Sunday, 30 June 2019

Sorry. It is in Tamil

Sorry. It is in Tamil.🙏🙏


வயது என்பதற்கு
எந்த வேலியுமில்லை..
Just numbers அவ்வளவுதான்...

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!

🌟20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும்,
உள் நாடும் ஒண்ணு தான்.
எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.

🌟30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும்
ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்.

🌟40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்.குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க.

🌟50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள்,
கரும் புள்ளிகள் வந்துரும்.

🌟60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான்.ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான்.

🌟70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ
எல்லாம் ஒண்ணுதான்.மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்.

🌟80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..!அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்.

🌟 90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ
 ஒண்ணு தான் !ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்.

🌟100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் !
நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது.

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு
துயரப்படுறத விட்றுவோம்...

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட
துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து
அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

 💫உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

 இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே.
 இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

💫தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?”
என கேட்ட கேள்விக்கு என் மனைவி
என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

💫எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?”
என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

 💫உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது
 என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...!

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்...
வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

Feel the  power of  positive  Thinking...
That is the BIGGEST SECRET OF LIFE...!!!

Age does not matter at every stage of Life !
வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!"

On my journey
மனதை கவர்ந்தது....


Best regards,

Friday, 14 June 2019

நெஞ்சைத் தொட்ட ஓர் உண்மைச் சம்பவம்...

நெஞ்சைத் தொட்ட ஓர் உண்மைச் சம்பவம்...

ஒரு பெண் தனது ஒரே ஒரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்குப் பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வைக் குறித்தச் சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின் கல்வித் தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
இந்தச் செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்குச் சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனைப் புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள் மகன் வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள் சென்றுப் படுத்து விட்டான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன் ஓடிச் சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என்னுடைய பள்ளிக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னைக் குருடியின் மகன் எனக் கூப்பிடுகின்றனர். இது எனக்குப் பெரிய
அவமானம் வெட்கம். இதன் பின்னர் நீ என்
பள்ளிக்கூடம் பக்கமே வராதே" எனக் கத்தினான் கோபமாக. அதைக் கேட்டவுடன் அதிர்ந்துப் போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது எனச் சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னைத் தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்கியதுடன் சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்றப் பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதாகச் சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
அவள் கதறித் துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து. இறுதிப் பரீட்சையில் தேர்ச்சிப் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்குத் தெரியவந்தது.
தலை நகர் சென்றுப் படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மீதமிருந்த
அனைத்துச் சொத்துக்களையும் விற்று மகனுக்குக் கொடுத்து அனுப்பினாள். 5 வருடம் பறந்துச் சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு டாக்டர்.
அவனைப் பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை முயற்ச்சி செய்தும் அவனைப் பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது.
அதில், அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னைப் போல் குருடியின் மகன் டாக்டர் எனத் தெரிந்தால் என் திருமணமும், கௌரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண் காணாத தேசம் செல்கிறேன். இனி என்னைத் தேடாதே இது தான் அந்தக் கடிதத்தின் வரிகள். துடித்துப் போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும், அவளது ஒற்றைக் கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காக வேலை செய்து வந்தாள் அந்தத் தாய். அந்த வீட்டின் எஜமானி இளம் வயது பெண். நல்ல இளகிய குணம் படைத்தவள். இரட்சிக்கபட்டவள். அவளும் ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்தத் தாயை தனது தாயாக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின் கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளைத் தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த வேலைகாரியான குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சாப்பிட
அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாகச் சாப்பிட்டான். திடீரென அவன் முகம் மாறியது. டக்கென்று திரும்பி
தன் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கேட்டான், "இதனை நீ சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டிப் பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய். தாயைப் பார்த்தவுடன்
அதிர்ந்துப் போனான். இவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும், வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. அந்தத் தாய்க்கோ என் மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனைக் கண்ட சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்தத் தாயின் இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த கணவன் சொன்னான் தன் மனைவியைப் பார்த்து, "இந்தக் குருடியை உடனடியாக அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம். அடுப்படியில் நின்ற அந்த அபலைத் தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்குப் பிறகும் வாழ
வேண்டுமா என எண்ணி அழுதாள்.
அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும் தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே வேறு வழியின்றி அந்தத் தாய்க்கு போதுமான பணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்...
காலம் கடந்தது...
இப்போது அந்த டாக்டரின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
சுயநலன், நன்றி மறத்தல் போன்றக் காரணங்களினால் கருத்து மோதல்
ஏற்பட்டு அவன் மனைவியும் விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்துக் கொண்டாள்.
இப்போது டாக்டரிடம் பணத்தைத் தவிர
வேறு எதுவும் இருக்கவில்லை.
எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுக்கு கூட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்பு அவன் உள்ளத்ததை வந்துத் தொட ஆரம்பித்தன. ஒரு முறை ராத்திரியில் எழுந்து அம்மா எனக் கதறி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.
தாயைப் பார்க்க வேண்டும் என நினைத்தான். ஆனால் போகவில்லை.
ஒரு நாள் காலையில் அவன் தொலைப்பேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் மரணத் தருவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்தச் செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளைக் கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா எனக் கண்ணீர் விட்டுக் கதறினான்... அழுதான்..
தன் தாயை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது
அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் இதையும் எரித்து விடுமாறும் தாயார் கடைசித் தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அதில் இருந்த வரிகள் இது தான்....
என் அன்பு மகனே , எனக்குத் தெரியும், என்
உருவத்தைப் பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்
மட்டும் இதனைக் கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடி தான்.
உன் தாய் குருடியாக இருந்திருக்கக்
கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது. உன் உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும்
உன்னைச் சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது. உன் அப்பா இறந்தவுடன் எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான் உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்துக் கொள்ளாமல் போய் விட்டாயே??
மகனே உனக்குத் தெரியுமா நான் ஏன்
குருடியானேன் என்று அப்போது உனக்குச் சின்ன வயது. சாலையில் ஓரத்தில நீ விளையாடிக் கொண்டிருந்தாய். ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில் பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது.
டாக்டர்கள் இன்னொரு வெண்படலம்
இருந்தால் மட்டுமே உனக்குப் பார்வையை கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது. அதனால்...
எனது ஒரு கண்ணை உடனடியாகவே தானம் செய்து உனக்கு பார்வைகக் கிடைக்கச் செய்தேன்.
எனது கண் தான் இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும் ஏன் இந்தக் கடிதத்தையும் கூட அந்தக் கண்களாளேயே தான் பார்க்கிறாய்..
உனக்கு இதுவும் அவமானம் என்று உனது வலதுக் கண்ணைப் பிடுங்கி எறிந்து விடாதே அதை அப்படியே விட்டு விடு. ஏனென்றால் அந்தக் கண்களால் தான் நான் உன் உயிர் உள்ளவரை உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே
இப்படிக்கு,
என்றுமே உன் மீது அன்புள்ள,
உன் அம்மா....
இதைப் படித்த அந்த டாக்டர் மகன் உருண்டுப் புரண்டு அழுதானாம்...

