Friday, 15 February 2013

அருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை

அருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடைகட்டிய  திருமாவளவன் கும்பல்


--------------------------------------------------------------------------------
கீழ்சாதி பையனைக் காதலித்தால்
பறையர்கள் தங்கள் பெண்ணைக்
கெளரவக் கொலை செய்வார்கள்
--------------------------------------------------------------------------------
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரைச் சேர்ந்த கோகிலா என்கிற பறையர் சமூகப் பெண்ணும்; கார்த்திகேயன் என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனும் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே காதலித்திருக்கிறார்கள்.
இருவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால் கடலூரில் ரகசியமாக 1.12.2010 அன்று அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
பெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை அவரவர் வீட்டிலிருப்பது என முடிவெடுத்து அவரவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோகிலாவின் பெற்றோருக்கு இவர்கள் காதல் விவகாரம் தெரிந்துவிடவே தங்கள் பறையர் சாதியிலேயே மாப்பிள்ளைப் பார்த்திருக்கினறனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோகிலாவை - ஒரு அறையில் அடைத்துவைத்து தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளனர். இதனைத் தன் கணவர் கார்த்திகேயனுக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார். 9.11.2012 இரவு கார்த்திகேயன் கோகிலாவுக்கு போன் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்திருக்கிறது. காலையில் கோகிலா இறந்துவிட்டதாகக் கூறி - கோகிலா உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.

இதனைக் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். கோகிலா வீட்டார் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என கார்த்திகேயனை மிரட்டி வருகிறார்களாம்.
இது குறித்து கோகிலா வேலை செய்த மருந்து கடையில் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது ""கோகிலா காதலித்தது உண்மைதான். கார்த்திகேயனுடன் திருமணம் நடந்ததாகவும் அவள் சொல்லி இருக்கிறாள். தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவள் கோழை இல்லை'' என்று கோகிலாவுடன் பணியாற்றியவர்கள் சோகத்துடன் சொன்னதாக ஜூ.வி.5.12.2012 செய்தி வெளியிட்டுள்ளது.
கீழ்சாதி பையனைக் காதலித்தால் பறையர்கள் தாம் பெற்ற பெண்களைக் கெளரவக் கொலையும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பறையர் வீட்டுப் பெண்
அருந்ததியர் இளைஞனோடு ஓடி விட்டால்-
அந்த அருந்ததியர் வீட்டு பெண்களை
நிர்வாணப்படுத்தி
கும்பல் கற்பழிப்பு செய்து
கொலையும் செய்வார்கள் பறையர்கள்

விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் சரகத்திற்கு உட்பட்ட கரடி சித்தூரில் -
அருந்ததியர் இளைஞன் வீரனும்
பறையர் சமூகப்பெண் பரிமளாவும் காதலர்கள். இதற்கு பறையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வீரனும் பரிமளாவும் 6.8.2003 அன்று ஊரை விட்டு ஓடி விடுகின்றனர்.
இது பறையர்களுக்கு பெரிய மானப்பிரச்சனை ஆகி விடுகிறது.
இன்னும் மூன்று நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்காவிட்டால் அருந்ததியரின் 3 வீடுகளையும் ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களையும் ஊரை விட்டே விரட்டி விடுவோம் என பறையர்கள் கும்பலாக வந்து அருந்ததியர்களை மிரட்டிவிட்டு செல்கிறார்கள் 9.8.2003 அன்று.

அருந்ததியர் 3 குடும்பம் - பறையர்கள் சுமார் 500குடும்பம் பிற்பட்ட வகுப்பினர் சுமார் 1000 குடும்பம்.
இந்த மிரட்டலுக்குப் பயந்து வீரனின் அப்பா; சித்தப்பா; மற்றும் ஒருவரும் வீரனையும் பரிமளாவையும் தேடி சென்னைப் பக்கம் போய்விட்டனர்.
ஆகஸ்டு 12 ஆம் தேதி இரவு வீச்சரிவாளோடு குடித்துவிட்டு வந்த பறையர் கும்பல் வீட்டு முன் நின்று ஆபாசமாகத் திட்டிவிட்டு; அருகிலிருந்த வண்டி நுகத்தடியை எடுத்து கதவை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் அனைவரையும் தாக்கிவிட்டு
மாயவன் மகள் நதியா (17 வயது) என்வரை இவதாண்டா அழகா இருக்கா முதலில் அவளைப் புடிங்கடா என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணை கீழே தள்ளி பாலியல் உறுப்புகளைக் கடித்து; கசக்கி நாசப்படுத்தியுள்ளனர். நதியா சில நிமிடங்களில் மயக்கமுற்றிருக்கிறார்.
வீரனின் தங்கை கோவிந்தம்மாளை (வயது 16) நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். மார்பைக் கடித்துள்ளனர்.

வீரனின் தம்பி மனைவி கலா (19 வயது) கர்ப்பிணிப் பெண். அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்து வாழ்பவர் அருந்ததியப் பெண் வெள்ளையம்மாள் (வயது 28) இவரது கணவர் பாலமுருகனைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு; அந்தப் பெண்ணின் பெற்றோர் கண்முன்னாலேயே (சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் வெள்ளையம்மாள்) நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் தாக்கி இருக்கிறார்கள். மயககம் போட்டு விழுந்திருக்கிறார்.

