Thursday, 23 June 2016

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா?
ஆண்களின் உடைகளுக்கும் பெண்களின் உடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்று கவனியுங்கள்.
மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
பெண் என்பவள் பலவீனமானவள்,
அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை.
அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.
தேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்).
இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம்.
நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்
பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம்.
காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை?
இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.
நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும். அது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.
Best regards,