Saturday, 28 December 2019

"கரு ஓட்டம்" (கருவோட்டம்)

"கரு ஓட்டம்" (கருவோட்டம்)

#தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்
தினசரி காலண்டரில் #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் கெர்போட்ட நிவர்த்தி என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்

அதாவது

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??

எனவே

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்

எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்

கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்

புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!Best regards,

Saturday, 21 December 2019

பாரதப்_போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப்_போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த ஒரு மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’

பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
#காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து கொள்ளாமல் நீ அந்த போரை அறிந்து கொள்ளமுடியாது.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் அவன்.

“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு #தத்துவம்.

அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை #பெரியவர் அவனைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

“அது என்ன தத்துவம் ஐயா?

எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”

“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”

“#பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!

#கௌரவர்கள் யார் தெரியுமா?”

“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”

“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) #போரிடமுடியுமா?
“………………..”

“#முடியும்…! எப்போது தெரியுமா?”

அவன் மலங்க மலங்க விழித்தான்.

“#கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”

அவன் சற்று பெருமூச்சு விட்டான்.

பெரியவர் தொடர்ந்தார்.

“கிருஷ்ணர் தான் உன் #மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”

மாணவன் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.

“கௌரவர்கள் #தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.

நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.

எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”

“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.

#கீதையின் பாடமும் இது தான்.”

அவன் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட #பிரமிப்பினால்.

“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.

உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.

ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்கு போக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”

“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”

அவன் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.

இப்போது தரையை பார்த்தான்.

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலை நிமிர்ந்து மேலே பார்த்தான்.

அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்து விட்டிருந்தார்.

மிகப் பெரிய #உண்மைBest regards,

Friday, 20 December 2019

இப்படியும் ஓர் உணவகம் ..

இப்படியும் ஓர் உணவகம் ..

சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்தூர் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப்.கடந்த வாரம் அந்த வழியாகப் போகும் போது அந்தக் காபி ஷாப் போயிருந்தேன்.

வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவை ரோட்டில் ஆபத்தான முறையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உட்கார்ந்து நிம்மதியாகச் சாப்பிடலாம், இங்குள்ள பிற வசதிகளையும் தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது.

வழக்கமாக வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருள்களுக்கு இங்கு அனுமதி கிடையாது என்று தான் எழுதிப் போட்டிருப்பர் ஆனால் இது வித்தியாசமாகவும் நல்லவிதமாகவும் இருக்கவே உணவகத்தின் உரிமையாளர் மனோகரனுக்குப் பாராட்டுத் தெரிவித்தேன்.

இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவில் பணியாற்றி விட்டு சொந்த ஊர் திரும்பியவர் நாலு பேருக்கு பயன்படும்படியான தொழில் துவங்கலாம் என்று யோசித்து இந்த உணவகத்தைத் துவங்கியுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன் இட்லியும் காபியும் மட்டும் விற்கும் உணவகமாக இருந்தது, இன்றைக்கு இந்த வழியாகச் செல்லும் இசை அமைப்பாளர் இளையராஜா முதல் இயக்குனர் மிஷ்கின் வரை சாப்பிட்டு விட்டு செல்லும் அளவிற்கு உணவகம் வளர்சியடைந்துள்ளது.

காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இயங்கும் இந்த உணவகத்தில் பராம்பரிய உணவுகள் மட்டும் தயாரித்து விற்கப்படுகிறது. வெந்தயக்களி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், வரகரிசி சாப்பாடு, தினை பாயசம், சிறுதானிய சப்பாத்தி என்று மெனு நீள்கிறது, அதுவும் நியாயமான விலையில்.

எல்லாப் பலகாரமும் கண் எதிரே சுடச்சுட தயராகி வருகிறது.மண் கலயத்தில் வழங்கப்படும் பனங்கல்கண்டு மூலிகைப்பால் சுவையே தனி. இங்கு பராம்பரிய தானியங்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. ஒரு புத்தகக்கடையும் இருக்கிறது. பழக்கடை மற்றும் பழங்கால பித்தளை செம்பு பொருட்கள் விற்பனையும் உண்டு. பிளாஸ்டிக் மட்டும் கிடையாது.

இருபதிற்கும் அதிகமாக கிராமத்து பெண்கள் தான் இங்கு வேலை செய்கின்றனர். இவர்களைப் போல இன்னும் பல கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பதற்காவே இந்த உணவகத்தை விரிவுபடுத்திக் கொண்டே போகிறேன். சென்னையை விட்டு வெளியே வரும் போதும், உள்ளே போகும் போதும் நல்ல சூழ்நிலையில் நமது பராம்பரிய உணவை மக்கள் குடும்பத்தோடும் குதூகலத்தோடும் சாப்பிட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்று சொன்ன மனோகரன்,

உணவகத்தை விட்டு கிளம்பும் குழந்தைகள் கையில் இரு சிறு மண் பாத்திரங்களை இலவசமாகக் கொடுக்கிறார்.