கதையின் நீதி :

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு துரோகம் நினைக்காத இரண்டு ஜீவன்கள் நம்முடைய தாய், தந்தை மட்டும் தான்...
தாய் தந்தையின் அன்பில் பாசம் இருக்குமே தவிர வேஷமும், துரோகமும் இருக்காது இது தான் உண்மை...
நம்முடைய அப்பா அம்மா மட்டும் தான் உண்மையான கடவுள்

Best regards,

Thursday, 13 June 2019

சமுதாயம தயவுசெய்து ஒரு நிமிடம் செலவு செய்து இதை படியுங்கள்

சமுதாயம தயவுசெய்து ஒரு நிமிடம் செலவு செய்து இதை படியுங்கள்.🌹🌹🌹
தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது

படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்!
அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே.
மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!!

முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~பகிருங்கள்.

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.

அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.

ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.

 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும்  உரியவர் கலெக்டர்  ககன்தீப் சிங் பேடி  ஆவார்.

அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.

சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.

2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.

 பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.

 ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.

அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.

 சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.

அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.

ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது.

அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.

இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.

எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்
ககன்தீப் சிங் பேடி.

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.

அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது.

ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை.

அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.

எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது  ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.

ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.

தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார்.  ஆனால்  இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை.

இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .

பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.

ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது.

வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.

ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர்  துரைக்கண்ணு.

1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.

துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :

கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.

12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.

சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள்.

ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.

ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.

 ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி,

"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க.

எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.

எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.

கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.

 ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.

ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.

பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.

அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.

இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.

இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.

திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார்.

அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன.

அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.           
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும்  அழிந்திருக்கின்றன.

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.

பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.

மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.

சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு  இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்? 

ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

(* இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி *)

நன்றி:

Best regards,

Wednesday, 12 June 2019

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

 பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.

பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.

எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

 அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.

அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.

 எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும்.

பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.

அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.

பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.

இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.

 எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.

 அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.

 நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.

 உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.

 சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.

தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு,

கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

 சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.

 நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள்.

 ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.

 இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.

 அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.

 பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.

ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.

 வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.

இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.

 விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.

 மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.

தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன.

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.

 திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.

சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.

அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.

 கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.

பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.

 கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.

 எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.

 ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.

வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.

 கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.

இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.

அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.

ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.

 வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.

 வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.

 அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு.

 அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.

அழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,

முருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,

பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.

ஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை !

Best regards,

Tuesday, 11 June 2019

நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.

நம்மவர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.

1940 கால கட்டங்களில் 5 நாட்கள் கல்யாணம் கோலாகலமா நடக்கும்.

அந்த கால கட்டத்துல சத்திரமெலாம் கிடையாதே.

தெருவில் பந்தலை போட்டு அந்த அக்ரஹாரத்துல உள்ளவாளோட அகங்களையெல்லாம் கல்யாண ஏற்பாடு பண்றவா உபயோகம் பண்ணிப்பா.

நாம் 1970-களில் உள்ள கல்யாணங்களை பார்ப்போமா.

அப்ப பெண்ணாத்துலயோ, பிள்ளையாத்துலயோ கல்யாணம் நிச்சயம் ஆகிடுத்துன்னா தபால் கார்டு ஓரத்துல மஞ்சள் தடவி இரண்டு பக்கத்து சொந்தகாராளாத்துக்கும் உடனே தகவல் பறக்கும்.

இந்த காலம் மாதிரியா முகூர்த்த நேரத்துக்கு நெருங்கின சொந்தகாராளே வர மாதிரி.

ஆத்து வாசல்ல ஜலத்தை தெளிச்சு கோலத்தை போட்டா ஜே ஜேன்னு உறவுகாராள்ளாம் கூடிடுவா.

அதுலயும் பெண்ணோட/பிள்ளையோட அத்தைகளும், மாமாக்களும் முன்னாடி வந்து நிப்பா.

கல்யாணத்துல இவாளோட சீர்தான ரொம்ப முக்கியம் , பந்தா அதவிட தூள் பறக்கும்

அதுலயும் பொண்ணோட அத்தை கடிதாசு கிடைச்ச உடனே அடுத்த ரயிலை பிடித்து ஆத்துக்குள்ள வரச்சயே அண்ணா நீ போட்ட கடிதாசு கிடைச்ச உடனயே ஆத்துல போட்டது போட்டபடி பறந்து வந்துட்டேன்.

