Saturday, 28 September 2013

பெண்களை குறிவைக்கும் சிறுத்தை கும்பல்!

பெண்களை குறிவைக்கும் சிறுத்தை கும்பல்!
#

"பல சமூகத்தையும் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காதல் டார்ச்சர் கொடுத்து, சாதிக் கலவரத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கவேண்டிய காவல்துறையினர், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'’ -என சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதி பள்ளி நிர்வாகிகள் பதட்டக்குரல் எழுப்புகிறார்கள். என்ன நடந்தது?

ஆத்தூரில் பாரதியார், சரஸ்வதி, க்ரீன்பார்க், மாருதி, தாகூர், பாவேந்தர், விவேகானந்தா என நிறைய மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. இதில் படிக்கும் மாணவிகளைக் குறிவைத்துக் களமிறங்கிய ஒரு கும்பல்தான், அவர்களுக்கு காதல் டார்ச்சர் கொடுக்கிறதாம்.

தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாத மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் ""எங்கள் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வேன்களில் அவங்கவங்க வீடுகளில் இருந்து, பள்ளிக்கு வந்து போவது வழக்கம். அப்படி போய்வரும் போது கடந்த 20 நாளா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சீருடையை அணிந்தபடி வரும் ஒரு கும்பல், வேகத்தடை இருக்கும் பகுதிகளில் நின்னுக்கிட்டு, அங்க வேன்கள் வேகம் குறைவா போகும்போது, துண்டுக் காகிதங்களில் தங்கள் போன் நம்பர்களை எழுதி, ’"ஐ லவ் யூ. நீயும் இந்த நம்பருக்கு எஸ்.எம்.எஸ் . பண்ணு'’என்கிற குறிப்போட, அந்தக் காகிதங்களைப் பள்ளி வேன்களுக்குள் இருக்கும் மாணவிகளை நோக்கி வீசிட்டுப் போகுது. இதைக்கண்டு மாணவிகள் மிரண்டு போறாங்க. இது குறித்து மாணவிகள் எங்களிடம் முறையிட்டாங்க. இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி காலை ஆத்தூர் ரயிலடி தெருவில் இருக்கும் காந்திநகர் சந்திப்பில் ஒரு டீமைப் போட்டு கண்காணிச்சோம். அப்ப ஒரு பள்ளி பேருந்துக்குள் சில இளைஞர்கள் துண்டுக் காகிதங்களை வீசியபடி, சில மாணவிகளின் பெயரை சொல்லிக் கத்தி னார்கள். அந்த இளைஞர்களை துரத்திய எங்க டீம் இளைஞர்கள், அவர்களில் இருவரை மடக்கியது. அதில் ஒருவன் திமிறி ஓட, ஒருத்தனை மட்டும் பிடித்து நேராக ஆத்தூர் காவல்நிலையத்துக்கு கொண்டுபோய் ஒப்படைக்கச் சொன்னோம். அந்த இளைஞன் வைத்திருந்த துண்டுக் காகிதங்களில் 8675172526 என்ற செல்போன் எண்ணும் இருந்தது. அதையும் போலீஸிடம் ஒப்படைச்சாங்க. பிடிபட்டவன் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும், அவனது அப்பா பெயர் அழகரசன் என்பதும், தப்பி ஓடியவன் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பெரியசாமி என்பதும் தெரியவந்தது. ஆனா நாங்க பிடிச்சுக் கொடுத்த பிரகாஷை போலீஸ்காரங்க வெளியே அனுப்பிட்டாங்க'' என்றார்கள் வருத்தமாய்.

