தமிழக கல்லூரிகளில் உடை
கட்டுப்பாடு டீசர்ட், ஜீன்ஸ், ஸ்லிவ் லெஸ் ஆடைகளுக்கு
தடை!
தமிழக கலை,
அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான உடை கட்டுப்பாடு நேற்று முதல்
அமலுக்கு வந்துள்ளது. இதன்படி டீசர்ட், ஜீன்ஸ், சிலிவ் லெஸ்
மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிய மாணவ, மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலை,
அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாட்டை கல்லூரி கல்வி
இயக்குனர் செந்தமிழ் செல்வி சமீபத்தில் கொண்டு வந்தார்.
இந்த உடை
கட்டுப்பாட்டின்படி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக் கூடாது. சாதாரண பேண்ட், சர்ட் மட்டுமே அணிய வேண்டும் எனவும், மாணவிகள் ஜீன்ஸ், டிசர்ட், சிலிவ் லெஸ் மற்றும் லெக்கின்ஸ் உடை அணியக் கூடாது. சுடிதார் மற்றும் சேலை போன்ற உடைகள் மட்டுமே அணிய வேண்டும்.
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
இந்த உடை கட்டுப்பாடானது நேற்று முதல் அமலுக்கு
வந்துள்ளது. எனினும் கோவையில் பெரும்பாலான கலை, அறிவியல் கல்லுரிகளில் உடை கட்டுப்பாடு தீவிரமாக
அமல்படுத்தாத நிலையில் அரசின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவும்,
எதிர்ப்பும் கலந்தே
காணப்படுகிறது.
‘உடை
கட்டுப்பாடு உத்தரவு தேவையற்றது. உடை விசயத்தில் கட்டுப்பாடு என்பது பிற்போக்குதனமானது. என்ன
உடை அணிய வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளே
தீர்மானிக்க வேண்டும். எனவே கல்வித்துறை உடனடியாக இந்த உத்தரவினை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
உடைகளுக்கான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் கல்லூரி மாணவர்களை
ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.’ என தெரிவித்துள்ளனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.
எனினும்
அரசின் இந்த உத்தரவுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.