Thursday 19 September 2019

இன்றும் தேவையா பெரியார்?

இன்றும் தேவையா பெரியார்?

✍🏻 மிகச் சாதாரணமாக இன்று சிலர் கேட்கும் கேள்வி இது.

✍🏻 இதற்கு காரணம் பெரியார் காலம் முழுமைக்கும் கடவுளை மட்டுமே எதிர்த்துக் கொண்டிருந்தார் என்ற புரிதல்தான்.

✍🏻 பெரியாரை படித்தால் உண்மை புரியும். அவரின் வாழ்வியல் நோக்கமாக மனிதநேயமே இருந்திருக்கிறது.  இதையே சமூக நீதி என்றார் அவர்.

✍🏻 சமூக நீதிக்கு எதிராக எது நின்றாலும் அதை எதிர்த்தார். அது கடவுளாகவே இருந்தாலும்.


✍🏻 அவர் எப்போதும் எக்கருத்தையும் எவர் மீதும் திணித்ததும் இல்லை. வற்புறுத்தியதும் இல்லை.

✍🏻 அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். சிந்திக்க, அறிவை விரிவு செய்ய வேண்டினார்.

✍🏻 பெரியார் மீது பல குற்றச்சாட்டுகள் இன்று வைக்கப்படுகிறது. அதில் முக்கியமானது கடவுள் எதிர்ப்பு.

✍🏻 சாதியத்திற்கு ஆதரவாக  சமூக நீதிக்கு எதிராக கடவுள் நிறுத்தப்பட்டபோது அவர் கடவுளையும் எதிர்த்தார். பெரியார் சமூக நீதிக்காக போரிட்டபோது கடவுளை கேடயமாக்கினர் தலையில் பிறந்த தருதலைகள். தருதலைகளை தாக்கினார் பெரியார். தற்காத்துக்கொள்ள கடவுள் கேடயமாக்கப்பட்டால் கேடயம் தாக்கப்படதானே செய்யும்? உடனே ஐய்யய்யோ பெரியார் கடவுளை தாக்கிவிட்டார் என அலறுவதேன்?

✍🏻 அந்த அலறலுக்கான அர்த்தம் அவாள் மட்டுமே அறிவர். பெரியாருக்கு எதிராக அவாள் போராட வேண்டாம். இவாளை தூண்டிவிட்டாலே போதும் என்பது அவாளுக்கு தெரியும். கடவுளை காப்பாற்ற நம்  கைக்கூலிகளும் கைகலப்பில் இறங்கிவிடுவதுண்டு.

✍🏻 இம்மாதிரியான கொம்பு சீவல்கள் இன்றுவரை தொடர்கிறது. நாமும் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறோம். பெரியார் ஏன் கடவுளை மறுத்தார்? இதற்கு விடை தேட முயன்றாலே முழுவதும் புரிந்துவிடும். தமிழக கோயில்களில் அவருக்கு முழு கும்ப மரியாதை தரப்பட்டது. ஆனால் அதே மரியாதை கடைக்கோடி சூத்திரனுக்கும் தரப்பட வேண்டும் என விழைந்தார். இது மாபெரும் மகத்தான  எண்ணமில்லை யா?

✍🏻 பெரியார் இல்லாத இன்றைய நிலையில் அவர் மிக தவறாகவே புரிந்து கொள்ளபட்டுள்ளார்.

✍🏻அவர் கடவுளை எதிர்த்தார்.
இல்லை கடவுளை மறுத்தார்.

அவர் பைந்தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றார்.
இல்லை பஜனைத் தமிழைத் தான் சொன்னார்.

ஆங்கிலேயனை ஆதரித்தார்.
இல்லை ஆங்கிலத்தை ஆதரித்தார்.

தேச விடுதலையை விமர்சித்தார்.
இல்லை பாமரனுக்கும் பஞ்சமனுக்கும் கிட்டாத விடுதலையை விமர்சித்தார்.

✍🏻 உயிர் மூச்சு உள்ளவரை தன் குடும்பத்திற்காக உழைத்த ஒரு தகப்பனை வாரிசுகள் மறந்ததைப் போல் வாழ்நாளெல்லாம் தன் சொத்துக்களை இழந்து இந்த மானிடத்திற்காக உழைத்த அந்த உத்தமரை மறந்துவிட்டோம‌்.

✍🏻 கடவுளின் பெயரால், தேசியத்தின் பெயரால் இனங்களை ஒழித்துவிட துடிக்கும் ஆதிக்க சக்திகளை முறியடிக்க, போலித்தனமான கடவுள் கருத்தாக்கங்களில் இருந்து அப்பாவி ஆத்திகனை காத்திட அவர் இன்றும் தேவையாய் உள்ளார்.

✍🏻 இன்றைய அவரின் பிறந்த நாளில் அவரை புரிந்து கொள்ள முயல்வோம்.

Best regards,