK etc போன்ற ஹிந்து எதிர்ப்பு கட்சிகளுக்கு வோட்டு போடாமல் இருந்தால் போதும். அவர்கள் வாக்குக்காகவாவது ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட மாட்ட்டார்கள்.

இந்த விண்ணப்பம் ஹிந்து மதத்தை வளர்பதுக்காக இல்லை. காப்பதற்காக. இந்த ஹிந்து விரோதிகளிடம் ஆட்சி சென்றால், நமது கோவில்களையும் ஹிந்து கலாச்சாரத்தையும் அழித்து, நமது வருங்கால சந்ததியினர் ஹிந்து மதத்தை கடைபிடிக்காத அளவுக்கு செய்துவிடுவார்கள்.

யோசியுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள்.
ஹிந்து தருமத்தை காதித்திடுங்கள்.

பாரத்மாதா கிஜே..!

Best regards,

Friday, 15 March 2019

காலைச் சுற்றிய பாம்பும், கடனும் ஒன்றே!-

காலைச் சுற்றிய பாம்பும், கடனும் ஒன்றே!-  👣

#MotivationStory 🐜

எ ல்லாம் முடிந்துவிட்டது. நான் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பல். இனி செய்ய எதுவுமே இல்லை குருஜி" என்றவனை குரு சிறு புன்னகையோடு பார்த்தார். 🛳

``வாழ்க்கையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது நண்பா, முடிவை ஆரம்பம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தை முடிவு என நினைத்துக்கொள்கிறார்கள்" 🤔

அவனுக்கு குருஜியின் பேச்சு கிண்டல் செய்வதைப் போல் இருந்தது.😢

``சொல் அளவுக்கு வாழ்க்கை எளிதானதல்ல குருஜி. நாம் அறியாத கணத்தில் வாழ்க்கை நம்மைச் சுழற்றிப் போட்டுவிடுகிறது. இன்று நான் ஒரு மீளமுடியாத கடன்காரன். நீண்ட நேரமாகப் புகைக்காததால் என் விரல்கள் நடுங்குகின்றன.
இங்கு உள்நுழைந்து கடன்காரன் கழுத்தைப் பிடிக்கமாட்டான் என்கிற நம்பிக்கையில் அமர்ந்திருக்கிறேன். அல்லது வெளியில் போனதும் நான் பிடிபட்டு விடலாம் என்று தோன்றுகிறது. அதற்குப் பயந்துதான் புகை பிடிக்கக்கூடப் போகாமல் இருக்கிறேன்"

``சரி... சரி. பதற்றம் வேண்டாம் நண்பா. வா நம் தோட்டத்துக்குப் போய் நடக்கலாம். நீ அங்குப் புகைபிடிப்பது என்றாலும் பிடிக்கலாம்."
குரு எழுந்து தோட்டத்தின் பக்கம் வந்தார். அவனும் கூடவே வந்தான்.🐇 🐿

``ம், புகைபிடிப்பதென்றால் நீ இங்குப் புகைக்கலாம். புகைத்துக்கொண்டே உன் கதையைச் சொல். எப்படி இவ்வளவு பெரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டாய்?"🕸

அவன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்தான். ஆனால் குரு கேட்ட கேள்வி அவனை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. உண்மையில் அவனுள்ளும் இதே கேள்வி இருக்கிறது.😗

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தொழில் ஓகோவென்று போகவில்லை என்றாலும் ஏதோ கௌரவமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அவனோடு தொழில் ஆரம்பித்த அநேகர் காலாவதியாகி வேறுவேறு வேலைகளுக்குப் போய்விட்டனர். இவன் மட்டுமே கொஞ்சமாக இருந்தாலும் லாபத்தோடு நிறுவனத்தை நடத்திவந்தான்.💐

நீண்டகாலம் கடன் இல்லாமல்தான் வாழ்ந்தான். இத்தனைக்கும் நாலைந்து வங்கிக் கணக்குகள். கடன் அட்டைகள். வரும் வருமானத்துக்குள் செலவுகள் எல்லாம் அடங்கின. எதிர்பாராமல் உறவினர் வகையில் ஒரு சிக்கல் முளைத்தது. பொதுவாக உறவுக்காரர்களுக்குச் சிக்கல் என்றால் கண்டும் காணாமல் இருந்துவிடவேண்டும் என்று நண்பர்கள் சொல்லும் வாழ்வியல் பொன்மொழியை அவன் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அவனிடம் அப்போது பணம் இல்லை. நண்பர்கள் யாரிடமும் கடன் கேட்டும் பழக்கம் இல்லை.🌸