 நம்ப அம்மாவும், அப்பாவும் இருந்தா முதல் பேத்திக்கு கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பான்னு கண்ணை தொடச்சுண்டு ஸ்வாதீனமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துடுவா.

இப்ப மாதிரியா அந்த கால கட்டத்துல ஸ்டார் கல்யாண மண்டபங்கள். ஒப்பந்த அடிப்படைல ஆட்கள்.

சீர் பக்ஷணங்கள் பண்றதுக்காகவே ஊர்ல இருக்கற அத்தை, மாமி, சித்தி, பாட்டி உறவுகளெல்லாம் கூடிடுவா.

பக்ஷணம், அப்பளம் பண்றச்சே அவா அடிக்கற கூத்தெல்லாம் பார்க்க கண்கள் கோடி வேணும்.

சாப்பாட்டு கடை ஆகியாச்சுன்னா கல்யாணத்துக்கு கடைசி 15 நாளைக்கு முன்னாடி வரைக்கும் கடைகளுக்கு போய் பாத்திரம் பண்டம், மளிகை சாமான்களுக்கு, துணிமணிகள் இத்யாதிகளுக்கெல்லாம் ஆத்துல உள்ள புருஷாளும், சொந்தகார மனுஷாளும் களத்துல இறங்கி வேலை செய்வார்கள்.

இந்த காலம் மாதிரி மாப்பிள்ளையாத்துகாரா ளுக்கும், அவா சொந்த/நட்புகளுக்கும் ஹோட்டல்ல அறைகள் போட மாட்டாளே. சுத்தி இருக்கற அக்கம் பக்கத்து மனுஷாளே தன்னாத்து கல்யாணம் மாதிரி அவா அவாளோட அகங்களையே சுத்தம் பண்ணி சந்தோஷமா கொடுப்பார்கள்.

நினைச்சு பார்த்தா கூட அந்த பொற்காலங்கள் திரும்பி வராதே.

கல்யாணத்துக்கு முதல் நாள் பிள்ளையாத்துகாரா பிள்ளைக்கு யாத்ரா தானம் பண்ணி முடிக்கற துக்குள்ள பொண்ணாத்துல வண்டி ஏற்பாடு பண்ணி அவாத்துக்கு இவா ஒரு தம்பதிகளோட அனுப்பி வச்சுடுவா. வெளியூரா இருந்தா ரயில்வே ஸ்டேஷனுக்கோ/பஸ் நிலையத்துக்கோ வண்டி அனுப்பிடுவா.

பிள்ளையாத்துகாரா சத்திரத்துக்கு வந்த உடனே மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதத்துக்கு அழைச்சுண்டு போயிடுவா.

கல்யாண சமையல்லாம் காண்ட்ராக்ட் கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம் மொத்தமா வாங்கி வச்சு உக்கிராண அறையில் பத்திரமா வச்சு அதை பாத்துக்க பெண்ணாத்துல உள்ள உறவுகாராள்ளாம் மாத்தி, மாத்தி ட்யூட்டி போட்டுண்டு பரிஜாரகாளுக்கு வேணும்கறதை எடுத்து கொடுப்பார்கள்.

இதுக்கு அசாத்ய பொறுமை வேணும்.

கார்த்தால பிள்ளையாத்துலயும், பெண்ணாத்து லயும் விரதம் முடிஞ்சு சாப்பாடு ஆன பிறகு சாயந்திரம் நிச்சயதார்த்தம்தான்.

அந்த காலத்துல இந்த காலம் மாதிரி கல்யாணத் துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னா பெரிய ஹால்களில் வைக்கற பழக்கம் கிடையாது.

 பிள்ளையாத்துலதான் பண்ணுவா.
அதுக்கு பெண்ணை கூட்டிண்டு போக மாட்டா.
அத ஒப்புதல் தாம்பூலம்னுதான் சொல்லுவா.

கல்யாயாணத்துக்கு முதல் நாள் விவாஹ பத்திரிக்கை வாசிச்சு பண்றதுதான் ஒரிஜினல் நிச்சயதார்த்தம்.

அந்த கால கட்டத்துல ரிசப்ஷன் கூட ரொம்ப அத்தி பூத்தா மாதிரி மேல்மட்டத்துகாராதான் பண்ணுவா.

அதுவும் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரம்தான் வச்சுப்பா.

நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு திறந்த கார்ல மாப்பிள்ளை ஜான்வாசத்துல வருவார்.

முன்னாடி நாதஸ்வர கச்சேரி, கேஸ் லைட்டோட கோலாகமா ஜான்வாசம் நடக்கும்.

நிச்சயதார்த்த விருந்து முடிஞ்ச பிறகு ஒரு பக்கம் சீட்டு கச்சேரி, இன்னொரு பக்கம் முகூர்த்த தேங்காய் பைகளை பொண்ணாத்துகாரா போட்டுண்டு இருப்பா.

அது மாதிரி பிள்ளையோட அத்தை, மாமா பண்ற ஜபர்தஸ்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும்.

அதுவும் பிள்ளையோட அத்தை, பெண்ணோட அம்மா, அப்பாட்ட இதோ பாருங்கோ மாமா எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.

அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.

அப்பறம் நானே உங்களன்ட கேக்கனும்னு நினைச்சேன். அது என்ன முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு க்ருஷ்ண ஜயந்திக்கு உருட்டின உப்பு சீடை சைஸ்ல இருக்கே.

குழந்தை கையால குஞ்சாலாடை பிடிக்க சொன்னேளாக்கும்னு தோள்பட்டைல நக்குனு இடிச்சுப்பா.

