Saturday, 1 June 2019

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!

வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!

1.நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.
மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு!!!

2.பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை!!!

3. எந்த வயதிலும் எந்த கல்வி, கலையையும் கற்கும் வாய்ப்பு!!!

4. பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது!!!

5. நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை!!!

6. நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்!!!

7. அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது!!!

8. எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்!!!

9. தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்!!!

எல்லாவற்றிற்கும் மேலாக

10. கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்!!!


Best regards,