அவன் வங்கிக் கணக்கை இணையத்தில் பயன்படுத்தத் திறக்கும்போதெல்லாம் வலதுபுறத்தில் `நியூ' என்று ஒரு சிவப்பு நிறச் சொல் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். அதை க்ளிக் செய்து உள்ளே போனான். உங்களுக்கான கடன் ரூபாய் 1,00,000 இப்போதே தயாராக இருக்கிறது என்று சொன்னது அந்த அறிவிப்பு. இதெல்லாம் சும்மா. எல்லாக் கேள்வியும் கேட்டுவிட்டு இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தான். 🏵

கடன் வட்டியைப் பார்த்தான், மிகக் குறைவுதான். எத்தனை மாதங்களில் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று கேட்டது. குறைவான மாதங்களையே தெரிவு செய்துகொண்டான். எந்த வங்கி எண்ணில் பணம் வரவு வைக்கவேண்டும் என்று கேட்டது. தெரிவு செய்தான். அதைச் சொல்லிவிட்டு அவன் தன் சேமிப்புக் கணக்குக்குத் திரும்புவதற்குள் கணக்கில் ஒரு லட்சம் ஏறியிருந்தது.
ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது. கடன்பெறுவது இத்தனை எளிதா, பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினான். திரும்பக்கேட்கும் எண்ணம் இல்லை. முதல் மூன்று மாதங்கள் கடனுக்கான தவணை மிக எளிதாகப் போனது. நாலாவது மாதம் தொழில் கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஐந்தாவது மாதம் படுத்தேவிட்டது. 🌺

``வணக்கம் சார், நாங்க ஒய் ... பேங்க்ல இருந்து பேசுறோம். இந்த மாதம் உங்க இ.எம்.ஐ இன்னும் வரலை." ,🌹

அவனுக்கு இது மிகப் புதிது. பணம் வர இன்னும் நாலு நாள்கள் ஆகலாம். 🌻

``இன்னும் நாலு நாள்ல கட்டிறேன் மா."

``சார் இன்னைக்கு நீங்க கட்டலைன்னா `ஃபினான்ஸியல் சார்ஜஸ்' கண்டிப்பா வந்திரும் சார். நான் வேண்ணா ஒரு வழி சொல்றேன் சார். உங்க லோனை டாப் அப் பண்ணிக்குங்க. இன்னும் 50,000 ரூபாய் கிடைக்கும் சார். அதை வைத்து இந்த இ.எம்.ஐ கட்டிடலாம் சார். வட்டி கணக்கு பண்ணினீங்கன்னா ஃபினான்ஸியல் சார்ஜை விடக் கம்மியாத்தான் இருக்கும் சார். நீங்க ஓகேன்னா நான் உடனே பிராசஸ் பண்றேன்"  🌷


தவிர்க்க இயலாதபடிக்குச் சொல்லப்படும் உடனடித் தர்க்கங்கள்.🌱

வேண்டாம் என்று சொல்லத் தயங்கி... உடனடி பிராசஸிங் முடிந்து கணக்கில் பணம். அடுத்த சில நிமிடங்களில் அந்த மாத இ.எம்.ஐ கழிக்கப்பட்டது. கடந்த முறையை விட இந்த முறை அரை சதவிகிதம் வட்டி அதிகம். கவனிக்கவேயில்லை.
தொழில் புவி ஈர்ப்பு விசைச் சார்ந்தது போலும். கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தால் அதைப் பிடித்து நிறுத்தவே இயலாது. இத்தனை ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சி. ஒரு மாதம் என்பது மிகவும் குறைந்த நாள்களைக் கொண்டது என்பதை இ.எம்.ஐ கட்டுபவர்களிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். அடுத்தடுத்த இ.எம்.ஐ கள். வழக்கம்போல உடனடி பிராசஸிங். எந்த தைரியத்தில் கடன் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை.🌲

வீட்டில் அவசரத் தேவை ஒன்று வந்தது. இந்த முறை அவனே தேடிப் போய்க் கடன் கேட்டபோது, ``சாரி சார். உங்க லிமிட் ஓவர்" என்றார்கள்.🌳

எது அவன் லிமிட்? அவனுக்கே புரியவில்லை. வெளியே நண்பர்களிடம் கை நீட்டினான். இரண்டு மூன்று மாதங்களில் கடன் தொகை கொஞ்சம் அடைந்ததும் மீண்டும் சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியது. அப்போதுதான் போய்ப் பார்த்தான். மூன்று மாதங்கள் கட்டிய இ.எம்.ஐ பணத்தை மீண்டும் கடனாகத் தரக் காத்திருந்தார்கள். இந்த முறை வட்டி இரட்டிப்பாயிருந்தது. 🌴