பிள்ளையோட மாமா காபி கழனி ஜலமாட்டம் இருக்கு, வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு இடுப்புல உள்ள பஞ்சகச்சம் நழுவறது தெரியாம ஆகாசத்துக்கும், பூமிக்கும் தை தைன்னு குதிப்பார்.

இந்த களேபரங்களையெல்லாம் தாண்டி மறுநாள் காசியாத்திரைக்கு மாப்பிள்ளை மங்கள ஸ்நானம் பண்ணிட்டு
அத்தை கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் இத்யாதிகளோடு காசியாத்திரைக்கு புறப்படுவார்.

சுமங்கலி பொண்டுகள்ளாம் தசரத நந்தன தானவ மாதர பாடுவா.

சாஸ்திரிகள் சொல்றதை பெண்ணோட தகப்பனார் மாப்பிள்ளையிடம் காசி யாத்திரை போகாதீங்கோ, எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரோம் அவளை பாணிக்ரஹணம் பண்ணிக்கனும்னு சொல்லி மாலை மாத்தற நிகழ்ச்சிக்கு அழைப்பார்.

இந்த மாலை மாத்தற சம்ப்ரதாய்த்துல பெண்ணையும், மாப்பிள்ளையும் மாமாக்கள் தூக்கிண்டு ஓடுவாளே அப்பப்பா செம கலாட்டாதான்.

பெண்கள்ளாம் சுத்தி நின்னுன்டு மாலை மாற்றினாள் கோதை மாலை சாத்தினாள், மன்மதனுக்கு மாலையிட்டாயேன்னு பாட்டுகளை பாடி கரகோஷம் பண்ணுவா.

இது முடிஞ்சு கன்னூஞ்சலில் பெண், பிள்ளையை உட்கார வைத்து பால், பழம் கொடுத்து பச்சைபிடி சுற்றி

கன்னூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை மன மகிழ்ந்தாள், கந்த மலர் மீதுரையும் பாட்டுகளை பாடி மஞ்சன நீரை சுழற்றி ஹாரத்தி எடுத்து முகூர்த்த மேடைக்கு அழைத்து செல்வார்கள்.

பெண்ணுக்கு அப்பா மடில உட்கார வச்சு கூறைப் புடவையை கொடுத்து நாத்தனார் அவளை மடிசார் கட்ட அழைச்சுண்டு போவா.

பெண்ணை அப்பா மடில உட்கார வச்சுண்டு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறச்சே அவரோட மடியை விட மனசு ரொம்ப கனக்கும்.

சும்மாவா விதையை இல்லை கன்னி என்னும் வ்ருக்ஷத்தையே வேரோட பெயர்த்து எடுத்து இன்னொரு குடும்பத்துக்கு கன்னிகாதானமா கொடுக்கறாரே.

இந்த கன்னிகாதானத்துலதான் கொடுக்கறவா கையும், வாங்கறவா கையும் சமமா இருக்கு.

எந்த தானத்துக்கும் இல்லாத விசேஷம் கன்னிகானத்துக்கு மட்டும்தான் உண்டு.

கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருமே சமமான பலனை அடைகிறார்கள்.

மாங்கால்யதாரணம், சப்தபதி சம்ப்ரதாயங் கள்ளாம் முடிஞ்ச உடனே இரண்டு பக்கத்து உறவு/நட்புகளெல்லாம் தம்பதிகளோட அம்மா, அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண் வந்தாச்சான்னு சந்தோஷத்துல அவாளை ஆலிங்கனம் பண்ணிப்பா.

 தாத்தா பாட்டிகள்ட்ட பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு விஜாரிச்சு ஆசீர்வாதம் வாங்கிப்பா.

பாட்டி, தாத்தாக்களெல்லாம் இதை கண்ல ஆனந்த பாஷ்பம் பொங்க ஆனந்தமா ரசிச்சுண்டுருப்பா.

சப்தபதி ஆனபிறகுதான் எல்லாருமே ஓதியிட்டு ஆசீர்வாதம் பண்ணுவா.

முகூர்த்த சாப்பாடு முடிஞ்சு கிளம்பறவாளுக் கெல்லாம் தாம்பூல பை, சீர் பக்ஷணத்தோட மரியாதை பண்ணி விடை கொடுப்பா.

சாயந்திரம் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும்.

இரண்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுப்பா.

பிள்ளையோட அத்தை கருநாகப் பழம் போல கருத்த பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு பாடுவா.

 அதற்கு பதிலடி கொடுக்க பெண்ணோட மாமி உடனே எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் வெகு சங்கோஜகாரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும்.

அன்னிக்கு ராத்திரி மாப்பிள்ளைக்கு வெள்ளித் தட்டில் பால் சாதம் சாப்பிட சொல்லுவா.

வெள்ளித் தட்டை அலம்பி வைக்கற மச்சினிக்கி பதில் சம்பாவனை பண்ணுவா.

அப்ப பெண்ணோட அத்தை பெண்ணோட அம்மாட்ட காதுல மெதுவா சொல்லுவா.

 காமு பாத்தியோன்னோ நம்ப இத்தனை சீரை பண்றோம். அது நொட்டை, நொள்ளைம்பா.

ஆனா இவாளுக்கு மச்சினிக்கும், மச்சினனுக்கும் பதில் சம்பாவணை பண்றச்சே கை கரணா கிழங்கா போயிடும்னு மெதுவா நக்கலடிப்பா.

முகூர்த்தத்துக்கு அன்னிக்கு இரவே சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிடுவா.

 சோபன அறையை நன்னா பூஜோடனையால அலங்காரம் பண்ணி, மெல்லிய ஊதுபத்தி மணம், பால் பழம், பக்ஷண வகைகளோடு இந்திர லோகம் மாதிரி ஜோடனை இருக்கும்.