ஏன் இப்படி என காக்கிகள் தரப்பிலேயே விசாரித்த போது, ""ஆய்வாளர் வந்து அந்தப் பயலை விசாரித்தார். அப்பதான் அவனும் அவன் ஆட்களும், இந்த பகுதியைச் சேர்ந்த கவுண்டர், செட்டியார், உடையார், நாயுடு, நாயக்கர் போன்ற பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்குத் தூண்டில் போடுவதை வழக்கமாக வச்சி ருப்பது தெரியவந்தது. அதோட இந்தப் பிரகாஷோட பின் னணி குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் முகம் வெளிறிப் போயிட்டார். ஏன்னா, இவனோட அண்ணன் அம்பேத்கார் மீது திருட்டு வழக்குகள் இருக்கு. ரொம்ப மோச மான ஆள். அவன் ஜாமீ னில் இருந்தபோது வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி, ஆத்தூர் உதவி ஆய்வாளராக இருந்த மணி மாறன், அந்த அம்பேத்காரை கைது செய்யப்போனார். அவரிடம் வரமுடி யாதுன்னு அவன் தகராறு செய்ய, எஸ்.ஐ. மணிமாறன் அந்த அம்பேத்காரை ரெண்டு தட்டு தட்டி தூக்கிக்கொண்டுவந்து உள்ளே தள்ளினார். இதில், தான் படுகாயமடைந்ததாகக் கூறிக்கொண்டு, அந்த அம்பேத்கார், மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொள்ள, போலீஸ் அராஜகம் ஒழிகன்னு சில அமைப்புகள் அவனுக்காகப் போராட்டத்தில் குதிக்க ஆரம்பிச்சிது. இதனால் எஸ்.ஐ. மணிமாறன் ஆத்தூரி லிருந்து மாற்றப்பட்டார். இப்படிப்பட்ட பலே பேர்வழியான அம்பேத்காரின் தம்பிதான் இந்த பிரகாஷ் என்று தெரிந்ததும், இன்ஸ்பெக்டர் ஜெய்சல், பிரகாஷ்மீது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதாக உப்புசப்பு இல்லாத பிரிவில் வழக்கைப் போட்டதோடு, அவனைத் தன் சொந்த ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டார்'' என்றனர் கிசுகிசுப்பாக.

பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமாரிடம், "எதற்காக அந்தப் பிரகாஷை வீட்டுக்கு அனுப்பினீர்கள்?' என்றோம். அவர் நம்மிடம் ‘""பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் கொடுத்தாங்க. நேரடியா பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தால்தான் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதால், மாணவி களிடமிருந்து புகாரை வாங்கிவரும்படி பள்ளியிடம் கேட்டிருந்தோம். குறிப்பிட்ட நேரம்வரை பார்த்தும் புகார் வரவில்லை... அதனால் அவனை சும்மா விடாமல் ஏதாவது ஒரு கேஸைப்போட்டு அனுப்பும்படி சொன்னேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. மாணவிகள் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்''’என்றார் கூலாய்.

இந்த விவகாரத்தைப் பா.ம.க. தரப்பு கையில் எடுக்கப் போகிறது என்ற தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்த, மாநில பா.ம.க. இளைஞரணி செயலாளர் அருளிடம் இது குறித்துக் கேட்டோம். அவரோ ""ஆமாங்க... இன்னைக்கு வேன்ல கடிதம் கொடுப்பானுங்க. நாளைக்கு ஸ்கூலுக்குள் போய்க் கொடுப்பானுங்க. அப்படியே விட்டா நேரா வீடுகளுக்கே போய்க் காதல் கடிதம் கொடுப்பானுங்க. இதையெல்லாம் போலீஸ் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கு. மாணவிகள் புகார் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பாங்க. அவங்க கோர்ட்டுக்கு போய் நிக்க முடியுமா? பள்ளிக்கூடத்தின் புகாரை எடுத்துக்க வேண்டியதுதானே. அதனால்தான் நாங்க போராட்டத்தில் குதிக்க ரெடியாகிக்கிட்டிருக்கோம்''’ என்றார் காட்டமாய்.

பிற சமூக மாணவிகளை டார்கெட் வைத்துக்கொண்டு துரத்தும் இந்த வில்லன்களை இனியாவது போலீஸ் வளைக்குமா?

-பெ.சிவசுப்ரமணியம்

Friday, 27 September 2013

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க

அழிந்துபோன சிம்கார்ட்
தகவல்களை மீட்டெடுக்க
...

