தமிழ் வருடங்களின் வரலாறு
*******************************************
தற்போது தமிழ் ஆண்டுகள் என வழங்கப்படும் கால அட்டவணை முறை அறுபதாண்டு வட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுபெற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகத் தொடங்குகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது என்று குழம்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு மிகவும் கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை.
Best regards,

ஒவ்வொரு தமிழ் வருடமும் எமது பார்வையில் சூரியன் பன்னிரு ராசிகளில்
சஞ்சரிக்கும் கால அளவாகும். சூரியன் முதலாவது இராசியான மேட இராசியில்
பிரவேசிப்பது புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பன்னிரு
இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு
தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாத முதல் நாட்களாகும். இவ்வாறு சூரியன் மேடம்
முதல் மீனம் ஈறாக உள்ள பன்னிரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ்
வருடமாகும். இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11
நிமிடம் 48 விநாடி என்று கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க
கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே
வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று
சொல்லுவார்கள்.
நாம் இதையே அழகாக தமிழ் வருடம் என்று சொல்லி அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ளோம். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின் கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது. இந்த அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே எமது வழமை.
அவையாவன
1. பிரபவ வருடம்
2. விபவ வருடம்
3. சுக்கில வருடம்
4. பிரமோதூத வருடம்
5. பிரசோற்பத்தி வருடம்
6. ஆங்கீரச வருடம்
7. ஸ்ரீமுக வருடம்
8. பவ வருடம்
9. யுவ வருடம்
10. தாது வருடம்
11. ஈசுர வருடம்
12. வெகுதானிய வருடம்
13. பிரமாதி வருடம்
14. விக்கிரம வருடம்
15. விஷு வருடம்
16. சித்திரபானு வருடம்
17. சுபானு வருடம்
18. தாரண வருடம்
19. பாரத்திப வருடம்
20. விய வருடம்
21. சர்வசித்து வருடம்
22. சர்வதாரி வருடம்
23. விரோதி வருடம்
24. விகிர்த்தி வருடம்
25. கர வருடம்
26. நந்தன வருடம்
27. விஜய வருடம்
28. ஜய வருடம்
29. மன்மத வருடம்
30. துர்முகி வருடம்
31. ஏவிளம்பி வருடம்
32. விளம்பி வருடம்
33. விகாரி வருடம்
34. சார்வாரி வருடம்
35. பிலவ வருடம்
36. சுபகிருது வருடம்
37. சோபகிருது வருடம்
38. குரோதி வருடம்
39. விசுவாவசு வருடம்
40. பராபவ வருடம்
41. பிலவங்க வருடம்
42. கீலக வருடம்
43. சௌமிய வருடம்
44. சாதாரண வருடம்
45. விரோதிகிருது வருடம்
46. பரிதாபி வருடம்
47. பிரமாதீச வருடம்
48. ஆனந்த வருடம்
49. இராட்சத வருடம்
50. நள வருடம்
51. பிங்கள வருடம்
52. காலயுத்தி வருடம்
53. சித்தார்த்தி வருடம்
54. ரௌத்திரி வருடம்
55. துர்மதி வருடம்
56. துந்துபி வருடம்
57. ருதிரோற்காரி வருடம்
58. இரத்தாட்சி வருடம்
59. குரோதன வருடம்
60. அட்சய வருடம், என்பனவாம்.
வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்
*************************************************************
நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டும் கொண்டது. அது டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிவுறுகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை.
365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பெப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பெப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம் எனப்படுகின்றது.
இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாக உள்ளன. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிப் பண்ணுவார்கள். இப்படி சரிப்பண்ணும்பொழுது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால்தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் திகதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும் வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டரின் குற்றம்.
தமிழ் வருடங்களில் இந்த வம்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த வாரத்திலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது.

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com