பொங்கல் பண்டிகையின் வரலாறு
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இது தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 காலகட்டத்தில் கொண்ட துவங்கப்பட்டது. பொங்கல் என்பது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகை என கூறப்பட்டாலும், இந்த பண்டிகை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம்.
#பொங்கல் வரலாறு
சங்க காலத்தின் போது கொண்டாடிய சில கொண்டாட்டங்களே, இன்றைய பொங்கலாக நாம் கொண்டாடி வருகிறோம். சங்ககால கொண்டாட்டத்தில், தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரத முறையை பின்பற்றினர். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருந்தது. தமிழ் மாதமான மார்கழியின் போது இதை கொண்டாடினார்கள். நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டும் என பெண்கள் வேண்டுதல்கள் வைப்பார்களாம்.
இந்த மாதத்தில் பால் பொருட்களை தவிர்த்து, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து, மண்ணால் செய்த விநாயகரை வணங்குவார்களாம். தை மாதத்தின் முதல் நாள் வரை அவர்களின் விரதத்தை தொடர்வார்கள். இந்த வழக்கமே தற்போது பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
#திருப்பாவை மற்றும் திருவெம்பாவை
#திருப்பாவை மற்றும் திருவெம்பாவை
தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையின் போது குலோத்துங்கன் என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலைத்தை பரிசாக அளிப்பார் என்பதை திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#புராணக்கதைகள்
பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது.
#சிவபெருமானின் சாபம்
புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு.
#கிருஷ்ணர்
இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான்.
#பொங்கல் கொண்டாட்டங்கள்
இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.
#நான்கு நாள் பண்டிகை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும்.Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com