அதை வாங்க மனம் வரவில்லை. கடன்காரர்கள் துரத்த ஆரம்பித்தார்கள். வங்கிக்காரர்கள் தேட ஆரம்பித்தார்கள். ஒருமுறை போனை எடுத்தாலும் என்ன நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். பேசாமல் அப்படியே எங்காவது ஓடிப் போய்விடலாமா என்று தோன்றியது.
சிகரெட் கையிலேயே இருந்தது. தோட்டத்தில் மலர்களின் மணம் அதீதமாய் இருந்தது. பற்ற வைக்க மனம் வரவில்லை.🌷🌷🌻🌼🌺

"ஆமாம் இந்த சிகரெட்டை எவ்வளவு நாளாகப் பிடிக்கிறாய்?"🌾

"18 வயதுமுதல், விட முடியவில்லை. மண்டையைப் பிளக்கும் டென்ஷனில் பயன்பாடு மும்மடங்காகிவிட்டது"🌿

"சரி , இப்போது என்ன உத்தேசம்?"☘

"என் நெருங்கிய நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். அவனிடம் ஒரு பெரிய தொகை கேட்டிருக்கிறேன். வந்தால் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசமாவேன்" 🍀🍁

" சிகரெட்டை..." 🍂🍂

"இதையும் கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும்". 🍃🍃

குரு அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினார். திடீரென்று 🍊

"நண்பா, உன் கால்களில் பாம்பு..." என்றார்.🍋

அவன் துள்ளிக்குதித்தான். நின்ற இடத்திலிருந்து சில அடிகள் ஓடினான். பின்பு கால்களைத் தடவி விட்டுக்கொண்டான். குரு நின்ற இடத்திலேயே சிரித்துக்கொண்டு நின்றார். அப்போதுதான் அவர் தன்னைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று புரிந்தது. 🍍

"என்ன குருஜி. விளையாடுகிறீர்கள். நான் பயந்தே போய்விட்டேன்." 🍎


``நம்புகிறேன். நீ பயந்துதான் போய்விட்டாய். ஆனால் அப்போது உன் அனிச்சை செயல் மிகச் சரியாகச் செயல்பட்டது. புரியவில்லையா, உன் கால்களில் பாம்பு என்றதும் எப்படிப் பதறினாய்...ஒரு கணத்தில் அதிலிருந்து விடுபட முனைந்தாய். அதுதான் சரி. நீ எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாலும் காலைச் சுற்றிய பாம்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றி விடமுடியாது. ஒரே கணத்தில்தான் உதறவேண்டும். அதே போல்தான் உன் கடன் பிரச்னையும் புகைபிடிக்கும் பழக்கமும். ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைப்பது நடக்கவே நடக்காது. கொஞ்சம் கொஞ்சமாகப் புகைபிடிப்பதையும் நிறுத்தவும் முடியாது. என்ன ஆனாலும் சரி என்று ஒரே உதறல். அது ஒன்றுதான் எல்லாவற்றையும் சரிசெய்ய வழி. இல்லை என்றால் மீண்டும் மீண்டும் உன்னை இழப்பாய். 🍐🌰🌽

புவி ஈர்ப்பு விசைக்கு எதிர்விசை இல்லையென்று யார் சொன்னது? பின்பு எப்படி வானில் விமானங்கள் பறக்கின்றன? உன்னுள் இருக்கும் புதிய விசைகளை இயக்கு. பயப்படாமல் பதில் சொல். உன் கை நடுக்கத்தை சில நாள்கள் கண்டுகொள்ளாமல் விடு. எல்லாம் சரியாகிவிடும்"🍏🍓

கையிலிருந்து சிகரெட் பாக்கெட்டைத் தூக்கிப் போட்டான். குருவோடு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தான். வங்கியிலிருந்து போன். கட் செய்யாமல் எடுத்துப் பேசினான்.🤗 🤗

Best regards,

Thursday, 14 March 2019

தனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்கிரங்களை பந்தாடுவோம்!

தனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்கிரங்களை பந்தாடுவோம்!
 


கடந்த ஆண்டு, பேராசிரியை நிர்மலாதேவி, 4 மாணவிகளை பாலியல் உறவுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில நாட்கள், அந்த பேராசிரியைக்கு எதிராக கோபத்தில் கொதித்து, பின்னர் பால் அடங்குவதற்கு இணையாக அடங்கிவிட்டது.


இந்த சம்பவத்திற்கு பிறகும், யாரும் திருந்தவில்லை என்பதற்கு, பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களே உதாரணம்.
பொள்ளாச்சியில் சில வாலிபர்கள், பெண்களை குறிவைத்து அழைத்து சென்று, பாலியல் பலாத்காரங்கள் செய்துள்ளனர்.