ஒன்றில் தண்ணீரும், ஒன்றில் சிறுதானிய உணவும் நிரப்பி உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்து விடுங்கள், வெயில் காலத்தில் பசியோடும் தாகத்தோடும் பறக்கும் பறவைகள் இதனை சாப்பிட்டு சந்தோஷப்படும் என்கிறார், குழந்தைகள் சந்தோஷமாகத் தலையாட்டி வாங்கிக் கொண்டனர்.

வாழ்த்துக்கள் மனோகரன்..Best regards,

Thursday, 19 December 2019

குடியுரிமை சட்டம் என்றால் என்ன ?(சிவக்குமார் என்ற நண்பரின் பதிவு)

குடியுரிமை சட்டம் என்றால் என்ன ?(சிவக்குமார்  என்ற  நண்பரின்  பதிவு)

NRC, CAA என விதவிதமான Abbreviations மூலம் பாஜக நிறைவேற்றும் சட்டங்கள் வெளிநாட்டிலிருந்து எல்லைத் தாண்டும் முஸ்லிம் அகதிகளை மட்டும் ஏற்காது என்பது தவறான புரிதல்

இந்த சட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் என் பாட்டன், முப்பாட்டான் காலத்திலிருந்து என்னிடம் சரியான சான்றுகள் இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த சிவகுமார் தன் சொந்த நாட்டிலேயே அகதி ஆவான்.

இலங்கையிலிருந்து தப்பி வந்த ஈழத்தமிழனின் வாரிசு இவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சொல்லிவிட்டு ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் அடைத்துவிடலாம்.

சிவகுமாரிடம் எல்லாமும் இருக்கிறது என்றாலும் தப்பிக்க முடியாது. யாரோ ஒருவர், இந்த சிவகுமார் மீது சந்தேகம் உள்ளது என்று எந்த ஆதாரமுமின்றி அரசிடம் மேல் முறையீடு செய்யலாம். புகார் மட்டுமே போதும், ஆதாரம் தேவையில்லை.

அதை குடியுரிமை அரசுப் பணியாளர்கள் கணக்கில் எடுத்து, சிவகுமாருக்கு குடியுரிமை வழங்காமல், ஒரு மாதத்திற்குள் மீண்டும் நிரூபிக்கச் சொல்வார்கள். அப்போது நிரூபித்தால் மட்டுமே சிவகுமாருக்கு குடியுரிமை உறுதியாகும்.

இல்லையென்றால் சிவகுமாருக்கு ரேசன் கார்டு கிடையாது, அரசு வேலை கிடையாது, ஓட்டு கிடையாது, எந்த பள்ளியிலும் சிவகுமாரின் குழந்தைகளை சேர்க்க முடியாது.

இது தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, மாநில அடிமை அதிமுக அரசு ஆதரித்த குடியுரிமை கொடுங்கோன்மை சட்டம்.

அது எப்படி? சிவகுமார் முஸ்லீம் இல்லையே, என்ன பிரச்சனை அவனுக்கு என்ற கேள்வி வரும்.

காரணம் ரொம்ப சிம்பிள்...

சிவகுமார் ஒரு தமிழன்.

நாமெல்லாம் இந்துக்கள் தானே என்பது உங்களின் வெகுளித்தனமான நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்புவதால் அது உண்மை ஆகிவிடாது. .

உண்மையான Agmark, ISO Certified இந்துக்கள் யார் என்பது இந்த சட்டம் கொண்டு வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

வெளிநாடுகளில் சென்று சிவகுமார் குடியுரிமை பெற பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போதும்.

ஆனால் இந்தியாவில் நான் இந்தியாவின் குடிமகன் என்று நிரூபிக்க இவை மட்டும் பத்தாது, என் முன்னோர்கள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இங்கு தான் இருந்தார்கள் என்பதற்கான ஆவணத்தை நான் தான் சமர்பிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின் படி, இந்த பிரச்சனை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும்தான். இந்துக்களுக்கு இந்த சிக்கல் இல்லை. அப்படி தான் அந்த சட்டம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் கவனமாக தவிர்த்திருக்கிறது.

தமிழர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்று நிரூபிக்க 70 வருடங்களுக்கு முந்தைய ஆவணத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டியது அந்தந்த தனித்த இஸ்லாமியனின், தமிழனின் பொறுப்பு ஆகிவிட்டது.

அதெல்லாம் இல்லை...இல்லவே இல்லை. நிச்சயமாக இது முஸ்லீம்களுக்கான பிரச்சனை என்று மட்டுமே உங்களிடம் சொல்லுவார்கள்.