சிம்கார்டிலிருந்து தவறுதலாக
அழிக்கப்பட்ட
தகவல்களை மீட்டெடுக்க
பல்வேறு வகையான மென்பொருள்
பயன்படுகின்றன.
GSM மொபைல் போன்களில் போன்
மெமரி மட்டுமல்லாமலும்
சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க
முடியும் என்பது உங்களுக்குத்
தெரியும். சிம்கார்டில்
சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற
தகவல்களை தேவையில்லை என
அழித்திருப்பீர்கள்.
அல்லது தவறுதலாக
அழிக்கப்பட்டிருக்கும்.
அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து
ஒன்றிரண்டு போன்
நம்பர்களோ அல்லது கால்
ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு
ஏதேனும் ஒருசில தகவல்கள்
தேவைப்படும். ஆனால் அந்த
சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப
பெற வழியின்றி தவித்திருப்பீர்கள்.
அதுபோன்ற சூழலில் உங்களுக்குப்
பயன்படக்கூடியவைதான் SIM Card
Data Recovery மென்பொருள்கள்.
இதுபோன்ற சிம்கார்ட்
டேட்டா ரெகவரி மென்பொருள்களை
பல்வேறு நிறுவனங்கள்
தயாரித்து வழங்குகிறது.
ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற
தளத்தில் இதுபோன்ற பல
மென்பொருள்கள்
மிகுந்து கிடக்கின்றன.
அவற்றில் சிம்கார்ட்
டேட்டா ரெகவரி, சிம்கார்ட்
ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர்,
சிம்கார்ட் கான்டாக்ட்
ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட்
கான்டாக்ட் ரெட்ரைவல் டூல்,
ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம்
ரெகவரி, எஸ்.எம்.எஸ்.
ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர்
டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர்
சிம்கார்ட் போன்ற இருபதுக்கும்
மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.
ஒவ்வொரு சிம்கார்ட்
ரிகவரி மென்பொருளைப் பற்றியும்,
அந்த மென்பொருளுக்குரிய
நிறுவனம் அல்லது மென்பொருள்
கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய
விளக்கங்களும் அத்தளத்தில்
குறிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான
மென்பொருளை அதிலிருந்து
தரவிறக்கம் செய்து, அத்தளத்தில்
கூறப்பட்ட வழிமுறைகளைப்
பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில்
அழிக்கப்பட்ட
தகவல்களை மீட்டெடுக்கலாம்.
மென்பொருள் பற்றிய மேலதிக
தகவல்களுக்கு நீங்கள் செல்ல
வேண்டிய முகவரி: Free Downloads
center
முக்கிய குறிப்பு:
மென்பொருள்கள்பற்றிய
நம்பகத்தன்மை மற்றும்
பாதுகாப்பு குறித்த
தகவல்களை நன்றாக படித்தறிந்த
பிறகு தேவையான
மென்பொருளை டவுன்லோட்
செய்யவும்.

Wednesday, 25 September 2013

குறட்டையை தடுக்க வழிகள்:-

குறட்டையை தடுக்க வழிகள்:-

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.


முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
 
 

Tuesday, 24 September 2013

தினமும் பயன்படுத்தும் பொருளில் உள்ள ஆபத்தை ..! குடிநீர்

கொஞ்சம் கவனிங்க ..! அன்பர்களே ..! தினமும் பயன்படுத்தும் பொருளில் உள்ள ஆபத்தை ..! 


குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=6328

Monday, 23 September 2013

சிலிண்டருக்கான மானியம்

படித்தவனுக்கே புரியாதது.
பாமர மக்களுக்கு எப்படி புரியும்.

