Wednesday, 22 August 2012

Tuesday, 21 August 2012

மாமரம் சொல்லும் தத்துவம் - காஞ்சி பெரியவர்


*
பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும்.

* இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறைபக்தி கொண்டு முழுமையடைந்தவர்களாகவும் இருப்பதில்லை. ஏதாவது, ஒருசிலர்தான் அத்தகைய மேன்மையான நிலையை அடைகிறார்கள். இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.

*
உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும்  அனைவருக்கும் கிடைத்ததாகிறது.
 

Tuesday, 7 August 2012

சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........

  சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........!



Aruvai, Aruvai, Maha Aruvai!




மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
*அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?*

************************

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
*ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.*

************************

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
*அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*.

*************************

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
*மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!*

************************
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
*சார்."மகா", "கவி", "பாரதி",  மூணு பேருமே செம பிகர்!*
***********************
*யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? *
*கடிகாரத்தில் பேட்டரியை **எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும்
உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!*

************************
இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

**************************

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
"நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!"
"போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?"

****************************

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

*****************************

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
*சரோஜா! ஏன் கேக்குற?**
**அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?*
*****************************

*பல்ப் - எடிசன்**
**ரேடியோ - மார்கோனி**
**பை-சைக்கிள் - மேக் மில்லன்**
**போன் - க்ராஹாம் பெல்**
**க்ராவிடி - நியூட்டன்**
**கரண்ட் - பாரடே**
**எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!*
**************************************

*காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!**
**��'ரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ **
**பரவாயில்லை என்று!!*
*********************************

அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
*******************************

மூணு பேரு ��'ரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ��'ரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ��'ருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி
இருக்கு?
***************************

டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
*பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்*!!
******************************

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
*------ **பில் கேட்ஸ் ஐ விட ��'ரு படி மேலே யோசிப்போர் சங்கம்.*
****************************

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
*மகன்: அத ஏன் கேக்குறப்பா, **எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
**��"டி போய்டாங்க!!*

* ********************

கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "��'ன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....


Friday, 3 August 2012

திம்மக்கா பாட்டி



'சாலு மரத திம்மக்காஎன்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!
இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!
பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!
''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''
- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.
''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.
இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!
காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.
ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''
- நாமும் கலங்கித்தான் போனோம்.
''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''
- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !
திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!
''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’
இப்படி சில கடவுள்கள் வாழ்வதால் தான் இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது..

பாட்டி! நீங்க நல்லாருக்கோணும் நாடு முன்னேற......




என் அம்மா



ஒருநாள் என்
காதலி கேட்டாள்....!!!!!
"
உங்களுக்கு உங்க
அம்மாவையா என்னையா அதிகம்
பிடிக்கும்?"
...
என்று
அவளை தான் பிடிக்கும்
என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்.....ஆனாலும்
"
என்
தாயை என்றேன்" சின்னதாய்
ஒரு சிணுக்கத்துடன்
"
நான் தான் உஙகள் உலகம்
என்றீர்களே?? எல்லாம்
பொய்யா?? "
என்றாள்
"
காதலியே... நீ
என்னை காதலிக்க
தகுதிகள் எனக்குண்டு
இல்லா விடில்
காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும்
முன்னிருந்தே என்னை நேசிப்பவள்
என் தாய்
ஆதலினாள் எனது தாய்
உன்னை விட
ஒரு படி மேல் தான்"
என்றேன்....