Tuesday, 30 April 2019

ரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங்கள் மகன் பிறகு என்ன செய்யப் போகிறான்?!

ரூ. 20 லட்சம் வரை செலவழித்து… +2 படிக்க வைத்து… உங்கள் மகன் பிறகு என்ன செய்யப் போகிறான்?! 👣 👣



இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா? இல்லை!  இல்லவே இல்லை! 👏

ரூ.20 லட்சம் வரை செலவழித்து… உங்கள் பிள்ளைகளை பிளஸ் டூ வரை படிக்க வைக்கிறீர்களே… யார் ஏமாளி? என நீங்கள் சிந்தித்ததுண்டா?! 🙌

தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறீங்களே அது எதற்கு?? 🙏

நல்ல வேலைக்கு போகவா?? ஆங்கிலம் சரளமாக பேசவா?? குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?? எதற்கு? ? ஏன்? ? என்று சிந்தித்ததுண்டா?? 🙎

இப்போது ஒரு தோராய செலவழிப்புக்கு வருவோம்… 🙆

ப்ரிகேஜி ரூ.25,000 ல் தொடங்குகிறது
எல்கேஜி ரூ.40,000
யுகேஜி ரூ.50,000
முதல் வகுப்பு ரூ.60,000
இரண்டாம் வகுப்பு ரூ.70,000
மூன்றாம் வகுப்பு ரூ.80,000
நான்காம் வகுப்பு ரூ.90,000
ஐந்தாம் வகுப்பு ரூ.1,00,000
ஆறு முதல் எட்டாம் வகுப்பு ரூ. 1,20,000
ஒன்பது, பத்தாம் வகுப்பு ரூ.1,50,000
11, 12ம் வகுப்பு ரூ.2,00,000 லட்சம் 💃

ஆக மொத்தம் ரூ. 9,85,000! இது கிராமப் புறங்களில். கிராமப் புறங்களில் இருக்கும் சிபிஎஸ்இ  பள்ளிகளின் தோராய மதிப்புதான். 🏃


இதுவே, நகரங்களில் இருக்கும் பெரிய பள்ளியில் என்றால், 20 லட்சத்தில இருந்து 40 லட்சம் வரை வாங்குகிறார்கள். 💁

சரி… இவை எல்லாம்  இருக்கட்டும் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? 👪

உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப் படும். மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்?!🙇

ஒன்றை நினைவில் வையுங்கள். உங்கள் பிள்ளை 550 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள்?! அதுவும் இவ்வளவு பணம் செலவளித்து? தமிழகத்தில் ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராக, பொறியாளராக வர முடியுமா?🙎


உங்கள் பிள்ளையும் இவ்வாறு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள். சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்குக் கொண்டு போய் சேர்ப்பீர்கள்? ⛹

மீண்டும் சிபிஎஸ்இ கல்லூரியிலா? அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே?🏄

அப்படி எனில், உங்களின் அடுத்த தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரியில் தான் இல்லையா?🏌

இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா? இல்லை!  இல்லவே இல்லை!🏂

இப்போது உங்கள் பிள்ளைகளுடன், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும்தான்  படிப்பார்கள்! பத்து லட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகளுடன்  பணமே செலவளிக்காமல் அதுவரை படித்து முடித்து வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துதான் படிப்பார்கள்!⛷

இப்போது சொல்லுங்கள்..! காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா? உங்கள் பிள்ளை சாதனையாளனா? இல்லை பணமே செலவழிக்காமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?

உங்களுக்குத் தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதம் பேர் அரசுப் பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று?!  TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?👮

இன்று இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப் பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?  ஏன் நீங்கள் கூட அரசுப் பள்ளியில் படித்த அரசு ஊழியராகவே இருக்கலாம்? உங்களால் ஆணித்தரமாக எடுத்துக்கூற முடியுமா? CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?

அந்தப் பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம்!  இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே! அரசுப் பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று! அரசுப் பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?🕴

வாருங்கள் குரல் கொடுப்போம்! அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம். அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள் இயற்றினால் என்ன நடக்கும்?

