Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Sunday, 20 October 2019

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !

யம தீபம்
-------------------

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

தொழில் முன்னேறும்.

திருமணத் தடைகள் விலகும்,

சொத்துகள் சேரும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.

3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
--- தீபாவளிக்கு பட்டாசு வெடிங்க.....

 உங்களாலே எவ்வளவு முடியுமோ. அவ்வளவு வெடிங்க.

நம்ம பெரியவங்க சொன்னதை கேளுங்க.

தீபாவளி சமயத்திலே தட்பவெப்பத்லே ஏற்படும் மாற்றங்களாலே வித விதமான பாக்டீரியாக்களும். வைரஸ் களும் உற்பத்தியாகி மக்களை தாக்கி உயிர் பலி வாங்கும் அதுக்குதான் பட்டாசு வெடிக்க சொன்னாங்க .

நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

பட்டாசுலே இருக்கிற சல்பர் மற்றுமுள்ள ரசாயனங்கள் அந்த பாக்டீரியாக்களை அடியோடு அழிக்கும்.

 மழைகாலத்தின் சிறந்த கிருமிநாசினி.

பட்டாசு அதிகமா வெடிங்க டெங்குவை விரட்டுங்க.

Best regards,

Monday, 5 November 2018

10 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..??

10 வருடங்களுக்கு முன்பு 🎉🎇  எப்படி இருந்தது..??🤔🤔🤔
.
.
👉 ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔தீபாவளி
.
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பணக்கார வீட்டுக் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை அருகில் நின்று வாய்பிளக்க வேடிக்கை பார்த்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பொறுக்கி வந்த 💣 அணுகுண்டு 💣 ஆட்டோ பாம்'களை
பந்தாவாக வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி வாங்கி வரும் 👴 அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம்
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கியது..!!🤔
.
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴 அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇 🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா ஒளித்து வைத்த 🍝 குளோப் ஜாமை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉  ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎇 ஒரு பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 சகதிக்குள் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் 🎇 வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை (அடிமை) வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
.
👉 இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦 சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
.
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய தீபாவளி) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!.🤔
.
💏 நினைச்சலே புல் அறிகுத்துல😅 Advance happy Diwali💥


Best regards,

Tuesday, 30 October 2018

எங்கே அந்த தீபாவளி ?

எங்கே அந்த தீபாவளி   ?

பத்து நாட்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு

விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து

ஒவ்வொரு கடையாய் நின்று பட்டாசுகளை  வேடிக்கை பார்த்ததெல்லாம் ஒரு காலம்...

புதுத்துணி தைக்க கொடுத்து,  தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி பாழாப்போன surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள

தாத்தாபாட்டியோடதான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு  பஸ்ஸில் பயணம் செய்து

அங்கே உள்ள பழய,  புதிய  நண்பர்களுடன் கூட ஜாலியாகப்பழகி,
அரட்டையடித்து ,

 சொந்த பந்தங்களின் பாச மழையில் நனைந்து..

முதல்நாள் மாலையே அப்பா கையைபிடித்து மத்தாப்பு புஸ்வாணங்கள்,  தரைச்சக்கரங்கள் விட்டு,  கிட்டேவரும்போது பயந்து  தாண்டி குதித்து
பிறர் கேலி செய்ய

ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி,  சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த

காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணை தேய்த்த

அந்த இருட்டிலே கொட்டாங்குச்சி சிரட்டையால் வெந்நீர் அடுப்பை நம் தாத்தா ஊதிக்கொண்டிருந்த...

நாம் முரண்டுபிடிக்க எண்ணைபோக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...

ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை  பெரியவர்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....

கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி இனாம் என்று 1 ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....

கங்காஸ்நானம் ஆச்சா என்று கையில் உக்காரை, மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும்  கையில் இழுத்துக்கொண்டோடிய....

அவர்கள் தீபாவளி  காசு என்று ஆசையாக நாலணா தந்த...

காலை  6 மணிக்கெல்லாம் தீபாவளிக் இட்லியும்  வடையும் சாப்பிட்ட..

சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது,  சனியனே காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று தாத்தா திட்டிய...

ரெண்டு சீனி வெடியை சேர்த்து,  கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக்கொண்டாடிய...

நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த...

அக்கம் பக்கத்து வீடு, அடுத்த தெருவில் உள்ள சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு  அண்ணன் தம்பி, அக்கா தங்கைகளுடன் தீபாவளி சுவீட் காரம் கொடுத்து வந்த...

ராத்திரியில் சீக்கிரமே ஊர் களைப்பால் ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி  நாம் அறியாமல் விடைபெற்ற அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பிவையுங்களேன்....!!!               

Best regards,