உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??
நிகழ்விற்கு வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தாம்பூல பைகளில் என்ன கொடுக்கலாம் என எண்ணுகின்றீர்களா..??
நிகழ்விற்கு வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தாம்பூல பைகளில் என்ன கொடுக்கலாம் என எண்ணுகின்றீர்களா..??
தாம்பூலப்பைகளில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து தருவது நம் வழக்கம்.. இதை வெறுமனே கொடுக்கவில்லை.. தேவைகள் கருதியே கொடுத்தார்கள். உணவிற்கு பிறகு வெற்றிலை பாக்கு உணவிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதிக தூர பயணத்திற்கு தேங்காய் தண்ணீரும் தேங்காயும் பயன்படும். அவ்வாறான தேவைகளின் அடிப்படையில் இந்த கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் தாம்பூல பைகள் கொடுப்போம் என இறங்கினோம்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணினோம்.
அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.
விவசாயகளிடமும் இன்று நம் நாட்டு ரக விதைகள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்தால் தன் தேவைக்கு பயன்படுத்த தொடங்குவார்கள்.
இளைய தலைமுறையினர் விவசாயம், வீட்டுத்தோட்டம் என வருகின்றனர். அவர்களுக்கு விதைகள் கிடைத்தால் நிறைய பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.
இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.
தங்களுக்கு இந்த செய்தி பயனாக இருந்தால் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தக்காளி,கத்தரி,மிளகாய்,வெண்டை, கீரை வகை, கொடி காய்கறிகளின் விதைகள் அடங்கிய விதைப்பொட்டங்களை தாம்பூல பைகளில் தருகின்றோம்..
நன்றி.
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com