இந்தியாவில் முஸ்லீம்கள் மக்கள் தொகை 20 - 25 கோடி,

தமிழர்கள் 6 - 7 கோடி மட்டுமே.

இன்று, 25 கோடி இஸ்லாமியர்களை ஒரு சட்டத்தின் மூலம் தெருவில் நிறுத்தியவர்களுக்கு,

நாளை 7 கோடி தமிழர்களை தெருவில் நிறுத்த எவ்வளவு நேரமாகும்?

இது இஸ்லாமியர்களை தமிழர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்று அவர்கள் கையில் எடுத்திருப்பது ஒரு கொலை வாள். அது என்று வேண்டுமானாலும் யாரை நோக்கி வேண்டுமானாலும் திரும்பும்.

Demonetisation ஞாபகம் இருக்கா?

லட்சத்தில் ஒருத்தன் கருப்பு பணம் வைச்சிருப்பான், அவனை பிடிக்கிறேன்னு சொல்லி ஒட்டு மொத்த நாட்டையே சீரழித்தார்கள். கடைசியில் கருப்பு பணம் கிடைக்கலை, கொஞ்ச, நஞ்ச வெள்ளை பணம் வச்சிருந்தவன் போண்டியானது தான் மிச்சம்.

நாம நள்ளிரவில் நடுத்தெருவில் நின்றோம். 4000 ரூபாய்க்கு தினமும் பேங்கும் வீடும் என அலைஞ்சோம்.

அதே தான் இப்பவும் நடக்கும்...

கோடியில் ஒருத்தன் அகதியா வந்திருப்பான், அவனை கண்டுபிடிக்கிறேன், பழிவாங்குறேன்னு சொல்லி நம்மை உயிரை வாங்குவானுங்க.

அவ்வளவு தான் நடக்கும்!

(நன்றி: திரு.அ.சிவகுமார்)Best regards,

Tuesday, 17 December 2019

சட்டம் தெரிந்து கொள்வோம்.

சட்டம் தெரிந்து கொள்வோம்.



நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும் ரசீதுகளில்
"வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது" போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும்.

ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும்.



இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில், சில தினங்களுக்கு  முன் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்து உள்ளது.

வழக்கு என்னவென்றால்,
வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு  ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். 
பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர். 
அதன் பின்பாக,  நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது.
ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி, "In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management.”

திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று கூறி விடுகின்றனர்.



திருடு போன காருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்து விடுகிறது.

அதனை தொடர்ந்து,
இன்சூரன்ஸ் நிறுவனம்,  ஹோட்டல் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நஷ்ட ஈடு கேட்டு மாநில நுகர்வோர் மன்றத்தில் வழக்கினை தொடுக்கின்றனர்.

மாநில நுகர்வோர் நீதிமன்றம் அவ்வழக்கில்,
ஹோட்டல் நிறுவனத்தினை ரூபாய் 2,80,000 நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவு இடுகிறது.

அதனை எதிர்த்து ஹோட்டல் நிறுவனர் தேசிய நுகர்வோர் மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்.

அங்கும் மேற்கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து,
உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு வருகிறது.

வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

* *எப்பொழுது ஹோட்டல் நிறுவனம் தனது வாடிக்கையாளரிடம் இருந்து காரை பெற்று கொண்டு, ரசீதை கொடுத்தார்களோ அப்பொழுதே நிறுவனத்திற்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் Bailment ஏற்பட்டு விட்டது.
(இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று)

ஆகவே,
காரை பொறுப்புடன் திருப்பி கொடுக்க வேண்டிய கடமை நிறுவனத்திற்கு வந்து விட்டது.

ரசீதில் குறிப்பிட்டபடி,  அவர்கள் தங்களுடைய கடமையில் இருந்து எவ்விதத்திலும் தப்பித்து கொள்ள முடியாது என்று கூறி, வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டினை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.Best regards,

Monday, 16 December 2019

பாவ்_பாஜி...