முதலில் ஒரு வயதான தம்பதிகள் படுக்கையில் சாஸ்திரத்துக்கு உட்கார்ந்து எழுந்திருப்பார்கள்.

அப்புறமா தம்பதிகள் சோபன அறைக்கு போன பிறகு வெளில பெண்கள் கூட்டமா ஒக்காத்துண்டு பள்ளியறை பாடல்களை பாடுவார்கள்.

மறுநாள் காலையில் மச்சினன் படுக்கையை சுருட்டின பிறகு படுக்கையின் அடியில் அவனுக்கு சீர் பணம் வைத்திருப்பார்கள்.

கார்த்தால பாலிகையெல்லாம் தெளிச்சு முளை விட்ட நவதான்ய கூடையை சுத்தி வந்து பெண்களாம் கும்மி பாட்டுக்களை பாடுவார்கள்.

இரண்டு நாள் விருந்து பலமா இருந்ததால கட்டுசாத கூடை சாப்பாடுக்கு முன்னாடி விருந்துல மிளகு குழம்பு, பருப்புத் துகையலோட பத்திய சாப்பாடு தேவாம்ருதமா இருக்கும்.

விருந்தெல்லாம் ஆனபிறகு சம்பந்தி மரியாதை முடிஞ்சு பெண் புக்காத்துக்கு புறப்படறச்சே பெண்ணோட அம்மா புடவை தலைப்பால முகத்தை மூடிண்டு அழறச்சே எல்லாருக்குமே மனசு கலங்கி போயிடும்.

அப்பாவுக்கு வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாம கண்ல ஜலம் பிரவாகமா இருக்கும்.

அப்பதான் பிள்ளையோட அம்மா, பெண்ணை பெத்தவாகிட்ட மாமா, மாமி கல்யாணத்துல நாங்க ஏதாவது தெரியாத கோபத்துல பேசியிருந்தோம்னா எங்களை மன்னிச்சுடுங்கோ

 எல்லாம் இவரோட உறவுகாரா சுபாவத்துக்காக த்தான் அப்படி நடந்துண்டோம்.

இனிமே உங்காத்து பொண்ணு எம் பொண்ணு மாதிரின்னு சொன்ன உடனே

மாமா, மாமி உடனே நன்னாருக்கு நீங்க சொல்றது கல்யாணம்னா இதெல்லாம் சகஜம்தான். இதுக்கு போய் மன்னிப்பு கேட்கறதாவதுன்னு அவாள சமாதனப் படுத்தி சந்தோஷமா வழியனுப்பி வைப்பா.

மிளகாய்பொடி இட்லி, புளியோதரை, தயிர்சாதம், வற்றல், வடாம், ஊறுகாய் கட்டுசாதங்களோடும், கறிகாய்கள், சீர் பக்ஷணங்களோட மாட்டுப்பெண் மணக்க மணக்க புக்காத்துக்கு வருவா.

அந்த கட்டுசாத கூடை இத்யாதிகள் இருக்கே. ஆஹா அது எந்த தேவலோக அமுதத்துக்கும் ஈடு இணையில்லை.

எனக்கு என்னவோ 1980 - 2000 வரை உள்ள கால கட்டத்துல உள்ள தம்பதிகளோட வாழ்க்கை அமோகமா இருந்துருக்குன்னு தோணறது.

கணவனும், மனைவியும் ஒத்தொருகொருத்தர் நன்னா புரிஞ்சுண்டு அனுசரணையா தாம்பத்யத்தை ரசிச்சு வாழ்ந்துருக்கா.

இன்னும் வாழ்ந்துண்டும் இருக்கா.

மேலே குறிப்பிட்ட கல்யாணங்கள் மாதிரி இனிமே இந்த தலைமுறைகளில் நடக்குமா.

ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அமோகமா நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை நினைதுப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது.

பசுமை மாறா நினைவுகள்.

Best regards,

Monday, 10 June 2019

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

 மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

 மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்...

 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

 இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக

தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

Best regards,

Sunday, 9 June 2019

கலங்காதே மனமே.!? ...

கலங்காதே மனமே.!? ...

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
பீஷ்மர் மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
சூர்தாஸர் மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
குணவதிபாய் மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
ஜயதேவர் மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் மனம் கலங்கவில்லை...

எப்படி முடிந்தது இவர்களால்..?

ரகசியம்...

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

ஆழ்ந்த நம்பிக்கை...

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

முதல் வழி...
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

இரண்டாம் வழி...
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

மந்திரமாக இருக்கலாம்...

கீர்த்தனைகளாக இருக்கலாம்...

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் "அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..." இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

விடாது நாம ஜபம் செய்வோம்...

திடமாக பகவானை வழிபடுவோம்...

அன்பே கடவுள் என போற்றுவோம்...

உறுதியுடன் உண்மையாக இருப்போம்...

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

Best regards,

Saturday, 8 June 2019

புறம் பேசாதீர்

புறம் பேசாதீர்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.
ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!


Best regards,

Friday, 7 June 2019

உடம்பின் நடுப்பகுதி வயிறு

உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.
😊
நிறைய வேலை செய்வதால் 
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற 
பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை 
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.
இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.
என்னை எந்த தவறும்  செய்ய விடாதே அப்பனே."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம்.
😊 ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !
முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்
மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது
வாழ்க வளமுடன்
வேண்டும் சுபம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
🙏🙏🙏🙏🙏
படித்தாலும் புரியாத புத்தகம் பெண்..
படிக்க தவறிய புத்தகம் தந்தை...
படிக்க விரும்பும் புத்தகம் அன்னை...
படித்தது புடித்து போகும் புத்தகம் மழலை...
தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை...

