Monday, 28 October 2019

சிறுவன் சுர்ஜித்

சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில

அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன்.
செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார் இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று, அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,  அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான்  உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும்  விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.  அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று  விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான்.  மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது,  உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது இந்த சம்பவத்தை வைத்து சில அரசியல் ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிய முடிகின்றது

வல்லுநர்களே படித்தால் மட்டும் போதாது அனுபவம் றொம்ப முக்கியம்Best regards,