Sunday, 18 August 2019

அப்பாவின் அன்பான பொய்கள்.

அப்பாவின் அன்பான பொய்கள்.
(படித்ததில் பிடித்தது)

மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..

நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல் ,
அழுவதாக
பொய் சொல்லியும்..

இரவுகளில்
பேய்க்கனவு
கண்டு..
பாதியில்
எழுந்து
அழும்போது,,
தோள்களில்
இறுக்கமாய்
அணைத்துக்கொண்டு
பேய்
ஓடிப்போனதாக
பொய்சொல்லியும்..

முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..

குலதெய்வம்
கோவிலில்..
காது
குத்திக்கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு
"டூ "
விட்டுவிட்டதாக
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி
வேண்டாமென
அழும்போது..
மாத்திரை
மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாக
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம்
திட்டு
வாங்கிக்கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்கு
படிக்க
தெரியவில்லை,,
என
பொய் சொல்லியும்..

திருமணம்
முடிந்து,,,
புகுந்தவீடு
செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாக
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது
பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை
இருமிவிட்டு..
துளியளவு
தைலத்தில்
எல்லாமே
சரியாகிப்போனதாக,
எனது
மகளிடம்,
மீண்டும்
ஏமாற்ற துவங்குகிறார்...!

Best regards,