அரசுப் பள்ளியில் அமைச்சர் மகனுடன், கலெக்டர் மகனுடன் நம் பிள்ளைகளும் படிப்பார்கள்! கட்டட வசதிகள் அதிகமாகும். சத்துணவு சத்தான உணவாகும். நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும்! CBSE பாடத்திட்டம் மொழி பெயர்க்கப் படும்.👭

உண்மையில், தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் யார்?! ஆட்சியில் இருப்போர்.. ஆட்சியில் இருந்தோர். அரசியல் பெரும் புள்ளிகள்!🏇

அவர்கள் தங்கள் பள்ளிகளில் மிகக் குறைவான சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை பணி செய்ய வைக்கிறார்கள். கசக்கிப் பிழிகிறார்கள். அதே நேரம், சலுகைகள் கொடுத்து, பணம் பெற்று லஞ்சம் முறைகேட்டில் திளைத்து, ஆசிரியப் பணிகளில் அரசுப் பள்ளிகளில் ஆட்களை நியமித்து விடுகிறார்கள். டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் விழி பிதுங்கும் நபர்கள் இதனை உணர்த்துகிறார்கள்👼

இதுவே, அரசுப் பணியில் இருப்போர், கட்டாயம் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இருந்தால்… ஆசிரியர்கள் மிகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி பெற்ற அறிவாளி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப் படுவார்கள். தரம் உயரும். ஒழுக்கக் குறைபாடு நீங்கும். அப்படியே யாரேனும் ஒழுக்கக் குறைபாடுடன் வகுப்புக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் உடனே பாயும்…👭

எத்தனையோ நல்ல மாற்றங்கள் அரசுப் பள்ளிகளில் ஏற்படும். அதற்கு ஒரே ஒரு சட்டம்… போதும். அதுதான் – அரசுப் பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்ப்பது….!🌱

இதன் மூலம், செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப் படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம்

என்றும் அன்புடன்,🍀

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி.🌷🌷

Best regards,

Monday, 29 April 2019

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!!

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!!

 1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.

2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.

3. ஆயிஷா – இரா.நடராசன்.

4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.

5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.

6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி

7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன். .


8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு

9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

10. கற்க கசடற – பாரதி தம்பி

11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.

12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.


13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.


14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி

15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.


16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.

17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.

18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.

19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்

20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.

21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.

22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி

23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்

24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்

25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி

26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்

27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்

28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு


29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி

30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்


31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா

32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.

33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.

34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.

35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்

36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.

37. ரோஸ் – இரா.நடராசன்.


38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்

39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி

40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.

41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.

42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்


43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி

44. கண்டேன் புதையலை – பிரியசகி

45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்

46. கனவுப்பட்டறை – மதி

47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.

48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.

49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.

50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்


51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா

52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்.


இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...



 ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்….


பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள். சுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க…. வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்… நன்றி!
Best regards,

Sunday, 28 April 2019

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

 நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா? அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. அதிக செலவில்லாமல் மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க கூடிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்:
1. கீழடி
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண்
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்துப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண்
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை
18. கீழவளவு மலை சமணப்படுகை
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல்
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம்
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில்
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில்
28. கொங்கர் புளியங்குளம் சமணப்படுகை
29. ஓவா மலை சமணப்படுகை, திருவாதவூர்
30. குருவித்துறை பாண்டியன் அணை (சிற்றணை)

கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில்
2. அழகர் கோவில்
3. திருப்பரங்குன்றம்
4. திருவாதவூர் கோவில்
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில்
7. கொடிக்குளம் பெருமாள் கோவில்
8. திருவேடகம் கோவில்
9. திருமலைநாயக்கர் மகால் & அருங்காட்சியகம்
10. புதுமண்டபம்
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம்
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி
14. விளக்குத்தூன்
15 மதுரை வாயில் கோட்டை
16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி
17. பாண்டிக்கோவில்
18. கூடலழகர் பெருமாள் கோவில்
19. மேலூர் பனங்காடி பெருமாள் கோவில்
20. குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் (குருபகவான் கோவில்)
21. கூடல் மலை மாயண்டி கோவில்

கோவில்காடுகள்:
1. இடையபட்டி கோவில்காடுகள்
2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு
3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு
4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு

பெருவிழாக்கள்:
1. சித்திரை திருவிழா
2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
3. தெப்ப திருவிழா
4. சந்தனகூடு திருவிழா
5. திருப்பரங்குன்றம் கிரிவலம்
6.பிட்டுத் திருவிழா
7. ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா, சோழவந்தான்
8. ஏழு ஊர் அம்மன் (முத்தலாம்மன்) தேர் திருவிழா, தே. கல்லுப்பட்டி
9. தர்கா கந்தூரி விழா
10. பத்திரகாளியம்மன் திருவிழா, திருமங்கலம்