திருநாவுக்கரசு என்பவன் தலைமையில், சில வாலிபர்கள் இதை திட்டமிட்டு, 2012ம் ஆண்டு முதல் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேற்றி உள்ளனர். 250 பெண்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 1500க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில், 249 பெண்கள் மவுனமாக இருக்க, ஒரே ஒரு பெண் தைரியமாக தங்கள் குடும்பத்தினரிடம் சென்று சொல்கிறார். குடும்பத்தினர், காவல்துறையினரிடம் சென்று புகார் கொடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் தாக்கப்படுகிறார்.  அதன் பின்னர் பத்திரிக்கைகள் இதை வெளிப்படுத்துகின்றன.

இவ்வளவும் நடந்த பின், இதில் தொடர்புடைய, 4 பேர் கைது செய்யப்படுகிறன்றனர். தமிழகம் மீண்டும் ஆத்திரத்தில் பொங்குகிறது. இதனால், பலரும் பல விஷயங்களை கொட்டி தீர்க்கின்றோம்.


இன்னொரு புறம், தன் அழகை காட்டிக் கொண்டு, ஒரு சில ஆப்ஸ்களில் அரைகுறை ஆடையுடன் பாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். பெற்றோர், கணவன், மனைவி ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டு பகிருவதை நிறுத்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டதால்,  அனைவரும் அனைத்து விஷயங்களையும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தான் பகிர்ந்து கொள்கின்றனர்.


பருவ வயதை அடைந்த ஆண், பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அவர்களின் பெற்றோர், உடன் பிறப்புகள் மற்றும் பெரியவர்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளின் நடவடிக்கையில் சற்றேனும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். இதற்கு பெயர் சந்தேகப்படுவது இல்லை. நம் பிள்ளை சரியான பாதையில் தான் பயணிக்கிறதா என்ற அக்கறை.
சரியான பாதை எது என்பதை அவர்களுக்கு ஆரம்பம் முதலே கற்றுத் தருவது தான் பெற்றோரின் மிக முக்கிய கடமை.


‛‛பெற்றோரின் தியாகங்கள் இல்லாமல் எந்த குழந்தையும் உயர் நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறு போட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக் கட்டணம், பாட புத்தகம் வாங்கித் தருவது மட்டுமே அவர்களுக்கு பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும், அங்ஙாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது’’

இதை நான் சொல்லவில்லை; நம்மிடையே வாழ்ந்து மறைந்த பிரபல எழுத்தாளர், எழுத்து சித்தர் பாலகுமார் சொல்லியிருக்கிறார்.

நம் குழந்தைகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்படும் போதே அதை கவனிக்க  தெரிய வேண்டும். அதை சந்தேகக் கண்ணுடன் பார்க்காமல், அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். அவர்கள் தங்கள் உடல் ரீதியான, மன ரீதியான மாற்றங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நம்பிக்கையை அந்த பேச்சு அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

முதல் பேச்சிலேயே, எந்த குழந்தையும் தங்கள் பெற்றோரிடம் அனைத்தையும் பகிர்ந்துவிடாது. மெல்ல மெல்ல பேசி அவர்களின் நண்பனாகவே மாற வேண்டும். இந்த நண்பன் நம் நலத்திற்காகவே எடுத்துரைப்பான் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஊட்ட வேண்டும்.

அவர்கள் அளவுக்கு நீங்கள் இறங்கிப் போய் மனம் திறந்து பேசினால், பெற்றோர் என்ற உங்கள் உயரம், பிள்ளைகளின் மனதில் இன்னும் பல ஆயிரம் மடங்கு உயரும். அந்த உயரத்தை எட்டுவதும், அனைத்திற்கும் கோபப்பட்டு, அல்லது எதையும் கண்டு காெள்ளாமல் இருப்பதன் மூலம், உங்கள் உயரத்தை பாழாக்கி கொள்வதும் பெற்றோர் கையில் தான் உள்ளது.


 எதற்கெடுத்தாலும் சந்தேகமும் கூடாது. அதீத நம்பிக்கையும் கூடாது. என் மகன் அல்லது மகள் இதை நிச்சயம் செய்ய மாட்டாள் என்ற ஓவர் கான்பிடன்ஸ் எப்போதும் இருப்பது நல்லதல்ல. ஒரு வேளை செய்திருக்க வாய்ப்பிருக்கலாம், அவர்களிடமே கேட்டுவிடலாமே என்ற பாணியில் செயல்பட்டால், பெரும் பேராபத்தை தடுக்கலாம்.