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சில நாட்களிலேயே இந்த தாக்குதல் நடந்ததால் படுத்த படுக்கையாகி - அடிக்கடி வயிற்று வலியால் துடித்து கண்பார்வையை இழந்து ஒரு மாதத்தில் 14.9.2003 அன்று மரணமடைந்து விட்டார்.

இந்தக் கற்பழிப்பு; பெண்வதை பெண் கொலை ஆகியவற்றை செய்த பறையர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் நதியாவை விழுப்புரம் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள். நதியா மனச்சிதைவுக்க உள்ளாகிப் போனதால் பாண்டிச்சேரி மருத்துவமனையில் இதற்காக சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார்.

""தலித் மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் செய்யும் இதர ஆதிக்க சாதியினர் எவ்வாறு நடந்து கொள்வார்களோ; அதைவிட அருந்ததியருக்கு வன்கொடுமை செய்பவர்களாக பறையர்கள் இருக்கிறார்கள்''
என்கிறது உண்மையறியும் குழுவின் அறிக்கை.

ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் தலைமையில்; எழில் இளங்கோவன்; பேரா.கல்யாணி; பேரா.அ.மார்க்ஸ்; தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழு வெளியிட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பவையே மேற்கண்டவை.

நிலமை இவ்வாறு இருக்கையில் -
வன்னியர்கள் சாதிவெறியர்கள்; சாதிவெறி காரணமாக தன் பெண் ஒரு பறையரைக் காதலித்தால் என்பதற்காக பெற்றவர்களே தன் மகளை கெளரவக் கொலை செய்பவர்கள் வன்னியர்கள் அவர்கள் கட்சியும் சாதி வெறிக் கட்சி. பறையர்கள் உண்மையான காதலர்கள்; என்றொரு கதையை "பெத்தவன்' என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கிறார் இமையம் என்ற பறையர் வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஒரு வன்னியக் கவிஞர் - எரியும் ஒரு பிரச்சçயை எழுதும் துணிச்சல் மிக்க வீரன் இமையம் என வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.

இமையம் நியாயப் புத்தி உள்ளவராக இருந்திருந்தால் - கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததியருக்கு செய்த கொடுமைகளை வைத்து "பெத்தவன்' கதையை எழுதி இருக்க வேண்டும்.

எரியும் பிரச்சனையை எழுதிய துணிச்சலான வீரன் என இமையத்தை புகழ்பாடிய அந்தக் கவிஞர் - தனக்கு துணிச்சல் இருந்திருந்தால் கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததிய மக்களைப் படுத்திய பாடு குறித்து ஒரு கதை எழுதி வெளியிட்டு இமையத்தை அழைத்து பேச வைக்கட்டும். பாராட்டுவாரா இமையம் இந்தக் கவிஞரை?
இந்த யதார்த்தமான நிலையை எண்ணிப்பார்த்து - தன்மான உணர்ச்சி பெற வேண்டும் நம் கவிஞர்கள்.

அதில்லாமல் திருமாவளவனும் இமையமும் சவாரி செய்ய நம் கவிஞர்கள் கழுதைகளாகிக் காத்து நிற்பது தன்மானத்திற்கு அடையாளமல்ல.
-
தருமபுரி கலவரம் குறித்து - கண்மணிகள் காதலால் வெண்மணிகள் தொடரலாமா என வரட்டு வசனம் எழுதிய கருணாநிதி -
கரடிசித்தூர் பறையர்கள் கொடுமை குறித்து வாய் திறவாதது ஏன்?
தருமபுரி கலவரம் குறித்து - புலிவேசம் போடும் நல்லகண்ணுவும்; தா.பாண்டியனும்; ராமகிருஷ்ணனும் -
பறையர்கள் நடத்திய கரடிசித்தூர் அராஜகங்களை காண முடியாத குருட்டுப் பூனைகளாய் இருட்டில் முடங்கிக் கிடந்தது ஏன்?
தருமபுரி கலவரம் குறித்து -
காதலை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என முச்சந்தியில் நின்று போலிக் கூச்சலிடும் திருமாவளவன்-
கரடிசித்தூரிலும்; பள்ளிநேயனூரிலும் தன் கட்சிக்காரர்கள் காதலுக்கு பாடைக்கட்டிக் கொண்டிருப்பதை முதலில் கண்டிக்கட்டும்.
பறையர்கள் தங்கள் பெண்களை அருந்ததியருக்கே கொடுக்க வேண்டும். பறையர்கள் தங்கள் மகன்களுக்கு அருந்ததியப் பெண்களையே கட்ட வேண்டும் என கட்டளையிட்டு தன் புரட்சியை முதலில்அங்கிருந்து தொடங்கட்டும் திருமாவளவன்.

தன் கீழ் இருப்பவர்களை மிதித்துக்கொண்டு; தன் மேலிருப்பவர்களை மிரட்டுவது தலைவனாவதற்கான வழியல்ல.