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...
அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள்
சிலிண்டருக்கான
மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில்
நேரடியாகப் பெறுவதற்கான
வழிகாட்டல்கள் இங்கே...
ஒரு சிலிண்டர் சமையல்
எரிவாயுவிற்கு பெட்ரோலிய
நிறுவனங்கள் விதித்துள்ள
விலை (சென்னையில்) 930 ரூபாய்.
அதை இப்போது நாம் 398 ரூபாய்
செலுத்தி வாங்கி வருகிறோம்.
துண்டு விழும் 532
ரூபாயை அரசு, பெட்ரோலிய
நிறுவனங்களுக்கு மானியமாக
அளித்து வருகிறது. ஆனால்
வரவிருக்கும் அக்டோபர்
மாதத்திலிருந்து நீங்கள்
விற்பனையாளரிடம் முழுத்
தொகையையும் கொடுத்துத்தான்
சிலிண்டரை வாங்க முடியும்.
இதுவரை பெட்ரோலிய
நிறுவனங்களுக்கு
அளிக்கப்பட்டு வந்த மானியம்
இனி நேரடியாக
உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால்
அது உங்கள் கையில் ரொக்கமாகக்
கொடுக்கப்பட மாட்டாது. உங்கள்
வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்
அதைப் பெற இரண்டு விஷயங்கள்
முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண்.
2. வங்கிக் கணக்கு.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர்
1 முதல் அரியலூர் மாவட்டத்தில்
அமல்படுத்தப்பட இருக்கிறது. பின்
படிப்படியாக தமிழகத்தின் 25
மாவட்டங்களில் நான்கு கட்டமாக
செயல்படுத்தப்பட உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?
அக்டோபர் 2013 - அரியலூர்
நவம்பர் 2013 - திருச்சி, மதுரை,
புதுகோட்டை, நாகப்பட்டினம்.
டிசம்பர் 2013 - கடலூர், பெரம்பலூர்,
கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.
ஜனவரி 2014 - தஞ்சாவூர்,
திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல்,
வேலூர், இராமநாதபுரம்,
விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி,
காஞ்சிபுரம், தூத்துக்குடி,
திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.
தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர்,
திருவண்ணாமலை, கோவை ,
திருப்பூர், நீலகிரி, விருதுநகர்,
சிவகங்கை.
இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன
செய்ய வேண்டும்?
1.மானியத்தைப் பெற முதலில்
உங்களுக்கு ஆதார் எண் இருக்க
வேண்டும். இதுவரை ஆதார்
எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில
்லை என்றால் மாவட்ட ஆட்சித்
தலைவர் அலுவலகத்தையோ,அர
ுகிலுள்ள ஆதார்
பதிவு மையங்களையோ தொடர்புக
கள்.
ஆதார்
எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும்
எண் கிடைக்கப்பெறாதவர்கள், <https://
eaadhaar.uidai.gov.in/eDetails.aspx >
இத்தளத்திற்குச் சென்று பின்கோடு,
தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய
விவரங்களைப் பதிவிட்டால்
உங்களுக்கான ஆதார் எண்
வந்துவிடும்
அல்லது விண்ணப்பத்தின்
நிலை என்னவென்று அறிந்துகொள்ள
அல்லது 1800 300 1947 என்ற எண்ணில்