ஆவ் ஆவ்..
காவ் காவ்.. #பாவ்_பாஜி...💙💙
*******************************
தேவையான பொருட்கள்:
பாவ் பன் - ஒரு பெரியப் பாக்கெட்
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்.
வெங்காய விழுது - 2 டேபிள் ஸ்பூன்.
தக்காளி விழுது - 1 கப்.
தக்காளி - 2 nos.
வெங்காயம் - 2 nos.
குடைமிளகாய் - 1 no.
கேரட் - 1 no
பீன்ஸ் - 10 nos.
உருளை - 2 nos.
காலிஃபிளவர் - 1 கப்.
உரிச்ச பச்சைப்பட்டாணி - 1 கப்.
பட்டை கிராம்பு - 2 nos.
பிரிஞ்சி இலை - 1 no.
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
Pav Bhajji masala - 1 டீஸ்பூன்.
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்.
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை.
உப்பு - தேவையான அளவு.
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
கொத்தமல்லித்தழை அலங்கரிக்க.
பாஜி செய்முறை:
1. மேல குடுத்துறுக்கற காய்கறிய எல்லாம் தோல் சீவி அலசி ஒரு இன்ச் சைசுக்கு சதுரமா கட் பண்ணி, பச்சைப்பட்டாணியையும் அது கூட சேத்து மஞ்சள் தூள் உப்பு தண்ணி வுட்டு குக்கர்ல நாலு விசில் வச்சு எறக்கி வச்சிடுங்க.
2. அகலமான வாணலிய அடுப்புல வச்சு சூடானதும் ரெண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணைய போட்டு அதுல பட்டை கிராம்பு பிரிஞ்சி இலையைப்போட்டு வதக்கிட்டு இஞ்சிப்பூண்டு விழுதை போடுங்க.
3. பொன்னிறமானதும் வெங்காய விழுதை போட்டு வதக்குங்க. நல்லா வதங்கினப்பறம் தக்காளி விழுது போட்டு வதக்குங்க.
4. இப்ப அதுல காஷ்மீரி மிளகாய் தூள், தனியாத்தூள், பாவ்பாஜி தூள், சீரகத்தூளைப்போட்டு பச்சைவாசம் போக வதக்குங்க.
5. குக்கர்ல ப்ரஷர் எறங்கினப்பறம் அந்த காய்கறிக்கலவையை வாணலியில போட்டு நல்லாக் கெளறி மசிச்சு வுடுங்க.
6. நல்லாக் கொதி வந்தப்பறம் அதுல கொத்தமல்லித்தழையப் போட்டு எறக்கி வைங்க.
பாவ் செய்முறை:
பாவ் பன்னை தோசைக்கல்லுல வெண்ணெய் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுத்தா பாவ் பன் ரெடி💙💙
இப்ப பாவ் வித் பாஜி..
ஆவோஜி..
காவோஜி...💙💙Best regards,

கவனமாகக் கேளுங்கள்...

#கவனமாகக் கேளுங்கள்...

சில நாட்களுக்கு முன் நன்றாக இருந்த ஒருவர் (வயது 51) திடீர் என்று மயக்கம் போட,

கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில்,

தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து,

அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்).

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள்.

உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே,
ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள்.

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு

மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை.

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரேஷன் அட்டை,
ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள்.

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று,
நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல்

சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN - 695 011

நன்றிBest regards,

Friday, 13 December 2019

வெ. இறையன்பு அவர்கள் எழுதிய கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து.......

வெ. இறையன்பு அவர்கள் எழுதிய  கேள்வியும் நானே பதிலும் நானே!  புத்தகத்திலிருந்து.......

 சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.

 அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.

1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!

2. எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!

3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகிவிடுகிறோம்.

4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!

5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?
இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.,

6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…

7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.

” ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.

உடனே பன்றி, ‘ இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே! ‘ என்று பரிகசித்தது.

அதற்கு யானை, ‘ நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்! ” என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.

10. சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!

12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?
தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.

14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.

15. எது அழகு?
செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!

16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?
பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

17. எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

18. யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!

19. எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!

20. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்!Best regards,

Wednesday, 11 December 2019

ஆணும் பெண்ணும்

ஒவ்வொரு ஆணும்  பெண்ணும் எவ்வளவு உயர் பதவி , பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
                                                       ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.

1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.

அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்

2.  காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.
நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி
வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.
உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்

3.  அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே  இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும்   என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.

4. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.

அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.

5.  கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம்.  அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.

 மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.

வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.

ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால்  என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.

நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்  கவலைப் படாதீர்கள்.

ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்.

இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள்.
பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

█▇▆▅▄▃▂▂▃▄▅▆▇█🤢😡🤢😡🤢😡🤢😡 █▇▆▅▄▃▂▂▃▄▅▆▇█Best regards,

Tuesday, 10 December 2019

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே,  “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:

' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள். 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது.  " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?

"  முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க "Best regards,

Friday, 6 December 2019

நிதானம்

நிதானம்

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,

அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார்,

"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.
உணவை, நீரை அருகில் வையுங்கள்
ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்.

பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.
அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,
நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்," என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே
தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்கு பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம்
நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .Best regards,

Thursday, 5 December 2019

அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள் தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?

அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?

மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்?

தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி
மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?

குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள் 

இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர்
வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்

இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை.