நீராதார தளங்கள்
1. குட்லாடம்பட்டி அருவி
3.கேணி அருவி, சாப்டூர்
4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர்
5. அழகர்மலை சித்தருவி
6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை
7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை
8. வண்டியூர் தெப்பக்குளம்
9.  குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் .
10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை
11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை
12. விரகணூர் வைகை அணை
13. நீச்சல்குளம், தல்லாக்குளம்
14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க)
15. காளிகாப்பன் கிணறு
16. சாத்தையாறு அணை
17. வையை ஆறு 
18. குண்டாறு
19. கமண்டலாறு - வறட்டாறு
20. கிருதுமால் ஆறு
21. உப்பாறு
22. பாலாறு
23. திருமணிமுத்தாறு
24. மஞ்சமலையாறு
25. சிலம்பாறு
26. கொண்டைமாரி (மூலகுறிச்சி) ஓடை
27. தடாகை நாச்சியம்மன் ஓடை
28. பொய்கரைப்பட்டி தெப்பக்குளம்
29. பெரிய அருவி நீர்த்தேக்கம், கேசம்பட்டி

மலையேற்றம் செல்ல தோதான மலைகள்: 
அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை,  கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை, கூடல் மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூங்காக்கள்:
1. ராஜாஜி பூங்கா
2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர்
3. திருப்பரங்குன்றம் பூங்கா
4. வண்டியூர் கண்மாய் பூங்கா

பழங்குடி மக்கள் இருப்பிடம்:
1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை
2. மலைவேடர் பழங்குடி மக்கள் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி
3. காட்டுநாயக்கர் பழங்குடி மக்கள் - பரவை

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்:
1. சிவர்கோட்டை - நேசநேரி
2. சாப்டூர்
3. மாமலை
4. இடையபட்டி

பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் :
1. சாமநத்தம்
2. கிளாக்குளம்
3. அவனியாபுரம்
4. வடகரை, தென்கரை சோழவந்தான்
5. மாடக்குளம் - நிலையூர் 
6. வரிச்சூர் குன்னத்தூர்
7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல்
8. சிவரக்கோட்டை மலையூரணி
9. அரிட்டாபட்டி
10. வண்டியூர் கண்மாய்
11. உறப்பனூர் கண்மாய்
12. வாலாந்தூர் கண்மாய்

இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி எடுத்துக்கொண்டு இந்த விடுமுறை நாட்களை குழந்தைகளோடு செலவழிக்க எளிய சுற்றுலாவுக்கு மதுரைவாசிகளே புறப்படுவோமா? போகிற வழியில் பதநீர், கூழ் குடித்து கொண்டு, கட்டிய சோத்த  அல்லது வாங்கின சோத்து பொட்டினத்த மரத்தடியில் உட்கார்ந்து ருசிப்பது என ஊர் சுற்றலை இன்னும் அழகாக்கி கொள்ளுங்கள். சொந்த ஊரை தெரிந்து வைத்திருப்பது சொர்க்கத்தின் முகவரியை கையில் வைத்திருப்பதற்கு சமம். எளிய மக்களுக்கான எளிய சுற்றுலா உள்ளூரை வட்டமடிப்பதில் இருந்து துவங்குகிறது. வாங்க போவோம்.

Best regards,

Saturday, 27 April 2019

பெற்றோர்களின் கவனத்திற்கு

பெற்றோர்களின் கவனத்திற்கு

இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android

 அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு  போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
முன்னச்செரிக்கையாக phone ல் செய்ய வேண்டியது

play store  சென்று settings ல் parent control option ஐ on செய்யவும்.

அதன் கீழே உள்ள *Apps and Games ஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும்.

அடுத்ததாக  *Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Video க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும். *

அதேபோல் *YOU TUBE  settings ல் Restriction  mode ஐ on செய்யவும்

( *சமூக நலன் கருதி உங்கள் நண்பன் இரா.கருணாகரன் காவல் உதவி ஆய்வாளர் திருச்சி மாநகர் )


Best regards,

Tuesday, 23 April 2019

ஜான்பெர்கின்ஸ் எழுதிய பொருளாதார அடியாளின் வாக்குமூலம் நினைவுக்கு வருகிறது.

ஜான்பெர்கின்ஸ் எழுதிய பொருளாதார அடியாளின் வாக்குமூலம் நினைவுக்கு வருகிறது.

இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொண்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களே.

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் அருகேயுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமான அளவில் எரிவாயு உள்ளதாக முப்பரிமாண சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த எரிவாயு வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இல்லை. இதற்கான டெண்டர் கோரி பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெண்டர் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எரிவாயு எடுக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இது இப்படியிருக்க இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் எரிவாயு உள்ளதாக, பிரான்ஸை சேர்ந்த டோடா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகளை தீர்மானிப்பதில் பிரான்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. பிரான்ஸில் தேவாலயம் சமீபத்தில் தீவிபத்துக்குள்ளானது ஞாபகம் வருகிறதா?

