கமலஹாசன் நடித்து கொண்டு இருக்கும் 
விஸ்வரூபம்-2′ படத்திற்கும் முஸ்லிம்கள் தரப்பில் இப்போது இருந்தே 
எதிர்ப்புக்கள் கிளம்ப தொடங்க்கி விட்டது
கமல்ஹாசன், இயக்கி, நடித்து, தயாரித்த 
திரைப்படம் `விஸ்வரூபம்’ . இத்திரைப்படத்தில் முஸ்லிம்களின் மனம் 
புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகளும் 
கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அத்திரைப்படம் வெளியாவதில் பெரும்
 சிக்கல்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து இப்பிரச்சினையில், தமிழக அரசு 
தலையிட்ட பின்னரே படம் வெளியானது.
இந்நிலையில், அத்திரைப்படத்தின் இரண்டாம் 
பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால், தற்போது அதற்கும் முஸ்லிம் 
அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் 
கட்சி மாநில தலைவர் ஜவஹர் அலி விடுத்துள்ள அறிக்கையில், “ `விஸ்வரூபம்’ 
படத்தை போல், இதிலும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் 
உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.
முஸ்லிம்களை காயப்படுத்தி படம் 
எடுப்பதும், பிறகு கருத்து சுதந்திரம் பற்றி பேசி படத்தை 
விளம்பரப்படுத்துவதும், நல்ல கலைஞனுக்கு அழகல்ல.
விஸ்பரூபம் படம் விவகாரத்தில் சில 
நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று 
கூறி பின்பு மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களை தவறாக சித்தரித்து இருந்த 
போது அதனால் கருத்து கூற முடியாமல் வாய் மூடி சில பிரபலங்கள் இருந்தார்கள் 
என்பது குறிப்பிட தக்கது .மறைந்த மணிவண்ணன் அவர்கள் இந்த படத்தை கடுமையாக 
எதிர்த்து பேசினார் . அமெரிக்காவின் அரசியல் அயோக்கிய தனமான அரசியல் அதை 
வந்து கமலா ஹாசன் விற்க கூடாது என்று கடுமையாக சாடினார்
எந்த சமூகத்தையும் தவறாக படம் எடுத்து 
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்ற வாதம் இனி நேர்ந்தால் அது ஒட்டு 
மொத்த இஸ்லாமிய சமூகத்தை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் .
யார் மனதையும் காயப்படுத்தி படம் எடுப்பதை
 நிறுத்த வேண்டும். `டேம் 999′ மற்றும் `மெட்ராஸ் கபே’ போன்ற திரைப்படங்கள்
 தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள்
 இல்லாதவாறு, சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக `விஸ்வரூபம்-2’ படத்தை 
எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