தொடர்புகொண்டு விவரங்கள்
அறியலாம்.
2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
யார் பெயரில்
எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்க
பெயரில் அந்த வங்கிக் கணக்கு இருக்க
வேண்டும். இதுவரை வங்கிக்
கணக்கு இல்லாதவர்கள் புதிதாக
கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.
3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும்
இருப்பவர்கள்
இரண்டு படிவங்களை நிரப்ப
வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம்
எண் 1) மற்றொன்று சிலிண்டர்
விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)
வங்கிக்கான படிவங்களை வங்கிக்
கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்..
அல்லது . < http://www.petroleum.nic.in/
dbtl/bankacc.pdf > என்ற
தளத்திலிருந்தும் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.
படிவம் 2ல் உங்கள் ஆதார்
அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள
இடத்தில்
வைத்து போட்டோ காப்பி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
போட்டோ காப்பி எடுத்த படிவத்தில்
மற்ற விவரங்களை நிரப்பி,
கடைசியாக காஸ் சிலிண்டர்
வாங்கிய
பில்லை இணைத்து விநியோகஸ்தரி
அளிக்க வேண்டும்.
விநியோகஸ்தருக்கான
படிவத்தை அவர்களிடமே பெற்றுக்க
ம் அல்லது <http://www.petroleum.nic.in/
dbtl/leaflet.pdf > என்ற
தளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியி
கொடுக்கலாம்.
கால அவகாசம்...
ஆதார் எண் இல்லாதவர்கள்
நேரடி மானியம்
தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள்
வரை மானிய விலையில்
சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.
இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார்
எண்ணை வங்கிக் கணக்குடனும்,
எரிவாயு இணைப்புடனும்
இணைத்துவிட வேண்டும். கால
அவகாசம் முடிந்த பிறகும் ஆதார்
எண்ணை இணைக்காத பட்சத்தில்
சந்தை விலையிலேயே சிலிண்டர்
விநியோகிக்கப்படும்.
எப்போது ஆதார் எண்ணைக்
குறிப்பிடுகிறார
்களோ அப்போதிலிருந்து மானியத்
தொகையை வங்கிக் கணக்கில்
பெற்றுக் கொள்ளலாம்.
மானியம் எவ்வளவு?
இத்திட்டத்தின்ப
டி அனைத்து சான்றுகளும்
சரிபார்க்கப்பட்ட பின் முதல்
தவணையாக 435 ரூபாய்
நமது வங்கிக் கணக்கில் வரவாகும்.
பின்னர் முதல் சிலிண்டர்
பெறும்போது சந்தை நிலவரத்திற்கே
ப மீதித் தொகையைக்
கொடுத்து சிலிண்டர் பெற்றுக்
கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த
சிலிண்டர் புக்
செய்து வினியோகிக்கப்பட்டு 6
நாட்களுக்குள் நமது வங்கிக்
கணக்கிற்கு அப்போதைய
சந்தை நிலவரத்தின்படி 420
ரூபாயைக் கழித்துவிட்டு மீதித்
தொகையை நமது கணக்கில்
அரசு செலுத்திவிடும்.
ஆண்டுக்கு 9 சிலிண்டர்
மட்டுமே மானியத்தில் பெறலாம்.
மேலதிக விவரங்களை <http://
www.petroleum.nic.in/dbtl >என்ற
இணையத்திலோ 1800 2333 555 என்ற
வாடிக்கையாளர்
சேவை மையத்திலோ பெறலாம்.

