Sunday, 1 July 2012

‘சத்யானந்தா’

தடை விதிக்கப்பட்ட ‘சத்யானந்தா’ படத்தின் தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல்!





நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா பற்றிய சர்ச்சையை மையமாக வைத்து ‘சத்யானந்தா’ என்ற பெயரில் கன்னடத்தில் படம் தயாராகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.
இதில் சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறியது. ஆசிரமங்கள் துவங்கியது. ரஞ்சிதா விவகாரம் போன்றவை இப்படத்தின் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு எதிராக நித்யானந்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை கோர்ட்டு விசாரித்து ‘சத்யானந்தா’ படத்துக்கு தடை விதித்தது. தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ‘சத்யானந்தா’ படத்துக்கு போட்டியாக நித்யானந்தாவை கடவுளாக சித்தரித்து அவருக்கு ஆதரவாக புதுப்படம் தயாரிக்கும் வேலைகளை கன்னட இயக்குனர் ஒருவர் துவங்கியுள்ளார். விரைவில் இப்படத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.