Thursday, 19 December 2019

குடியுரிமை சட்டம் என்றால் என்ன ?(சிவக்குமார் என்ற நண்பரின் பதிவு)

குடியுரிமை சட்டம் என்றால் என்ன ?(சிவக்குமார்  என்ற  நண்பரின்  பதிவு)

NRC, CAA என விதவிதமான Abbreviations மூலம் பாஜக நிறைவேற்றும் சட்டங்கள் வெளிநாட்டிலிருந்து எல்லைத் தாண்டும் முஸ்லிம் அகதிகளை மட்டும் ஏற்காது என்பது தவறான புரிதல்

இந்த சட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் என் பாட்டன், முப்பாட்டான் காலத்திலிருந்து என்னிடம் சரியான சான்றுகள் இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த சிவகுமார் தன் சொந்த நாட்டிலேயே அகதி ஆவான்.

இலங்கையிலிருந்து தப்பி வந்த ஈழத்தமிழனின் வாரிசு இவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சொல்லிவிட்டு ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் அடைத்துவிடலாம்.

சிவகுமாரிடம் எல்லாமும் இருக்கிறது என்றாலும் தப்பிக்க முடியாது. யாரோ ஒருவர், இந்த சிவகுமார் மீது சந்தேகம் உள்ளது என்று எந்த ஆதாரமுமின்றி அரசிடம் மேல் முறையீடு செய்யலாம். புகார் மட்டுமே போதும், ஆதாரம் தேவையில்லை.

அதை குடியுரிமை அரசுப் பணியாளர்கள் கணக்கில் எடுத்து, சிவகுமாருக்கு குடியுரிமை வழங்காமல், ஒரு மாதத்திற்குள் மீண்டும் நிரூபிக்கச் சொல்வார்கள். அப்போது நிரூபித்தால் மட்டுமே சிவகுமாருக்கு குடியுரிமை உறுதியாகும்.

இல்லையென்றால் சிவகுமாருக்கு ரேசன் கார்டு கிடையாது, அரசு வேலை கிடையாது, ஓட்டு கிடையாது, எந்த பள்ளியிலும் சிவகுமாரின் குழந்தைகளை சேர்க்க முடியாது.

இது தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, மாநில அடிமை அதிமுக அரசு ஆதரித்த குடியுரிமை கொடுங்கோன்மை சட்டம்.

அது எப்படி? சிவகுமார் முஸ்லீம் இல்லையே, என்ன பிரச்சனை அவனுக்கு என்ற கேள்வி வரும்.

காரணம் ரொம்ப சிம்பிள்...

சிவகுமார் ஒரு தமிழன்.

நாமெல்லாம் இந்துக்கள் தானே என்பது உங்களின் வெகுளித்தனமான நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்புவதால் அது உண்மை ஆகிவிடாது. .

உண்மையான Agmark, ISO Certified இந்துக்கள் யார் என்பது இந்த சட்டம் கொண்டு வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

வெளிநாடுகளில் சென்று சிவகுமார் குடியுரிமை பெற பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போதும்.

ஆனால் இந்தியாவில் நான் இந்தியாவின் குடிமகன் என்று நிரூபிக்க இவை மட்டும் பத்தாது, என் முன்னோர்கள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இங்கு தான் இருந்தார்கள் என்பதற்கான ஆவணத்தை நான் தான் சமர்பிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின் படி, இந்த பிரச்சனை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும்தான். இந்துக்களுக்கு இந்த சிக்கல் இல்லை. அப்படி தான் அந்த சட்டம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் கவனமாக தவிர்த்திருக்கிறது.

தமிழர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்று நிரூபிக்க 70 வருடங்களுக்கு முந்தைய ஆவணத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டியது அந்தந்த தனித்த இஸ்லாமியனின், தமிழனின் பொறுப்பு ஆகிவிட்டது.

அதெல்லாம் இல்லை...இல்லவே இல்லை. நிச்சயமாக இது முஸ்லீம்களுக்கான பிரச்சனை என்று மட்டுமே உங்களிடம் சொல்லுவார்கள்.

இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 20 - 25 கோடி,

தமிழர்கள் 6 - 7 கோடி மட்டுமே.

இன்று, 25 கோடி இஸ்லாமியர்களை ஒரு சட்டத்தின் மூலம் தெருவில் நிறுத்தியவர்களுக்கு,

நாளை 7 கோடி தமிழர்களை தெருவில் நிறுத்த எவ்வளவு நேரமாகும்?

இது இஸ்லாமியர்களை தமிழர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்று அவர்கள் கையில் எடுத்திருப்பது ஒரு கொலை வாள். அது என்று வேண்டுமானாலும் யாரை நோக்கி வேண்டுமானாலும் திரும்பும்.

Demonetisation ஞாபகம் இருக்கா?

லட்சத்தில் ஒருத்தன் கருப்பு பணம் வைச்சிருப்பான், அவனை பிடிக்கிறேன்னு சொல்லி ஒட்டு மொத்த நாட்டையே சீரழித்தார்கள். கடைசியில் கருப்பு பணம் கிடைக்கலை, கொஞ்ச, நஞ்ச வெள்ளை பணம் வச்சிருந்தவன் போண்டியானது தான் மிச்சம்.

நாம நள்ளிரவில் நடுத்தெருவில் நின்றோம். 4000 ரூபாய்க்கு தினமும் பேங்கும் வீடும் என அலைஞ்சோம்.

அதே தான் இப்பவும் நடக்கும்...

கோடியில் ஒருத்தன் அகதியா வந்திருப்பான், அவனை கண்டுபிடிக்கிறேன், பழிவாங்குறேன்னு சொல்லி நம்மை உயிரை வாங்குவானுங்க.

அவ்வளவு தான் நடக்கும்!

(நன்றி: திரு.அ.சிவகுமார்)Best regards,