Monday, 28 May 2012

தேனீயைப் பாருங்கள் - பட்டினத்தாரின் ஆன்மிக சிந்தனைகள் !

தேனீயைப் பாருங்கள் - பட்டினத்தாரின் ஆன்மிக சிந்தனைகள் !
Inline image 1
* மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள்.

*
ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.

*
ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும்.

*
தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.

என்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி!
Inline image 1
அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும்அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர்.
ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்..
நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது.
ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன்.இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட  உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன்.
படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன்.
இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.

Monday, 21 May 2012

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவுசெய்ய…


தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவுசெய்ய




இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும்என்றால்புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழேகொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால்மேஜிக்ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்துஐஆர்சிடிசிமுன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால்பயணியின் விவர பட்டியல் தானாகவேஅடுத்த நொடியில் நிரம்பி விடும்.தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குஇந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும்இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல்டிக்கெட்டை புக் செய்யலாம்.


fax:
your@email.com
http://www.yoursite.com