Best regards,

Thursday, 6 June 2019

சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்

சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்😳🤔

நேர்மைக்கு கிடைத்த பரிசு👌👏💪👍🙌🙏

மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.

“என்ன மிஸ்டர் கோபால், உங்க
வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.?

“உண்மைதான் சார்.”

“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.? எனக்கு வியப்பா இருக்கு.”

“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”

“ஓ.. அப்படியா.? எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு."

“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”

அந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான்.
“ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”

“ஓகே. தேங்க் யூ..”

“ம்ம்ம்.. வெல்கம்.”

எனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன.
ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...?

தலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.

எனக்கு குப்பென வியர்த்தது...! பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.

வீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.

“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.

'சொல்லிவிடலாமா இவளிடம்.?'

“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”

“எதுக்கு.?"

“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”

'என்னாச்சு இவருக்கு.?' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

"ம்ம்.. சொல்லுங்க.”

“இப்படி உக்காரு." என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.

“ஏதுங்க இது.? கடன் வாங்கினிங்களா,.?"

நான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.

“யாரு தவற விட்ட பணம் இது.?"

“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”

அவள் அமைதியாக இருந்தாள்.

“சுபா ஏதாவது பேசேன்.”

“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”

“சுபா என்ன சொல்ற.? கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”

“உங்க சபல புத்திக்கு கடவுள பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.

“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”

“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.?” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”

“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.?" என நான் குரலை உயர்த்த...

சுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.

“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.

“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.

நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி
பணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபச்சரித்தார்.

“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.

“அப்படியா..?" என்று யோசித்தவர்

“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா...? ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது.? நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு..." என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...
என் கண்ணில் கண்ணீர் வந்தது...
அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.


திருக்குறள் :

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்

விளக்கம் :

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ?....
நட்புடன்! !!!!!!

Best regards,

Wednesday, 5 June 2019

அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை

#அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை
இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala

நம்மையெல்லாம் எதிரியாக பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் என கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.

சில தவறுகளை நம்மால் திருத்தவே முடியாது. அப்படியான தவறு தமிழகம் 2016 தேர்தலில் செய்தது. அந்த தவறு கூட இந்த கேட்டை தந்திருக்காது ஜெயா உயிரோடு இருந்திருந்தால்.

அந்த தவறை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை 2019ல் பயன்படுத்தி இருந்தால் கூட இந்த துரோகத்தில் இருந்து தப்பியிருக்கலாம். அதையும் மானாமதுரை, பரமக்குடி, அரூர் உள்ளிட்ட 9 தொகுதி மக்கள் கெடுத்தனர்.

விளைவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது இறங்கியிருக்கிறது.
இன்று 29.05.2019  தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர்  பதவிக்கு  தமிழக முதல்வரால்  பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில்  ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்  இடம் பெற்றுள்ளனர்

தமிழ்நாடு அரசு  2016இல் செய்த திருத்தம் என்பது

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான்.

மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது தமிழ்நாடு அரசு.

அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேலையில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கிய தமிழக அரசே  தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது நாம் கேட்பதில் தவறில்லை.

கேட்டால் கிடைக்காது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும்.

இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்.

இப்போது TNEB -ல்

நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் .

#தமிழகஅரசுவேலை #தமிழருக்கே

 மாணவ, மாணவிகளே இனியும் நீங்கள் விழிக்கவில்லை என்றால் உங்களின் உரிமை பறிபோகும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

Best regards,

DikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'

DikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'

DIKSHA மேடையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரிந்துரைக்கப்படும் பள்ளி பாடத்திட்டத்திற்கு தொடர்புடைய கற்றல் பொருள் ஈடுபடும் வழங்குகிறது. பாடநூல் திட்டங்கள், பணித்தாள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு உதவக்கூடிய ஆசிரியர்கள், அனுபவமிக்க வகுப்பறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள், படிப்பினைகள் மாற்றியமைக்கலாம் மற்றும் நடைமுறை பயிற்சிகள் செய்யுங்கள். பெற்றோர்களுக்கு வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் பள்ளி மணி நேரத்திற்கு வெளியே வெளிப்படையான சந்தேகங்களைத் தொடரலாம்.

பயன்பாடு சிறப்பம்சங்கள்
• ஆசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த இந்திய உள்ளடக்க படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஊடாடத்தக்க பொருள் ஆராயுங்கள். இந்தியாவில், இந்தியாவுக்கு!
• பாடநூல்களில் இருந்து QR குறியீடுகள் ஸ்கேன் மற்றும் தலைப்பு தொடர்புடைய கூடுதல் கற்றல் பொருள் கண்டறிய
• இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் கூட ஆஃப்லைனில் உள்ளடக்கத்தை சேமித்து, பகிர்ந்து கொள்ளுங்கள்
• பாடசாலை வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு பொருத்தமான பாடங்கள் மற்றும் பணிப்புத்தகங்களைக் கண்டறியவும்
• ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு அல்லது மராத்தி மொழிகளில் அனுபவத்தை அனுபவிக்கலாம்.
• வீடியோ, PDF, HTML, ePub, mobi போன்ற பல உள்ளடக்க வடிவங்களை ஆதரிக்கிறது - விரைவில் மேலும் வடிவங்கள் வரும்!