இதைத்தான், வாரியார் சுவாமிகள், ‛பார்த்து கெட்டது பிள்ளை, பாராமல் கெட்டது பயிர்’ என்பார். அது நுாற்று நுாறு சரி என்பதை தற்கால குடும்பங்கள் நிரூபித்துவருகின்றன.

இன்னொருபுறம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் கையளவு உலகம் வந்துவிட்டதை பயன்படுத்தி அறிவை விருத்தி செய்ய வேண்டிய ஆண், பெண்கள் அதற்கு பதிலாக ஆபாசத்தை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் முக்கு சந்துகளில் போலீஸ் பயத்துடன் பாலியல் தொடர்பான புத்தங்கள் விற்கப்பட்ட நிலை மாறி, இன்று செல்போனில் பட்டனை தட்டினால் போதும் என்ற நிலை. இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் வர்த்தகம் மறைந்து கிடக்கிறது.
தற்கால சினிமாக்களில் ஆபாசங்களை அள்ளி வீசும், நடிகர்கள், இயக்குனர்கள், தற்போது யோக்கியர்கள் போல் கண்டன அறிக்கை விடுகின்றனர். கொதித்தெழுந்து பேட்டி கொடுக்கின்றனர். காதல் இல்லாமல் ஒரு சினிமாவாவது வருவதுண்டா? அல்லது காதலிக்கும் அனைவருமே, பீச், பார்க், ஓட்டல்களுக்கு சென்று தனிமையில் கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதா?

இப்படிப்பட்ட சீன்களை தொடர்ந்து திரைப்படங்களில் காட்டி, இளைய சமுதாயத்தை சீரழிக்கின்றனர்.இதில் எளிதில் சிக்கி கொண்டு சின்னாபின்னமாகிறது இளைய சமுதாயம். ஆனால் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.

பொள்ளாச்சி விவகாரத்திற்கே வருவோம், ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் அண்ணன் தாக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். நாளை குற்றவாளிகள், நீதிமன்றத்தில் ‛‛எங்களை போலீஸ் அடித்து சொல்ல வைத்தனர். இந்த விடியோக்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை’’ என்று வாக்குமூலம் கொடுப்பார்கள்.

தற்போது பரவிவரும் விடியோவில், குற்றவாளி ஒருவன் இது சம்பந்தப்பட்ட பெண்கள் ஒப்புதல் பேரில் எடுத்தது என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைக்கிறான்.  குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால், இந்த பரபரப்பு அடங்கிய பின்னர் அனைவரும் ஜாமினில் வெளிவரலாம்.

நிர்மலாதேவியை துாக்கில் போடு என்று கத்திய இதே சமூகம் தான், அந்த பெண்ணுக்கு ஏன் இன்னமும் ஜாமீன் கொடுக்க வில்லை என்று கேட்கிறது. அதே போல, பொள்ளாட்சி குற்றவாளிகளுக்கும் இன்னும் சில காலம் கழித்து கேள்வி எழுப்பபடலாம்.

பெற்றோர் ஒவ்வொருவரும், தங்கள் பிள்ளைகள், சமுதாயத்தில், அந்தஸ்த்து மிக்க பதவியை பிடிக்க வேண்டும், புகழை பெற வேண்டும், பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை என்ன என்பதையும் அறிய வேண்டும்.

கடின உழைப்பு, நேர் வழி, புத்தி கூர்மை போன்றவற்றால் பணம், புகழ், பதவியை அடைவதில் தவறில்லை. ஆனால், கலாசார சீர்கேட்டுக்கு ஆளாகி, ஆபாசத்தின் பிடியில் சிக்கி, பெயர், புகழ், பதவி, வசதிக்காக, மானத்தையும், கற்பையும் விட்டுக் கொடுக்கும் நிலை படுபயங்கரமானது.

இதை, பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டம். அதே போல், ஆசை வார்த்தையில் மயங்குதல், இனக்கவர்ச்சிக்கு ஆளாகி, கண்டவர்களிடம் ஏமாறுவது, என்ற நிலைக்கு ஆளாகும் பெண்களும் சரி, ஆண்களும் சரி, நாளடைவில், நயவஞ்சர்களால் மிரட்டப்பட்டு, தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள். இதுவே, பழகிப் போவதால், வேறு வழியின்றி, தான் கெட்டது மட்டுமின்றி, தன் தோழர், தோழியரையும் இந்த பாதையில் அழைத்துச் செல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.

