Friday, 2 October 2020

இளைஞர்களின் எதிர்காலம் என்ன?

இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
எல்லாருக்கும் வணக்கம், 
என் பெயர் மாரிமுத்து. நான் எலக்ட்ரிகல் அண்ட் பிளம்பிங் -இல் பட்டப் படிப்பு முடித்திருக்கிறேன். எனக்கு தந்தை இல்லை. என் அம்மா தான் என்னைப் படிக்க வைத்தார். படித்து முடித்து விட்டு முதல் 3 மாதங்கள் நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. எங்கிருந்து வேலைத் தேட துடங்குவது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் அம்மா தலையில் சுமக்கும் பொறுப்புகளை நான் இறக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் இருந்தது. எலக்ட்ரிக்கல் வேலைக்கும் பிளம்பிங் வேலைக்கும் பட்டணத்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டு புறப்பட்டேன். ஆனால் ரெபெரென்ஸ் இருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்று காண்ட்ராக்டர்கள் கூறி விட்டனர். சிறிது சிறிதாக சில வேலைகள் செய்தேன் ஆனால் அது என் கைச்செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. இந்த நிலையால் என் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு மீண்டும் திரும்பினேன். வந்த சில நாட்களிலே வயதான காரணத்தினால் என் அம்மாவை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். நிலைமை மோசமானது. கோவையில் சுகாதாரப் பணியாளராக வேலைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கும் அப்ளிகேஷன் அனுப்பினேன். சில நாட்களுக்குப் பின்புதான் என்னைப்போல் 500-ருக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று வரை நிலையான வேலையோ நிலையான ஊதியமோ இல்லாமல் கிடைத்ததை செய்து வருகிறேன். 

வேலை இல்லா திண்டாட்டம் ஒரு பெரிய போராட்டம். ஒழுங்காய்ப் படித்தும் இத்தனை முயற்சிகள் எடுத்தும் எனக்கு இந்த நிலையிருக்கிறது. இதற்கு காரணம் யார் என்று நான் சொல்வது?

Best regards,