Saturday 6 October 2018

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..💚

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...
இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!! அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்...

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும்
அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??
உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..

நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு
உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..

சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...

உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக
இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!!
அது ஏன் அப்பா??

மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்??

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க..
உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!!
கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..

பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...!! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா...

என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்...
பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..
என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை..
என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை...

என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே??!!

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..
எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

மகளை பெற்ற மகாதேவர்களுக்கு சமர்ப்பணம்.                                              ( யாரோ எழுதி எனக்கு வந்ததை கண்களில் கசிந்த கண்ணீரோடு வாசித்து, பின் பகிர்ந்துள்ளேன்)

FORWARD TO ALL LOVABLE APPA
[8:39 PM, 10/2/2018] P R Rajesh: வெள்ளை #விஷம் ...

" முன்பெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய ... பசும்பாலுடன் எருமை பாலை கலந்து விற்பது சாதாரணமாக நடக்க கூடியது. கூடிப் போனா தண்ணீர் கலப்பார்கள்..
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்த காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான Demand மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என்றால் நிறைய பால் பௌடர்கள் புழக்கத்தில் இருந்தன..
ஆனால் இப்போ நிலைமை வேறு.. எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம்..விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை... என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் logic இடிக்குதே.. கண்ணு போட்டா தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே ... எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ???
"" நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்.."
"அப்படின்னா "
" 20 % தாங்க மாட்டு பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் factory இருக்குதே .. தெரியாதா??.. இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டு பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது.. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பனும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்??"
எந்த தண்ணிய ஊத்துவீங்க ...
ஹி .. ஹி .. ஊருணி, குளம் , கம்மா தண்ணி தான்.. பின்ன Aquafina வாங்கியா ஊத்த முடியும்..
இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ??
பாப்பாங்க ..
அப்புறம்
பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப....
சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படி தானா ??
அப்படி சொல்ல முடியாது..
அதெல்லாம் ratio கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவு தான்.. ஆனா மாட்டு பால் 20% - 30% தான் தம்பி.. அது போக detergent, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ ..
சின்ன புள்ளைங்க இந்த பாலை குடிச்சு ... யோவ் .. சோயாக்கே நிறைய side effects இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா .. அலர்ஜி .. Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன் imbalance ..
அதுக்கு ...??
அப்புறம் நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா ??
நீங்க தான் பசு மாடு வளர்க்கணும்..
சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே..
வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட் .,
பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட், கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட் , கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட் ... இப்படி நிறைய இருக்கு . முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆசுபத்திரிலேயும் போய் பாருங்க ..
நன்றி பலரும் அறிய செய்யுங்கள்

Best regards,