கொடூர குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தவறில்லை. அதே சமயம், கொடூரர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் நம்மை பாதுகாத்து கொள்வதும், அனைத்து விஷயங்களையும் விழிப்புடன் அணுகுவதும் நம் கையில் தான் உள்ளது.

மாணவர்கள், இளம் பருவத்தினர், தங்களை தாங்களே தற்காத்து கொள்வது மட்டுமின்றி, சமூக வலைதளங்கள், மாெபைல் போன்கள் மூலம் கிடைக்கும் முன் பின் அறிமுகம் இல்லாத நட்பு வலையில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் கடமையை சரி வர செய்தால், குற்றங்களை குறைப்பதோடு, குற்றவாளிகள் உருவாவதையும் தடுக்கலாம்.

Best regards,

Wednesday, 13 March 2019

பொள்ளாச்சி பாலியல் குற்றம்

*பொள்ளாச்சி பாலியல் குற்றம்*
இந்த பொள்ளாச்சி சம்பவத்துல இருந்து இணையப்பெண்கள் படிக்க வேண்டிய பாடங்கள் ரெண்டு...
1) இணையத்துல யாரையும் முழுசா நம்பி personal messagesல உன் அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்துக்காத. எதை பண்ணணும்னாலும் தில்லா தெனாவெட்டா டைம்லைன்லயே பண்ணு. இல்ல ஒரிஜினல் ஐடிகள்ள இருக்கிற பெண்கள் குழுக்கள்ள இணைஞ்சு பப்ளிக்கா பண்ணு! எவனும் உன்னை அணுகமாட்டான். ஏன்னா இவ தனியா இல்லங்குற பயம் எல்லாவன்கிட்டயும் இருக்கும்.
2) அப்டியே ஒருவேளை உணர்ச்சிப்பெருக்கில யார்கிட்டயாவது உன் அந்தரங்கத்த personal messagesல பகிர்ந்துகிட்டன்னா, அதுக்கப்புறம் எதிராளி உன்னை மிரட்டுனா உடனடியா சைபர் கிரைம்ல bullying and blackmailing அப்டீன்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணிரு. மிரட்டலுக்கு பயந்து எந்த விதத்துலயும் அடிபணியாத! ஏன்னா இங்க நீ பேசின திரையடிகளையும் வாயிஸ் ரெக்கார்ட்களையும் போட்டு உன்னை ஒரு மஸ்ரையும் எவனும் புடுங்க முடியாது. “ஆமாண்டா அப்டி தான் டா பேசினேன். எனக்கும் காம உணர்வுகள் இருக்கு. கலவிய நான் அசிங்கமானதா அவமானமா பார்க்கல. அப்டி பார்க்கிறவன் போயி முட்டிகிட்டு சாவு!” அப்டீன்னு பதில் குடுத்திட்டு தெனாவெட்டா கடந்து போயிரலாம்.
- இந்த ரெண்டும் பெண்கள் ஈசியா பண்ணணும்னா முதல்ல இணையத்துல பெண்கள் பாலியல் ரீதியான ஆரோக்கியமான உரையாடல்களை, கருத்துப்பகிர்வுகளை பப்ளிக்கா எந்த அச்சுறுத்தலும் இல்லாம பகிரக்கூடிய பாதுகாப்பான சூழல் இருக்கணும். அப்டி இப்ப இல்ல. அதுக்கு தான் நாங்க பெண்களுக்கான ஒரு குழு அமைச்சு செயல்படுறோம். இந்த மாதிரி இன்னும் குழுக்கள் வரணும். பெண்கள் இணைஞ்சு ஒட்டுக்கட்டையா நிக்க தொடங்கணும். கண்டிப்பா இந்த மாதிரி அயோக்கியர்கள் கைல சிக்காம இளம் பெண்கள் தப்பிக்க முடியும்!
இனி இதுல பெற்றோருக்கான பாடமும் இருக்கு: நம்ம பிள்ளைகள் வயசுக்கு வந்துட்டாங்கன்னாவே அவங்களுக்கு காம உணர்வுகள் இருக்கும் என்கிற உடலியல் உளவியல் உண்மையை நாம முதல்ல ஏத்துக்கணும். அவங்க கிட்ட செக்ஸ் பத்தி எல்லாம் மனம் திறந்து பேசணும். காம உணர்வுகளுக்கு பாதுகாப்பான வடிகால் சுயஇன்பம் தான் என்கிறதை நாமளே நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி தந்திரணும்.