வழக்கமான  கியர்  வண்டியில் இடது கால் க்ளட்ச்சில்  எப்போதும் கால் இருக்க வேண்டும்.
ஆனால் ஆட்டோமேட்டிக்கில்  ப்ரேக் ஆக்சிலேட்டர்  இரண்டும் வலது காலால்  இயக்கினால்  போதும்.

மேலும் விலையுயர்ந்த  கார்களில் "cruise" மோட்  என்று இருக்கும்.
நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன்  அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ்  போட்டு விடலாம்.

இப்போது வலது  காலுக்கும்  வேலை இருக்காது.

சரி விசயத்துக்கு வருவோம்.
இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான்  ஸ்டாப்பாக  வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை  அடைந்துள்ளார்.

கூடவே நன்றாக டைட்டாக  இருக்கும் படியான சாக்குத்துணியால்  ஆன பேண்ட்டை  அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும்  ஜீன்ஸ் பேண்ட்  உருவாக்கப்படும்  டெனிம்  வகை துணி - சாக்குத்துணி தானே.

நமது சீதோஸ்ன  நிலைக்கு சற்றும் பொருந்தாது  என்றாலும் நாம் ஃபேசனுக்காக  ரோசத்தை  விடும் கூட்டமன்றோ?

இந்த ஜீன்ஸ்னால  தான் உங்க விந்தணு குறையுதுடா ..குழந்தை பாக்கியம்  இல்லாம  சந்ததி  தலைக்காம..சந்தி சிரிச்சுபோகுதுடா.. பேராண்டிகளா..வேணாம்டா பேராண்டிகளா.. என்று டிவியில்  வரும் சேலம் தாத்தா  போன்று கூறினாலும் யூத்துகள்  விடவதாக  இல்லை. 

சரி... இந்த டைட் டெனிம்  பேண்ட்  போட்டுக்கொண்டு  எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு
இடது கனுக்காலில்  நன்றாக வலி  இருந்துள்ளது. 

முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத  சட்டமன்றோ.?
தம்பியும்  அந்த வலியை  புறக்கணித்து  இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார்.

அங்கும் குத்த  வைத்தபடியே  பணி செய்யும் வொய்ட்  காலர் வேலை தான்.

வலி அதிகமாகியிருக்கிறது.
இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது
தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு  வந்திருக்கிறது.
இதை Black outs என்கிறோம்.

கூடவே மூச்சிரைப்பும்  படபடப்பும்
பிறகு மூர்ச்சை  நிலைக்கு சென்று விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு  செல்ல

ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள்.
உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.
அங்கே நாடித்துடிப்பு  மிக குறைவாக இருக்கவே

இதயத்துடிப்பையும்  சுவாசத்தையும்  மீட்கும்  நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation ஐ செய்து 
உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து  இரண்டுக்கும்  கால்கட்டு  போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்..
நானும் வாரக்கடைசில  சென்னைல  இருந்து வண்டிய கெளப்பி  நான்ஸ்டாப்பா  மதுரைக்கு கார் ஓட்டிட்டு  போய்ட்ருக்கேன் என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதுறுவதும்   அவர்கள் இதயத்துடிப்பு  லபக்கு  டபுக்கு  என்று இங்கு வரை கேட்கிறது.

சொல்கிறேன் ..

ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்..இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு  விதி இருக்கு.

சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர்  பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை  வலியே  இருந்தாலும் பரவாயில்லை  எழுந்து நடந்தே ஆகணும்  என்று வற்புறுத்துவது  எதனால்?

காரணம் இருக்கிறது.
நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ  வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மொதுவாகும்  மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தில் சுழற்சியும்  குறையும்.

இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும்.

இதனால் நமது கால்களில் உள்ள ஆளத்தில்  இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரும். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடும்.

இந்த ரத்தக்கட்டி  நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva  எனும் பெரிய சிறைதனில் நுழைந்து
இதயத்தில் உள்ள வலப்பக்க  மேல்புற  அறையான Right atrium  அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு  பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின்  ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம்.

இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம்.

இதய ரத்த நாளங்களை  அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction.

ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு  ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி  புது வொயஃப்  கிட்ட சீன் போடலாம்னு பாத்தா...அதுலயும்  இப்டி பயம்புடுத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா

என்ன செய்வது?
நம் உடலின் இயற்கை அப்படி.
நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள். 

நாம் நடப்பதை நிறுத்தினால்  மரணம் வரப்போகிறது என்று அர்த்தம். 

நமது கால்களின் கணுக்கால் பகுதியில்  Soleus எனும் பிரத்யேகமான தசை  உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம்.

இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை  ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க 

ஒரு விநாடிக்கு  9.8 மீட்டர் என்ற அளவில்  இழுக்கும் பவர்ஃபுல்  புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை  பம்ப்  செய்கிறது.
இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய்  போன்று வேலை செய்கிறது.

