Tuesday, 14 January 2020

பழைய பொருட்களை கொளுத்தி சூற்றுசூழலை மாசு படுத்துவது #போகி அல்ல..

பழைய பொருட்களை கொளுத்தி சூற்றுசூழலை மாசு படுத்துவது #போகி அல்ல..

நமக்கு வந்திருக்கிற
#துன்பம் போ(க்)கி, #துயர் போ(க்)கி,#கஷ்டம் போ(க்)கி, #அல்லல் போ(க்)கி, #நோய் போ(க்)கி, #மனத்தாங்கல் போ(க்)கி, #வறுமை போ(க்)கி, #பசி போ(க்)கி, #பஞ்சம் போ(க்)கி, #வறட்சி போ(க்)கி, #பொறாமை போ(க்)கி,#வஞ்சம் போ(க்)கி, #அறியாமை போ(க்)கி,#இல்லாமை போ(க்)கி, #மாயை போ(க்)கி, #ஏழ்மை போ(க்)கி, #பயம் போ(க்)கி, #கல்லாமை போ(க்)கி, #இருள் போ(க்)கி

 #பழையன #கழிதலும் #புதியன #புகுதலுமே #போகி

 எனவே  தை 1 முதல்  #பொங்கல் பொங்குவதை போல அனைவரது வாழ்வில் எல்லா வளமும் நலமும்  (பொங்கி)பெற்று பல்லாண்டு பலநூறாண்டு வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்., தமிழனின் இனிய போகி&பொங்கல்  நல்வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...

---------------------------------------------
பழைய சுமைகளை தலை மீது நாம் சுமக்கிறோம். நேற்று நடந்து முடிந்த வி‌ஷயங்கள் கூட இன்று நமக்குள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் கூட இன்று நம்மை பாதிக்கின்றன. இந்தச் சுமைகள் நம் மீது பெரியபாரமாகி நம் உயிரை வாட்டுகின்றன. இந்தச் சுமையுடன் நம்மால் பொங்கிப்பெருக முடியாது. இதனால் தான், பொங்கலின் முதலாவது நாள் போகித் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

போகி என்றால் நமக்குள் அடைந்திருக்கும் தேவையில்லாத சுமைகளை போக்குவது. நம் வீட்டுக்குள் சேர்ந்திருக்கின்ற பழையவை மட்டுமல்ல, அவற்றை எரித்தால் மட்டும் போதாது. நமக்குள் முடங்கியிருக்கும் தேவையில்லாத வி‌ஷயங்களையும் இந்த தினத்தில் நாம் எரித்திட வேண்டும்.

Best regards,