என் பசங்களுக்கு (17 வயசு மற்றும் 13 வயசு மகன்கள்) 7 வயசுல இருந்தே முறையான பாலியல் கல்வி கொடுக்கப்பட்டிருக்கு. அது மட்டுமில்லாம என் கிட்ட எந்த விஷயத்தையுமே, அதாவது காதல், காமம், கலவி உணர்வுகள், சுய இன்பம், ஹோமோ-செக்‌ஷுவாலிட்டி அப்டீன்னு எதை பத்தியுமே மறைக்காம வந்து கருத்து சொல்லுற அளவுக்கு சுதந்திரமும் நம்பிக்கையும் குடுத்து வளர்த்திருக்கேன். எதை செஞ்சாலும் மம்மிக்கு தெரிஞ்சே செய்யலாம் என்கிற தைரியம் இருக்கிறதால ரெண்டு பேருமே எந்த தப்பையும் ஒளிச்சு மறைச்சு பண்ண வேண்டிய அவசியமில்லாம போயிருது. ஸோ ரொம்ப தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடயும் எதையும் நேர்மையா செய்யிற பக்குவத்தோடயும் ரெண்டு பேருமே வளர்ந்திருக்கானுக. ரெண்டு பேருக்குமே பாதுக்காப்பான கலவி பத்தி சொல்லி குடுத்திருக்கேன்.
இப்டி நாமளே நம்ம பிள்ளைகள்கிட்ட வெளிப்படையா எல்லாத்தையும் பத்தி பேச தொடங்கினா அவங்க வேற யார்கிட்டயும் போயி பாலியல் ரீதியான கருத்துப்பகிர்வுகள் பண்ண மாட்டாங்க. அப்டியே பண்ணாலும் அதை உங்க கிட்ட இருந்து மறைக்கமாட்டாங்க. இப்டி எல்லாமே வெளிப்படையா இருந்தா எதாவது தப்பா போகுதுன்னா ஈசியா தெரிஞ்சுரும். பாதுகாப்பா விலகுற ஆலோசனைகள பிள்ளைகளுக்கு குடுத்திரலாம்.
இனி ஒருவேளை எல்லாத்தையும் மீறி பாலியல் ரீதியான ஒரு வன்முறைக்கு நம்ம பிள்ளைகள் ஆளாகிட்டாங்கன்னாலும், ஆபாச வீடியோக்கள் வெளியாக்கிருவோம் என்கிற மிரட்டல் வந்தாலும், அதை அசிங்கம் அவமானம்னு சமூகத்துக்கு பயந்து, மீடியாவுக்கு பயந்து மறைச்சு வைக்காம உடனடியா சட்டப்படியான நடவடிக்கைக்கு நேரா கடக்குற தைரியம் வேணும். ஏன்னா அப்டி ஒரு வீடியோ வெளியாயிட்டாலும் அதனால நமக்கு எந்த நட்டமும் இல்ல என்கிறது தான் உண்மை. கற்பு மானம் எல்லாம் பெண்ணுடல்ல தான் இருக்கு என்கிறதெல்லாம் முட்டாள்தனமான கட்டமைப்பு என்கிறது தான் நிஜம். ஆகவே தைரியமா செயல்படலாம்.
ஊர் மோசமா பேசுமேன்னா, எத்தனை நாளைக்கு தான் பேசிரும்? அப்டி பேசிட்டா தான் என்ன? ஊரார் சாப்பாட்டுலயா நாம இருக்கிறோம்? நாம சம்பாதிச்சு தானே நாம வாழுறோம்? ஸோ இந்த பயம் தேவையே இல்ல. இப்டி எல்லா பெற்றோருமே செய்ய ஆரம்பிச்சிட்டா blackmailers யாரும் தப்பிக்கமுடியாம போயிரும். அப்போ இந்த படத்துல இருக்கிற மாதிரி கயவர்கள் சட்டத்துக்கு பயந்து தான் ஆகணும் என்கிற நிலை வரும். இப்படியான பாலியல் குற்றச்செயல்கள் வெகுவா குறையும்!
முயற்சி செஞ்சு பாருங்க பெண்களே மற்றும் பெற்றோர்களே!
அன்பில்,
Lulu Deva Jamla G

Best regards,

நாகரீக பெண்களே வணக்கம்

நாகரீக பெண்களே வணக்கம்.

இப்பதிவு ஆணாதிக்க திமிரில் எழுதவில்லை...

 பொள்ளாச்சி துயரத்தை தாங்க முடியாத பெண் குழந்தையின் தந்தையாக எழுதுகிறேன்....

நாகரீக பெண்களே..

உண்மையான  தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள் பின் திரியும்
தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்ப புத்தி  ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனம் வாகனங்கள் வைத்திருப்பது மட்டுமே வாழ தகுதி...?

கண்டபடி முடியை வெட்டிக் கொண்டு
கழிசடை தமிழ் சினிமா கதாநாயகன்  போன்ற  செயற்கையான தோற்றம்
உங்களை ஈர்க்க  போதுமான ஒன்றா...?

காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள்
 பின் தொடருபவன்  வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?

இதை பார்த்து உண்மை காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன்  என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா
உனக்கு வந்த ஆபத்தை நீ உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருவு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப் பட்டது சுதந்திரமா..?  சாபக்கேடா..?

கைபேசியையே  கட்டிலுக்குள்  மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும் நாகரீக பெண்களே...

ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...

அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..

ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.

எனவே அருமை சகோதரிகளே
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து படியுங்கள்.

கைபேசியை ஆபத்துக்கு உதவும்  உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.

நாடக காதல் நாதாரிகளிடம் சிக்கி சீரழிய வேண்டாம்...

பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது பணம்   சம்பாதிப்பதற்கு மட்டுமே  இல்லை.

குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

 நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..

தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே அதில் சந்தேகம் இல்லை.

படித்ததில் வலித்தது

Best regards,

தமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'

தமிழகமே உறைந்து நிற்கும் பொள்ளாச்சி துயரத்தை'  தாங்க முடியாத பெண் குழந்தைகளின் தந்தைகளின் மனவலியை உணர்ந்தவனாக ,
பெண் பிள்ளைகளை பெற்றவனாக பெருந்துயரோடு இதை எழுதுகிறேன்.

பெண் பிள்ளைகளே..
உண்மையான  தோழமைக்கும் , உடலுக்காக ஏங்கி உங்கள்பின் திரியும் தருதலைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே அலையும்
அற்பபுத்தி  ஆண்களுக்கும் வித்தியாசம் அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ , சொந்தமாகவோ, ஒரு இருசக்கர வாகனமோ, காரோ வைத்திருப்பது மட்டுமா வாழ தகுதி...?
ஆணின் தகுதி ?

கண்டபடி முடி வெட்டிக் கொண்டு கழிசடைத்தனமாக உடுத்திக்கொண்டு மட்ட சினிமா கதாநாயகன்  போன்ற  செயற்கையான தோற்றம்...
இது உங்களை ஈர்க்க  போதுமான ஒன்றா...?

காலை முதல் இரவு வரை நேரிலும் , கைபேசியிலும் தொடர்ந்து உங்கள் பின் தொடருபவன் வேலை வெட்டி இல்லாதவன் , வேறு நோக்கம் உள்ளவன் என்பதை கூடவா அறியாதவர்கள் நீங்கள்....?

'இதை பார்த்து உண்மையான காதல் என்றும் ஆத்மார்ந்த நட்பு என்றும் ஏமாந்து விட்டேன்' என்கிற அளவுக்கு தான் உங்கள் அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட ,தனியாக இருக்கும் வீட்டிற்கு அழைத்த பின்புமா வரக்கூடிய ஆபத்தை நீங்கள் உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன் இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருகோவிலுக்கு சென்று வர உன் தாத்தாவிடம் கால் வலிக்க நின்று அனுமதி வாங்கிய உன் அம்மாவுக்கு வராத பாதிப்பு உனக்கு வருகிறது என்றால் உனக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரமா..? அல்லது சாபமா..?

கைபேசியையே  கட்டிலுக்குள்  மறைத்து வைத்து எங்களுக்கு எல்லாமே தெரியும்
என்று ஏமாந்து நிற்கும்  பெண்களே...

ஏமாந்ததும் , பாதிப்பு அடைந்ததும் நீங்கள் அல்ல.
உங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் குடும்பமும் , இந்த சமூகமும்தான்...

'அனைத்தும் Google ல் கிடைக்கும்'
நல்லதும் , கெட்டதும் சேர்த்து..
ஆனால் பெற்றோர்களிடம் இருந்து "நல்லது மட்டுமே" கிடைக்கும்.

என் அருமை பிள்ளைகளே. கல்வியுடன் மனிதர்களையும் , அவர்களின் மனகுணங்களையும் சேர்த்து படியுங்கள்.

கைபேசியை உங்களுக்கு உதவும்  உபகரணமாக மட்டுமே பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும் , உபத்திரவம் தரும் வகையிலும் பயன்படுத்தாதீர்கள்.

பெற்றோர்களே.நம் வாழ்நாட்கள் என்பது பணம்   சம்பாதிப்பதற்கு மட்டுமே  இல்லை.
குழந்தைகளின் முகம் பார்த்து அவர்கள் உள்ளம் அறியும் அளவுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

 நீங்காத நல்ல நினைவுகளும் நல்ல சம்பாத்தியமே..

Best regards,