Friday, 10 June 2016

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?

வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?
வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும்.
வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும்.
ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..?
அதற்கான விடை தான் இந்த கட்டுரை.
நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை.
அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது.
முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட.
கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.
காரணம் #1
ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம்.
இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.
காரணம் #2
ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காரணம் #3
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.
காரணம் #4
மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது.
ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
காரணம் #5
ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்
காரணம் #6
சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது.
அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில்.
இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.
காரணம் #7
மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர்.
அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை.
எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.
Best regards,

Thursday, 9 June 2016

உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??

உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??
நிகழ்விற்கு வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தாம்பூல பைகளில் என்ன கொடுக்கலாம் என எண்ணுகின்றீர்களா..??
தாம்பூலப்பைகளில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து தருவது நம் வழக்கம்.. இதை வெறுமனே கொடுக்கவில்லை.. தேவைகள் கருதியே கொடுத்தார்கள். உணவிற்கு பிறகு வெற்றிலை பாக்கு உணவிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதிக தூர பயணத்திற்கு தேங்காய் தண்ணீரும் தேங்காயும் பயன்படும். அவ்வாறான தேவைகளின் அடிப்படையில் இந்த கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் தாம்பூல பைகள் கொடுப்போம் என இறங்கினோம்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணினோம்.
அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.
விவசாயகளிடமும் இன்று நம் நாட்டு ரக விதைகள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்தால் தன் தேவைக்கு பயன்படுத்த தொடங்குவார்கள்.
இளைய தலைமுறையினர் விவசாயம், வீட்டுத்தோட்டம் என வருகின்றனர். அவர்களுக்கு விதைகள் கிடைத்தால் நிறைய பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.
தங்களுக்கு இந்த செய்தி பயனாக இருந்தால் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தக்காளி,கத்தரி,மிளகாய்,வெண்டை, கீரை வகை, கொடி காய்கறிகளின் விதைகள் அடங்கிய விதைப்பொட்டங்களை தாம்பூல பைகளில் தருகின்றோம்..
நன்றி.
Best regards,

Wednesday, 8 June 2016

பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்

பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம் Share செய்யுங்கள்
○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல....
கலக்கலான தகவலுக்கு (அறிந்ததும் அறியாததும் பக்கம்)
Best regards,