நீதிபதிகள் நீதிமன்றத்துக்குள்
வரும்போதும் போகும்போதும் அவர்களுக்கு
முன், வெள்ளைச் சீருடை
அணிந்த ஊழியர்கள், செங்கோலை ஏந்தி யபடி 'உஷ்’
என்று சப்தம்
எழுப்பிக்கொண்டு செல் வார்கள். இது, நீதிமன்ற நடைமுறை.
நீதிபதி சந்துரு பொறுப்பேற்றதும்
செய்த முதல்வேலை, 'எனக்கு செங்கோல்
ஏந்திய ஊழியர்கள் தேவைஇல்லை’
என்று எழுதிக் கொடுத்ததுதான். இதுபற்றிய கேள்வி எழுந்தபோது,
'இந்த நடைமுறை நீதிபதிகளின் டாம்பீகத்துக்காக மனித ஆற்றலை வீணடிக்கும் செயல். செங்கோல் ஏந்திச்
செல்லும் வேலையை மட்டும் இந்த டவாலிகளுக்குக்
கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மக்கள்
பணத்தில் ஊதியம் கொடுக்கப்படுகிறது.
இதனால், மக்களுடைய வரிப்
பணமும் அந்த டவாலிகளின் மனித ஆற்றலும்
வீணடிக்கப்படுகிறது’ என்று விளக்கம்
அளித்தார்.
தனக்கும் தனது வீட்டுக்கும் அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பையும் ஏற்க மறுத்த நீதிபதி சந்துரு, 'நீங்கள் இதுபோல் 60 நீதிபதிகளின் வீடுகளுக்கு 300 காவலர்களை நியமித்துள்ளீர்கள். இவர்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. இந்த 300 காவலர்களையும் நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த தென்சென்னையின் பாதுகாப்பையே சரிசெய்து விடலாம்’ என்று காவல் துறைக்கு ஆலோசனையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் நீதிபதிகளுக்குப் பிரிவு உபசார விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை அனைவரும் வாழ்த்திய பிறகு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து நடைபெறும். இந்த விழாவும் தனக்கு வேண்டாம் என்று மறுத்து, உயர் நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதிக்கு நீதிபதி சந்துரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், 'என்னுடைய கடமையைத்தான் நான் செய்தேன். அதற்கு விழா தேவைஇல்லை. மக்களுடைய பணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தில் விரயம் ஆக்குவது தவறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-Junior Vikatan