Friday, 13 September 2013

நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .- தங்க நகை

நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .

இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்


உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

முதலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி:

சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

மூன்றாவது மோசடி:

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது.
ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.

ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.

அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.
துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.
:

Wednesday, 11 September 2013

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

~~~~~~

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1.முதலில் இங்கே [http://goo.gl/IZJUX] சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். [படம் 1]

இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

• Control Panel ->Date, Time, Language, and Regional Options–> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

• Change keyboards… என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

• Language Bar க்கு வரவும்.

• Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

• இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

• Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

• முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். [படம் 2]

•Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

•இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

• இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் படம் 3-இல் போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.

8.இது உங்களுக்கு Desktop இல் படம் நான்கில் உள்ளபடி தோற்றம் அளிக்கும்.

9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

உதாரணம்:

Amma – அம்மா
karpom – கற்போம்
[படம் -5]

இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச்செருகலாக சேர்க்கலாம்.

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

Tuesday, 10 September 2013

விநாயகர் சதுர்த்தி

விநாயகர்.......... யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் . அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, "அல்லம் போக்கும் விநாயகர்' வீற்றிருக்கிறார்.

வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் "ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார்.


 பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.வள்ளலாக விளங்குகிறார்:

மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு "கள்ளவாரணப்பிள்ளையார்' என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார்.

 அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.

ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார்.

ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

கிரகதோஷம் போக்குபவர் :ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.

விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.

இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.

கூப்பிடு விநாயகர் :காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை, தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. 

 கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால், அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

விக்னேஷ் விளக்கம்:"விக்னம்' என்றால் "தடை'. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை "விக்னேஷ்' என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம்.

லலிதா சகஸ்ர நாமத்தில் "மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா வருகிறது.அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள். தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.

Friday, 6 September 2013

விஸ்வரூபம்-2′க்கு இஸ்லாமிய அமைப்புக்கள் இப்போதே எதிர்ப்பை தொடக்கி விட்டார்கள் !!

கமலஹாசன் நடித்து கொண்டு இருக்கும் விஸ்வரூபம்-2′ படத்திற்கும் முஸ்லிம்கள் தரப்பில் இப்போது இருந்தே எதிர்ப்புக்கள் கிளம்ப தொடங்க்கி விட்டது

கமல்ஹாசன், இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் `விஸ்வரூபம்’ . இத்திரைப்படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அத்திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து இப்பிரச்சினையில், தமிழக அரசு தலையிட்ட பின்னரே படம் வெளியானது.
இந்நிலையில், அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால், தற்போது அதற்கும் முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் ஜவஹர் அலி விடுத்துள்ள அறிக்கையில், “ `விஸ்வரூபம்’ படத்தை போல், இதிலும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.
முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுப்பதும், பிறகு கருத்து சுதந்திரம் பற்றி பேசி படத்தை விளம்பரப்படுத்துவதும், நல்ல கலைஞனுக்கு அழகல்ல.
விஸ்பரூபம் படம் விவகாரத்தில் சில நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று கூறி பின்பு மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களை தவறாக சித்தரித்து இருந்த போது அதனால் கருத்து கூற முடியாமல் வாய் மூடி சில பிரபலங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது .மறைந்த மணிவண்ணன் அவர்கள் இந்த படத்தை கடுமையாக எதிர்த்து பேசினார் . அமெரிக்காவின் அரசியல் அயோக்கிய தனமான அரசியல் அதை வந்து கமலா ஹாசன் விற்க கூடாது என்று கடுமையாக சாடினார்
எந்த சமூகத்தையும் தவறாக படம் எடுத்து சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்ற வாதம் இனி நேர்ந்தால் அது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் .
யார் மனதையும் காயப்படுத்தி படம் எடுப்பதை நிறுத்த வேண்டும். `டேம் 999′ மற்றும் `மெட்ராஸ் கபே’ போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறு, சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக `விஸ்வரூபம்-2’ படத்தை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, 5 September 2013

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Wednesday, 4 September 2013

தமிழக கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு டீசர்ட், ஜீன்ஸ், ஸ்லிவ் லெஸ் ஆடைகளுக்கு தடை!

தமிழக கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு டீசர்ட், ஜீன்ஸ், ஸ்லிவ் லெஸ் ஆடைகளுக்கு தடை!

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி டீசர்ட், ஜீன்ஸ், சிலிவ் லெஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிய மாணவ, மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாட்டை கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி சமீபத்தில் கொண்டு வந்தார்.
இந்த உடை கட்டுப்பாட்டின்படி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது. சாதாரண பேண்ட், சர்ட் மட்டுமே அணிய வேண்டும் எனவும், மாணவிகள் ஜீன்ஸ், டிசர்ட், சிலிவ் லெஸ் மற்றும் லெக்கின்ஸ் உடை அணியக் கூடாது. சுடிதார் மற்றும் சேலை போன்ற உடைகள் மட்டுமே அணிய வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உடை கட்டுப்பாடானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனினும் கோவையில் பெரும்பாலான கலை, அறிவியல் கல்லுரிகளில் உடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தாத நிலையில் அரசின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது.
உடை கட்டுப்பாடு உத்தரவு தேவையற்றது. உடை விசயத்தில் கட்டுப்பாடு என்பது பிற்போக்குதனமானது. என்ன உடை அணிய வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளே தீர்மானிக்க வேண்டும். எனவே கல்வித்துறை உடனடியாக இந்த உத்தரவினை மறுபரீசிலனை செய்ய வேண்டும். உடைகளுக்கான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.என தெரிவித்துள்ளனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.
எனினும் அரசின் இந்த உத்தரவுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.