Sunday, 3 November 2019

தீபாவளி முறுக்கு

தீபாவளி முறுக்கு தீந்து போச்சு...
ஆகவே Maharashtra Chakli சன்டே ஸபெஷல்..
சலிச்சுக்காம புழிஞ்ச வூட்டுக்காருக்கு நன்னி.. சும்மா வருமா சுகுமாரி🤣🤣
மொத தடவ ட்ரை பண்ணேன்.. பாம்பேல வாங்கற மாதிரியே வந்துடிச்சி..

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - நாலு ஆழாக்கு
கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு
பாசிப்பருப்பு - ஒரு ஆழாக்கு
சீரகம் - 50 grams
தனியா - 100 grams
ஓமம் - ரெண்டு tablespoon
மிளகு - ரெண்டு tablespoon
காஷ்மீரி மிளகாய்தூள்- ஒரு teaspoon
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு.
கடலை எண்ணெய் - 1/2 litre.
செய்முறை:
மாவரைக்கற பதம்:
1. அரிசியை களைஞ்சி வடிகட்டி ஒரு வேட்டில பரப்பி fanல காய வைங்க.
2. கடலைப்பருப்ப அகலமான வாணலில லேசா வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க
3. பாசிப்பருப்பும் அதே மாதிரி வறுத்து ஆற வைங்க
4. கொஞ்ச ஈரமா இருக்கற அரிசியையும் இதே மாதிரி இளஞ்சூட்டுல வறுத்து ஆறவைங்க
5. சீரகம் மிளகு தனியாவை தனித்தனியா வாசனை வர்ற வரை வறுத்து நல்லா ஆற வச்சுக்கோங்க.
6. இப்ப எல்லாத்தையும் மிஷின்ல கொடுத்து நைசா அரைச்சிடுங்க.

சக்லி செய்முறை:

1. அகலமா ஒரு பாத்திரம் அடுப்புல வச்சு ரெண்டு மாவுக்கு ஒரு தண்ணீர் 2:1 ratioல தண்ணீர் ஊத்தி கொதிக்க வைங்க. கொதிக்கற தண்ணில உப்பு, மஞ்சள்தூள், ஓமம், மிளகாத்தூள், பெருங்காயம், நாலு teaspoon எண்ணெய் ஊத்தி கெளறுங்க. கொதிச்சதும் எடுத்து வச்சிருக்கற மாவை கெளறிட்டு அடுப்ப ஒடனே அணைச்சிடுங்க. பத்து நிமிஷம் ஆற வையுங்க.
2. இப்ப முறுக்கு நாழியில இந்த கெளறின மாவை ஒரு கண் முள்ளு முறுக்கு அச்சு போட்டு பிழிஞ்சி வட்டமா சுருட்டி வச்சுக்கோங்க.
3. எல்லா மாவும் இதே மாதிரி முறுக்கு பிழிஞ்சி செஞ்சு வச்சுக்கோங்க.
4. அடுப்புல வாணலில எண்ணெயக் காய வச்சு ஒவ்வொரு chakli யா எடுத்துப்போட்டு சிறு தீயில பொறிச்சு பொன்னிறமானதும் எடுத்து வச்சிடுங்க.
பாம்பே famous Chakli ரெடி.. இத மைதாவுலயும் பண்ணலாம் சிலபேர் ஜவ்வரிசி சேத்தும் பண்ணுவாங்க.

Best regards,