Tuesday, 12 November 2019

அன்பு பரவட்டும்

அன்பு பரவட்டும் ❤

💓ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.

💓பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

💓இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

💓உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார்,

💓உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

💓இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

💓ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.

💓உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,

💓ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.

💓நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

💓தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,
அந்த பாட்டியிடம்,

💓அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

💓உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு,
அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,கொடுத்து சாப்பிட வைக்கிறான்.

💓இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்,

💓நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,

💓இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தானேங்க
ஜீவன் இன்னும் இருக்கு.....



🙏அன்பை விதையுங்கள்...அதையே அறுவடை செய்வீர்கள்..Best regards,