இலங்கையில் சீனா ஏகப்பட்ட முதலீடுகளை செய்துள்ளது. எவனோ ஒரு பிரான்ஸ் கம்பெனிக்காரன் இலங்கையில் கால் பதிப்பதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. செய்த முதலீட்டுக்கு அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும்தானே?

மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளதையும் வெளிநாட்டு நிறுவனங்களே கண்டறிந்து உறுதிப்படுத்தின. கடலுக்கடியில் இருந்து கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் கால் பதித்த பின்னரே அங்கு பிரிவினைகள், கலவரங்கள், குண்டுவெடிப்பு, உயிரிழப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள் நடைபெற்றன. இதைக் காரணம் காட்டி பெட்ரோலிய வளமுள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வல்லரசுகள் களத்தில் இறங்கி கல்லா கட்டும்.

இலங்கை கடற்பரப்பில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியினை 2023 க்குள் ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் குறைந்து வருகிறது. இன்னொருபுறம் இலங்கையில் அபரிமிதமான இயற்கை எரிவாயு கண்டறியப்படுகிறது. மத்திய கிழக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் மட்டுப்படுகிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. குறிப்பாக கிறிஸ்தவ பண்டிகையின்போது தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளது. 35 வெளிநாட்டினர்களும் பலியாகியுள்ளனர்.

ஆக இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலகத்தில் எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அங்கெல்லாம் வல்லரசுகள் கால் பதிக்கும் அமைதியை நிலைநாட்டும் போர்வையில் தேவையான காரியத்தை சாதிக்கும்.

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்து சீனாவும் உதவத் தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.

எப்படியோ இலங்கையில் குட்டையைக் குழப்பி குழப்பத்தை உண்டாக்கிவிட்டாயிற்று. இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கப்போவது அமெரிக்காவா? சீனாவா? சீனாவின் ஆதரவுடன் ரஷ்யாவா? என்பது போகப் போக தெரியும்.

(நன்றி :
திரு இரா.சுந்தர பாண்டியன் )

Best regards,

Monday, 22 April 2019

பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மை படிப்புகள்

பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மை படிப்புகள்

இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 2018-19ஆம் கல்வி ஆண்டு இளமஅ–்றிவியல் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கத் தேவையான வழிமுறைகள் .

படிப்புகள் :
1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)
2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)
3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)
4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)
5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Semi culture)
6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)
7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)
8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)
9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)
10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)
11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)
12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)

யார் விண்ணப்பிக்கலாம்?
இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 01.07.2019அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

<www.tnau.ac.in> / admission.html. என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்குக் கல்லூரிகள் உள்ளன?

கோயம்புத்தூர் வளாகம்:
1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

மதுரை வளாகம்:
1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

திருச்சி வளாகம்:
1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர்,--- திருச்சி.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

கிள்ளிக்குளம் வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

பெரியகுளம் வளாகம்:
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.

மேட்டுப்பாளையம் வளாகம்:
வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.

ஈச்சங்கோட்டை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

குடுமியான்மலை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.

வாழவச்சனூர் வளாகம்:
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.

மொத்த இடங்கள்:
B.Sc. Agriculture - 600
B.Sc. Horticulture - 125
B.Sc. Forestry - 45
B.Sc. Food & Nutrition - 45
B.Tech. (Agri. Engg) - 70
B.Sc. (Sericulture) - 30
B.Tech. (Horticulture) - 30
B.Tech. (Food Process Engineering) - 55
B.Tech. (Energy & Environment Engg.) - 55
B.Tech. (Bio Technology) - 55
B.Tech. (Bio Informatics) - 35
B.Sc. (Agri Business Management) - 45
B.Tech. (Agri Information Tech) - 30

வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :
கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஹோசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.

எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?
XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Aggregate Mark = Sum of [(Marks got in each subject / Maximum marks of that subject) ? 50]

ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்,
1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)
2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்
3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்
4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பத்திற்கு​--- குறைந்ததகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best regards,

Sunday, 21 April 2019

தொழிலாளர்களிடம் நெருக்கமுள்ள தோழர்கள் கவனத்திற்கு...

தொழிலாளர்களிடம் நெருக்கமுள்ள தோழர்கள் கவனத்திற்கு...

ESI க்கு சொந்தமாக நாடு முழுவதிலும் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் 323 MBBS சீட்கள்.
23 BDS சீட்கள் ESI சந்தா கட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கானவை.
இவற்றில் தமிழகத்தில் 40 சீட்கள் உள்ளன. இந்த சீட்கள் பொதுப் போட்டிக்கு  வராது. இதற்கு போட்டி அதிகமில்லையென்பதால்
குறைந்தபட்ச நீட் தேர்வு மதிப்பெண்ணே போதுமானது.
இடம் கிடைத்தால் மருத்துவக் கல்வி கட்டணம் ஆண்டுக்கு 24000 மட்டுமே.