ஆசிரியர்களுக்கான நன்மைகள்
• உங்கள் வர்க்கத்தை சுவாரஸ்யமாக்குவதற்கு ஊடாடும் மற்றும் ஈடுபடும் கற்பித்தல் விஷயங்களைக் கண்டறியவும்
• மாணவர்களிடம் கடினமான கருத்துகளை விளக்குவதற்கு மற்ற ஆசிரியர்களிடம் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும்
• உங்கள் தொழில்முறை அபிவிருத்திக்கு மேலும் பாடநெறிகளுடன் சேரவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுங்கள்
• உங்களுடைய கற்பித்தல் வரலாற்றை ஒரு ஆசிரியராக உங்கள் வாழ்க்கையில் காணலாம்
• அரச துறையிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பெறுக
• நீங்கள் கற்பித்த ஒரு தலைப்பின் உங்கள் மாணவர்களின் புரிதலை சரிபார்க்க டிஜிட்டல் மதிப்பீடுகளை நடத்துங்கள்

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மைகள்
மேடையில் தொடர்புடைய பாடங்கள் எளிதாக அணுக உங்கள் பாடநூலில் QR குறியீடுகள் ஸ்கேன்
• நீங்கள் வகுப்பில் கற்கும் பாடங்கள் மீளாய்வு செய்யுங்கள்
• புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்
• பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் பதில் சரியானதா இல்லையா என்பதில் உடனடி கருத்துக்களைப் பெறுங்கள்.

DIKSHA க்கான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டுமா?
• ஆசிரியர்கள் ஒரு எளிதான மற்றும் ஈடுபடும் வகையில் கருத்துக்களை வழங்க உதவுங்கள்
• மாணவர்களுக்கும் வகுப்புக்கு வெளியேயும் கற்றுக் கொள்ள உதவுங்கள்.
• உயர் தரமான கற்றல் பொருள்களை மாணவர்களுக்கு வழங்குவதில் ஈடுபடுங்கள்
• இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நீங்கள் விரும்பினால், கீழே பகிர்ந்துள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த முன்முயற்சியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) ஆதரித்து, இந்தியாவில் தேசிய கல்வி கவுன்சில் (NCTE) தலைமையிலானது.

DIKSHA பற்றி
DIKSHA என்பது மாநில, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEI) மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றால் பயிற்றுவிப்பதற்காக ஆசிரிய-மையப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கான தனிப்பயனாக்கத்தக்க தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகும். ஆசிரியர்கள் டி.கே.எஸ்.ஏ.ஏ.வை அனைத்து பாடங்களிலும் உயர் தரமான போதனை, கற்றல் மற்றும் மதிப்பீடு வளங்களை அணுகவும், ஆங்கில மற்றும் பல இந்திய மொழிகளிலும் அனைத்து தரங்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்கள் தங்களது முழு தொழிற்பாட்டிற்காக மேடையில் பயன்படுத்தலாம் - அவர்கள் TEI களில் மாணவர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெறும் வரை - பிடிக்கவும், அங்கீகரிக்கவும், தங்கள் வேலைகளை, பங்களிப்புகளையும், சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். டி.கே.ஷே.ஏ.ஏ தளத்தை 'எமது ஆசிரியர்கள் எமது ஹீரோஸ்' என்ற கைகளை பலப்படுத்துகிறது.
 http://diksha.gov.in/explore

Best regards,

Arts & Science என‌ ஏன் அழைகின்றனர்

Arts & Science என‌ ஏன் அழைகின்றனர் 😔                                           
கண் இருந்தும் கண் இல்லாததுபோல் ,                   அறிவு இருந்தும் சுயமாக சிந்திக்க தெறியாமல்  அறிவிலார் போல் , அடுத்தவர்கள் சொல் கேட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாது இளையச்சமுதாய மாணவ, மாணவியர்களின் திறமை எதிர்கால வாழ்க்கையை  என்னவென்றே தெறியாமல் சீர்குலைத்துவிடாதீர் பெற்ரோரே !                               Arts னு ஏன் அலைகிரீர் ! Art's (B.A, B.Sc, B.Com,Etc,.......,) படிப்பை குறைந்த நாட்களில் படித்துவிட்டு 25 வயதிர்க்குல் எத்தனைபேர் தரமான வேலையில் இருக்கிறார்கள் ??      இருக்குறாங்க எங்க ??    அரசு வேலைக்கு போக படிக்கிறேன்னு TNPSC  கோச்சிங் சென்டரில் விட்டில் உள்ள கஷ்டபட்டு அம்மா அப்பா சம்பதித்த  அனைத்து பொருளையும் வித்து வித்து பயிற்சி கட்டணமாக கட்டி கட்டி  கடைசியா 40 வயசுல பாஸ் ஆகி அரசுவேலை கிடைக்குமென கனவோட இருந்தா, எவனாவது அரசுதேர்வில் முறைகேடுனு கேஸ் போட்டு 10 வருசம் ஆகுது பின் அரசே அறவிப்பு திரும்ப தேர்வு எழுதனுமுன்னு அப்ப வயது 50 பிறகு வயது தகுதிஇல்லாம எழுதமுடியாம அவனுக்கு கல்யாணம் ஆகாம எதுக்கு பிறந்தோம் கூட தெறியாம தாடி வளர்த்துக் கொண்டு என்ன படிச்சனு கேட்டா UG ,PG,B.Ed,M.Ed, M.Phill ஆம். எதுக்குனுகேட்டா  பக்கத்துவீட்டுகாரன் இதபடி(Art's)நல்லதுனு சொன்னான் படிச்சேன் . இப்ப பக்கத்துவீட்டுகாரன் இப்ப என்ன சொல்ரான் என்ன தண்டசோறுனு சொல்ரான் . அப்ப நீதான(Art's) இதபடின்னு சொன்ன இப்ப இப்படி சொல்ரனுகேட்டா உனக்கு எங்கடாபோச்சு புத்தினு சொல்ரான்.  உண்மை என்னவென்றால் தனிதிறமை இருந்தால் Art's படிக்கலாம் நார்மலாக படிப்பவர்கள் திறமைக்கேர்ப்ப தொழில் சார்ந்த படிப்புகள் படித்தால் 100% இல்லை 1000% வேலை உறுதியாக இருக்கு 👍 உங்களுக்கும் அது தெரியும்.
ஆனால் Engineering படித்தவர்கள், யாரும் கோச்சிங் சென்டர் சென்று நேரத்தை வீணடிப்பதில்லை குறைந்த்து ₹ 15,000/- சம்பலமாவது உறுதியாக கிடைக்கும்.இன்றய காலகட்டதில் படித்ததும் வேலை கிடைத்தால் தன்மானத்தொடு வாழலாம். இல்லையேல்  தகுதியும் தரமும் இல்லாத ஆட்களின் பேச்சை கேட்டு உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை வீண் ஆக்காதீர்  . படிப்பை பற்றி விபரம் அறிய 10  வருடம் கல்வி ஆலோசகராக இருக்கும். தொழில் சார்ந்த  படிப்புகளை படிக்கும்போது முதலில் வேலைகிடைக்கும் . UPSC, TNPSC நடத்தும் IAS முதல் ஆபீஸ் பியுன் வரை   ISRO , RRB,EB, BANK,MEDICAL(மருத்துவத்துறை)  முதல் Labour வரை  கோச்சிங் சென்டர் போகாமலே வெற்றி பெறமுடியும். ஏனென்றால்  இந்தபடிப்பில்தான் கணிதம் , அனைத்து அறிவியல் , ஆங்கிலம் , பொது அறிவு , இன்றைய நடப்புகள் போன்ற பலவிதமான அறிவையும் ஆற்றலையும் பெறமுடியும். தரமான கல்வியையும் தரமான படிப்பையும் தேர்வு  செய்ய அந்த துறை சம்மந்தபட்ட குறைந்தது 5 வருடங்கள்களுக்குமேல் அனுபவம் உள்ள நேர்மையான தரமான மனிதர்களிடம்  ஆலோசனை பெற்று அவர்களின் ஆதரவும் உதவியையும் பெற்று படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யுங்கள்.                                          குறிப்பு:-                                       இன்று எந்த படிப்புக்கு வேண்டாம் என மக்கள் மத்தியில் பொய் பரப்ப படுகிறதோ அந்த படிப்புக்கு 2 முதல்  5 வருடங்களுக்குள் மிகமிக அதிகமாக வேலையும் மரியாதையும் இருக்கும் . Art's  Art's னு அழைவதை நிறுத்திவிட்டு உடனடியாக வேலை கிடைக்கும் படிப்பை தேர்வு செய்ய  மாணவ, மாணவிகளுக்கு முடிந்த அளவுக்கு அறிவு வழங்குங்கள்.