ஒரு பக்கமாக ரத்தத்தை  மேலே ஏற்றிவிட்டு
கீழே ரத்தம் இறங்காமல்  பார்த்துகொள்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ்  தசை கூட
நீரிழிவு
உடல் பருமன்
முதுமை போன்றவைகளால்  வலுகுறைகிறது. 

கால்களுக்கு செல்ல வேண்டிய  ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான  பெல்ட்/ டைட்டான  சாக்குத்துணி  பேண்ட்  அணிந்து தடுத்தால்
என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய  வேண்டியதில்லை.

இந்த கட்டுரையின் கடைசி கட்டம்

டேக் ஹோம் அட்வைசஸ்

1. வீக்கெண்ட்  ட்ரிப்  நிச்சயம் தேவை.
லாங்க்  ட்ரைவும்  ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக  பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை.
நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர  டீக்கடைகள்  இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும்  ஒரு சாயா  அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக  செல்வது தான் நல்லது . நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில்  ஏறுவது சிறந்தது.

2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும்  டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை  அல்ல.
பருத்தி  துணிகள் சிறந்தவை.
அளவுக்கு பொருந்தாத  டைட்  ஜீன்ஸ்கள்  வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும்  லூசாக  வாய்ப்பு உண்டு 😃

3.  முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள்
பேருந்துகளில்  நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது.
இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம்  அல்லது கால்களை  தையல்  மிசின் அமுக்குவது  போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும்.

4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர  வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது  நடந்து விட்டு வண்டியில்  ஏற வேண்டும்.  என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு  நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.

5. விமானங்களில்  நெடுந்தொலைவு  பயணப்படும்  மக்கள்  வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம்  இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும்  பரவாயில்லை. ஃப்ளைட்டில்  டாய்லெட்  எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது  எழுந்து நடங்கள். 
ஏர்  ஹோஸ்டஸ்  அம்மணிகள்  என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள்  என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள். 

6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு  ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம்  போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்.
பயணத்தின்  போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே.

7. வீட்டில் நடக்கவே  இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால்  முட்டிப்பகுதியில்  காலை  அவ்வப்போது  மடக்கி நீட்டும்  பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல்  மிசினை அமுக்குவது  போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.

8. எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும்  பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும் 

எழுந்து நடக்கும் வரை தான் 
நாம் வாழ்கிறோம்

நடை நின்று  விட்டால்
ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்
அல்லது
அது நம்மை நெருங்கி விட்டது
என்று அர்த்தம்

பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கைBest regards,

Wednesday, 4 December 2019

பொற்றோர்களின் கவனத்திற்கு

பொற்றோர்களின் கவனத்திற்கு;                   ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..
சிகரெட் பிடிக்கப் பழகினான்...
பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்...
பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.
இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்...
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,...
இறுதியாக..
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..
தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.
பெற்றோரை சந்திக்க விரும்பினான்.
பெற்றோரும் வந்தனர்.
கதறினர்.....
போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,
மகன் அமைதியாகச் சொன்னான். அவர்கள் காரணமில்லை,...
நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.
வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....
அடித்து மிரட்டி.. போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... தூக்கு மேடை வரை வந்திருக்கிறது
எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..
ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.
இதை பெற்றோர் உணரவேண்டும்.
சிந்திக்க வைத்த பதிவு...
*பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.Best regards,

Tuesday, 3 December 2019

சிந்திப்போம் : செயல்படுவோம் :

சிந்திப்போம் :

         செயல்படுவோம் :

✍பகலில் எரியும் தீபம் பயனற்றது,
✍வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍ பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍ ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍ சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

⌚ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

👍ஜோக்கை எல்லாம் பகிர்வு பண்ணுற நாம் இந்த மாதிரி தகவல்களை கண்டும் காணாமல்  விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்...                          அன்புடன்.💠☘🌹🙏🏵
Best regards,

Monday, 2 December 2019

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்..!

காலையில்  எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!

நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!

சமைத்து தந்திட அம்மா
வேண்டாம்  - zomato, swiggy app இருக்கு!

பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - Uber,OLA app இருக்கு!

விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!

மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!

துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!

நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!

கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!

மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!

இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு..
App என்னும் ஆப்பு.!!

உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க !

விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.!

சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!

விழித்தெழுந்து விடை கொடு..!

செல்லின அடிமைகளாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து நல்ல வலை பின்னுவோம்..!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வருங்காலத்தை உணர்த்தும் / எச்சரிக்கும் / அறிவுறுத்தும் அருமையான பதிவு.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வர்.
💐💐💐💐💐💐💐💐💐💐

என்றும் அன்புடன் ...Best regards,

Sunday, 1 December 2019

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியத்திற்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

((தமிழாக்கம்.))