செய்ய வேண்டியதெல்லாம்
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்
WWW.esic.in.இணையதளத்தில் பதியவேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு
தங்கள் பகுதி ESI அலுவலகத்தை அணுக வேண்டும்.
தற்போது +2 பயிலும் தொழிலாளர் குழந்தைகளிடம் இதைச் சேருங்கள்.

Best regards,

Saturday, 20 April 2019

மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா...மண்ணோடு போன கதை

மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா...மண்ணோடு போன கதை.

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா கடைசிக்கு நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க... பலருக்கு சொந்த பேர் போய்...அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

பல வருசத்துக்கு முன்னாடியே அவ்ளோ பொம்பளைகளுக்கு வேலை குடுத்த ஒரு தொழில் நகரம் கோவை, 3 ஷிபிட் பரபரப்பா இருக்கும், ராத்திரி பகலா ரோட்டல சைக்கிள் போகவும் வரவுமா இருக்கும், காலைல ஷிப்ட் போனவங்களுக்கு வீட்ல இருந்து மத்தியானம் சாப்பாடு கொண்டு போய் செக்யூரிட்டி ஆபீஸ்ல குடுப்பாங்க, கலர் கலரா வயர் கூடை தொங்கறத பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும். புல் நைட் போறவங்க நைட் 11 மணிக்கு கெளம்புவாங்க, மொத்தமா போய் ஹோப்காலேஜ்ல இருந்த மணி பேக்கரில ஒரு பீடி, டீ குடிச்சிட்டு அவங்க மில்லுக்கு போக, பின்னாடியே ஹாப் நைட் முடிச்ச ஒரு பெரிய கும்பல் வந்து மணி பேக்கரிலயும் கோபி கடைலயும் சேருவாங்க.....அதே டீ, பீடி, கூட ஒரு தேங்கா பன் சாப்பிட்டு கெளம்புவாங்க. இந்த காட்சி என்ன மாதிரி பீளமேட்டுல குடி இருந்தவங்களுக்கு ரொம்ப சகஜம்...மணிஸ் தியேட்டர்ல பொம்பளைங்க கூட தனியா செகண்ட் ஷோ போய்ட்டு தைரியமா வீட்டுக்கு வருவாங்க...புல் நைட் விட்டு இருப்பாங்க, ஜன நடமாட்டம் நெறய இருக்கும்னு சொல்லிட்டு....

தீவாளி வந்தா பெரிய திருவிழா, எந்த மில்லுல எவ்ளோ போனஸ், அங்க என்ன பர்ஸன்ட், எப்போ பணம் வரும்னு மட்டும் தான் ஊர் பூரா பேச்சு இருக்கும், அவ்ளோ தொழிலுக்கும் வருமானம் குடுத்தது மில் தொழிலாளிகதான். பல மில் தொழிலாளிக சம்பளம் கவர்மண்ட் சம்பளத்தை விட ஜாஸ்தி, கவர்மண்ட் குடுக்கற போனஸ் விட இங்க ஜாஸ்தியா போனஸ் குடுக்கப்பட்டு இருக்கு.... மில் வேலைய சுத்தி மட்டுமே இயங்கிட்டு இருந்திச்சு இந்த நகரம்....

லட்சுமி மில் சிக்னல்ல ஆரம்பிச்சு ஒண்டிப்புதூர் வரைக்கும் வெறும் 10 km, அதுக்குள்ள எனக்கு நினைவு தெரிஞ்ச மில் மட்டும் சொல்றேன்...

லட்சுமி மில்ஸ் - இப்போ கார்ப்ரேட் ஆபீஸ்.

கங்கா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் ஆபீஸ் இருக்கற இடம்.

பீளமேடு ராதாகிருஷ்ணா மில் - பீளமேடு பஸ் ஸ்டாண்ட் எதிர் பொட்டல் காடா கெடக்குதே அந்த எடம்

பயனீர் மில் - இப்போ PSG காலேஜ் பார்க்கிங்.

ரங்க விலாஸ் - இப்போ NTC தயவால் தின கூலி வேலை.

பிரகாச மில் - பன் மால் எதிரே இப்போ போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் - பாதி அபார்ட்மெண்ட் ஆகிடுச்சு மீதி தின கூலி.

வரதராஜ மில் - ஓடிட்டு இருக்குன்னு நினைக்கறேன் - தின கூலி.

விஜியகுமாரி ஜின்னிங் பாக்டரி - இப்போ கோக்கோ கோலா குடோன்.

ஜெகநாதா டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ABT சர்வீஸ் சென்டர்.

ராஜஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் - இப்போ ஏர்டெல் குடோன், கூடிய சீக்ரம் அபார்ட்மெண்ட்.

பாலசுப்ரமணியா மில் - அலாப்ட் ஹோட்டல், ஹிந்து பேப்பர் கம்பெனி இருக்கு இப்போ.

கார்த்திகேயா மில் - ஓடிட்டு இருக்கு, தின கூலி.

ஜனார்தனா மில் - கல்யாண மண்டபம்.

கமலா மில் - பொட்டல் காடு, விரைவில் அபார்ட்மெண்ட்.

லட்சுமி மில் - தின கூலின்னு நினைக்கறேன்.

தாமரை மில் - என்ன இருக்குனு கூட தெரில.

கோத்தாரி - பிளாட் போட்டு வித்து பல வருஷம் ஆச்சு, இப்போ கோத்தாரி கார்டன்ஸ்.

வசந்தா மில் - என்ன ஆச்சுன்னு தெரில.

ரவீந்திரா மில் - பிளாட் போட்டு வித்தாச்சு.

சரோஜா மில் - இருந்த இடம் தெரில.

கதிர் மில்ஸ் - ரிலையன்ஸ் குடோன் பாதி ஓடுதுன்னு நினைக்கறேன்.

இத்தனை மில் இருந்தது வெறும் 10 km குள்ள (கோயம்புதூர் பூரா எத்தனை மில் இருந்து இருக்கும்னு யோசிச்சு பாருங்க) ஒவ்வொரு மில்லயும் கம்மி கம்மியா 1000 பேர் வேலை செஞ்சாங்க...இத்தனை மில்லையும் மூடிட்டாங்க. ஏன், ஒரு முதலாளிக்கு கூட தொழில் செய்ய தெரியலையா, சரி பாதி மில் தொழில் செய்ய தெரியமா மூடிட்டாங்கனு வச்சுகிட்டாலும் மிச்சம்...... அழிஞ்சது பூராம்.... 😥 😥

Best regards,

Thursday, 18 April 2019

இதுவும்கடந்துபோகும்

இதுவும்கடந்துபோகும்

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள் ,
எத்தனை தோல்விகள் ,
எத்தனை மகிழ்ச்சிகள் ,
எத்தனை துக்கங்கள் ...

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள் ,
எத்தனை பகைவர்கள் ,
எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது.,

இதுவும்கடந்துபோகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது..,

இதுவும்கடந்துபோகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

இதுவும்கடந்துபோகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

இதுவும்கடந்துபோகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

இதுவும்கடந்துபோகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்..

Best regards,

Wednesday, 17 April 2019

வாழுகின்ற வார்த்தைகள்..

வாழுகின்ற வார்த்தைகள்..                   vs 
வீழுகின்ற வார்த்தைகள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி

டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..

சாகும் வரை, வாழும் வரை என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால் வாழும் வரை என்ற சொற்களில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம். ஆனால்....

சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...

அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.

அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.

Every word has its power choose them carefully.

உடலுக்கு #Insulin எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு #இன்சொலும் அவ்வளவு முக்கியம்.

Best regards,

Tuesday, 16 April 2019

குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.

குழுவில் உள்ள உறுப்பினர்கள்  தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.

                  PRO duty

1-Pro dairy
2-form17c.
3- 16 points abserver report  sheet.
4- visiter sheet.
5- pledge commencement of poll and after close the poll.
 6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும் 

                       Po1 duty .

 1- elector identify is very important.
2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்             

            Po2 duty-

1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்
3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்
4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.     

                  Po 3 duty-

 வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.

      General instructions . 

    49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-m என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.

 49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்

1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்
2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்
3.Test votes
4.proxy votes
மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் Election rules தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.

       குறிப்பு

தேர்தல் முடிந்தவுடன் Control unit off செய்யவேண்டும். Vvpatல் Batteryஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்

எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்


Best regards,

Sunday, 14 April 2019

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
Image may contain: food
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர்.
இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது.
ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.
அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள்.
அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில்
(ஆனி, ஆடி), கார் காலம்
(ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம்
(ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம்
(மார்கழி, தை) பின் பனிக்காலம்
(மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது.
உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன.
சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது.
ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.
அது மட்டுமல்ல,உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ணிய காலமாகக் கொள்ளப்படுகிறது.
காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது. ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டப்படுகிறது.
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலுமே விழாவாக்க கொண்டாடப்படுகிறது.சித்திரைத்திங்களின் சிறப்பு..............
ஆண்டு தோறும் ஆறு பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பை கொண்டது சித்திரை மாதம். இந்த மாதத்தில் இளவேனிற் காலம் இன்பமுடன் எழுகிறது.
"வந்தது வசந்தம்'' என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல் நாள்.
கரும்பு வில்லேந்தி மன்மதன் பாணம் பொழியும் பேரின்பத் திருநாள். மாமரங்களும் வேப்ப மரங்களும் பூத்து குலுங்கி நிற்கும் குதூகலப்பெருநாள்.
சித்திரை மாதத்தை "சைத்ரா'' என்றும் "சைத்ர விஷூ'' என்றும் கூறுவர்.சித்திரை வருஷப் பிறப்பன்று கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு.
சித்திரை வருஷ பிறப்பு தினத்தை கேரள மக்கள் விஷூக் கனி காணல் என்று கொண்டாடுகின்றனர்.அன்றைய தினம் வீட்டிற்கு வருவோர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பதனை இன்றும் கேரள மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Best regards,

இது ஒரு சாதாரண பதிவு அல்ல

*இது ஒரு சாதாரண பதிவு அல்ல.
 உதாசீனம் செய்யாமல் ஒன்றுக்கு இருமுறை இப்பதிவை படியுங்கள்.
 முன்கூட்டியே* திட்டம் போட்டு எப்படி எல்லாம் நம் மக்களை இவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். எதற்காக (demonitation) பணமதிப்பிழப்பு வலுக்கட்டாயமாக கொண்டுவரப்பட்டது, என்ற காரணங்களை நீங்கள் இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம். இது சாதாரண செய்தி அல்ல. ஆதாரத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாதளவுக்கு 3லட்சம் கோடி மெகா ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித் ஷா..

 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வைத்து புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை வழங்கியிருக்கிறார்கள். இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். https://www.nationalheraldindia.com/india/randaw-field-assistant-in-video-clip-spills-the-bean-on-indian-rupee3-lakh-crore-currency-racket-names-amit-shah

மேலும் இந்த மெகா ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள்.

இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இராகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இராகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மெக ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.

இப்படி இவ்வளவு பெரிய ஒரு ஊழலை அரசின் அத்துணை துறைகளையும் கையில் போட்டுக்கொண்டு செய்திருக்கிற பிஜேபியின் மோடி அரசு எவ்வளவு கொடூரமான ஒரு அரசாக இருந்திருக்கிறத் என்பதை இதன் மூலம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இதே கும்பல் தான் இன்று மீண்டும் நம்மை ஆளுவதற்கு ஆரவாரம் போட்டுக்கொண்டு வருகிறது. முடிவு மக்கள் கையில்.

Best regards,

Friday, 12 April 2019

தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO

 தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO
பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

 உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக  எண்களை அறிவித்துள்ளது.!

சேலம் ,ஈரோடு , நாமக்கல் மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 1 9 1 2

சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 0 8 2 9

 கோயமுத்தூர் திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் புகார்களுக்கு  9442111912

 திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு..
 8 9 0 3 3 3 1 9 1 2

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களின் புகார்களுக்கு.
 9 4 4 4 3 7 1 9 1 2

 மதுரை, திண்டுக்கல் தேனி , ராமநாதபுரம் ,சிவகங்கை  மாவட்டங்களின் புகார்களுக்கு..
9443111912

திருச்சி ,தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , திருவாரூர் , நாகப்பட்டினம் , கரூர் மாவட்டங்களின் புகார்களுக்கு..
9486111912

         பொதுமக்கள் இனிமேல் இருந்த இடத்தில் இருந்தே புகார்களை தெரிவிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு .
Best regards,

Thursday, 11 April 2019

பழைய சோறு🍵 (தேவாமிர்தம்)

பழைய சோறு🍵 (தேவாமிர்தம்)

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!

அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!

சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!

ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்...!


Best regards,

Saturday, 6 April 2019

*உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க !

*உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க !*
```எங்கண்ணே மாசத்துக்க ஒரு தடவைதான் !```
*மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும் ?*
```கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது```
*பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற. அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது ?*
```ஆமாண்ணே..எப்படிண்ணே?```
*உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது ?*
```என்னாண்ணே சொல்றீங்க?```
*ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற*
```பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே```
*நீ மட்டும் இல்லை முருகா இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க.*
*ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.*
```நல்ல விஷயம்தானண்ணே ! சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..```
*உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க.*
*சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா.*
*உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.*
*அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது ?*
```என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது ?```
*ம்... குரூட் ஆயிலிலிருந்து (அது பேரு மினரல் ஆயில்)*
```ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க ?```
*கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க.*
*அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.*
*எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா ?*
```இல்லைண்ணே.. ?```
*பாரு உண்மை புரியும்*
```ஆமாண்ணே அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா```
*லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு*
```என்னா தெரியும் ?```
*ம் பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்.*
*அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே*
```ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.```
*முருகா சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல,*
*நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்*
```அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே```
*ஏன் முடியாது பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு*
```எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது```
*யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்.*
*நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ,*
*செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி.*
*உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா*
*ஒரு நாள் ஆபஸ் லீவ் நாள்ள மாலுக்கு போறத நிறுத்தீடு செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா*
*அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு ஆரோக்கியம் தானா வரும்..*
```ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே```
*நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.*
*இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்*
```ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா```
*கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது.*
*கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு*
```ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..```
*டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி,*
*இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்.*
*கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது.*
*போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு.*
*இன்னிக்கு பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை.*
*நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்.*
*இங்க இயற்கை மாறல மாறினது நீயும், நானும்தான்.*
*இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.*
*இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிட்டு இருக்குடே.*
*இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?*
*இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும்,*
*மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும்,*
*பரவாயில்லை,*
*மறுபடியும் அனுப்புங்க 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பு இல்ல......*


Best regards,

Friday, 5 April 2019

தி ஜப்பான் டைம்ஸ்

புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகையான "தி ஜப்பான் டைம்ஸ்" மோடி முகத்திரையை கிழித்து எரிந்துள்ளது.
உலக அரங்கில் வர்த்தகத்தில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வருவதாக கூறிய மோடி 130-190 வது ரேங்கில் தான் இருக்கிறது என உலக வங்கி அறிக்கையளித்து உள்ளதை சுட்டி காட்டியுள்ளது.
அது மட்டும் அல்ல, இந்தியாவின் மிகப்பெரிய துறையான கட்டுமான துறையில் முந்தைய அரசை விட கடும் சரிவை சந்தித்துள்ளது.
சர்ஜிக்கல் அட்டாக், ரூபாய் நோட்டு தடை, பொய்யான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், அறிக்கைகள், மாட்டிறைச்சி தடை, மதக்கலவரம், பாதுகாப்மின்மை, அச்சுறுத்தல், என ஒட்டுமொத்தமாக மோடியை நாற் நாறாக கிழித்து விட்டார்கள்.
எலும்பு துண்டிற்கு அலையும் இந்தியாவின் ஆகப்பெரும் ஊடகங்கள் மறைத்ததை எல்லாம் ஜப்பான்காரன் கிழி கிழினு கிழித்து விட்டான்.
மோடி அப்படி மோடி இப்படி உலக ஊடகங்கள் புகழ்கிறது என பெருமையா பேசின மோடி பக்தாஸ்களை எல்லாம் வாயடைக்க செய்துள்ளது 'தி ஜப்பான் டைம்ஸ்'.
https://www.japantimes.co.jp/opinion/2017/07/06/commentary/world-commentary/modis-actions-fail-live-words/#.Wbiqw_rhXqA

Best regards,

Thursday, 4 April 2019

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டா்
மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள். கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது.

Best regards,

Wednesday, 3 April 2019

தற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

தற்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்தியாவின் அன்பும் மரியாதைக்குமுரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.

மூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் பரவி இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.

2018 முன்னேற்றம் சட்டம் (2018 Improvement Act).

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.
(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)

இதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு  நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).

இது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம்  கை கோர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.

மத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக
தங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து  எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த  விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

எம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்
அவர்களின் சிகிச்சைகளுக்கும்  எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரண குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து ஏற்றி கொண்டே வருகிறாா்கள்)

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவு உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும்  கடந்தகால அல்லது தற்கால கிரிமினல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொருந்துமாறு அமைக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.

இலவச இரயில் மற்றும் விமான டிக்கட் சலுகைகளை உடனே நிறுத்த வேண்டும்.

சாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தோளில் சுமக்க வேண்டும்?

ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இருபது பேருக்கு ஸேர் செய்தால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.இந்த பிரச்சினையை எழுப்ப சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், ஷேர்  செய்யுங்கள்.

Best regards,

Monday, 1 April 2019

மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்....

மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்....
👧 ஜனவரி மாதம் பிறந்த பெண்கள்
பேரார்வம், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.
👧 பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்டக் கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. மனது நிலையாக இருக்காது.
👧 மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் மன வலிமையுடன் இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.
👧 ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரிகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து பேசுவார்கள்.
👧 மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம்.
👧 ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவின்றி நடந்துக் கொள்வார்கள்.
👧 ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.
👧 ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.
👧 செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவர்.
👧 அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்படக் கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.
👧 நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மையை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.
👧 டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் அதிர்ஷ்டமான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.

Best regards,