Best regards,

Sunday, 2 June 2019

பெற்றோருக்கான_பதிவு... !!!

பெற்றோருக்கான_பதிவு... !!!
காலையில எட்டு டூ பத்து..
மாலை நாலு டூ ஆறு...
எந்த ஊர்ல இருக்குற பஸ்ஸ்டாண்ட்ல வேனும்னாலும் போய் நின்னு பாருங்க...
நீங்களே அடிக்கிற ... அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக்காலத்து பள்ளிக்கூடத்து பிஞ்சுகளின் காதல்..
*பெருமைக்குரிய_பெற்றோர்களே ...
தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..
காரணம் மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..
உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள் அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்...
நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்... உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..
நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,
உங்கள் மகனோ மகளோ
உங்கள் வீட்டுக்குள் அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..
அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை....
இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்...
அதை ஸ்கிப் செய்துவிட்டு போன பிள்ளைகளைவிட அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அதற்குள் மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்...
நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில், இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..
ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..
நீங்கள் கூட்டிச் செல்லாத ,ஆள் ஆரவாரமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள் அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.
இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி...
ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்..
என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ட்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..
தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.
என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது.. கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது....
முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது...
உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.
குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.
முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்...
காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும், மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்...
மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்....
உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை கேட்டறியுங்கள்.. ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்...
இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான சில கிழஜென்மங்களின் வக்கிர குரூர முகங்களின் பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்...
இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..
குடும்பமானம் ,பிள்ளைகளின் வருங்காலம் , கனவு, லட்சியம்..
எக்ஸட்ரா எக்ஸட்ரா வேணும்னு நினைக்கிறவங்க
பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..
ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..
முக்காவாசி அய்யோக்கியதனம்  வேலை பாக்குறதுக பூரா இந்த ஆம்பள பொம்பள பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்...
டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது....
ப்ரெண்டோட அண்ணன் அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..
பசங்களும் மலரில் தேனெடுக்கும் வண்டுகளை போல, வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திட்டு காரியம் முடிஞ்சதும் கழட்டி உட்டுட்டு போயிட்டே இருக்கானுங்க..
அடுத்த இரண்டொரு நாளில் அழுது முடித்து,
அடுத்த காதலுக்கு.. தன்னை புதியதாக தயார் படுத்திட்டு கெளம்பி விடுகிறார்கள் நவீன பட்டாம்பூச்சிகள்..
ரோஜாச்செடிகள், வேலிக்குள் இருக்கும் மட்டும்தான் பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்...
வேலிதாண்டினால்..., 
அதைப் பிடிங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கரங்களும், முழுச்செடியையும் மேய்ந்து திங்கும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன..
எனவே
உங்கள் வீட்டு மகள்களை ரோஜா மகளாக கசங்காமலும் பாதுகாருங்கள்...
மகன்களை சிங்கமென மிருகமாக வளர்க்காமல் நல்லமனிதனாக வளர்தெடுங்கள்... !!!
உண்மை கசக்கும்....   எதிர் காலம் இளைஞர்கள் கையில்  என்கிறார்கள்   வருத்தத்துடன் இந்த பதிவை பகிர்கிறேன்

Best regards,