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியத்திற்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த காரணத்தை பகிர்ந்து மற்றும் ஆதரவு தாருங்கள்....(இது உங்கள் கடமையும் கூட.)

தற்பொழுது தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்கள் ஆகிய ஆசிரியா்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்தியாவின் அன்பும் மரியாதைக்குரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.

மூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.

2018 முன்னேற்றம் சட்டம் (2018 Improvement Act).

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.
(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)

இதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு  நாடாளமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).

இது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம் கைகொர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.

மத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக
தங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து  எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த  விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

எம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்
அவர்களின் சிகிச்சைகளுக்கும் ஆரோக்கிய கோளாறூகளுக்கு எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரன குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி மசோதா போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து
எற்றி கொண்டே வருகிறாா்கள்)

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவுப் உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும்  கடந்தகால அல்லது தற்கால கிரிமீனல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொறுந்துமாறு அமைக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.

இலவச இரயில் மற்றும் விமானப் போன்ற டிக்கட் சலூகைகளை உடனே நிறுத்த வேண்டும்.

சாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தொளில் சுமக்க வேண்டும்?

*ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இருபது பேருக்கு ஸேர் செய்தால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.இந்த பிரச்சினையை எழுப்ப சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், ஸேர்  செய்யுங்க.Best regards,

Saturday, 30 November 2019

டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?

டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?

FastTag என்றால் என்ன? அதனை எங்கே, எப்படி பெறுவது? எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான பதில் இதோ...


 
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

இது நாம் அனைவரும் அறிந்தது தான். சமயங்களில் வாகன நெருக்கடி காரணமாக சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவசரமான சூழ்நிலைகளில் இப்படி காத்திருப்பது பலருக்கு அவஸ்தையான ஒன்று தான்.

Fast tag
ஆனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் 'Fast Tag' 'ஃபாஸ்ட் டேக்' என்ற ஒரு தனி லைன் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் நிற்காமல் நேராகச் சென்று விடும். அப்படிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது தவறு. அவை ’ஃபாஸ்ட் டேக்’ முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டி விட்டுச் செல்கின்றன.

இப்படி அவை செல்வதன் மூலம் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே வாகன நெருக்கடியும் அங்கு ஏற்படாது.

இந்த வசதியைத் தான், வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ’ஃபாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் இதனை உறுதி செய்துள்ளார்.
ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன?
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டுவது தான் Fast Tag. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு சோதனை முறையில் சில சுங்கச்சாவடிகளில் ஒரு அல்லது இரண்டு சுங்க வரிசைகளில் ஃபாஸ்ட் டேக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.

முதலில் இது பரிசோதனை முறையில் சில டோல் பிளாசாக்களில் மட்டும் நடைமுறைக்கு வந்தது. அங்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் இம்முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு மாதிரி ஃபாஸ்ட் டேக் என்பதும் ஒரு மின்னணு அட்டை தான். இதில் வாகன ஓட்டிகள் முன்னதாகவே ஒரு தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். சுங்கச்சாவடிகளை சம்பந்தப்பட்ட வாகனம் கடக்கும் போது, அந்த ஃபாஸ்ட் டேக் அட்டையில் இருந்து தேவையான பணத்தை சுங்கச்சாவடி எடுத்துக் கொள்ளும்.

நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.



டோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்ட்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்ட் டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

ஃபாஸ்ட்டேக் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள 5 நுழைவு வாயில்களில் நான்கு தடங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றொரு வாயிலை ஃபாஸ்ட் டேக் வசதியில்லாத வாகனங்கள் பயன்படுத்தலாம். அங்கு சுங்கச்சாவடி ஊழியர் அமர்ந்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பார்.
ஃபாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஃபாஸ்ட் டேக் கார்டை பெறுவது எப்படி?
ஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம்.

தேவையான ஆவணங்கள்

1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.

2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும்.

4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.

ஃபாஸ்ட் டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கையில் சில்லறையாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.

2. சுங்கச்சாவடிகளில் வாகனத்தை வரிசையில் நிறுத்தத் தேவையில்லை.

3. ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியும்.

4. சுங்கச்சாவடிகளை கடந்த பின்பு கழிக்கப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பப்படுவதால், பேலன்ஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

5. ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.

ரீசார்ஜ் செய்யும் முறை

ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்வது சுலபம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொகைக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் என பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். சுங்கச்சாவடிகளிலும் நேரடியாக ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

பேலன்ஸ் செக்

ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி வெப்சைட் மூலம் தங்களது கார்டில் உள்ள பேலன்ஸை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இனி Fast Tag-ன் அவசியம் இருக்காது எனும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட கார்டை பிளாக் செய்யவும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டாலும், அந்த கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு வாங்கிக் கொள்ளலாம். அப்போது பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Last date for fixing Fasttag extended upto 15th December 2019
Best regards,

Wednesday, 27 November 2019

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத  கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்புBest regards,

Monday, 25 November 2019

கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை

கவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை

சென்னை: இன்ஜினியரிங் படிப்பில், கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும், உதவித்தொகை வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் அனுமதியுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது.

அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள்; அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் கல்லுாரிகளில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், 50 சதவீத இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்லுாரிகள், 35 சதவீத இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புகின்றன.

கவுன்சிலிங் வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அதாவது, கவுன்சிலிங் வழியே சேர்ந்தவர்களிடம் மட்டும், அரசு நிர்ணயித்த அளவின்படியே, கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.கவுன்சிலிங்கில்சேர்ந்த மாணவர்களிடம், எந்த கல்லுாரியும் நன்கொடை வசூலிக்க முடியாது;அவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, தேர்வை எழுத விடாமல் தடுக்க முடியாது. அதேபோல, கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்குத்தான், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, 2018 - 19ல் அறிவிக்கப் பட்டது.


இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா, அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய அறிவிப்பு:
தமிழக அரசின் கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியும். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைவாக உள்ளனர்.

எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அதேநேரம், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியாது. எனவே, அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.Best regards,

Sunday, 24 November 2019

For 10th, 11th & 12th Students, Teachers and Parents also....

Government G.O.ORDER ( EDUCATION)
For 10th, 11th & 12th
Students, Teachers and Parents also....

1. இனிவரும்  தேர்வுகளில் BLUE PEN அல்லது BLACK PEN ஏதேனும் ஒன்றில் மட்டுமே
தேர்வு எழுத வேண்டும்.இரண்டிலும் கலந்து எழுதக்கூடாது.

2. இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில் தயார் படுத்த வேண்டும் என்று கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

3. மேலும் இந்த ஆண்டிலிருந்து BLUE PRINT முறை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

4. இனிமேல் BLUE PRINT முறைப்படி பாடம் நடத்தாமல் புத்தகத்தில் உள்ள அனைத்தையும்
 நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. இனிமேல் தேர்வுகளில் வினாக்கள் 20% புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும்.

6. மேலும் Competitive Examல் கேட்பதை போல வினாக்கள் REASONING, UNDERSTANDING முறையில் கேட்கப்படும்.

7. மேலும் CREATIVE மற்றும் HIGHER ORDER THINKING என்னும் முறைப்படி வினாக்கள் கேட்கப்படும்.

8. வினாத்தாள் BLUE PRINT முறையில் இல்லாமல் மாணவர்கள் பாடத்தை முழுமையாக படித்து புரிந்து கொண்டு எழுதும் வகையில் Creative & Higher Order Thinking என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

9. எனவே ஆசிரியர்கள் இனிமேல் இப்பொழுதிலிருந்தே மாணவர்களை இம்முறையில்( Creative & Higher Order Thinking) தேர்வுக்கு தயார் படுத்துமாறும் அதற்கேற்ப ஆசிரியர்களை பாடம் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10. இம்முறையை மாணவர்களை இப்பொழுதிலிருந்தே (Term Test& Revision Test& Model Test) பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில் பின்பற்றச் செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.Best regards,

Saturday, 23 November 2019

வீட்ல சும்மா தான இருக்க"

வீட்ல சும்மா தான இருக்க"

எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..

இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.

இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

"அம்மா பசிக்குது மா..

எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா மா", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன.

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூளமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பண்ணி இருக்கு.

பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை, போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன், நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?

வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

இந்த வார்த்தையை சொல்வது தவறு.

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமும் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள்.

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

இது தான் மனைவி  ! ! ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ மனைவி ஒரு வரம் ! !
Best regards,

Friday, 22 November 2019

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை!

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை!

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை.

என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணிகளை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான்.

மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது கூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்து கொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறது.

அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லை

மனதில்தான்  மகிழ்ச்சி இருக்கிறதுBest regards,

Monday, 18 November 2019

அந்த கால ஒழுக்க பாடம்

அந்த கால ஒழுக்க பாடம்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்
இதை நம் குழந்தைகளுக்கு
சொல்லி கொடுக்கலாமேBest regards,

Sunday, 17 November 2019

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை

🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ

🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்

🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

இதை
பகிர்ந்தால் நம் மண் மீண்டும் செழிக்கும்.Best regards,

Saturday, 16 November 2019

கணவன் மனைவி இருவரும் ...

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.Best regards,